ஜகத் விக்ரமரத்ன Archives - Oruvan.com

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து முன்மொழிவுகளை வழங்க நாடாளுமன்ற விசேட குழு நியமனம்
மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்த வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும், அது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்கவும் நாடாளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகம் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று கூடியது. இதன் போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இந்தக் குழுவை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்த விசேட குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான முனீர் முலாஃபர், சுனில் வடகல , அருண் ஹேமச்சந்திரா ,ரஞ்சித் மத்தும பண்டார,மனோ கணேசன்,லக்ஸ்மன் நிபுணஆராச்சி, சாணக்கியன் இராஜபுத்திரன் இராசமாணிக்கம் , சமன்மலி குணசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க ,சந்தன சூரியஆராச்சி , நிசாம் காரியப்பர் ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து முன்மொழிவுகளை வழங்க நாடாளுமன்ற விசேட குழு நியமனம் appeared first on Oruvan.com.

இரண்டு சட்டமூலங்கள் குறித்த உயர் நீதிமன்றத் தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர்
அரசியலமைப்பின் 121.1 பிரிவின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட ‘குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ மற்றும் ‘வாடகையை இரத்துச் செய்யும் சட்டமூலம்’ ஆகியவை தொடர்பில் முறையான தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகச் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (17) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

நீதி அமைச்சின் செயலாளரால் கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்தச் சட்டமூலங்கள் தற்போதைய வடிவில் முன்னோக்கி கொண்டு செல்லப்படமாட்டாது எனச் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலாக, குறித்த சட்டமூலங்கள் மீளாய்வுக்காக நிபுணர் குழுவொன்றிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. அக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, அவை புதிய சட்டமூலங்களாக மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

இதன் காரணமாக, மனுதாரர்கள் தமது மனுக்களை மீளப் பெற்றுக்கொண்டுள்ளதால், அரசியலமைப்பின் 121.3 பிரிவின் கீழ் இது குறித்து முறையான தீர்மானத்தை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானத்தைப் பாராளுமன்றத்தின் இன்றைய உத்தியோகபூர்வ ஹன்சாட் அறிக்கையில் அச்சிடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

The post இரண்டு சட்டமூலங்கள் குறித்த உயர் நீதிமன்றத் தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர் appeared first on Oruvan.com.

ஆய்வாளர்களுக்காக நாடாளுமன்றக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் – ஐ.நா சபை குழுவினருடன் சபாநாயகர் கலந்துரையாடல்
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ் (Marc-André Franche) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான வதிவிட ஆலோசகர் பட்ரிக் மக்கார்த்தி (Patrick McCarthy) ஆகியோர் இலங்கை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்னவை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி தொடர்பில் 10ஆவது நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒருங்கிணைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் இச்சந்திப்பில் பிரதானமாகக் கலந்துரையாடப்பட்டன.

நாடாளுமன்ற பிரதிநிதிகள், உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகளின் மக்கள் பிரதிநிதிகள், ஆய்வாளர்களுக்காக நாடாளுமன்றக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமொன்றை அமைப்பது தொடர்பிலும், நாடாளுமன்றத்திற்குள் சட்டப் பிரிவொன்றை உருவாக்குவது தொடர்பிலும் இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், இலஞ்சம், மோசடி மற்றும் ஊழல் இல்லாத அரசாங்கத்தை உருவாக்குதல் மற்றும் இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான புதிய அணுகுமுறைகளை பின்பற்றுதல் ஆகியவை குறித்தும் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டது.

சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை விஜயம் தொடர்பிலும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ் சாபாநயகருக்கு விளக்கமளித்தார்.

The post ஆய்வாளர்களுக்காக நாடாளுமன்றக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் – ஐ.நா சபை குழுவினருடன் சபாநாயகர் கலந்துரையாடல் appeared first on Oruvan.com.

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிப்பு
10வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை நாடாளுமன்றம் கூடிய நிலையில், புதிய சபாநாயகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய சபாநாயகர் பதவிக்கான பிரேரணை பிரதமர் ஹரினி அமரசூரியவினால் கொண்டுவரப்பட்டதுடன், சபைத்தலைவர் பிமல் ரத்நாயக்கவினால் அதனை வழிமொழிந்தார்.

முன்னதாக 10வது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக ரங்வாலா பதவி விலகியதை அடுத்து, சபாநாயகர் பதவி வெற்றிடம் ஏற்பட்டது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகர் ஒருவரை பரிந்துரைப்பதாக அறிவித்திருந்தது. எனினும், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் ஒருவரின் பெயரை முன்மொழியாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதனிடையே, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் சிலர் இன்று பதவி பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சுஜீவ சேனசிங்க, மொஹமட் நிசாம் காரியப்பர், முஹம்மது இஸ்மாயில் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பைசர் முஸ்தபாவும் இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

The post புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிப்பு appeared first on Oruvan.com.