ஜகத் விக்கிரமரத்ன Archives - Oruvan.com

மூன்று சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம், பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களை சான்றுரைப் படுத்தியிருப்பதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (18) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலமானது, 2022ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்தச்)சட்டத்தைத் திருத்துவதை பிரதான நோக்காகக் கொண்டதாகும்.

இச்சட்டமூலம் 09.10.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 05.12.2025ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், 05.12.2025ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக 2வது வாசகம் திருத்தப்படுகிறது.

இதற்கமைய, 2023 ஏப்ரல் 1ஆம் திகதி தொடக்கம் 2025 ஒக்டோபர் 01ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு மட்டும் ஏற்புடையதான பத்து சதவீதத்திலான மொத்தச் சேகரிப்பை மட்டுப்படுத்துவது, 2025 ஒக்டோபர் 01ஆம் திகதியிலிருந்து குதிரைப் பந்தயப் பணயக்காரர் என்ற தொழிலில் அல்லது சூதாட்டத் தொழிலில் ஈடுபடும் ஆட்களிடமிருந்தான மொத்தச் சேகரிப்பு அறவீட்டைப் பதினெட்டு சதவீதமாக அதிகரித்தல், இலங்கைப் பிரசைகளாகவுள்ள ஆட்களிடமிருந்து கெசினோ நுழைவு அறவீடானது நூறு ஐக்கிய அமெரிக்க டொலர்களாக அதிகரித்தல் என்பன இத்திருத்தத்தின் நோக்கமாகும்.

அதேநேரம், 14.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 05.12.2025ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலமானது, 2008ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்ட சட்டமூலத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமாகும்.

இத்திருத்தமானது, திட்டங்களை அடையாளம் காணுவதற்கான புதிய நடைமுறையாக அதிகபட்ச விலக்களிப்புக் காலத்தை இருபத்தைந்து ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகளாகக் குறைத்தல், உத்தேசிக்கப்பட்ட கருத்திட்டத்தை ஒரு செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டமாக அடையாளங்காண்பதன்மேல், இலங்கை முதலீட்டுச் சபையானது அத்தகைய கருத்திட்ட உத்தேசத்தை நிகழ்வுக்கு முன்னரான செலவு நன்மைப்பகுப்பாய்வுக்காக நிதியமைச்சுக்கு ஆற்றுப்படுத்துதல், அத்தகைய நிகழ்வுக்கு முன்னரான செலவு நன்மைப்பகுப்பாய்வை நிறைவேற்றுதல், இணங்கியொழுகாமையின் போது இச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட விலக்களிப்புகள், சலுகைகள் அல்லது வாி விடுமுறை எவற்றையும் அல்லது எல்லாவற்றையும் மட்டுப்படுத்துதல் அல்லது சம்பந்தமாக ஏற்பட்ட இழப்பை அறவிடுவதற்கு நிருவாகத் தண்டங்களை விதித்தல், வரிச் செலவினங்கள் மீதான வருடாந்த அறிக்கையொன்றினை வெளியிடுவதற்கு நிதி அமைச்சினைத் தேவைப்படுத்துவதன் மூலம் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துதல் என்பன இந்தத் திருத்தங்களினால் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கமைய, குறித்த மூன்று சட்டமூலங்களும் முறையே 2025ஆம் ஆண்டு 24ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமாகவும், 2025ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமாகவும், 2025ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமாகவும் அமுலுக்கு வருகின்றன.

The post மூன்று சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர் appeared first on Oruvan.com.

பாதுகாப்புக் கோரும் எம்.பிகளின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை – பதில் பொலிஸ்மா அதிபர்
தமக்குப் பாதுகாப்புத் தேவை எனக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு தொடர்பான இறுதி மதிப்பீடு அறிக்கை தற்பொழுது கிடைத்துள்ள உறுப்பினர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பதில் பொலிஸமா அதிபர் மேலும் தெரிவித்தார்.

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்குபற்றலில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே பதில் பொலிஸமா அதிபர் இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் எதிர்த்தரப்பு கட்சித் தலைவர்கள் சிலர் சபாநாயகரைச் சந்தித்து தமது பாதுகாப்புத் தொடர்பான சிக்கலைகளை முன்வைப்பதற்கு கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்து தருமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய,  பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவுடன் சபாநாயகர் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதற்கமைய, இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கைகளின் முன்னேற்றத்தை தனக்கு அறிவிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தினார்.

நாட்டில் காணப்படும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் அறிவுறுத்திய பொலிஸ்மா அதிபர், அண்மைக்காலமாக இடம்பெற்ற பல மனிதப்படுகொலைகள் குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையில் இடம்பெறும் மோதல்களின் விளைவுகள் எனவும், அந்தக் குற்றச் செயல்களுக்கு பிரதேச அரசியல்வாதிகளின் தொடர்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

இங்கு எதிர்த்தரப்பு கட்சித் தலைவர்களினால் தமது தரப்புப் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை பெறுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள தேவை தொடர்பில் விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா கருத்துத் தெரிவிக்கையில், தனக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு வசதிகள் இல்லையெனில், தனக்கான பாதுகாப்பை செய்துகொள்வதற்கு துப்பாக்கி வழங்குமாறு முன்மொழிந்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உயர்ந்த ஜனநாயகப் பண்புகளைக் கொண்ட நாடொன்றில் பாதுகாப்புக்காக துப்பாக்கிகள் வழங்கப்படக்கூடாது எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் ஒவ்வொரு நபர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குறிப்பிடுகையில், புதிய உறுப்பினர்கள் போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால் அவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் அந்த உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது பொருத்தமானது எனக் குறிப்பிட்டார்.

மேலும்,  எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோர் குறிப்பிடுகையில், தமது கட்சிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகள் இருந்தால் அவர்களது தகவல்களை முன்வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகளை பெற்றுக்கொள்ளும் வரை, முழுமையான பாதுகாப்பை அகற்றாமல், பாதுகாப்பு தேவை எனக் கூறும் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை வழங்குவது பொருத்தமாகும் எனவும் மதிப்பீடு அறிக்கை கிடைத்தவுடன் அதன் பரிந்துரைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திர குமார் பொன்னம்பலம் மற்றும் திலித் ஜயவீர ஆகியோர் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க ஆகியோரும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post பாதுகாப்புக் கோரும் எம்.பிகளின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை – பதில் பொலிஸ்மா அதிபர் appeared first on Oruvan.com.

நாடாளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை
இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும் நோக்கில் பாராளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு நாடாளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன், நாடாளுமன்றத்தில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சைகை மொழியிலான உரைபெயர்ப்பை மேலும் விஸ்தரிப்பதற்கும் நாடாளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய இயலாமையுடைய பொதுநலவாய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலதன முதலீட்டு நிதியத்தின் (Commonwealth Parliamentarians with Disabilities (CPwD) Capital Investment Fund) அனுசரணையுடன் நாடாளுமன்றக் குழு அறைகள் 5 மற்றும் 6 ஆகியவற்றில் சைகைமொழியிலான உரைபெயர்ப்பு வசதிகள் வழங்கப்படவுள்ளன.

The post நாடாளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை appeared first on Oruvan.com.

வெளிநாட்டுக் கடன்கள் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர
சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (23) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார்.

வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பில் இன்று நடைபெற்ற இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தைத் தொடர்ந்து, குழு நிலையில் குறித்த சட்டமூலம் ஆராயப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மூன்றாவது மதிப்பீட்டையடுத்து இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2025.05.08ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதற்கு அமைய இந்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டு 06 இலக்க வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகின்றது.

The post வெளிநாட்டுக் கடன்கள் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர appeared first on Oruvan.com.

சேர்பெறுமதி வரி சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (11) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு 2025.04.09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன் குழு நிலையில் சட்டமூலம் ஆராயப்பட்டு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீட்டையடுத்து வாக்கெடுப்பு இன்றி சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலம் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டில் 4 ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமாக அமுலுக்கு வரும்.

The post சேர்பெறுமதி வரி சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர் appeared first on Oruvan.com.

சபாநாயகரை சந்தித்த இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் சந்தித்தார்
இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் ட்ரின் தி டாம் (Trinh Thi Tam) அவர்கள் நேற்று (24) கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

இலங்கைக்கும் வியட்னாமுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் குறித்து சபாநாயகரும், வியட்னாம் தூதுவரும் இங்கு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

குறிப்பாக இரு நாட்டுக்கும் இடையில் பௌத்த மதம் மற்றும் கலாசாரத் துறைகளில் காணப்படும் தொடர்புகள் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், நாடாளுமன்ற இராஜதந்திர உறவுகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு பத்தாவது நாடாளுமன்றத்தில் இலங்கை –வியட்னாம் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தை ஸ்தாபிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதிக உற்பத்தித் திறன் கொண்ட முறையில் விவசாயத் துறையைப் பயன்படுத்துவதன் ஊடாக வியட்னாமில் மேற்கொள்ளப்படும் உற்பத்திப் பொருளாதாரத்திற்கும் கௌரவ சபாநாயகர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அதன்படி, விவசாயத் துறையில் தனது நாட்டின் தொழில்நுட்ப அறிவு மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக தூதுவர் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையின் மேம்பாடு குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதனை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த ஏராளமான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வியட்னாம் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் ட்ரின் தி டாம் (Trinh Thi Tam) அவர்கள் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலியையும் நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

பொதுவாக அக்கறை செலுத்தும் துறைகளில் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் கூட்டாண்மையை விஸ்தரிப்பதன் முக்கியத்துவத்தை வியட்னாம் தூதுவர் வலியுறுத்தினார்.

இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பது குறித்தும் தூதுவர் பாராட்டுத் தெரிவித்தார். பத்தாவது நாடாளுமன்றம் அதிக பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்டது என்றும், இது முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது என்றும் பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.

The post சபாநாயகரை சந்தித்த இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் சந்தித்தார் appeared first on Oruvan.com.

இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவு
பத்தாவது நாடாளுமன்றத்தில் இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நானாயக்கார தெரிவு செய்யப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் நட்புறவுச்சங்கத்தின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, கடந்த 7 தசாப்தங்களாக இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய உறவுகள் வலுவடைந்துள்ளன என்றும் இந்த நட்புறவுச் சங்க மீள் ஸ்தாபிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்புக்கு ஒரு சான்றாகும் எனத் தெரிவித்தார்.

குறிப்பாக வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இரண்டு நாடாளுமன்றங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் இது ஒரு தளத்தை ஏற்படுத்துகிறது எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது ஐக்கிய இராஜ்ஜியம் வழங்கிய ஆதரவு மற்றும் பரிஸ் கழக உறுப்பினராக கடன் மறுசீரமைப்புக்கு அளித்த பங்களிப்புகளை சபாநாயகர் பாராட்டினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களை செயலமர்வுகள், மாநாடுகள் மற்றும் ஆய்வுச் பயணங்கள் மூலம் மேம்படுத்துவதில் விலைமதிப்பற்ற பங்களிப்புகளைச் செய்ததற்காக ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்துக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக், சுமார் 50,000 இலங்கை மாணவர்கள் தற்போது ஐக்கிய இராஜ்ஜியத்தில் கல்வி பயின்று வருவதாகத் தெரிவித்ததுடன், கல்வித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி நம்பிக்கை வெளியிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து வளர்ப்பதை ஐக்கிய இராஜ்ஜியம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த 30 ஆண்டுகளில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக் கணிப்புகளின்படி, இந்தப் பிராந்தியம் அதிகளவான செல்வாக்கு மிக்கதாக மாறும் என்றும், பிரகாசமான எதிர்காலத்திற்கு இலங்கை ஒரு நல்ல நிலையில் இருப்பதாக அவர் நம்புவதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்தமை தொடர்பில் கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நானாயக்கார இதன்போது நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால உறவை மேம்படுத்துவதில் நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். “இலங்கைக்கும் ஐக்கிய இராஜ்ஜியத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பின் புதிய வழிகளை ஆராய்வதற்கும் உணர்ந்து கொள்வதற்கும் இந்தச் சங்கத்தை ஒரு சக்திவாய்ந்த தளமாக மாற்ற நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம்,” என அவர் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், நாடாளுமன்ற ஒத்துழைப்பை வளர்ப்பதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவதிலும் மீள ஸ்தாபிக்கப்பட்ட நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

The post இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவு appeared first on Oruvan.com.

புதிய அரசமைப்பை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – சபாநாயகர்
“புதிய அரசமைப்பை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்தால் வழங்கப்பட வேண்டிய முழுப் பங்களிப்பையும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இதற்கு எதிரணிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என நம்புகின்றோம்.”

– இவ்வாறு சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“நாட்டில் பலமான ஆளுங்கட்சி உள்ளது. எனவே, புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்து அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால், சட்டவாக்க சபையில் அதனை நிறைவேற்றிக்கொள்வதற்குரிய பங்களிப்பை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

புதிய அரசமைப்பு அவசியம் என நாட்டு மக்களும் கருதுகின்றனர். இதற்குரிய மக்கள் ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்குரிய பொறுப்பு உள்ளது. இது தொடர்பிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

புதிய அரசமைப்பை இயற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என நம்புகின்றோம்.” – என்றார்.

The post புதிய அரசமைப்பை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – சபாநாயகர் appeared first on Oruvan.com.

ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பின் தேவை எழுந்துள்ளது – கொழும்பு பேராயர்
ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பின் தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு எதிரான ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்கான வலுவான பொறிமுறையை உருவாக்குவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கும் கொழும்பு பேராயர் அவர்களுக்கும் இடையில் நேற்று (05) பிற்பகல் சந்திப்பு இடம்பெற்றதுடன், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கர்தினால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான தகவல்களை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம், இதை யார் செய்தார்கள், எந்த நோக்கத்திற்காக, யாருடைய உதவியோடு செய்தார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இலங்கையில் கடந்த காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. கொலைகள், காணாமல் போதல்கள், போன்ற பல விடயங்கள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.

ஜனநாயகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தேவையான பொறிமுறையை தயார் செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள் ஆகும்.

அதற்கு தேவையான அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போதுள்ள அரசியலமைப்பில் உள்ள பலவீனங்களை போக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பின் தேவை எழுந்துள்ளது – கொழும்பு பேராயர் appeared first on Oruvan.com.