செயற்கை நுண்ணறிவு Archives - Oruvan.com

இனி படப்பிடிப்பிற்கு வெளிநாடு செல்லத் தேவையில்லை: பிரம்மாண்ட திரைக்குள் உருவாகும் சினிமா உலகம்!
சினிமாப் படங்கள் எடுக்கும் முறையில் இப்போது ஒரு மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது. முன்பு ஒரு பாலைவனத்தையோ அல்லது பனிப்பிரதேசத்தையோ காட்ட வேண்டும் என்றால், படக்குழுவினர் அந்த இடத்திற்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இப்போது ‘The Mandalorian’ போன்ற புகழ்பெற்ற தொடர்கள் ஒரு மூடிய அறைக்குள்ளேயே படமாக்கப்படுகின்றன.

திரைக்குள் ஒரு உலகம்: நடிகர்களைச் சுற்றி மிகப்பெரிய LED திரைகள் அமைக்கப்படுகின்றன. இந்தத் திரைகளில் வீடியோ கேம்களில் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தத்ரூபமான உலகங்கள் (பாலைவனம், விண்வெளி போன்றவை) உருவாக்கப்படுகின்றன. கேமரா நகரும்போது அந்தத் திரையில் உள்ள காட்சிகளும் அதற்கேற்ப நகர்வதால், பார்ப்பவர்களுக்கு அது உண்மையான இடம் போலவே தோன்றும். இந்தத் தொழில்நுட்பம் மிகவும் தத்ரூபமாக இருப்பதால், படப்பிடிப்பில் இருந்த சில ஊழியர்களுக்கு கடல் அலைகளைத் திரையில் பார்த்தபோது உண்மையிலேயே கடலில் இருப்பது போன்ற மயக்கம் (Seasickness) ஏற்பட்டதாம்! இதன் மூலம் படப்பிடிப்பு செலவுகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இனி படப்பிடிப்பிற்கு வெளிநாடு செல்லத் தேவையில்லை: பிரம்மாண்ட திரைக்குள் உருவாகும் சினிமா உலகம்! appeared first on Oruvan.com.

உங்கள் வாட்ஸ்அப் புகைப்படங்கள் பாதுகாப்பானதா? சம்மாந்துறையில் புகைப்பட மோசடியில் சிக்கிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றிப் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை, எதிர்வரும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்கச் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பெண்களின் வாட்ஸ்அப் பதிவுகளைப் பதிவிறக்கம் செய்து, அவற்றை AI தொழில்நுட்பம் ஊடாக நிர்வாணப் புகைப்படங்களாக மாற்றித் தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில், மற்றுமொரு சந்தேகநபர் இன்று நீதவான் நூர்தீன் சர்ஜுன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதவான், அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு, இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரையும் உடனடியாகக் கைது செய்யப் பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்தார்.

இச்சம்பவம் குறித்துச் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாகப் பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதைத் தவிர்க்குமாறும், இணையவழி மோசடிகள் குறித்து இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற பாதிப்புகளைச் சந்திப்பவர்கள் அச்சப்படாமல் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தைத் தொடர்புகொண்டு முறையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post உங்கள் வாட்ஸ்அப் புகைப்படங்கள் பாதுகாப்பானதா? சம்மாந்துறையில் புகைப்பட மோசடியில் சிக்கிய சந்தேகநபருக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

செயற்கை நுண்​ணறிவு உச்சி மாநாடு: இந்தியாவுக்கு ஐ.நா. தலைவர் பாராட்டு
டெல்​லி​யில் வரும் 19, 20 ஆகிய தேதி​களில் செயற்கை நுண்​ணறிவு தொடர்​பான உச்சி மாநாட்டை இந்​தியா நடத்​தவுள்​ளது. இதில் பல்​வேறு நாடு​களின் தலைவர்​கள், பிர​தி​நி​தி​கள் கலந்​து​கொள்​ளவுள்ளனர். இந்த உச்சி மாநாட்​டுக்கு வரு​வதை ஐ.நா. சபை தலை​வர் அன்டோனியா குட்​டேரஸும் உறுதி செய்​துள்​ளார்.

இதுகுறித்து செய்தி நிறு​வனத்​துக்கு நேற்று அவர் அளித்த பேட்​டி: செயற்கை நுண்​ணறி​வுத்​துறை என்​பது மிக​வும் வேக​மாக வளர்ந்து வரும் ஒரு துறை​யாகப் பார்க்​கப்​படு​கிறது. இதனால் பல நன்​மை​களும், தீமை​களும் உண்​டு. சர்​வ​தேச உறவு​களில் இன்று செயற்கை நுண்​ணறிவு முக்கிய​மான விஷய​மாக​வும், பிரச்​சினை​யாக​வும், எதிர்கால சவால்​களில் ஒன்​றாக​வும் உள்​ளது.

இந்​தத் துறை​யால் பல நிபுணர்​கள் வேலை​யிழக்​கும் அபாயம் உள்​ள​தாக கருதுகின்​றனர். எனவே, இதுதொடர்​பாக அனைத்து வகை​யான சூழ்​நிலைகளி​லும் உலக நாடுகள் ஒன்​றிணைந்து அதைப் பற்றி விவா​திப்​பது மிகவும் முக்​கி​யம்.

இந்த உச்​சி​மா​நாட்​டில் தலை​மைப் பொறுப்பை ஏற்​றுக்​கொண்​டதற்​காக இந்​தி​யாவை நான் பாராட்​டு​கிறேன். இந்த உச்சி மாநாட்​டில் செயற்கை நுண்​ணறிவு தொடர்பாக எழுந்​துள்ள சவால்​கள் குறித்து விரி​வாக விவாதிக்​கப்பட வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post செயற்கை நுண்​ணறிவு உச்சி மாநாடு: இந்தியாவுக்கு ஐ.நா. தலைவர் பாராட்டு appeared first on Oruvan.com.

செயற்கை நுண்ணறிவு குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு
அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வுத் தொடரின் மற்றுமொரு செயலமர்வு நேற்று (12) அலரி மாளிகையில் நடைபெற்றது.

‘AI for Transforming Public Service’ என்ற தலைப்பின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் ஒத்துழைப்புடன் டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில் அரசாங்க அமைச்சுகளின் நிறைவேற்று அதிகாரிகள் பங்கேற்றனர்.

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஆரம்ப பிரவேசமாக, அரச அதிகாரிகளை அறிவூட்டுதல் மற்றும் தயார்படுத்துதல் மற்றும் அரச சேவைக்குள் செயற்கை நுண்ணறிவு குறித்த சாதகமான அணுகுமுறையை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரச சேவை டிஜிட்டல் பரிமாற்றத்திற்குத் தயாராக வேண்டும் என்றும், அதற்காக தற்போதுள்ள அரச சேவை மாற வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க இங்கு தெரிவித்தார்.

அரச சேவை தொடர்பில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான சவாலை வெற்றிகொள்வதற்கு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு மிகவும் திறமையான சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய இந்த செயலமர்வில் பிரதான உரை நிகழ்த்தியதுடன், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க, சமிச அபேசிங்க ஆகியோருடன் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த செயலமர்வில் வளவாளர்களாக பங்களித்தனர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம திஸாநாயக்க ஆகியோருடன் அனைத்து அரச ஆணைக்குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள், மேல் மாகாண சபை மற்றும் அரச திணைக்களங்களின் அதிகாரிகள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

The post செயற்கை நுண்ணறிவு குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு appeared first on Oruvan.com.