செம்மணி Archives - Oruvan.com

யாழில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

குறித்த போராட்டம் யாழ் செம்மணியில் இன்று காலை ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும் 29ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்ககள், சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post யாழில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம் appeared first on Oruvan.com.

செம்மணியும் ஆன்மீகத் தலைவரும்
*செல்வாக்குள்ள அரசியல் சாராத ஒருவரை முன்நிறுத்தி பின்னால் நகர்த்தப்படும் கொழும்பின் சதி அரசியல்

*சித்துப்பாத்தி மயான மனித புதைக்குழி மூடி மறைக்கப்படலாம்!

*வலிகிழக்கு பிரதேச எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை…

*கோப்பாய் பிரதேச செயலகத்தில் அனுமதி பெறப்படவில்லை…

அ.நிக்ஸன்-

யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசம் தற்போது தமிழ் இன அழிப்பின் பிரதான அடையாளமாக விளங்குகிறது. இப்பின்னணியில், முடிந்தவரை இலங்கை அரசாங்கம் 1996 ஆம் ஆண்டு செம்மணியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் பற்றிய அடையாளங்களை மூடி மறைக்கும் முயற்சிகளை திரைமறைவில் அரங்கேற்றுகிறது.

ஆனாலும், ஈழத்தமிழ் தரப்பில் உள்ள சட்டத்தரணிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் செய்தியாளர்கள், செம்மணி விவகாரத்தை திசை திரும்ப விடாமல் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.

2009 மே மாதம் போரின் பின்னரான சூழலில் 2010 ஆம் ஆண்டில் இருந்து வடக்கு கிழக்கு பகுதிகளில் கூடுதலாக வடக்கு மாகாணத்தில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஏறத்தாள முன்னூறுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இதுவரை உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை.

மன்னார் திருக்கேதீஸ்வரம் வளாகத்தில் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் எக்காலத்திற்குரியது என்பதை கண்டறிவதற்கான காபன் பரிசோதனை மேற்கொள்வதற்கான (கதிரியக்க கார்பன் காலக்கணிப்பு -C-14 Carbon Dating Test) மாதிரிகள் பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

அதற்கான நிதியை கோரி, ஓஎம்பி எனப்படும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விவரங்கள் கண்டறியும் அலுவலகத்திடம் விலை மனு கோரப்பட்டு இருந்தது.

ஆனால், அதற்கான பதில் வழங்கப்படாமல் கால தாமதம் ஏற்படுகிறது.

அதேநேரம் —

மன்னார் சதொச கட்டிடத்தின் கீழ் பகுதியில் 2018 ஆம் ஆண்டு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருத்தன.

ஒரு பகுதியை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவிற்கு அனுப்ப ஓகஸ்ட் மாதம் 2022 ஆம் ஆண்டு மன்னார் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டது.

எனினும், அமெரிக்காவின் மியாமி பீட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனம், (Beta Analytic Inc.) அவை கி.பி.1404 -1635ற்கும் இடைப்பட்ட நூற்றாண்டுகளை சேர்ந்தது என ஆய்வு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஆனால், அந்த எலும்புகள் போர்க்காலத்துக்குரியவை என அகழ்வில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் ஏற்கனவே சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இங்கு அகழ்ந்து எடுக்கப்பட்ட சில மனித எச்சங்கள் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் சோமதேவிடம் சமீபத்தில் தான் ஆய்வுக்காக கை அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, இன அழிப்பு என்பதை மூடி மறைக்கும் முயற்சிகள் 2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்ட நாளில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக உணர முடிகிறது.

இவ்வாறான பின்னணியில் செம்மணி மனித புதைகுழி விவகாரமும் மூடி மறைக்கப்படக் கூடிய ஆபத்துகள் இல்லாமலில்லை.

இப் பின்புலத்தில்தான் செம்மணியில் உள்ள அரசாங்க காணி என கருதப்படும் சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான அதுவும் செல்வாக்குப் பெற்ற ஒரு ஆன்மீகத் தலைவரிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதற்கு ——

1) காரண – காரியத்தோடு கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்கு செலுத்தியுள்ளது..

2) காணியில் சங்கிலியன் சிலை ஒன்றும் ஆன்மிகத் தலம் ஒன்றும் அமைக்கப்படுவதற்கான யோசனைகள் இருப்பதாகவும் அறிய முடிகிறது.

ஆனால் —–

குறித்த மூன்று ஏக்கர் காணி 1996 ஆம் ஆண்டு கிரிசாந்தி குமாரசுவாமி இராணுவத்தினர் ஒன்பது பேரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடமாகும். அத்துடன் கரிசாந்தியை தேடிச் சென்ற தாயாரும் அயல் வீட்டாரும் அந்த இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு அப் பகுதியில் புதைக்கப்பட்டிருக்கின்றனர்.

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று, 1999 ஆம் ஆண்டு வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், முதலாம் எதிரியான சோமரட்ன ராஜபக்ச தனது இறுதி விரும்பத்தை நீதிபதியிடம் வெளிப்படுத்தினார்.

அப்போது செம்மணியில் சுமார் 600 இற்கும் அதிகமான இளைஞர்கள் – யுவதிகள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளை தன்னால் அடையாளம் காண்பிக்க முடியும் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு விசாரணைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டன. இந்த சாட்சியத்தின் பிரகாரம், சோமரட்ணவுடன் செம்மணிக்கு சென்றிருந்த மன்னார் மாவட்ட அப்போதைய நீதிபதி இளஞ்செழியன், மனிதப் புதைகுழிகள் இருப்பதாக காண்பித்த இடங்களை அடையாளப்படுத்தினார்.

இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டிருந்த காணியின் ஒரு பகுதியைத் தான் ஆன்மீகத் தலைவர் ஒருவருக்கு கொழும்பு அரச அதிகாரிகள் வழங்கியிருக்கின்றனர்.

நகர்த்தல் பிரேரணை —-

கிரிசாந்தி உள்ளிட்ட 600 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் குறித்த மூன்று ஏக்கர் காணிக்குள் விசாரணை முடிவடையும் வரை கட்டிடங்களை கட்ட வேண்டாம் என கோரி சட்டத்தரணி சண்முகநாதன் வைஷ்ணவி யாழ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நகர்த்தல் பிரேரணை ஒன்றை கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டும் இப் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது.

ஆன்மீகத் தலைவர் பெற்றுள்ள காணியில் கட்டடங்கள் கட்டப்படும் போது, அதனால் எழும் விளைவுகள் அங்குள்ள மனித புதைகுழி பற்றிய விசாரணைக்குத் தடையாக இருக்கும் எனவும் நகர்த்தல் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதேநேரம், காணிக்கு 500 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்க்கால மனிதபுதை குழி அகழ்வு நடவடிக்கைகளிலும் இடையூறு ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நகர்த்தல் பிரேரணையை விசாரணை செய்யும் நியாயாதிக்கம் (Jurisdiction) மஜிஸ்ரேட் நீதிமன்றத்துக்கு இல்லை என்பதால், இதனை யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.

இது பற்றி சட்டத்தரணி வைஷ்ணவியிடம் நான் வினவியபோது, நகர்த்தல் பிரேரணையை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முறைப்பாட்டாளர்கள் எவரும் முன்வர தயங்குவதாக கவலை வெளியிட்டார்.

நகர்த்தல் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பு என்பது செம்மணியை அண்மித்த பிரதேசங்களில் ஏற்படவுள்ள வெள்ள அபாயம் பற்றியது.

அதாவது —-

இருபாலை, கல்வியங்காடு வலிகாமம் கிழக்கின் ஒரு பகுதி, நல்லூர் பிரேத சபையின் ஒரு பகுதி, அரியாலை போன்ற மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மழை காலத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உண்டு.

இது வலி கிழக்கு பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ளதால், கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் நான் வினவினேன்.

முதலில் வெள்ள அபாயம் ஏற்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.

அத்துடன் ஆன்மீக தலைவர் அரசாங்கத்திடமிருந்து பெற்ற காணியில் கட்டிடங்களை கட்டுவதற்குரிய அனுமதிக்கு கோப்பாய் பிரதேச சபையிடம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

சித்துப்பாத்தி மயானத்தில் போர்க்கால மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கிரிசாந்தி உள்ளிட்ட 600 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக அடையாளம் இடப்பட்டுள்ள செம்மணி காணிக்குள் கட்டிடங்கள் அமைப்பதை தற்காலிகமாக பிற்போடுங்கள் என தொலைபேசியில் தாழ்மையாக தான் கேட்டுக் கொண்டதாகவும் என்னிடம் எடுத்துச் சொன்னார்.

இந்த விவகாரத்தில் குறித்த ஆன்மீகத் தலைவரிடம் இருந்து மாற்றம் வரும் என தான் நம்புவதாகவும் நிரோஷ் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை —-

யாழ்ப்பாணத்தில் மழையினால் பெறப்படும் வெள்ள நீரை கடலுக்குச் செல்ல விடாமல் தொண்டமானாறு, செம்மணி போன்ற இரண்டு பிரதேசங்களை தெரிவு செய்து பாரிய அபிவிருத்தி திட்டம் ஒன்றை வடமாகாண நீர்ப்பாசன திணைக்களம் செயல்படுத்தி வருகிறது.

உலக வங்கியின் 400 மில்லியன் ரூபாய் செலவில் செய்யப்பட்ட தொண்டமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்துள்ளது.

ஆனால், செம்மணி திட்டம் இன்னும் செய்யப்படவில்லை.

விளக்க குறிப்புகள் —

A) இவ்வாறான ஒரு நிலையில் குறித்த ஆன்மீகத் தலைவர், செம்மணியில் தான் பெற்றுக் கொண்ட காணியில் எந்தவொரு கட்டிடத்தையும் அமைக்கும் விடயத்தில் பொருத்தமான ஆலோசனைகள் பெறப்பட வேண்டும்.

B) இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சைவ மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலரும் பொருத்தமான முறையில் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

C) குறித்த ஆன்மீகத் தலைவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் அமைதி காப்பது ஆரோக்கியமானதல்ல.

அதேவேளை, தமிழர்களின் கூட்டுரிமை சார்ந்த விவகாரங்களில் —

1) செல்வாக்கு மிக்கவர்

2) கல்வியாளர்

3) புத்திஜீவி

என்ற நோக்கு நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

ஏனெனில் —–

13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் ஏற்கவில்லை என்ற காரண – காரியத்தோடு மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்கள் ஒரு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இலங்கை ஒற்றையாட்சி அரசு மீளவும் பெறுகிறது.

மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்ற வினா தொடர்ந்து தொக்கி நிற்கிறது.

இப்பின்னணியில், கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்கு என்ற அடிப்படையில் அரச காணிகளை பெற, தமிழ் தரப்பில் யார் ஈடுபட்டாலும் அது கூட்டுரிமை மீறலாகும்.

இவ்வாறான செல்வாக்குடன் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் செயற்படுவதையும் மறுக்க முடியாது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டிருந்த ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் கொழும்பை மையமாகக் கொண்ட நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆகவே —

இந்த ஆபத்துகள் பற்றி கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்கு உள்ள தமிழர்கள் உணர தலைப்பட வேண்டும்.

அதேநேரம் —

செம்மணியில் மாத்திரமல்ல, வேறெந்த இடங்களிலும் காணிகளை பெறுவது அல்லது காணிகளை இழப்பது போன்ற விவகாரங்களுக்கு இலங்கை ஒற்றையாட்சி நீதிமன்றங்களில் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்கவும் முடியாது.

ஏனெனில், அது அரசியல் பிரச்சினை. அதை சட்டங்களினால் தீர்க்க முடியாது. உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதாலேயே இன அழிப்புக்கு சர்வதேச நீதி கோரப்படுகின்றது.

ஜெனீவா ஆணையாளர் கூட தனது அறிக்கையில் இலங்கை நீதித்துறையின் நம்பகத்தன்மை அற்ற பின்னணியை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆகவே, சிங்கள உறுப்பினர்கள் பெரும்பான்மையாக அங்கம் வகிக்கும் இலங்கை நாடாளுமன்றத்தின் ஊடாகவோ, ஒற்றையாட்சி நீதிமன்றத்தின் மூலமாகவோ தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பது பட்டறிவு.

இந்த அடிப்படையில் எழுந்ததுதான் ”தமிழ்த் தேசியம்” என்ற கோட்பாடு.

இதை புரிந்து கொண்டு 2009 இற்கு பின்னரான தமிழர் அரசியல் விவகாரத்தை மேலும் சிக்கலாக்க கூடிய பிரித்தாளும் தந்திரங்களுக்கு இடமளிக்க கூடாது.

மக்களிடம் செல்வாக்கு பெற்ற அரசியல் சாராத ஒருவரை முன்நிறுத்தி பின்னால் நகர்த்தப்படும் கொழும்பின் சதி அரசியலுக்குள் (Conspiracy Politics) பலியாகாமல், ஈழத்தமிழர்களின் கூட்டுரிமை என்ற வியூகத்தில் உத்திகள் வகுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக இலங்கை நீதிமன்றங்களுக்கு சென்று, தமிழர்கள் தமக்குள் வாக்குவாதப்படும் அவலங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க வேண்டும்.

யாழ்ப்பாணம் கைதடியில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி மற்றும் சிவபூமி அருங்காட்சியகம் ஆகியவை மரபுரிமை – பண்பாட்டு அடையாளங்களை பேணும் முறை.

இவ்வாறு தமிழர்களின் மரபுரிமை மற்றும் சைவ சமய மாண்புகளை, இன ஒதுக்கல் சவால்களுக்கு மத்தியில் பேணி வரும் ஒரு ஆன்மிகத் தலைவர், சமூகப் பொறுப்புடன் செயற்படுவதற்கு யாரும் வகுப்பெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற ஆரோக்கியமான சூழல் உருவாக வேண்டும்

The post செம்மணியும் ஆன்மீகத் தலைவரும் appeared first on Oruvan.com.

செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூடு மீட்பு
யாழ். செம்மணி மனிதப் புதை குழியில் கால்கள் மடிக் கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூட்டுத் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதை குழியில் அகழ்வுப் பணிக ளின் போது நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை குவியலாக எட்டு மனித என் புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட் டிருந்தன. அவற்றைச் சுத் தம் செய்யும் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை முன்னெ டுக்கப்பட்டன.

இதன்போது, அவற்றுள் 227 என்று இலக்கமிடப்பட்ட என்புக் கூட்டுத் தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலை யில் மீட்கப்பட்டது.

இது தொடர்பில் தெளிவான விளக்கத் தைப் பெற யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை மூத்த விரிவுரையாளர் ரமணராஜா புதைகுழிப் பகுதிக்கு அழைக் கப்பட்டு, அது தொடர்பான அவரது அவதா னிப்புகள், விளக்கங்கள் கோரப்பட்டன.

அவர் தனது அவதானிப்பின்படி, மேற் படி மனித என்புத் தொகுதி இந்து முறைப் படி முறையாக அடக்கம் செய்யப்பட்ட மைக்கான சான்றுகள் காணப்படவில்லை எனவும், என்புக்கூட்டின் கைகள் காணப் படும் நிலைமை உள்ளிட்ட காரணிகளால் அது முறையாக அடக்கம் செய்யப்பட்ட என்புக்கூடு இல்லை எனவும் தெரிவித் தார்.

அதையடுத்து அது தொடர்பான விவர மான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ். மேலதிக நீதிவான் செ.லெனின்குமார் உத்தரவிட்டார்.

இதேவேளை, செம்மணி மனிதப் புதை குழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணி களுக்காக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதித்த 45 நாள்கள் இன்று சனிக்கிழமையுடன் நிறைவு பெற வுள்ள நிலையில், அடுத்த வழக்கு விசா ரணைகள் தொடர்பில் இன்று நீதிவான் திகதியிடுவார் என்று சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

The post செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூடு மீட்பு appeared first on Oruvan.com.

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி, சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 235 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 44வது நாளாக நேற்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.

The post செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம் appeared first on Oruvan.com.

செம்மணி வழக்கு நீதிபதிக்கு பதவி உயர்வு: மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை
இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்படும் இடத்தை அழ்வாய்வு செய்யும் பணிகளை ஆரம்பத்தில் இருந்தே மேற்பார்வையிட்டவரும், குறித்த இடத்தை குற்றச் சம்பவம் இடம்பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுத்தவருமான நீதிவான் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் தகவல்களை சேகரித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தனது முதல் அறிக்கையை வெளியிட்டு, நீதி அமைச்சர், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தளபதி, உயர்கல்வி அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்கு தனித்தனியாக பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

நேற்றைய தினம் (செப்டெம்பர் 03) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட  கோட்டை நீதிபதி நிலுபுலி லங்காபுர மற்றும் யாழ்ப்பாண நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா ஆகியோரின் பெயர்களும் இதில் உள்ளடங்கும்.

தற்போது செம்மணி அகழ்வாய்வை விசாரிக்கும் தற்போதைய கற்றறிந்த நீதவான் பதவி உயர்வு பெற்றால், தற்போதைய விசாரணை தொடர்பாக அவருக்குப் பின்னர் விசாரணைகளை முன்னெடுக்கும் நீதவானுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென, ஜனாதிபதி இந்த நியமனங்களை வழங்குவதற்கு முன்னதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட செம்மணிப் புதைகுழி குறித்த தனது முதல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமாரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுகள் இடம்பெற்று வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இரண்டாம் கட்ட அகழ்வாய்வில் நேற்றைய தினம் வரையில் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 231 ஆக உயர்வடைந்துள்ளது.

முன்னாள் நீதவானால் குற்றம் நடந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ள புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள், நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கு உள்ளானவர்கள் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

பொது அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவிக்கு உத்தரவிடுமாறு நேற்றைய தினம் (செப்டெம்பர் 03) வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் மாஅதிபருக்கு பரிந்துரைத்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் இலங்கை பொலிஸாரும், இலங்கை இராணுவமும் ‘இணைந்த தரப்பினராக’ அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 13 பக்க அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளில், எந்தவொரு அரச அதிகாரி, சிவில் சமூகப் பிரதிநிதி அல்லது காணாமல் போனவரின் குடும்ப உறுப்பினரைத் தொடர்பு கொள்வது உட்பட, எந்த வகையிலும் தலையிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்குமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இலங்கை இராணுவத் தளபதி ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

விசாரணைகளை நடத்தும்போது (அதாவது, ஒரு நபர் வாக்குமூலம் அளிக்க ஏன் அழைக்கப்படுகிறார் என்பதை தெளிவாகத் தெரிவிப்பதற்காக) ஜூலை 2, 2025 திகதியிடப்பட்ட பொலிஸ்மா அதிபரின்  RTM 101/CRTM 61 இலக்க சுற்றறிக்கைக்கு அமைய செயல்படுமாறும், குறித்த தவறுகள் தொடர்பிலான தெளிவான சந்தேகம் காணப்படுகின்ற சந்தர்ப்பங்களைத் தவிர, செம்மணி புதைகுழி விசாரணை குறித்து செய்தி வெளியிடும் ஊடவியலாளர்களை அழைத்து புலனாய்வு அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்க்குமாறு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரைணைப் பிரிவுக்கு (CTID) அறிவுறுத்தல்களை வழங்குமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீண்டும் ஒருமுறை பொலிஸ் தலைவருக்கு நினைவூட்டியுள்ளது.

பாதுகாப்புப் படையினர் அல்லது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் மீது சுமத்தப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் சட்டவிரோதக் கொலைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வழக்குத் தொடர பரந்த அதிகாரங்களைக் கொண்ட, நிரந்தர, சுயாதீனமான ‘அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் கடுமையான குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடரும் அலுவலகம்’ ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதி அமைச்சருக்கு பரிந்துரைத்துள்ளது.

தொல்பொருள் ஆய்வு குழுக்கள் போன்ற முக்கிய மனித வளங்களை பெற்றுக்கொள்ளும்போது மற்றும் அவ்வாறான வளங்களை ஒதுக்கீடு செய்யும்போது செம்மணி விசாரணையை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சருக்கு பரிந்துரைத்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, பல மனித புதைகுழிகளை அகழ்வாய்வு செய்வதற்கும் தொல்பொருட்களை மீட்டெடுப்பதற்கும் உதவக்கூடிய தொல்பொருள் நிபுணர்கள் குழு அமைக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

The post செம்மணி வழக்கு நீதிபதிக்கு பதவி உயர்வு: மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை appeared first on Oruvan.com.

செம்மணி குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பாக இடம்பெற்றுவரும் விசாரணை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதில், இதுவரை எட்டப்பட்ட முன்னேற்றங்களும் எதிர்கொள்ளப்படும் முக்கிய சவால்களும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளதுடன், நீதி அமைச்சர், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தளபதி, உயர்கல்வி அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோருக்கான 16 பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட காலப்பகுதியில் 200 க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆரம்பக் கண்டுபிடிப்புகள், 90% க்கும் மேற்பட்ட உடல்கள் சாத்தியமான நீதிக்கு புறம்பான கொலைகளின் மூலம் இடம்பெற்றிருக்கலாம் என்பதைக் குறிக்கின்றன.

அதேவேளை, தடயவியல், மானுடவியல் மற்றும் தொல்பொருள் நிபுணர்கள் பற்றாக்குறை, மேம்பட்ட கார்பன்-டேட்டிங் தொழில்நுட்பத்துக்கான குறைந்த அணுகல், மரபணு பரிசோதனையில் உள்ள சவால்கள் போன்ற நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப இடைவெளிகள் அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. நிதியுதவியில் ஏற்படும் தாமதங்கள், சட்ட அமுலாக்க அதிகாரிகளால் ஏற்படும் மிரட்டல்கள், பொறுப்புக்கூறல் மற்றும் ஊடகச் சுதந்திரம் தொடர்பாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர கரிசனை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, மனித புதைகுழி விசாரணைகளுக்கான நிலையான நடைமுறையை உருவாக்குதல், மேம்பட்ட தடயவியல் வசதிகள் மற்றும் வெளிநாட்டு நிபுணத்துவத்தைப் பயன்படுத்துதல், காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் மரபணு வங்கியை அமைத்தல், மேலும் கடுமையான குற்றச்செயல்களை விசாரித்து வழக்குத் தொடர அரசு அதிகாரிகளின் மீது அதிகாரம் கொண்ட சுயாதீன அலுவலகத்தை உருவாக்குதல் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், சாட்சிகள் அல்லது ஊடகப் பணியாளர்களை அச்சுறுத்துவதை சட்ட அமுலாக்க அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என்பதையும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

விசாரணையை திறம்பட நிறைவு செய்யவும், புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட எச்சங்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்படுவதின் அவசரத் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post செம்மணி குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை appeared first on Oruvan.com.

செம்மணியில் இன்று மதியம் வரையில் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 07ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 39 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 48 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 10 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 191 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இதுவரையில் 209 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியத்துடன் அகழ்வு பணிகள் நிறைவடைந்த நிலையில் , நாளைய தினம் திங்கட்கிழமை காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பமாகவுள்ளது.

The post செம்மணியில் இன்று மதியம் வரையில் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன appeared first on Oruvan.com.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியாக பதிவானது ‘செம்மணி’
நீதிமன்றத்தால் குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது.

இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 34வது நாளான நேற்றைய தினம் (ஓகஸ்ட் 26) செம்மணி மனித புதைகுழியில் மேலும் 16 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.

அகழ்வு தளத்தை பார்வையிட்ட ஊடகவியலாளர்கள் குழந்தைகளினுடையது என சந்தேகிக்கப்படக்கூடிய எலும்புகளை கண்டுள்ளனர், எவ்வாறெனினும் தடயவியல் பரிசோதனைக்குப் பின்னரே இதுத் தொடர்பில் உறுதிப்படுத்தப்படும் என சட்டத்தரணி ரணிதா கூறுகிறார்.

செம்மணி புதைகுழியிலிருந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான உடல்கள் அடையாளம் காணப்பட்டது இன்றைய தினமாகும்.

செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் இருந்து இதுவரை குழந்தைகள் உள்ளிட்ட 166 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

32 நாட்கள் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஓகஸ்ட் 6 ஆம் திகதி முதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உட்பட 150 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

18 நாட்களின் பின்னர் அகழ்வாய்வுகள் நேற்றுமுன்தினம் (ஓகஸ்ட் 25) மீண்டும் ஆரம்பமாகியபோது ஸ்கேன் பரிசோதனைக்கு அமைய அகழ்வு தளத்தை விரிவுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி மன்னாரில் உள்ள சதொச மனித புதைகுழியாகும். அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியான கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழியிலிருந்து குறைந்தது 88 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு அதன் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஐந்தாவது பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழியாகும். அங்கு 2013 இல் 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு பணிகள் நிறைவடைந்த நேரத்தில், 52 நபர்களின் எச்சங்கள் மீட்கப்பட்டன.

The post இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியாக பதிவானது ‘செம்மணி’ appeared first on Oruvan.com.

செம்மணிக்கு பொறுப்பு கூறவேண்டியோருடன் இணைந்து யாழில் ஆட்சி : தமிழரசை சாடும் பிமல்
வடக்கில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சில குழுக்களுடன் இணைந்து யாழ். மாநகரசபையில் ஆட்சி அமைத்துள்ளனர். செம்மணி புதைகுழியில் உள்ள சில எலும்புக்கூடுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்புடன் இணைந்துதான் இவர்கள் இப்படி ஆட்சியமைத்துள்ளனர் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் நீதிமன்ற கண்காணிப்புடன் இடம்பெற்றுவருகின்றன. தேவையான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது.

வடக்கில் தேசிய மக்கள் சக்திக்கே அதிக வாக்குகள் உள்ளன. நிச்சயம் நாம் நீதியை நிலைநாட்டுவோம்.

தெற்கில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும், இதனை எப்படியாவது மீள ஏற்படுத்துவதற்கு ராஜபக்சக்கள் முற்படுகின்றனர். வடக்கில் இவர்கள் முற்படுகின்றார்கள். அதனால்தான் ஏதேனும் ஒரு சம்பவத்தை தூக்கிப்பிடிக்கின்றனர்.

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைக்கு நாம் எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம்கூட ஒத்துழைப்பு கோரியுள்ளோம். தேசிய சமத்துவ அரசாங்கம் வந்துள்ளதால் இவர்கள் வடக்கில் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர் என மேலும் குறிப்பிட்டார்.

The post செம்மணிக்கு பொறுப்பு கூறவேண்டியோருடன் இணைந்து யாழில் ஆட்சி : தமிழரசை சாடும் பிமல் appeared first on Oruvan.com.

செம்மணியில் மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம் காண ஒத்துழையுங்கள்
செம்மணி சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகளில் இதுவரை மீட்கப்பட்டுள்ள தடயப்பொருட்கள் பொதுமக்களால் அடையாளப்படுத்தப்படுமாக இருந்தால், அவற்றை அடிப்படையாகக்கொண்டு உண்மைகளைக் கண்டறிவதற்கான விசாரணைகளைக் கோர முடியும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் விடுக்கப்பட்டுள்ள கட்டளையை மேற்கொள் காட்டி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

செம்மணியில் மீட்கப்பட்ட என்புத்தொகுதிகளின் பின்னணியிலுள்ள இனப்படுகொலைச் சம்பவங்களை எண்பிப்பதற்கு, அங்கு நடைபெற்று வரும் அகழ்வுப் பணிகளில் மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் உரியவர்களின் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட வேண்டும்.

ஆகவே, தடயப்பொருட்களை இனங்காட்ட வேண்டியதன் அவசியம் உணர்ந்து, தங்களின் உறவுகளும் செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எதிர்வரும் 2025.08.05 ஆம் திகதி மாலை 1.30 மணி முதல் 5.00 மணிவரை யாழ்ப்பாணம் சித்துப்பாத்தி இந்துமயானத்தருகில் காட்சிப்படுத்தப்படும் தடயப்பொருட்களை அடையாளம் காட்ட வருகைதந்து, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைக்கு வலுச்சேர்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.

The post செம்மணியில் மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம் காண ஒத்துழையுங்கள் appeared first on Oruvan.com.