செம்மணி மனித புதைகுழி Archives - Oruvan.com

செம்மணி மனித புதைகுழியின் அடுத்த அகழ்வு: 2 கோடி ரூபா நிதிக்கு அனுமதி
இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியில் மேலும் இரண்டு மாத அகழ்வாய்வு பணிகளுக்காகக் கோரப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை, நீதி அமைச்சு வழங்கியுள்ளது.

நிதி கிடைத்தாலும், தற்போது யாழ்ப்பபாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி பிரதேசத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அடுத்த கட்ட அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிப்பது சாத்தியமில்லை என அகழ்வாய்வு நிபுணர்கள் கூறுகின்றனர்.

செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு, நேற்றுமுன்தினம் (ஒக்டோபர் 13), யாழ்ப்பாணம் நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட 1.9 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம், வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

“மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளுக்கான நிதி எங்களுக்குக் கிடைத்துள்ளது. நீதி அமைச்சிலிருந்து கோரப்பட்ட 19 மில்லியன் ரூபாய் எங்களுக்குக் கிடைத்துள்ளது.”

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், சட்டத்தரணிகள், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் அகழ்வாய்வு நிபுணர்களுடன் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியைப் பார்வையிட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அகழ்வாய்வு பணிக்குப் பொறுப்பான நிபுணர்கள், அகழ்வாய்வு நடைபெறும் இடத்தில் சில இடங்களில் ஏற்கனவே மழைநீர் தேங்கி நிற்பதாகவும், இந்த நாட்களில் அப்பகுதியில் மழை பெய்து வருவதால், இந்த நேரத்தில் அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிக்க முடியாது எனவும் நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை நவம்பர் 3, 2025 அன்று மீண்டும் விசாரிக்க நீதவான் தீர்மானித்துள்ளார்.

முன்னர் அங்கீகரிக்கப்பட்ட நிதியுடன் 45 நாட்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் செப்டெம்பர் 6, 2025 அன்று பிற்பகல் நிறைவடைந்த நேரத்தில், 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தும் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.

செம்மணி சித்துப்பாத்தி மனித தைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில், குழந்தை பால் போத்தல், பொம்மை, சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலைப் பை ஆகியவை அடங்கும்.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழி மன்னார் சதொச மனிதப் புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்கள் உட்பட 376 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

The post செம்மணி மனித புதைகுழியின் அடுத்த அகழ்வு: 2 கோடி ரூபா நிதிக்கு அனுமதி appeared first on Oruvan.com.

செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதனை சுற்றப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே குறித்த எலும்பு கூடுகள் தொடர்பில் உறுதியாக கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிறியவர்கள் மற்றும் சிசுக்களின் எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

அத்துடன் ஒன்றுடன் ஒன்று அருகருகே புதைக்கப்பட்ட கால்கள் மடிந்த நிலையிலும், எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவை அசாதாரணமாகவே புதைக்கப்பட்டுள்ளன என்பது கண்களுக்கு புலனாகின்ற போதிலும், மீட்கப்படும் எலும்பு கூட்டு தொகுதிகளை சட்ட வைத்திய அதிகாரி ஆய்வுகளுக்கு உட்படுத்தி சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே மேலதிக தகவல்களை கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் வரையில் கட்டம் கட்டமாக 46 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 174 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள அதேவேளை இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் appeared first on Oruvan.com.

செம்மணி மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட பிற பொருட்களை அடையாளம் காண பொதுமக்களிடம் கோரிக்கை
விசாரணைக்கு உதவும் வகையில், செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்கள் மற்றும் உடைகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் மனித எலும்புக்கூடு அகழ்வாய்வு வரலாற்றில், குற்றம் இடம்பெற்ற பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்ட வளாகத்தில் பொதுமக்களின் பங்களிப்புடன் இதுபோன்ற அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை எனக் கருதப்படுகிறது.

சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் ஓகஸ்ட் 5, 2025 அன்று பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரை இந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என்பதோடு, அதிலுள்ள பொருட்களை அடையாளம் காணும் பொதுமக்கள் இதுத் தொடர்பில் நீதிமன்றத்திற்கோ அல்லது குற்றப் புலனாய்வு பிரிவினருக்கோ அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மனித எலும்புக்கூடுகளுடன் கண்டுக்கப்பட்ட உடைகள் மற்றும் பிறபொருட்கள் என்பனவற்றை பொது மக்களுக்கு காண்பித்து அதன் மூலம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றமானது அனுமதியை வழங்கியுள்ளது.”

மனித புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில், குழந்தை பால் போத்தல், சிறுவர்கள் விளையாடும் பொம்மை, சிறுவர் காலணிகள், பாடசாலை பை உள்ளிட்டவை அடங்கும். இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை 50ற்கும் அதிகம் என பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 27ஆவது நாளான இன்று வரை (ஓகஸ்ட் 1), சிறுவர்கள் உட்பட 112 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 122ஆக உயர்வடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சிடமிருந்து புதிய அனுமதி தேவையில்லை எனவும், பாதுகாப்பு அமைச்சிடமிருந்து புதிதாக அனுமதி  பெற தேவைப்படாத ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கேன் இயந்திரத்தின் ஊடாக ஓகஸ்ட் 4 ஆம் திகதி ஆய்வுகளை நடத்த எதிர்பார்ப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, ஜூலை 29 அன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

எலும்புக்கூடுகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி சித்துப்பாத்தி மயான பூமியில் அகழ்வாராய்ச்சிகள், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், மே 15, 2025 ஆரம்பமானது.

The post செம்மணி மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட பிற பொருட்களை அடையாளம் காண பொதுமக்களிடம் கோரிக்கை appeared first on Oruvan.com.

செம்மணி மனித புதைகுழியை பார்வையிடும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத் மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இந்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் அவர்கள் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.

அத்துடன் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடனும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

The post செம்மணி மனித புதைகுழியை பார்வையிடும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு appeared first on Oruvan.com.

செம்மணி மனிதப் புதைகுழி – சர்வதேச நீதியை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் இன்று போராட்டங்கள்
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் செம்மணி மனித புதைகுழிப் பகுதியிலும், முல்லைத்தீவில் மாவட்ட செயலகத்துக்கு அருகாமையிலும், கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகாமையிலும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் வவுனியாவில் புதிய பஸ் நிலையத்துக்கு அருகாமையிலும், மன்னாரில் நகர்ப் பகுதியிலும், அம்பாறையில் திருக்கோவில் பகுதியிலும், மட்டக்களப்பில் காந்திப் பூங்கா பகுதியிலும், திருகோணமலையில் சிவன் கோயில் முன்பாகவும் இந்தப் போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக வடக்கு – கிழக்குச் சமூக இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு அமைப்பினர் கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தின் முன்பாகவும் இன்று காலை 10 மணியளவில் கவனவீர்ப்புப் போராடடத்தில் ஈடுபடவுள்ளனர்.

The post செம்மணி மனிதப் புதைகுழி – சர்வதேச நீதியை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் இன்று போராட்டங்கள் appeared first on Oruvan.com.

செம்மணி மனித புதைகுழியில் பொலித்தீனால் கட்டப்பட்ட எலும்புக் குவியல்!
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட – இலங்கையின் மிகப்பெரிய நான்காவது மனித புதைகுழி வளாகத்தின் அகழ்வாய்வு தளத்தின் இரண்டாவது பகுதியில் பொலித்தீனால் சுற்றப்பட்ட மனித எலும்புகளின் ஒரு குவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் 2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து ஜூலை 10ஆம் திகதியான இன்று வரை அகழந்து எடுக்கப்பட்ட (சிறுவர்கள் உட்பட) மொத்த மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 65 ஆகும்.

இரண்டாம் கட்ட அகழ்வாய்வு 15 நாட்கள் இடம்பெற்ற பின்னர், அகழ்வாராய்ச்சி குழுவினருக்கு ஓய்வு அளிக்கும் வகையில், இன்றைய தினம் அகழ்வாராய்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

பொலித்தீனில் கட்டப்பட்ட எலும்புகள் அடங்கிய குவியல் தொடர்பில் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவுக்கு நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவினால் உத்தரவிடப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா குறிப்பிட்டார்.

“அகழ்வுப்பணி பிரதேசம் இரண்டில் ஒரு பொலித்தீனினால் கட்டப்பட்ட எலும்புக் குவியல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த தொகுதியில் சிறிய மற்றும் பெரிய எலும்புப்துண்டுகள் காணப்பட்டதால், அந்த எலும்புகள் குறித்து ஆய்வு குறித்த அறிக்கை ஒன்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சடடத்தரணிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் தலைமையில் சட்ட வைத்திய அதிகாரிகள் குழு ஒன்றை உருவாக்கி, எடுக்கப்பட்ட அந்த எலும்புகளை ஆராய்ந்து ஆகக் குறைந்த மனித உடல்களின் எண்ணிக்கை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் அறிவித்தார்.”

இதுவரை, செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மூன்று இடங்களில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, மேலும் அந்த இடங்கள் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் 1, 2 மற்றும் 3 என பெயரிடப்பட்டுள்ளன.

மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வு குறித்த அறிக்கையை ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவுக்கு நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா உத்தரவிட்டதாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.

நீல நிறப் பை, காலணிகள் மற்றும் சிறு பிள்ளையினுடையது என சந்தேகிக்கப்படும் பல மனித எச்சங்களுடன் கண்டெடுக்கப்பட்ட 25 ஆம் இலக்க மனித எலும்புக்கூடு குறித்த அறிக்கையை ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி, செல்லையா பிரணவனுக்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதி அமைச்சு 45 நாட்களுக்கு அகழ்வாய்வுக்குத் பணிக்காக கோரப்பட்ட முழுத் தொகையையும் வழங்கியுள்ளதாக ஊடகங்களுக்குத் தெரிவித்த சட்டத்தரணி ரணிதா, அந்தத் தொகையை வெளியிடவில்லை.

அகழ்வாய்வினை தடையின்றித் தொடர போதுமான நிதி வழங்கப்பட்டுள்ளதாக உறுதியளித்த காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் சார்பான சட்டத்தரணி மிராக் ரஹீம், மனித புதைகுழி வளாகத்திற்கு 24 மணி நேரம் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அகழ்வாய்வுக் குழுவினருக்கு ஓய்வளிக்கும் வகையில் இன்றைய தினம் (ஜூலை 10) தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அகழ்வுப் பணிகள் ஜூலை 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஊடகங்களிடம் தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பிரிவு மாணவர்களுடன், வைத்தியத்துறை மாணவர்களும் இன்று அகழ்வுப் பணிகளில் பங்கேற்றதாக மேலும் குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தால் குற்றம் இடம்பெற்ற இடமாக அறிவிக்கப்பட்டுள்ள செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் தற்போதுள்ள மூன்று சிசிடிவி கமராக்களுடன் மேலதிகமாக இரண்டு சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக அகழ்வாய்வுப் பணிகளை அறிக்கையிட்ட உள்ளூர் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post செம்மணி மனித புதைகுழியில் பொலித்தீனால் கட்டப்பட்ட எலும்புக் குவியல்! appeared first on Oruvan.com.

செம்மணி மனிதப் புதைகுழி – நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு முழுமையாக அரசாங்கம் ஆதரவு
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு அரசாங்கம் முழுமையாக ஆதரவு வழங்குவதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ள அகழ்வு பணிகளில் இதுவரை 44 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 61 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வுகள் தொடர்ந்து கொண்டுசெல்ல அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும். குறிப்பாக நீதிமன்றத்தின் செயல்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

The post செம்மணி மனிதப் புதைகுழி – நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு முழுமையாக அரசாங்கம் ஆதரவு appeared first on Oruvan.com.

செம்மணி மனித புதைகுழியில் குழந்தைகளுக்கான காலணிகள், பொம்மைகள்
இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் இருந்து, ஒரு குழந்தையின் எலும்புக்கூடு போல் தோன்றும் ஒரு எலும்புக்கூடுக்கு அருகில், நீல நிறத்தில் ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்ட ஒரு நீல நிறப் பை, ஒரு சிறிய பொம்மை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஒரு செருப்பு நேற்று கண்டெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள  38 எலும்புக்கூடுகளில், குறைந்தது 10, சிறுவர்கள் அல்லது குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடுகள் அடங்குமென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது நீதிமன்றத்தால் குற்றம் நடந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஏற்கனவே ஒரு பையுடன் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு, நாள் முழுவதும் தோண்டப்பட்டு முழுமையாக மீட்கப்பட்டது,” என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில், புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா குறிப்பிடுகின்றார்.

ஜூலை முதலாம் திகதிக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட 33 மனித எலும்புகளுக்கு மேலதிகமாக ஐந்து மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டாலும், எலும்புகள் பின்னிப் பிணைந்திருப்பதாகத் தோன்றுவதால் சரியான எண்ணிக்கையைக் கூற முடியாது என அவர் மேலும் கூறினார்.

“முழு நாள் அகழ்வுப் பணியில் சுமார் ஐந்து ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த எலும்புக்கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும் எண்ணிக்கையை சரியாக குறிப்பிட முடியாது. குழப்பமாக காணப்படுகிறது.”

தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவால் அடையாளம் காணப்பட்டு, மனித எலும்புகள் இருக்கக்கூடிய இடங்களாக நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்யும் பணிகள், நேற்றைய தினம் (ஜூன் 1) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

1990 களில் செம்மணி அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த சட்ட வைத்திய அதிகாரி கிளிபர்ட் பெரேரா அகழ்வு பணிகளை பார்வையிட்டதோடு, அகழ்வாராய்ச்சிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் அகழ்வாராய்ச்சி தொடர்பான பழைய தகவல்களைப் பற்றி விவாதித்ததாகவும் சட்டத்தரணி ரணிதா குறிப்பிடுகின்றார்.

செம்மணிப் பகுதியில் முன்னூறு முதல் நானூறு வரையிலான புதைகுழிகள் இருப்பதாக, செப்டம்பர் 7, 1996 அன்று பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக இலங்கை இராணுவத்தின் நான்கு உறுப்பினர்களுடன் சேர்ந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச, கொழும்பு உயர் நீதிமன்ற சாட்சிக்கூண்டில் இருந்தவாறு தெரிவித்திருந்தார்.

1999 ஆம் ஆண்டு அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட 15 உடல்களில், இரண்டு உடல்கள் 1996 இல் காணாமல் போன இளைஞர்களின் உடல்கள் என அடையாளம் காணப்பட்டன. எஞ்சிய 13 உடல்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

எலும்புக்கூடுகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அகழ்வாராய்ச்சிகள் மே 15 ஆம் திகதி தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பமானது.

The post செம்மணி மனித புதைகுழியில் குழந்தைகளுக்கான காலணிகள், பொம்மைகள் appeared first on Oruvan.com.