செம்மணி மனிதப் புதைகுழி Archives - Oruvan.com

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள், சுமார் எட்டு மாத கால இடைவெளிக்குப் பின்னர் யாழ் நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட இரண்டு கட்ட அகழ்வுப் பணிகளின் போது, 240 மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றில் 239 எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

பருவமழை மற்றும் காலநிலை சீரின்மை காரணமாக இரண்டாம் கட்டப் பணிகள் கடந்த செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்தன.

புதைகுழிக்குள் மழை வெள்ளம் தேங்கியதால் நிலவிய தடைகளைத் தாண்டி தற்போது அடுத்தகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் காணப்படுவதால் அகழ்வுப் பணிகளைத் தொடர 8 வார கால அவகாசம் கோரி சட்ட வைத்திய அதிகாரி முன்வைத்த விண்ணப்பத்திற்கு அமைய நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

இந்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக நிதி அமைச்சினால் 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம் appeared first on Oruvan.com.

செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரலில் ஆரம்பம்
செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

1999ஆம் ஆண்டில்தான் இந்தப் புதைகுழியிலிருந்து எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அன்றிலிருந்து 2024 வரை 25 வருடங்கள் கடந்துவிட்டன. அந்த 25 வருட காலப்பகுதியிலும் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 15 எலும்புக்கூடுகளே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.

2015 முதல் 2019 வரையான அரசாங்கத்தின் கீழ், தமிழ் அரசுக்கட்சி மற்றும் அதன் தலைவர்களான சுமந்திரன் போன்றோர் எதிர்க்கட்சியில் இருந்தபோதும், ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் அவர்களுக்கு விசேட செல்வாக்கு இருந்தது. அவர்களுக்கு அமைச்சர்களை விடவும் அதிக அதிகாரம் இருந்தது.

அப்பகுதியின் பணிகளுக்காகப் பெருமளவு நிதியும் வழங்கப்பட்டது. ஆனால், அந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் அரசுக்கட்சித் தலைவர்களுக்கு ஏன் செம்மணி புதைகுழி மறந்து போனது? எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.

நாம் 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் அதிகாரத்தைப் பொறுப்பேற்றோம். நாடாளுமன்றப் பெரும்பான்மையை நவம்பரில் பெற்றுக்கொண்டோம். அன்றிலிருந்து இன்று வரையிலான இந்த 17 மாதங்களில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 239 ஆகும். இவ்வளவு பணிகளைச் செய்யும் அரசாங்கத்தின் மீதே தற்போது சிலர் குற்றச்சாட்டு முன்வைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

செம்மணி புதைகுழி அமைந்துள்ள தொகுதியிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். அங்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரே உள்ளார். இது தொடர்பான முழுமையான விபரங்களை நாம் அறிவோம். ஆராய்ந்துள்ளோம். இதனை விசாரணை செய்வதற்கு எமக்கு மக்கள் ஆணை உள்ளது என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இது மாத்திரமல்ல, மாத்தளை புதைகுழி குறித்தும் நாம் விசாரணை செய்கிறோம். நீதித்துறை பொறிமுறையின் ஊடாக நீதியை நிலைநாட்டும் போது அதற்கு காலம் எடுக்கும். ஏப்ரல் 20ஆம் திகதி மீண்டும் செம்மணி புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

The post செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரலில் ஆரம்பம் appeared first on Oruvan.com.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைக்கான அரசாங்க நிதி நிறுத்தப்பட்டுள்ளது
“பல சாட்சியாளர்களும், மீறல்களிலிருந்து உயிர் தப்பியவர்களின் குடும்பத்தினரும் வயது முதிர்வடைந்திருப்பதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அச்சத்திலும், நம்பிக்கை இழந்தும் வாழ்ந்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை நிலைநாட்டும் வகையில் இலங்கை தொடர்பில் ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்படவேண்டும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வில் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் ஓரங்கமாக நடைபெற்ற பக்க நிகழ்வில் உரையாற்றியபோதே சிறீதரன் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, சமாதானம் நிலவும் தற்காலத்திலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு குறித்த எனது நீண்டகால கவலையை வெளிப்படுத்த விரும்புகிறேன். இத்தகைய பகுதிகளில் வாழும் மக்கள் இன்றும் மனித உரிமைகளை ஒடுக்கக்கூடிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கொடுங்கோன்மையான விதிகளுக்கு பலியாகி வருகின்றனர்.

தற்போது செம்மணியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த நீதித்துறை விசாரணைக்கான அரசாங்க நிதி நிறுத்தப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி சாட்சியாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள், ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படல் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.

நான் 2013 ஆம் ஆண்டு முதல் ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணைப் பொறிமுறையை நிறுவவேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறேன். குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் முறையான நிபுணத்துவம் உடையவர்களால் சுயாதீனமானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

எனவே இலங்கை தொடர்பில் ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்படவேண்டும் என்ற விடயம் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தில் உள்வாங்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறேன். அத்தோடு இடைக்கால நீதிப்பொறிமுறையின் ஓரங்கமாக மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகக் கடுமையான தடைகள் விதிக்கப்படவேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிக்கான அணுகலை மேற்கொள்வதற்கும், இழப்பீட்டை பெறுவதற்கும், விசாரணைகளில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்பதற்குமான வாய்ப்பு கிட்டவேண்டும். ஏனெனில் தமிழர் பகுதிகள் முழுமையாக இராணுவமயமாக்கப்பட்டிருப்பதனால், பாதிக்கப்பட்ட தரப்பினர் இலங்கை அரசாங்கத்தின் மீது அச்சம் கொண்டிருக்கின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக பல சாட்சியாளர்களும், மீறல்களிலிருந்து உயிர் தப்பியவர்களின் குடும்பத்தினரும் வயது முதிர்வடைந்திருப்பதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அச்சத்திலும், நம்பிக்கை இழந்தும் வாழ்ந்து வருகின்றனர். எனவே இவ்விவகாரத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்றார்.

The post செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைக்கான அரசாங்க நிதி நிறுத்தப்பட்டுள்ளது appeared first on Oruvan.com.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் – புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம்
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழர்களுக்கு சர்வதேச விசாரணையொன்று இங்கு இடம்பெறுவதன் ஊடாகவே நீதியை பெற முடியும். இந்த விடயத்தில் மனித உரிமைகளை நிலைநாட்ட பிரித்தானிய அரசாங்கம் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியாவாழ் புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை லண்டன் டவுனிங் ஸ்ட்ரீட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

‘இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு, கண்ணீரால் நினைவுக்கூரப்படும் உயிர்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதுடன், இலங்கையில் காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை வழங்க முடியும் என வலியுறுத்தினர்.

செம்மணி மனித புதைகுழியில் பல 50 இற்கும் அதிகமான எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறுவதன் ஊடாகவே செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும்.

பிரித்தானிய அரசாங்கம் இந்த விவகாரத்தில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள் வலியுறுத்தினர்.

The post செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் – புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம் appeared first on Oruvan.com.

செம்மணி மனிதப் புதைகுழி சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும்: ரவிகரன் எம்.பி. வலியுறுத்து
செம்மணி, சிந்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரத்துக்கு எந்தவித தலையீடுகளற்ற சுயாதீன சர்வதேச நீதிவிசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.

அத்தகைய சர்வதேச நீதி விசாரணைகளின்போது லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் சாட்சியங்களும் பெறப்படவேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

செம்மணி மனித புதைகுழியில் இனங்காணப்பட்ட 147 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை நிர்வாணமாக்கப்பட்டுப் புதைக்கப்பட்டவையென கடந்த 14ஆம் திகதி சட்டவைத்திய அதிகாரியால் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுவதாகவும் இதன்மூலம் இங்கு பாரிய குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளமை அம்பலமாகுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செம்மணி சிந்துபாத்தி மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் சர்வதேச கண்காணிப்பு அவசியமென்பதை வலியுறுத்துவதுடன், சர்வதேச நிபுணத்துவம் பின்பற்றப்பட்டு அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

அத்துடன், செம்மணி அகழ்வாய்வுப்பணிகளுக்குரிய தொழில்நுட்பம்சார் நிபுணத்துவத்தை வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் அபிவிருத்தி விவகார இராஜாங்க செயலாளர் டேவிட் லமி அண்மையில் தெரிவித்துள்ளார் எனவும் துரைராசா ரவிகரன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

The post செம்மணி மனிதப் புதைகுழி சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும்: ரவிகரன் எம்.பி. வலியுறுத்து appeared first on Oruvan.com.

செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வு, மூன்றாவது பகுதிக்கும் நீட்டிக்கப்பட்டது
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின், மனித எச்சங்களின்  எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டில் நான்காவது இடத்தில் உள்ளது.

2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை 56 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அடங்கும்.

முன்னர் அடையாளம் காணப்பட்ட நான்காவது பெரிய புதைகுழி, 52 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ஆகும்.

நீதிமன்றத்தால் குற்றம் நிகழ்ந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ள சித்துப்பாத்தி மனித புதைகுழியில் கண்டறியப்பட்ட 56 மனித எலும்புக்கூடுகளில், மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 13ஆவது நாளான இன்றைய தினம் (ஜூலை 8) வரையில் 50 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது புதைகுழியில் மூன்று இடங்களில் இருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மனித எலும்புக்கூடுகள் இன்னும் புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் கண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்ததை அடுத்து, ஜூன் 2 புதன்கிழமை இரண்டாவது இடத்தில் அகழ்வு ஆரம்பமானது.

இதற்கு ‘தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 2’ என பெயரிடப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை மூன்று என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா குறிப்பிடுகின்றார்.

“தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 2 இல் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் 3 எலும்பு எச்சங்கள் இன்னும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை. நாளை அது அகழ்வுக்கு இலக்கமிடப்படும். அதன் பின்னர் அகழ்வு இடம்பெறும்.”

அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பமான முதல் இடத்திற்கு தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 1 எனவும், வரவிருக்கும் மழைக்காலத்தை சமாளிக்க வாய்க்கால் தோண்டும்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 3 எனவும் பெயரிடப்பட்டுள்ளதாக, தடயவியல், மானுடவியல் மற்றும் தடயவியல் தொல்பொருளியல் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்ற சட்டத்தரணி ரணிதா ஞானராஜா யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

முதல் தடயவியல் அகழாய்வுத்தளத்தில் 20 மீற்றர் தொலைவில் 11 மீற்றர் அகலமும் நீளமும் கொண்ட ஒரு புதிய கான் ஒன்று தோண்டப்பட்டுள்ளது, இது செம்மணி மனித புதைகுழியின் பரந்த தன்மையைப் பற்றிய ஒரு சிந்தனையை ஏற்படுத்திக்கொள்ள முடியுமென மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு மேலதிகமாக, துணிகள், இரண்டு காலணிகள், ஒரு சிறு குழந்தையினுடையது என நம்பப்படும் இரண்டு வளையல்கள் மற்றும் ஒரு பொம்மை உள்ளிட்ட கருவிகளும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவனின் மேற்பார்வையின் கீழ் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சேமிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய மனித புதைகுழியின் அகழ்வாராய்ச்சி சர்வதேச தரத்திற்கு அமைய பாரபட்சமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பாதிக்கப்பட்டவர்களின் தொடர்ச்சியான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் அங்கீகரித்தது.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், ஜூன் 25 அன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள சித்துப்பாத்தி மனித புதைகுழிக்கு அருகில், மனித புதைகுழிகள் பற்றிய உண்மையை வெளிக்கொண்டுவர தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நிபுணர்களால் விரிவான, வலுவான விசாரணை தேவை எனக் கூறியிருந்தார்.

மனித உரிமைகள் ஆணையாளரை மனித புதைகுழியை ஆய்வு செய்ய அனுமதிப்பதாக பகிரங்கமாக உறுதியளித்த அரசாங்கம், அதைத் தடுப்பதற்கான தோல்வியுற்ற, திட்டமிட்ட முயற்சி என்ற கடுமையான குற்றச்சாட்டுகளை இப்போது எதிர்கொள்கிறது.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இலங்கையில் மூன்றாவது பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி ஆகும், அங்கு அதே ஆண்டில் 82 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

கொக்குத்தொடுவாய் புதைகுழியிலிருந்து 52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பின்னர் அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்தன. ஒரு வருடத்திற்கு முன்னர், கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணத்திற்காக நிலம் தோண்டப்பட்டபோது, ஜூலை 13, 2024 அன்று முதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொழும்பு துறைமுகத்தில் உள்ள பழைய செயலக வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட மொத்த மனித எலும்புகளின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்தப் மனித புதைகுழிகள் அனைத்தும் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன.

The post செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வு, மூன்றாவது பகுதிக்கும் நீட்டிக்கப்பட்டது appeared first on Oruvan.com.

தீப்பந்தங்களை ஏந்தி அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் உகந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நேற்று (23) மாலை ஆரம்பமான குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேசக் கண்காணிப்புடன் மனிதப் புதைகுழிகளின் அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் பல்வேறு சுலோகங்களை ஏந்தி ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு இலங்கை தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  ஆதரவாளர்கள், மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல தரப்பினர் கலந்துகொண்டிருந்தனர்.

The post தீப்பந்தங்களை ஏந்தி அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு appeared first on Oruvan.com.

செம்மணி மனிதப் புதைகுழி – மேலும் 45 நாள்கள் அகழ்வதற்கு அனுமதி
யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி – சித்துப் பாத்தி மனிதப் புதைகுழியைக் குற்றப் பகுதி என்று குறிப்பிட்டு, அதனை மேலும் 45 நாள்கள் அகழ்வதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

இதேநேரம், குறித்த பகுதி சட்டவிரோ தமான – இரகசியமான புதைகுழியாக இருக்க லாம் என்றும், அடையாளப்படுத்தப்பட்ட பகுதியையும் தாண்டி குற்றப் பகுதி இருக்கலாம் என்றும் சட்ட மருத்துவ அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட இடத்தை மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் கோரிய வழக்கு யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ. ஆனந்த ராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன், தொல்பொருள் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோரின் நிபுணத்துவ அறிக்கைகளில் மூன்று விடயங்கள் இருவராலும் சுட்டிக்காட்டப்பட்டன.

“அகழ்வு நடைபெறும் இடத்தில் 1.6 மீற்றர் அடி ஆழத்திலேயே மனித எலும்பு எச்சங்களை அடையாளப்படுத்தக் கூடியதாக உள்ளது.

குழப்பமான விதத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன. ஆடை களோ அல்லது தனிப்பட்ட அணிகலன் களோ காணப்படவில்லை.

இது சட்டவிரோதமான – இரகசியமான புதைகுழியாக இருக்கலாம். தற்போது அடையாளம் காணப்பட்ட மனித

எலும்புக்கூடுகளில் 18 எலும்புக்கூடுகள்

பகுதியளவிலும் முழுமையாகவும் அடை யாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 5 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் பல மனித எலும்பு எச்சங்கள் அடையாளப்படுத்தப் பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தைத் தாண்டியும் குற்றப் பிரதேசம் எனச் சந்தேகிக்கப்படும் பிரதேசம் இருக்கலாம்.

இந்தநிலையில், இந்த மனிதப் புதைகுழியைத் தொடர்ச்சி யாக அகழ வேண்டும்.” – என்று அவர்க ளின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட் டிருந்தன.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதி மன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணியும் அகழ்வை முன்னெடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் திருப்திப்படும் வரையில் அகழ்வுப் பணிகள் முன் னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், சட்ட மருத்துவ அதிகாரி செல் லையா பிரணவனின் கோரிக்கையின்அடிப்படையில் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு,நீதி அமைச்சின் ஊடாக நிதியைப் பெறநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

அத்துடன், தொல்லியல் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அபிப்பிராய அறிக்கை மற்றும் அகழ்வில் திருப்தியடைவதாகத் தெரிவித்த நீதிவான்,அவரே தொடர்ந்தும் அகழ்வில் ஈடுபடுவதற்கு அனுமதியும் வழங்கினார்.

இதேசமயம், இரண்டாம் கட்டமாக முன்னெடுக்கப்படும் அகழ்வுப் பணிகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வருகின்றது என்றும் கூறப்பட்டது.

The post செம்மணி மனிதப் புதைகுழி – மேலும் 45 நாள்கள் அகழ்வதற்கு அனுமதி appeared first on Oruvan.com.