செம்மணி புதைகுழி Archives - Oruvan.com

செம்மணி புதைகுழி: வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி பெற திட்டம்
”செம்மணி புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும். ஏனெனில் உண்மையை கண்டறிவதற்கு இது முக்கியம்.” – என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” செம்மணி புதைகுழி அகழ்வு நடவடிக்கைக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எமக்கு சில விடயங்களில் ஆய்வுக்கூட வசதி இல்லை. எமது நாட்டு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவேண்டும். எமக்கு உண்மையை கண்டறிவதுதான் முக்கியம். தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகின்றது. எனவே, சர்வதேச தொழில்நுட்ப உதவி பெறப்படும்.” – என்றார்.

The post செம்மணி புதைகுழி: வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி பெற திட்டம் appeared first on Oruvan.com.

செம்மணியில் இன்று மதியம் வரையில் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 07ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 39 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 48 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 10 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 191 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இதுவரையில் 209 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியத்துடன் அகழ்வு பணிகள் நிறைவடைந்த நிலையில் , நாளைய தினம் திங்கட்கிழமை காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பமாகவுள்ளது.

The post செம்மணியில் இன்று மதியம் வரையில் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன appeared first on Oruvan.com.

செம்மணி புதைகுழி – குற்றவாளிகளை அரசாங்கம் நிச்சயம் தண்டிக்கும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
” செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள முறையாக இடம்பெற்று வருகின்றன. தேவையான வளங்களை அரசாங்கம் வழங்கி வருகின்றது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது.” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

அத்துடன், நாமல் ராஜபக்சவின் நீலப்படையணியில் இருந்த சாணக்கியன் மற்றும் ரணிலின் விசுவாசியான சுமந்திரன் ஆகியோரின் தாளத்துக்கேற்ப ஆடுவதற்கு எமது மக்கள் கொண்டை கட்டிய சீனர்கள் அல்லர் எனவும் அமைச்சர் கூறினார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் வசித்து வரும் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 32 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 300 பேருக்கும் இன்று புதன்கிழமை (13.08.2025) காணி பத்திரம் வழங்கும் “உரிமை” வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சி, பளை மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பிரதி அமைச்சர் கலாநிதி சுனில் ரணசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளர் கே.நிஹால், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், சாவகச்சேரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்,

” காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை வடக்கில் இருந்தே ஆரம்பித்துள்ளோம். வடக்கு மக்களின் வாழ்வில் என்று வசந்தம் துளிர்விடுகின்றதோ அன்றுதான் எமது வாழ்விலும் வசந்தம் ஏற்படும். ஏனெனில் இது மக்களுக்கான அரசாங்கமாகும்.

சுமந்திரனுக்கு ரணிலுடன் இருக்கும்போது நல்லம். யாழ். நூலகத்தை எரித்த பாவிகளின் பைல்களை தூக்கிக்கொண்டு திரியும்போது தமிழ் மக்களின் பிரச்சினை அவருக்கு தெரியவரவில்லை. ஆனால் இன்று அவர் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கின்றார்.

மட்டக்களப்பில் 10, 15 பேரை அழைத்து சாணக்கியன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றார். அவர் நாமல் ராஜபக்சவின் நீலப்படையணியில் இருந்தவர்.” – எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, கடந்தகால கொலைகள் தொடர்பில் கண்டறியப்பட வேண்டும். அதனால்தான் செம்மணி புதைகுழி தொடர்பான அகழ்வு பணி மற்றும் விசாரணைக்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

‘மன்னாரில் காற்றாலை மின்திட்டம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது. அங்குள்ள கனிய மணல் அகழ்வு இடம்பெறுகின்றதாம். இதனால் மக்களின் காணிகள் சூறையாடப்படபோகின்றதாம் என ரிஷாட் பதியுதீன் கூறுகின்றார். காற்றாலை மின் உற்பத்திக்கு கடந்த காலங்களில் இந்த பாவிகள்தான் காணி வழங்கினார்கள். அதற்குரிய அனுமதியையும் இந்த பாவிகளே வழங்கினர். கனிய மணல் அகழ்வுக்கும் ராஜபக்ச, ரணில் ஆட்சியில் அமைச்சராக இருந்த பாவிகள்தான் அனுமதி வழங்கினர் எனவும் அமைச்சர் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.

ஊடக செயலாளர்

The post செம்மணி புதைகுழி – குற்றவாளிகளை அரசாங்கம் நிச்சயம் தண்டிக்கும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் appeared first on Oruvan.com.

மலையக கட்சிகளுடன் எமக்கு எவ்வித டீலும் இல்லை – சுந்தரலிங்கம் பிரதீப்
செம்மணி புதைகுழி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப்பணி மற்றும் விசாரணைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ஐக்கிய தேசியக் கட்சியாலேயே அன்று கறுப்பு ஜுலைக் கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. நிலைமை இவ்வாறு இருக்க, ஜே.வி.பியினரே தமிழர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர் என்ற மிகவும் சூட்சுமமான முறையில் போலிப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பூரண விசாரணைக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிக்கொண்டிருக்கின்றது.

இந்நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதம் என்பன அதிகாரத்துக்காக பயன்படுத்தப்பட்டன. ஊழல், மோசடிகளை மூடிமறைப்பதற்கான அவை பயன்படுத்தப்பட்டன. எனினும், இந்நாட்டில் இனி இனவாதம் மற்றும் மதவாதத்துக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இடமளிக்காது. அரசியல் அதிகாரத்துக்காக இனவாதம், மதவாதத்தை பயன்படுத்த இடமளிக்கமாட்டோம்.

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் மலையக அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படமாட்டாதா? அவர்களுடன் ஏதேனும் இணக்கப்பாடு உள்ளதா? என சில ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மலையகத்திலுள்ள கட்சிகளுடன் எமக்கு எவ்வித டீலும் கிடையாது.

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் தனக்குரிய கடமையை நிறைவேற்றும்.

புதிய கலாசாரம், முறைமை மாற்றம், சமூக மாற்றம் என்பவற்றுக்காகவே நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். எமக்கென தெளிவான பாதை உள்ளது. அந்த வழியில் மாற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம். மக்கள் எதிர்பார்க்கும் இலங்கை நிச்சயம் உருவாக்கப்படும்.” – என்றார்.

The post மலையக கட்சிகளுடன் எமக்கு எவ்வித டீலும் இல்லை – சுந்தரலிங்கம் பிரதீப் appeared first on Oruvan.com.

செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணையே வேண்டும்
“தமிழர்களின் கருவைக்கூட அறுத்துள்ளனர் என்பதற்கு செம்மணி புதைகுழி சான்றாகும். எனவே, சர்வதேச நியமனங்களுக்கமைய சர்வதேசத்தின் ஒத்துழைப்புடனேயே விசாரணைகள் இடம்பெற வேண்டும்.”

இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் , இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” குழந்தைகள், சிறார்கள், முதியவர்கள் என பலரும் புதைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தாயின் கருவிலேயே தமிழர்களின் கருவைக்கூட அறுத்துள்ளனர். தமிழினப் படுகொலை நடந்துள்ளது என்பதற்கு இது அத்தாட்சியாகும்.

எனவே, சர்வதேச நியதிகளின் அடிப்படையில் சர்வதேச நாடுகள் மற்றும் நீதிமன்றங்களின் ஒத்துழைப்புடனேயே அகழ்வாய்வு நடவடிக்கை இடம்பெறவேண்டும். ஏனெனில் உள்ளக பொறிமுறையென்பது தோல்வி அடைந்துள்ளது.

கடந்த காலங்களில் உள்ளக பொறிமுறை ஊடாக போலியான தகவல்களே வெளியிடப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக பொறிமுறைமீது நம்பிக்கை இல்லை.

வடக்கு, கிழக்கில் எங்கு தோண்டினாலும் தமிழர்கள் திட்டமிட்ட அடிப்படையில் அழிக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. எனவே, தமிழினப் படுகொலை தொடர்பிலும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.” – என்றார்.

The post செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணையே வேண்டும் appeared first on Oruvan.com.

செம்மணி புதைகுழி குறித்து ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிவைப்பு!
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக் கண்டறிதல், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

குறித்த கடிதம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அனுப்பி வைத்துள்ளது அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

செம்மணியில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதைகுழி அகழ்வுப் பணி குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பாக நாங்கள் எழுதுகிறோம். உண்மையை வெளிக்கொணரவும், தடயவியல் நெறிமுறைகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்யவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் அவசர மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

1998 ஆம் ஆண்டில், பாடசாலை மாணவியான கிருஷாந்தி குமாரசாமி மற்றும் குடும்ப உறுப்பினர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக தண்டனை பெற்ற லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, தனது விசாரணையில் 300 முதல் 400 வரையிலான தமிழ் பொதுமக்கள் அங்கு புதைக்கப்பட்டதாக வெளிப்படுத்தினார்.

இதன் பின்னர் குறித்து பகுதியில் கடந்த 1999 இல் அகழ்வாராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்போது அங்கு 15 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் இரண்டு 1996 ஆம் ஆண்டு காணாமல்போனவர்களது என அடையாளம் காணப்பட்டன. தடயவியல் உறுதிப்படுத்தல் இருந்தபோதிலும், வழக்குகள் தேக்கமடைந்தன, இன்றுவரை அதற்கு அர்த்தமுள்ள நீதி வழங்கப்படவில்லை.

2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில், யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி அரியாலைச் சித்துப்பாத்தி இந்துமையான புனரமைப்புப் பணிகளின் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, இதனால் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் அந்த இடத்தை ஒரு பாரிய மனித புதைகுழியாக அறிவித்து, நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன் படி தற்போதைய நிலையில், குழந்தைகள் உட்பட சுமார் 65 எலும்புக்கூடுகள் இரண்டு கட்டங்களாக தோண்டி எடுக்கப்பட்டன, அவற்றுடன் பாடசாலை பை, பொம்மை, வளையல்கள், செருப்புகள் மற்றும் துணித் துண்டுகள் போன்ற சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. அனைத்து எலும்புக்கூடுகளும் தடயவியல் பரிசோதனைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மனித புதைகுழி அகழ்வாராய்ச்சிகள், இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை பிரச்சாரத்திற்கான தெளிவான சான்றுகளை காண்பிக்கின்றன.

எந்தவொரு நிலைமாறுகால நீதி செயல்முறைக்கும் உண்மையைக் கண்டறிவது அடித்தளமாக இருக்க வேண்டும். 2009 இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகளுக்கும் மேலாகியும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

எனவே, பின்வருவனவற்றை தாமதமின்றி செயல்படுத்துமாறு நாங்கள் உங்களிடம் வலியுறுத்துகிறோம்:

1.1999 மற்றும் 2025 ஆம் ஆண்டு புதைக்கப்பட்ட சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டவை தொடர்பான சட்ட வழக்குகளை, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றங்களின் கீழ் ஒரே நீதித்துறை மற்றும் தடயவியல் விசாரணையாக ஒருங்கிணைக்கவும்.

2. விசாரணையின் அனைத்து நிலைகளையும் மேற்பார்வையிட, தடயவியல் ஒருமைப்பாடு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய, சுயாதீனமான, சர்வதேச அளவில் மதிக்கப்படும் தடயவியல் நிபுணர்களை ஈடுபடுத்துதல்.

3. அனைத்து இடைக்கால மற்றும் இறுதி தடயவியல் அறிக்கைகள், டி.என்.ஏ விவரங்கள் மற்றும் அடையாள முடிவுகளை வெளியிடுதல், மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், சிவில் சமூகம் மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு அணுகலை எளிதாக்குதல்.

4. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் காணாமல் ஆக்கப்பட்ட அன்புக்குரியவர்களைத் தொடர்ந்து தேடுகின்றனர், உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமல், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. தேசிய ஒற்றுமைக்கு அவசியமான இந்தக் கொடூரமான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கவும்.

இலங்கையின் தார்மீக மற்றும் சட்டக் கடமைகளை நிலைநிறுத்துவதற்கும், உண்மை மற்றும் நீதியை நோக்கி நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கும் இந்த நடவடிக்கைகள் அவசியம் என்றும்

இந்த நடவடிக்கைகளை எளிதாக்குவதிலும், அவை சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதிலும் ஆக்கபூர்வமாக ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post செம்மணி புதைகுழி குறித்து ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிவைப்பு! appeared first on Oruvan.com.

செம்மணி புதைகுழி : விமல் கூறுவது என்ன?
“செம்மணி புதைகுழியைத் தோண்டி எலும்புக்கூடுகளை எடுத்து கடந்தகாலங்களைத் தேடுவதைவிட, எதிர்காலத்தில் இப்படியான சம்பவம் இடம்பெறாமல் இருக்க இதயங்களை குணப்படுத்தும் நடவடிக்கையே தற்போது முன்னெடுக்கப்பட வேண்டும்.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

”செம்மணி புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இறுதிப்பெறும்வரை எம்மால் தீர்மானமொன்றுக்கு வரமுடியாது. அடுத்தக்கட்ட அகழ்வுப்பணியின்போது இராணுவத்தின் இலக்கத்தகடு மீட்கப்பட்டால் விசாரணை அடுத்த கோணத்துக்குள் செல்லும்.

இலங்கை போர் நடைபெற்ற நாடு. புதைகுழி உள்ள இடம் போர் நடைபெற்ற பகுதியாகும். அனைத்து தரப்புகளிலும் துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றுள்ளன.

எனவே, எந்த தரப்பின் துப்பாக்கிச்சூடுமூலம் மக்கள் உயிரிழந்தனர் என்பது மட்டுமே எமக்கு தெரியாமல் உள்ளது.

உயிரிழந்த மக்களின் எலும்புக்கூடுகளை மீட்டு, கடந்தகாலம் பற்றி தேடுவதைவிட, எதிர்காலத்தில் இப்படியான சம்பவம் இடம்பெறாத வகையில் இதயங்களை குணப்படுத்தும் நடவடிக்கையே இடம்பெறவேண்டும். ஆனால் அந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக வைராக்கியமே விதைக்கப்படுகின்றது. சர்வதேசம் மற்றும் அடிப்படைவாதக்குழுக்களின் நோக்கமும் இதுதான்.” – என விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.

The post செம்மணி புதைகுழி : விமல் கூறுவது என்ன? appeared first on Oruvan.com.

செம்மணி புதைகுழி – இன்றும் ஏழாவது நாளாக தொடரும் அகழ்வுப் பணிகள்
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துபாத்தி பகுதியில் முன்னதாகக் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வு நடவடிக்கைகள், இன்று ஏழாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றன.

இதுவரையிலான அகழ்வுப் பணிகளில், முழுமையான 33 மனித என்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், சில சந்தர்ப்பங்களில் பல்வேறு மனித எச்சங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்த நிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனால், தற்போதுள்ள அடையாளங்கள் மூலம் சரியான எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிடுவது கடினமாக இருக்கின்றதாக, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோரின் சார்பில் செயற்படுகின்ற சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.

அகழ்வின்போது, மனித எச்சங்களுடன் கூடுதலாக, புத்தகப்பை, பொம்மை மற்றும் சிறுவர் பாதணியும் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், செம்மணி மற்றும் சித்துபாத்தி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புதைகுழிகளை ஒரே வழக்காக இணைக்கும் வாய்ப்பு குறித்து அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதைச்சுற்றியும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் தெரிவித்தார்.

The post செம்மணி புதைகுழி – இன்றும் ஏழாவது நாளாக தொடரும் அகழ்வுப் பணிகள் appeared first on Oruvan.com.