செம்மணிப் புதைகுழி Archives - Oruvan.com

செம்மணிப் புதைகுழியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் யாருடையது என்பது வெளிப்படுத்தப்படவில்லை
இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வளாகத்திலேயே இடம்பெற்றிருந்த, பொதுமக்கள் அடையாளம் காணும் காட்சிப்படுத்தலில் பங்கேற்ற இருநூறுக்கும் மேற்பட்ட போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், 16 வருடங்களுக்கும்  மேலாகத் தேடியலையும் தமது உறவினர்கள் பயன்படுத்திய எந்தப் பொருளையும் கண்டுபிடிக்காமல் வீடு திரும்பியுள்ளனர்.

யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவின் உத்தரவிற்கு அமைய, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சில பொருட்களை 2025 ஓகஸ்ட் 5 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்குக் காண்பிப்பதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 54 பிற பொருட்களில் 43 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

எஞ்சிய பொருட்கள் தனிமனிதர்களுடன் தொடர்புபடாத காரணத்தினால் அவை காட்சிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், பார்வையிட்ட மக்களின் உறவினர்களுடன் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த எந்தப் பொருளும் தொடர்புபட்டிருக்கவில்லை.

மேலும், எதிர்கால அகழ்வாய்வின் போது சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேலும் பிற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால், இதுபோன்ற காட்சிப்படுத்தல் மீண்டும் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சட்டத்தரணி ரணிதா கூறினார்.

பிற பொருட்களின் கண்காட்சியில் பங்கேற்ற பாதிக்கப்பட்டவர்களை ஒளிப்பதிவு செய்ய, ஊடகங்களுக்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்படவில்லை.

மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய மனித புதைகுழியான செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் மேலும் மனித எலும்புகள் உள்ளதா என்பதை அறிய நேற்றும் நேற்று முன்தினமும் (ஓகஸ்ட் 4, 5) ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் உதவியுடன் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் அகழ்வாய்வு குறித்து அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

நீதிமன்றத்தால் குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள புதைகுழித் தளத்தில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 31வது நாளான ஓகஸ்ட் 5 செவ்வாய்க்கிழமை பிற்பகலில், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் அகழ்வு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட 130 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதோடு, அடையாளம் காணப்பட்ட மொத்த எலும்புக்கூடுகள் எண்ணிக்கை 141 ஆக உயர்வடைந்துள்ளது.

The post செம்மணிப் புதைகுழியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் யாருடையது என்பது வெளிப்படுத்தப்படவில்லை appeared first on Oruvan.com.

செம்மணிப் புதைகுழியில் ‘யுனிசெவ்’ புத்தகப் பை மீட்பு
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின்போது மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, கண்ணாடி வளையல் மற்றும் ‘யுனிசெவ்’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிறப் புத்தகப் பை என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட

அழ்வுப் பணிகளின் நான்காம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.

இந்த மனிதப் புதைகுழியில் இதுவரை மொத்தமாக 33 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இன்றைய அகழ்வின்போது மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் உள்ள என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, கண்ணாடி வளையல் மற்றும் ‘யுனிசெவ்’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிறப் புத்தகப் பை என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளுக்கு அருகில் எதுவித ஆடைகளும், பொருட்களும் மீட்கப்படாத நிலையில் இன்றைய அகழ்வின்போது என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, கண்ணாடி வளையல் மற்றும் ‘யுனிசெவ்’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிறப் புத்தகப் பை என்பன அடையாளம் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நீல நிறப் புத்தகப் பை முன்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ‘யுனிசெவ்’ தொண்டு நிறுவனத்தால் நிவாரணமாகப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மனிதப் புதைகுழி அமைந்திருக்கும் இடத்தில் மண் மாதிரிகளைப் பரிசோதனை செய்வதற்காக சட்ட வைத்திய அதிகாரிகளால் நீதிமன்றத்துக்கு விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. அதன்பிரகாரம் மண் மாதிரிகளைப் பரிசோதனை செய்வதற்காக இன்று கொழும்பில் இருந்து ஒரு குழு வருகை தந்து மண் மாதிரிகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

மேலும், செய்மதிப் படங்கள் மூலம் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சில இடங்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அந்த இடங்களும் நீதிமன்ற உத்தரவுக்கமைய நேற்று துப்பரவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நயாழ் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post செம்மணிப் புதைகுழியில் ‘யுனிசெவ்’ புத்தகப் பை மீட்பு appeared first on Oruvan.com.

செம்மணிப் புதைகுழிகளில் சர்வதேச தலையீட்டின் அவசியத்தை ஐ.நா. அங்கீகரிக்கிறது
இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச தரத்திற்கு அமையவும் பாரபட்சமின்றியும் நடத்தப்பட வேண்டும் என்ற பாதிக்கப்பட்டவர்களின் தொடர்ச்சியான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை ஆதரித்துள்ளது.

“உண்மையை வெளிக்கொண்டு வரும் திறன் கொண்ட தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நிபுணர்களால் நடத்தப்படும் விரிவான, வலுவான விசாரணைகள் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் வலி மற்றும் துன்பத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே பாரிய மனித புதைகுழிகள் விடயத்தில் செய்ய வேண்டிய விடயம்” என ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், யாழ்ப்பாணம், செம்மணி, சித்துபாத்தி மனிதப் புதைகுழிகளுக்கு அருகில் தெரிவித்த கருத்துடன் கூடிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, நாட்டிலுள்ள உள்ள அனைத்து மனித புதைகுழிகளிலும் சர்வதேச தலையீட்டின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

“விசாரணைகள் சர்வதேச தரத்திற்கு அமைய பாரபட்சமின்றி முழுமையாக நடத்தப்பட வேண்டும். நாடு முழுவதும் ஏராளமான மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,” என இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகம் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம், சர்வதேச தரத்திற்கு அமைய சர்வதேச மேற்பார்வையின் கீழ் மனிதப் புதைகுழிகள் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என அழைப்பு விடுத்து வருகிறது.

எனினும், நேற்றைய தினம் (ஜூன் 25) ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் செம்மணி புதைகுழிக்கு வருகை தந்ததை உள்ளூர் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க பொலிஸ் தடை விதித்திருந்தது.

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் புதைகுழியை ஆய்வு செய்தபோது, அந்தப் பகுதிக்குள் மக்கள் நுழைவதைத் தடுக்க யாழ்ப்பாண பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்றிருந்ததாக உள்ளூர் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறு குழந்தைகள் உட்பட 19 பேரின் எச்சங்கள் மீட்கப்பட்ட இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தாவது புதைகுழி சட்டவிரோதமானதாகவோ அல்லது இரகசியமாகவோ புதைக்கப்பட்ட இடமாக இருக்கலாம் என அகழ்வாராய்ச்சிகளை நடத்தும் நிபுணர்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தனர்.

புதைகுழியை பார்வையிட்ட பின்னர், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், செம்மணி புதைகுழிகளுக்கு அருகில் ‘மக்கள் நடவடிக்கை’ அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான ஐ.நா. தலையீட்டைக் கோரும், ‘அணையா விளக்கு’ போராட்ட இடத்திற்குச் சென்று, பொதுச்சுடருக்கு மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.

யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு முன்னதாக நேற்று காலை (ஜூன் 25) ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்தார்.

கிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் திருகோணமலைக்குச் செல்லும் வழியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை சந்தித்து, தமிழர் இனப்படுகொலை, படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்கள், நில அபகரிப்பு, மனித புதைகுழிகள், இராணுவமயமாக்கல் மற்றும் பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்த ஆவணங்களை ஒப்படைத்தனர்.

திருகோணமலையில் சிவில் சமூக ஆர்வலர்களைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய உயர் ஸ்தானிகர், யாழ்ப்பாணத்திற்கு விமானத்தில் செல்வதற்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளுநரையும் சந்தித்ததாக கிழக்கு பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜூன் 25ஆம் திகதி செம்மணி புதைகுழியை ஆய்வு செய்ய யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு முன்னர், உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் சர்வதேச இடம்பெயர்வு அலுவலகத்தின் (IOM – UN Migration) பிரதிநிதிகள், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பல அரசியல்வாதிகளைச் சந்தித்ததாக வடக்கு பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாலை வேளையில் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கோவிலுக்குச் சென்ற அவர், பின்னர் மாலை 7 மணியளவில் இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்ததாக பிராந்திய ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

The post செம்மணிப் புதைகுழிகளில் சர்வதேச தலையீட்டின் அவசியத்தை ஐ.நா. அங்கீகரிக்கிறது appeared first on Oruvan.com.

செம்மணிப் புதைகுழியில் 7 எலும்புக்கூடுகள் மீட்பு
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று வரை 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த இடத்தில் சிறுவர்கள், பெண்கள் என அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்று அஞ்சப்படுகின்றது.

அரியாலை, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் ஒரு குழியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற குழியில் நேற்று அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் 14 வயது மதிக்கத்தக்க சிறுமியின் எலும்புக்கூடும் காணப்படுகின்றது.

இங்கு அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. வேறு இடங்களில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களே இங்கு எடுத்து வரப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

அதற்குச் சான்றாகப் புதைகுழியில் காணப்படும் எலும்புக்கூடுகள் ஓர் ஒழுங்கு முறையாகவோ அல்லது சாதாரணமாகவோ காணப்படவில்லை. உயிரிழந்தவர்களில் அதிகமானோர் அடித்தே கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

சுமார் 20 வருடங்களை அண்டிய காலப் பகுதியில் உயிரிழந்தவர்களின் எலும்புக்கூடுகளே இங்கு அடையாளம் காணப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

The post செம்மணிப் புதைகுழியில் 7 எலும்புக்கூடுகள் மீட்பு appeared first on Oruvan.com.