சூடான் Archives - Oruvan.com

மத்திய சூடானில் மசூதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பலி
மத்திய சூடானில் உள்ள ஒரு மசூதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், பிராந்தியம் முழுவதும் இதேபோன்ற தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடான் ஆயுதப் படைகளுடன் மூன்று வருட உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள துணை ராணுவக் குழுவான விரைவு ஆதரவுப் படைகளால் புதன்கிழமை அதிகாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு கோர்டோஃபான் மாநிலத்தில் உள்ள ஷேக் அகமது அல்-பதாவி மசூதியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது “சர்வதேச மனிதாபிமான சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகவும், வழிபாட்டுத் தலங்கள் மீதான கடுமையான தாக்குதலாகவும்” இருப்பதாக மருத்துவர்கள் வலையமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

The post மத்திய சூடானில் மசூதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பலி appeared first on Oruvan.com.

சூடானில் கிராமமே முழுவதுமாக புதையுண்ட சோகம் – 1000 பேர் உயிரிழப்பு
சூடானின் மேற்குப் பகுதியில் உள்ள மார்ரா மலைச்சரிவுப் பகுதிக்கட்டப்பட்ட ஒரு கிராமம் நிலச்சரிவில் சிக்கி முழுதாக அழிக்கப்பட்டுள்ளது.

சூடான் விடுதலை இயக்கம் எனப்படும் போராட்ட இயக்கத்தின் தகவலின்படி, சுமார் 1,000 பேர் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும், ஒரேயொருவர் மாத்திரம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிலச்சரிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்றுள்ளதோடு, பல நாட்களாக தொடர்ச்சியாக பெய்த கடும் மழையைத் தொடர்ந்து இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

உடனடியாக சூடான் விடுதலை இயக்கம் , ஐ.நா மற்றும் சர்வதேச உதவி அமைப்புகளிடம் உடனடி உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவி கோரியுள்ளது.

குறித்த கிராமம் தற்போது முழுதும் மண்ணால் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

குறித்த கிராமம் அமைந்துள்ள தார்ஃபூர் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் சிவில் போர் காரணமாக பலர் பாதுகாப்பிற்காக இந்த மலைச்சரிவுப் பகுதியில் தஞ்சமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும், இங்கு போதிய உணவு, மருத்துவ உதவி போன்ற அடிப்படை தேவைகள் இல்லாத நிலையே இருந்து வந்துள்ளது.

இங்கு கடந்த இரண்டு வருடமாக இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போர், மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களை பசி, பட்டினி உள்ளிட்ட நெருக்கடி நிலைக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் தற்போதைய அனர்த்தமானது, முழு உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

The post சூடானில் கிராமமே முழுவதுமாக புதையுண்ட சோகம் – 1000 பேர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

சூடானில் ஓராண்டில் 200 குழந்தைகள் பாலியல் பலாத்காரம்
சூடான் நாட்டில், 2024ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை, 200 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், கடந்த 2023 ஏப்ரலில், இராணுவத்திற்கும், துணை இராணுவப்படையான ஆர்.எஸ்.எப்.,க்கும் இடையே மோதல் வெடித்தது. கடந்த ஆண்டு துவக்கத்தில் மோதல் அதிகரித்தது. இதில், 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 14 லட்சம் மக்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு விரட்டப்பட்டுள்ளனர்.

‘யுனிசெப்’ எனும், ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகளின் அவசர கால நிதியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

கடந்த 2024க்கு பின், இராணுவத்தினர் மற்றும் துணை இராணுவப்படையினரால், பொதுமக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மக்களிடம் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, 221 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 30 சதவீதம் பேர் சிறுவர்கள். அவர்களில், 16 வயது முதல், 4 – 5 வயது சிறுவர்களும் அடக்கம்.

இருதரப்பு வீரர்களின் அட்டூழியங்கள் அதிகரித்து விட்டன. பாலியல் வன்முறைகள், கட்டாய குழந்தை திருமணம் போன்றவற்றால் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அட்டூழியங்களால், 61,800 குழந்தைகள், உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.

யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குநர் காதரின் ரஸ்ஸல் கூறுகையில், ”பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பாலியல் வன்முறைகள், போரின் ஒரு தந்திரமாக சூடானில் பின்பற்றப்படுகிறது. இதன் வாயிலாக, போரின்போது குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்ற சர்வதேச சட்டங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன,” என்றார்.

The post சூடானில் ஓராண்டில் 200 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் appeared first on Oruvan.com.