சுற்றுலாப் பயணிகள் Archives - Oruvan.com

46 நாட்களுக்குள் நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை
இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல் பெப்ரவரி 15 வரையான காலப்பகுதிக்குள் 4 லட்சத்து 36 ஆயிரத்து 666 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 78 ஆயிரத்து 157 பேரும், பிரிட்டனில் இருந்து 47 ஆயிரத்து 347 பேரும், ரஷ்யாவில் இருந்து 39 ஆயிரத்து 741 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

ஜேர்மனியில் இருந்து 30 ஆயிரத்து 85 பேரும், சீனாவில் இருந்து 25 ஆயிரத்து 563 பேரும், பிரான்ஸில் இருந்து 23 ஆயிரத்து 124 பேரும் மேற்படி காலப்பகுதிக்குள் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து 16 ஆயிரத்து 672 பேரும், கனடாவில் இருந்து 8 ஆயிரத்து 77 பேரும் வருகை தந்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பு வழங்கிவருகின்றது.

கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 46 நாட்களுக்குள் நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை appeared first on Oruvan.com.

ஜூலை மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 48,300 சுற்றுலாப் பயணிகள் வருகை
2025 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 48,300 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 10,153 ஆகும்.

அதன்படி, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,860 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3,310 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 3,181 சுற்றுலாப் பயணிகளும், பிராஸ்சிலிருந்து 2,335 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 2,153 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூலை மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,216,344 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

The post ஜூலை மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 48,300 சுற்றுலாப் பயணிகள் வருகை appeared first on Oruvan.com.

ஜனவரி முதல் இதுவரை 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை
2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 684,960 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 111,982 ஆகும்.

The post ஜனவரி முதல் இதுவரை 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை appeared first on Oruvan.com.

சுற்றுலாப் பயணிகள் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து
நுவரெலியாவிலிருந்து நானுஓயா ரயில் நிலையத்திற்கு இரண்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி, எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த என்ற பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

நானுஓயாவிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் பயணித்த பேருந்தை கவனக்குறைவாக முந்திச் செல்ல முயன்றபோது, எதிர் திசையில் நானுஓயா நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் மோதிய பின்னர், முச்சக்கர வண்டி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் ரக வாகனம் மீது மோதியது.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார், விபத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும், முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

குறித்த வெளிநாட்டவர்கள் நுவரெலியா பகுதியை பார்வையிட்ட பின்னர் நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து எல்ல நோக்கி பயணிப்பதற்காக நானுஓயா ரயில் நிலையம் சென்றபோதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

The post சுற்றுலாப் பயணிகள் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து appeared first on Oruvan.com.

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கணிசமான அதிகரிப்பு – இரண்டு மில்லியனை கடந்தது
இலங்கைக்கு இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிவரை இரண்டு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் இதுவரை 161,383 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளனர். இந்தியாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதுடன், அதன் தொகை 35,131 ஆகும்.

அடுத்தபடியாக ரஷ்யாவிலிருந்து 22,637 சுற்றுலாப் பயணிகளும், இங்கிலாந்திலிருந்து 12,822 பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 9,998 பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 8,646 பயணிகளும் டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

இந்த ஆண்டில் இந்தியாவிலிருந்து 399,224 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து 189,289 பயணிகளும், இங்கிலாந்தில் இருந்து 172,404 பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 131,379 பயணிகளும், சீனாவில் இருந்து 120,268 பயணிகளும், பிரான்சில் இருந்து 86,440 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 2.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

The post சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கணிசமான அதிகரிப்பு – இரண்டு மில்லியனை கடந்தது appeared first on Oruvan.com.