சுரேஷ் பிரேமச்சந்திரன் Archives - Oruvan.com

தமிழர்களின் பூர்வீக நிலத்தை பறிக்க முயற்சிக்கும் கிவுல் ஓயா திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை
நாட்டின் ஒருமைப்பாட்டை விரும்பினால் கிவுல் ஓயாத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுமாறு அரசாங்கத்திடம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

மகாவலி எல் வலயத்தை உள்ளடக்கி புதிதாக நிர்மாணிக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டத்தை ஏற்கனவே இருந்த அரசுகளும் முன்னெடுத்திருந்தன. தற்போதைய அரசும் அதே தீர்மானத்தைதான் எடுத்துள்ளது.

தமிழ் மக்களின் காணிகளைப் பறித்து அரச அனுசரணையுடன் தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்துவதையும், வடக்கு – கிழக்கு நிலத் தொடர்பை நிரந்தரமாகப் பிரிக்கும் உள்நோக்கத்தையும், இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழர்கள் தமது சொந்த பிரதேசத்திலேயே இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டதே இந்த கிவுல் ஓயாத் திட்டம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேசத்தையும், முல்லைத்தீவு – மணலாறு பிரதேசத்தையும் உள்ளடக்கக்கூடிய வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல்வேறுபட்ட குளங்கள், வயல்களை உள்ளடக்கி ஏற்கனவே மணலாற்றுப் பிரதேசத்தை சிங்களமயமாக்கி அதற்கு வெலிஓயா என்று பெயரும் சூட்டப்பட்டு பின்னர் வெளிநாட்டிலிருந்து நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக அது மகாவலி ‘டு’ வலயம் என்று பெயர் சூட்டப்பட்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த மகாவலி ‘டு’ வலயத்துக்கு எந்தக் காலத்திலும் மகாவலி நீர் வரமாட்டாது என்பதை மகாவலி அதிகார சபையின் உயர் அதிகாரிகளே நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றில் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள்.

யுத்தத்தின் பின்னர், இதனை ஒட்டிய பிரதேசங்களில் உள்ள கொக்கச்சான்குளம் என்ற கிராமம் போகஸ்வெவ என்றும், அதனையொட்டி மற்றொரு கிராமத்துக்கு நாமல்புர என்று பெயரும் சூட்டப்பட்டு அம்பாந்தோட்டை, மாத்தளை போன்ற தூரத்திலிலுள்ள சிங்களப் பிரதேசங்களிலிருந்து சிங்கள மக்கள் அழைத்துவரப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இப்பொழுது கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் விவசாயம் செய்துவரும் பதினைந்துக்கும் மேற்பட்ட சிறிய குளங்களும், அதனை ஒட்டிய வயல் நிலங்களும், வவுனியா வடக்கில் உள்ள பல பழந்தமிழ் கிராமங்களும், அதன் குளங்களும், வயல் நிலங்களும் கிவுல் ஓயாவின் நீரேந்தும் பிரதேசத்துக்குள் மூழ்கடிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே வாழ்வாதாரங்களை இழந்து சிறுகச்சிறுக தமது விவசாயத்தை மேற்கொண்டு வரும் தமிழ் மக்களை மீண்டும் விரட்டியடிக்கும் நிலை தோன்றியுள்ளதால் அரசியல் உள்நோக்கம் கொண்ட இத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளளார்.

The post தமிழர்களின் பூர்வீக நிலத்தை பறிக்க முயற்சிக்கும் கிவுல் ஓயா திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை appeared first on Oruvan.com.

மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை
வடக்கு, கிழக்கில் ஆளுநர் அதிகாரங்களை நிறுத்தி மாகாண சபை ஆட்சியை நடாத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டுமேன ஜனநாயக தமிழ் கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண ஆட்சி முறைகளை விடுத்து அரசாங்கம் ஆளுநர் ஆட்சியை நடாத்துவதனை நிறுத்த வேண்டும் என தெரிவித்த சுரேஸ் பிறேமச்சந்திரன், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கூறி வருகிறது.

இதனடிப்படையில் பார்க்கும் போது அடுத்த வருடமும் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான நிலைப்பாட்டில் அரசாங்கம்

இல்லை உன சுட்டிக்காட்டிய சுரேஸ், எல்லை நிர்ணய வேலைகளை விரைவில் மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும் தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் சில நிபந்தனைகளை கூறியுள்ளார்.

அவை என்ன நிபந்தனைகள் என இதுவரை தெரியாது பேச்சுவார்த்தை ஊடாக இணைய முடியும். பேசுவதற்கு முன்னர் நிபந்தனைகளை முன்வைப்பது பொருத்தமில்லை என்றார்.

அத்துடன் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைத்துப்பாக்கிகளை கோரியிருப்பது அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இருக்கலாம். கடந்த அரசாங்கள் அனைத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கியிருந்தது.

இந்த அரசாங்கம் பாதுகாப்பு வழங்காத நிலையில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கலாம் அரசாங்கம் முதலில் பாதாள உலக குழுக்களை ஒழிக்க வேண்டும் என்றார்.

The post மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை appeared first on Oruvan.com.

’13’ஐ அமுல்படுத்த வலியுறுத்துவோம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்
‘1988 ஆம் ஆண்டு எவ்வாறு 13 ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ அதிலிருக்கக்கூடிய அனைத்து அதிகாரங்களும் மீளவும் தமிழ் மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் எமது கருத்தாகும். அதை வலியுறுத்துவோம். மாகாண சபை தொடர்பில் மிகப் பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஓர் ஒற்றுமைப்பாடும் ஒருமித்த கருத்துக்களும் இருக்கின்றன. இவற்றை நாங்கள் இன்னும் ஒருவரும் மிகுதி இல்லாமல், அனைவரையும் இணைத்துக்கொண்டு செல்லும் முயற்சியாகத்தான் கலந்துரையாடல் நடைபெற்றது’ என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் விபரம் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு,”ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலே ஒரு தொடர் கருத்தரங்குகளை வடக்கு, கிழக்கில் நடத்தி வருகின்றது. தமிழர் தரப்பில் இருக்கக்கூடிய ஏனைய தரப்புக்களும் இதற்குள் வந்து இணைய வேண்டும் என்பது எமது எல்லோரதும் விருப்பம். அது, தமிழரசுக் கட்சியாக இருக்கலாம் அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக இருக்கலாம். ஏனைய கட்சிகளாக இருக்கலாம். இவர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு போக வேண்டும் என்பதில் எங்களுக்குள் ஒருமித்த கருத்து இருக்கின்றது.

ஏற்கனவே வவுனியாவில் இடம்பெற்ற கருத்தரங்கில் எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் போன்றோர் கலந்துகொண்டிருந்தனர். ஆகவே அவர்கள் மாகாண சபைத் தேர்தல், மாகாண சபை அதிகாரங்கள் தொடர்பாக ஒரு ஒருமித்த கருத்தில் இருக்கின்றார்கள் என்பது தெளிவானது. இருந்தபோதும் ஒரு கூட்டாக வடக்கு, கிழக்கில் மாத்திரம் அல்லாமக் ஏனைய பிரதேசங்களிலும் முன்னெடுத்துக் கொண்டு போக வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் அரசு தேர்தலை நடாத்தாமல், மாகாணங்களுக்குள் எல்லைகளை பிரித்து, அதற்கு பின்புதான் தேர்தல் என்ற ஒரு தொனி தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறு நடக்குமாக இருந்தால் தேர்தல் காலவரையின்றி பிற்போடலாம் என்ற ஓர் அச்சம் தமிழ் மக்கள் மத்தியிலும் இருக்கின்றது. ஆகவே இதனை மாற்றி, தேர்தலை குறைந்தபட்சம் வரும் வருடத்தின் ஆரம்பத்திலேனும் வைக்க வேண்டும்.

ஒதுக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் – அதாவது 1988 ஆம் ஆண்டு எவ்வாறு 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ அதிலிருக்கக்கூடிய அனைத்து அதிகாரங்களும் – மீளவும் தமிழ் மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் எமது கருத்தாகும்.

இந்த அரசுக்கும் நாங்கள் ஒரு தெளிவான கருத்தை சொல்லியிருக்கின்றோம். ஜனநாயக ரீதியாக ஏற்கனவே இந்த நாட்டில் அரசியல் சாசனத்தில் இந்த அதிகாரங்கள் மாகாணங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. அதற்கான தேர்தல்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை பொறுத்தமட்டில் கடந்த 7, 8 வருடங்களாக நடைபெறவில்லை. ஆகவே உடனடியாக அந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டு அந்த அதிகாரங்கள் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் வசம் கொடுக்கப்பட வேண்டும். அவை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாங்கள் மிகத் தெளிவாக அரசை கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம். ஆகவே அந்தவகையில் மிகப் பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒரு ஒற்றுமைப்பாடும் ஒருமித்த கருத்துக்களும் இருக்கின்றன. இவற்றை நாங்கள் இன்னும் ஒருவரும் மிகுதி இல்லாமல் அனைவரையும் இணைத்துக்கொண்டு முன் நகர்த்தும் முயற்சியாகத்தான் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

தமிழ் மக்கள் கூட்டணியின் விக்னேஸ்வரனுடனும் பேச ஆலோசித்துள்ளோம்” என்றார்.

The post ’13’ஐ அமுல்படுத்த வலியுறுத்துவோம் – சுரேஷ் பிரேமச்சந்திரன் appeared first on Oruvan.com.

வடக்கில் புதிய கூட்டு – சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம்
செம்மணி புதை ஒழிக்கு நீதி கோரி எதிர்வரும் 29ஆம் திகதி முதல் வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் இணைத்தளவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கில் இருக்கின்ற அனைவரிடமும் கையெழுத்துக்களை பெற்று சர்வதேச நீதி விசாரணை என்பது தேவை என்பதை வலியுறுத்தி சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.

இதற்கு முன்னர் ஐநா சபைக்கு பல்வேறுபட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டு இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களின் கோரிக்கைகளாக நாங்கள் இந்த விடயத்தினை முன்வைக்க விரும்புகின்றோம்.

அத்துடன், ஆரம்ப கட்டமாக ஒரு கையெழுத்து போராட்டம் ஒன்றினை வடகிழக்கில் மேற்கொள்வதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளது.

அதுபோல இலங்கை தமிழரசு கட்சியிடமும், தமிழர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமும் பேசியிருந்தோம் அவர்கள் அதற்கு ஆதரவளித்திருக்கின்றார்கள்.

எனவே அனைவரும் இணைந்து ஒரு பொதுவான தமிழ் மக்கள் சம்பந்தமான பிரச்சினை என்ற விடயத்தில் ஒன்று திரண்டு போராட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது

அதேபோல முன்னணியினரும் சில திருத்தங்களுடன் கையெழுத்துப் போராட்டத்தில் இணைவதாக தெரிவித்துள்ளார்கள்.

எனவே எதிர்வரும் பத்து நாட்களுக்குள் இந்த கையெழுத்து போராட்டத்தை மேற்கொண்டு மக்களிடம் வையொப்பங்களை பெற்று உரிய தரப்பிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வராசா கஜேந்திரன், முருகேசு சந்திரகுமார், மற்றும் எம்.ஏ.சுமந்திரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளி கட்சியின் பிரதிநிதி வேந்தன் ஆகியோர்கலந்து கொண்டனர்.

The post வடக்கில் புதிய கூட்டு – சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம் appeared first on Oruvan.com.

வட,கிழக்கில் உள்ளூராட்சி சபைகளில் தமிழர் ஆட்சி
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அந்தக் கட்சிகள் ஆட்சி அமைக்க முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.” – எனவும் சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிட்டார்.

The post வட,கிழக்கில் உள்ளூராட்சி சபைகளில் தமிழர் ஆட்சி appeared first on Oruvan.com.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்புமனுகள் நிராகரிப்பு – நீதிமன்றத்தை நாட முடிவு
தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடருவோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் . மாவட்டத்தில் சில சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் அந்தக் கட்சியின் சார்பில் ஊடகங்களுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ் . மாவட்டத்தில் உள்ள இரண்டு சபைகளை தவிர ஏனைய 15 சபைகளுக்குமான வேட்பு மனுக்களை நாம் கையளித்திருந்தோம். அவற்றில் பல சபைகளில் எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன

வடக்கு கிழக்கில் எம்மை ஓரம் கட்டி விட்டு ஆளும் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை மாத்திரம் தேர்தலில் போட்டியிட வைக்கும் செயற்பாட்டை தேர்தல் திணைக்களம் செய்துள்ளதாகவே நாம் சந்தேகிக்கின்றோம்.

இது தொடர்பில் நாம் நீதிமன்றில் வழக்கு தொடர்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

The post ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்புமனுகள் நிராகரிப்பு – நீதிமன்றத்தை நாட முடிவு appeared first on Oruvan.com.

வடக்கு – கிழக்கு இணைந்த தீர்வே வேண்டும் – புதிய அரசமைப்பு தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் பேச்சு
“வடக்கு – கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசமைப்பைப் புதிய அரசு உருவாக்க வேண்டும். அத்துடன் மகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தி அதற்கான அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும். இது தொடர்பில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேசுவதற்குத் தீர்மானித்துள்ளோம்.”

– இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வவுனியா, கோவில்குளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை இடம்பெற்றது. இதன் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நடந்து  முடிந்த தேர்தல் தொடர்பாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் இரண்டு தடவைகள்  இணைய வழி ஊடாகப் பேசியுள்ளோம். இன்றைய கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பேசினோம். அத்துடன் ஜனநாயகத்  தமிழ்த் தேசியக் கூட்டணியைக் கிராம மட்டங்களில் பலப்படுத்தல் தொடர்பாகவும் பல்வேறுபட்ட ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

முக்கியமாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியாகத் தற்போது அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் போட்டியிடும். அத்துடன் எம்முடன் இணைந்து பயணிக்கக் கூடிய ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் பேசி அவர்களும் இணங்கும் பட்சத்தில் இணைந்து போட்டியிடவுள்ளோம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியப் பரப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழ்க் கட்சிகளுடன் இது தொடர்பில் பேசுவதாகவும் தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி முதலாவது வாரத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் மாநாட்டை வவுனியாவில் நடத்தத் தீர்மானித்துள்ளோம். அதற்கு முன்னதாக மாவட்ட  நிறைவேற்றுக் குழுக்கள் கூடி என்ன விடயங்கள் பேசப்பட வேண்டும் எனவும் தீர்மானிப்பார்கள். அதற்கான நடவடிக்கைகள் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய ஓர் அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டி தேவையும் பொறுப்பும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு இருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் என்பது சரியான  முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும என்பதில் நாம் ஆணித்தரமான கருத்துக்களைக்  கொண்டிருக்கின்றோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக்  கொண்டிருக்கக் கூடிய புதிய அரசு வந்திருக்கின்றது.

புதிய அரசு ஒரு மாற்றத்தை உருவாக்கப் போவதாக சொல்லியிருக்கின்றார்கள். நிர்வாகத்தில் மாற்றம், அரசியலில் மாற்றம், ஊழல் இல்லாத நிர்வாகத்தை ஏற்படுத்துவது எனப் பல விடயங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினையைத்  தீர்க்கக் கூடிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது எம் மக்களது கருத்தாக இருக்கின்றது. அந்த அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட ஒரு மாற்றம் ஏற்படும் என்பதற்காகத்தான் அந்த வாக்குகளும் அளிக்கப்பட்டன என்று நாங்கள் கருதுகின்றோம்.

ஆகவே, தமிழ் மக்கள் மத்தியில் 75 வருடங்களாகத் தேசிய இனப்பிரச்சினை புரையோடிப் போயுள்ள பிரச்சினையாக இருக்கின்றது. அது தீர்க்கப்பட வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு புதிய அரசிடம் இருக்கின்றதா என்ற கேள்வியும் எம்மிடம் இருக்கின்றது.

கடந்த 7 வருடங்களாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. மாகாண சபைத் தேர்தல் என்பது இந்த வருட இறுதியில் நடத்தப்படும் எனக் கூறுகின்றார்கள். தாமதமாக நடத்த வேண்டும் என்ற தேவை இருக்காது. அல்லது அதற்கு முன்பு நடத்தலாமா போன்ற கருத்துக்கள் எம் மத்தியில் பேசப்பட்டன.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்து முடிந்து ஓரிரு மாதங்களில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என நாம் நம்புகின்றோம். மாகாண சபைக்கு உரித்தான 1988 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைதது அதிகாரங்களும் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும. இந்த அரசு மிக விரைவாக அந்த நடவடிக்கைகளை எடுத்தால் மாத்திரம்தான் தமிழ் மக்கள் இந்த அரசின் மீது நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு சூழல் ஏற்படும் எனவும் நாம் கருதுகின்றோம்.

ஆகவே, அரசு வெறுமனே பேச்சில் மாத்திம் இருக்காமல் தமிழ் மக்களது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு புதிய அரசியல் சாசனம் கொண்டு வரப்பட வேண்டும். அது வெறுமனே சிங்கள மக்களது பிரச்சினையைத் தீர்ப்பதாக இல்லாது புரையோடிப் போயுள்ள தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவது தொடர்பாக அரசு சரியான அறவிப்புக்களை வெளியிடுமாக இருந்தால் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக வடக்கு – கிழக்கு இணைந்த ஒரு தமிழ் மாநிலத்தை உருவாக்கி முழுமையான சுயாட்சியை உருவாக்குவதற்கான கருத்துக்களை அல்லது அறிக்கைகளை எல்லோருடனும் இணைந்து புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவிடம் கொடுப்போம். முதலாவது இந்த அரசு குழுவை நியமிக்க வேண்டும். அதனை இரண்டு வருடங்களிலா அல்லது மூன்று வருடங்களிலா அல்லது உடனடியாக நியமிப்பார்களா என்பது எங்களுக்குத் தெரியாது.

புதிய அரசியல் சாசனம் உருவாக்கும் பட்சத்தில் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அத்துடன் மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கும் விடப்பட வேண்டும். அவ்வாறு விடப்பட்டால்தான் அது நிறைவு பெறும். மக்கள் மத்தியில் சென்று அதற்கான ஆதரவைத் திரட்ட வேண்டுமாக இருந்தால் இந்த அரசு விரைவாக புதிய அரசமைப்பை உருவாக்க வேண்டும். அப்போதுதான் சாத்தியமாகலாம். காலம் செல்ல ஆட்சியின் மீதும், ஆட்சி அதிகாரம் மீதும் பல்வேறு குறைபாடுகள் வரும். அதற்கு முன்பாக அரசியல் சாசனம் வர வேண்டும் என விருப்புகின்றோம்.

அதில் முக்கியமாக தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்சினைக்குப்  பாதிக்கப்பட்ட அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக தமிழ் மக்கள் இந்த மண்ணில் முழுமையான சுயாட்சியோடு வாழ்வதற்குத் தேவையான விடயங்களை உள்ளடக்கிய ஓர் அரசியல் சாசனமாக இருக்க வேண்டும் என நாம் பேசியுள்ளோம். இது தொடர்பில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேசுவதற்குத் தீர்மானித்துள்ளோம்.” – என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கோ.கருணாகரம், எம்.கே.சிவாஜிலிங்கம், ந.சிறிகாந்தா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் ப.வேந்தன் உட்பட முக்கிஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

The post வடக்கு – கிழக்கு இணைந்த தீர்வே வேண்டும் – புதிய அரசமைப்பு தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் பேச்சு appeared first on Oruvan.com.