சுனில் ஹந்துன்னெத்தி Archives - Oruvan.com

விவசாய உற்பத்திகளை உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளுக்கு வழங்க விசேட திட்டம்
விவசாய உற்பத்தியை தேசிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைக்கு வழங்குவதற்காக தேசிய திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான முதலாவது கலந்துரையாடல் நேற்று பாராளுமன்றத்தில் கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, வர்த்தக வாணிபத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் காணி, நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தலைமையில் நடைபெற்றது.

விவசாய உற்பத்திகளை வர்த்தக அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சுக்கள் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைக்கு வழங்குவதற்கும், விவசாய ஏற்றுமதியை மேற்கொள்ளும் முயற்சியாளர்களை முன்னேற்றுதல் மற்றும் புதிய முயற்சியாளர்களை உருவாக்குவதற்காக இவ்விரிவான திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

இக் கலந்துரையாடலில்; இப்பரந்த திட்டத்தை தயாரிப்பதற்கு அவசியமான சட்டத்தை குறிக்கும் தரவுகளை 45 நாட்களுக்குள் சேகரித்தல், நாட்டில் இடம்பெறும் மொத்த விவசாய உற்பத்திகள், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் விவசாய உற்பத்திகளின் மொத்த நுகர்வின் சதவீதம், தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படும் விவசாய உற்பத்திகளின் அளவு, தற்போது காணப்படும் விவசாய உற்பத்திகளில் ஏற்றுமதி செய்யக்கூடியவற்றின் அளவு. போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இத்திட்டத்தை தயாரிப்பதற்கு மூன்று அமைச்சுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக குழு ஒன்றை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, விவசாய அமைச்சின் செயலாளர் டி.ஜே. விக்ரமசிங்க, வர்த்தக அமைச்சின் செயலாளர் விமலேந்திரராஜா, உட்பட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post விவசாய உற்பத்திகளை உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளுக்கு வழங்க விசேட திட்டம் appeared first on Oruvan.com.

சஜித் இருக்கும்வரை ஆட்சியில் நாமே இருப்போம் – சுனில் ஹந்துன்னெத்தி
சஜித் பிரோமதாச எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் வரை, திசைகாட்டியிடம் அரசாங்கம் இருக்கும் என்று மக்கள் கூறுவதாக கைத்தொழில் மற்றும் நிறுவன மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கார்ட்டூன் திரைக்கதையில் வரும் வரும் சௌ சௌ போன்றவர் .

தனது ஒரே வேலை எல்லாவற்றையும் வேண்டாம் என்று சொல்வதுதான் அந்த கதாப்பாத்திரத்தின் தன்மை.

இதனால் சஜித் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் வரை, திசைகாட்டி அரசாங்கமே இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்.

நாடு முழுவதும் பல தொழில்துறை விடயங்களை நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். முழுவதும் 19 புதிய தொழில்துறை விடயங்களை நாங்கள் ஆரம்பிக்கவுள்ளோம். இவை ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

சுற்றுலாத் தொழில்கள் அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படாத தொழில்களுக்கு ஏற்ற நிலங்களின் பட்டியலை வழங்குமாறு அரசாங்க அதிபர்களிடம் தெரிவித்துள்ளோம்,” என கூறியுள்ளார்.

The post சஜித் இருக்கும்வரை ஆட்சியில் நாமே இருப்போம் –  சுனில் ஹந்துன்னெத்தி appeared first on Oruvan.com.

இலங்கைக்கு 650 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீடு
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கைக்கு 650 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

64 திட்டங்களுக்காக இவ்வாறு 650 மில்லியன்டொலர் முதலீடு வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்று (04) பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நமது நாட்டுக்கு எந்தளவு முதலீட்டாளர்கள் வந்துள்ளார்கள் என்று பாருங்கள். இந்த காலாண்டில் மட்டும், 650 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் 483 டொலர் மில்லியன் அந்நிய நேரடி முதலீடு வந்தன. 2024 ஆம் ஆண்டில் 724 அந்நிய நேரடி முதலீடு வந்தன.

ஆனால் வருடம் முழுவதும் 93 திட்டங்கள் மட்டுமே வந்தன. இப்போது எங்களிடம் முதல் காலாண்டில் மாத்திரம், 64 திட்டங்கள் உள்ளன. 650 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளதாக BOI தலைவர் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

The post இலங்கைக்கு 650 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீடு appeared first on Oruvan.com.

சுய தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்ட சுய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கேட்டறிந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் நேற்றுமுன்தினம் (30) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் ஏற்பாட்டில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இக் கலந்துரையாடல் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சுய தொழில் முயற்சியார்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் என பலர் இதில் கலந்து கொண்டிருந்ததுடன் தொழில் முதலீட்டாளர்கள் எதிர் நோக்கும் சவால் குறித்தும் சுய தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களிடமிருந்து கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது இயந்திரங்கள் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இயந்திரங்கள் கொள்வனவு செய்வதில் உள்ள நிதி சிக்கல்கள், இடவசதி தொடர்பாகவும் சந்தை வாய்ப்பின்மை என பல குறைபாடுகள் இதன் போது முன்வைக்கப்பட்டதுடன், குறித்த குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது தனியார் வங்கிகள் ஊடாக குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கி சுய தொழில் முயற்சியார்களை மேம்படுத்த அமைச்சன் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட சுய தொழில் முயற்சியாளர்கள் அவர்களின் உள்ளூர் உற்பத்திப் பொருட்களையும் அமைச்சரிடம் காண்பித்தனர்.

The post சுய தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் appeared first on Oruvan.com.