சுனில் ஹந்துனெத்தி Archives - Oruvan.com

இலங்கை தேயிலை கின்னஸ் உலக சாதனை விருதினை பெற்றதையே, நோபல் பரிசு கிடைக்கப்பெற்றதாக தவறுதலாக கூறினேன்!
இலங்கைக்கு நோபல் பரிசு கிடைக்கப்பெற்றதாக அண்மையில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்திருந்தார்.

அமைச்சர் ஹந்துனெத்தி தவறுதலாக இவ்வாறு கூறியதாக அவரது அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

கின்னஸ் உலக சாதனை விருதினையே அவர் இவ்வாறு மாறி கூறிவிட்டதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை தேயிலைக்கு சர்வதேச ரீதியாக கிடைக்கப்பெற்ற அங்கீகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி நோபல் பரிசு கிடைக்கப்பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

உலகில் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்ட தேயிலை இலங்கை தேயிலை என அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பிலான கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அவர் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோது நோபல் பரிசு என தவறுதலாக கூறியதாக அவரது அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பிரத்தியேக வகையான தேயிலை ஒன்று வரலாற்று சாதனை அளவு விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

ஜப்பானில் நடைபெற்ற வர்த்தகக் கண்காட்சி மற்றம் ஏல விற்பனையில் இவ்வாறு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

இலங்கைக்கு நோபல் பரிசு கிடைக்கப்பெற்றது என வெளியிட்ட கருத்து பொது வெளியில் பல்வேறு விமர்சனங்களை உருவாக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு அரசியல்வாதிகள் அமைச்சரின் இந்த கருத்துக்கு கடும் விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர்.

அண்மைக்காலமாக அமைச்சர் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருவதுடன் அமைச்சர் நோபல் பரிசு குறித்து வெளியிட்ட கருத்தும் சமூக ஊகடங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post இலங்கை தேயிலை கின்னஸ் உலக சாதனை விருதினை பெற்றதையே, நோபல் பரிசு கிடைக்கப்பெற்றதாக தவறுதலாக கூறினேன்! appeared first on Oruvan.com.

அமைச்சரவை மாறுமா? சுனில் ஹந்துனெத்தி விளக்கம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரைவில் கவிழும் என்ற எதிரணியின் பிரச்சாரம் நகைச்சுவைத்தமானது எனவும், அமைச்சரவை மாற்றம் நடக்கவுள்ளதாக வெளியாகும் தகவல்கூட அரசியல் சூழ்ச்சியின் ஓர் அங்கம்தான் என்று அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு கூட்டு பொறுப்புடன் செயற்படும் ஆணையை மக்கள் வழங்கியுள்ளனர். அதற்கமைய நாம் கூட்டு பொறுப்புடன் செயற்பட்டுவருகின்றோம். தனிநபர் ஆதிக்கம் கிடையாது. அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவேண்டுமென்றாலும்கூட அதனையும் கூட்டு பொறுப்புடனேயே செய்வோம்.

எனினும், அமைச்சரவை மறுசீரமைப்புக்குரிய தேவைப்பாடு தற்போது எழவில்லை. அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு எதிராக எவ்வித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. இவர்களால் முடியாது என மக்களும் கூறவில்லை. அப்படியானால் எதற்காக அமைச்சரவையை மாற்ற வேண்டும்? கடந்த காலங்களில் ஊழல்கள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகளுக்காக அமைச்சரவை மாற்றப்பட்டது. நாம் அவ்வாறான செயலில் ஈடுபடமாட்டோம்.

ஆகஸ்டில் அரசாங்கம் கவிழுமாம், டிசம்பரில் கவிழுமாம் என்றெல்லாம் சிலர் கூறிவருகின்றனர். கடையில் அவ்வாறு கூறுபவர்கள்தான் வீழ்ந்துவருகின்றனர். இது நகைச்சுவைத்தனமான கதையாகும்.” – என்றார்.

The post அமைச்சரவை மாறுமா? சுனில் ஹந்துனெத்தி விளக்கம் appeared first on Oruvan.com.