சுனில் வட்டகல Archives - Oruvan.com

நாம் விரும்பாத நிலையிலும், நாடு ஒருவிதமான போர் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது
நாம் விரும்பாத ஒரு சூழலுக்கு மத்தியிலும், நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

யார் எப்போது எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களாக மாறுவார்கள் என்பதை எதிர்வு கூற முடியாத ஒரு நிலைமை உலகில் உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ‘IRIS Dena’ கப்பல் சம்பவம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும் என பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறியுள்ளார்.

“கராபிட்டிய வைத்தியசாலைக்கு திடீரென ஏற்க நேரிட்ட பொறுப்பைப் போன்ற ஏனைய பொறுப்புகளை யார், எப்போது, எவ்வாறு ஏற்க நேரிடும் என்பதை எம்மால் ஊகிக்க முடியாது.

இவ்வாறானதொரு நிலைமை எமது நாட்டின் பொதுமக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை எம்மால் முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் கராபிட்டிய வைத்தியசாலை இந்த யுத்தத்தினால் சடலங்களால் நிரம்புவதற்கு ஒரு நாளே போதுமானதாக இருந்தது. இதனால்தான் நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு உபாயங்களைப் பயன்படுத்த வேண்டும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் எமக்கு ‘அயர்ன் டோம்’ (Iron Dome) பாதுகாப்பு கவசம் கிடைத்துவிடப் போவதில்லை. ஆனால், எம்மால் முடிந்தவரை தயாராவதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும்.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

The post நாம் விரும்பாத நிலையிலும், நாடு ஒருவிதமான போர் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது appeared first on Oruvan.com.

தாஜூதீன் கொலை தொடர்பில் உண்மைகள் வெகுவிரைவில் – சுனில் வட்டகல
“பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதால் சிலர் கலக்கமடைந்துள்ளனர். அந்தக் கலக்கத்துக்கும் தாஜூதீன் கொலைக்கும் இடையிலான தொடர்புகள் என்ன என்பது வெகுவிரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும்.”

– இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

“வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே சிலர் கலக்கமடைந்துள்ளனர். இந்தக் கலக்கத்துக்கும் தாஜூதீன் கொலைக்கும் இடையிலான தொடர்புகள் என்ன என்பது விசாரணைகள் மூலம் வெளிப்படும். குறிப்பிட்ட ஒரு குடும்பமே இவ்வாறு அளவுக்கதிக கலக்கத்தில் உள்ளது.

அந்தக் குடும்பம் ராஜபக்ஷ குடும்பமா அல்லது வேறு குடும்பமா என்பதை எம்மால் கூற முடியாது. ஆனால், விசாரணைகளுக்கமைய உண்மைகள் வெளிப்படுத்தப்படும்.

கைது செய்யப்படுபவர்களின் வாக்குமூலங்கள் பெறப்படும். அவ்வாறான வாக்குமூலங்களில் இருந்து கிடைக்கக் கூடிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகள் எவ்வித தடைகளும் இன்றி முன்னெடுக்கப்படும். யாரும் பயப்பட வேண்டிய தேவையில்லை. விசாரணைகள் மூலம் நிச்சயம் நாட்டுக்கு உண்மைகள் வெகுவிரைவில் வெளிப்படுத்தப்படும்.” – என்றார்.

The post தாஜூதீன் கொலை தொடர்பில் உண்மைகள் வெகுவிரைவில் – சுனில் வட்டகல appeared first on Oruvan.com.

கொழும்பில் சொகுசு வீடு வாங்கினாரா அமைச்சர்? வைரலாகும் பேஸ்புக் பதிவு
கொழும்பில் அமைந்துள்ள “சின்னமன் லைஃப்” என்ற சொகுசு வீட்டு வளாகத்தில் வீடு வாங்கியதாக தவறான தகவலை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி பொது பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

‘சின்னமன் லைஃப்’ என்ற வீட்டு வளாகத்தில் நான் ஒரு வீட்டை வாங்கியதாக சமூக ஊடகங்கள் மூலம் என்னைப் பற்றி தவறான மற்றும் அவதூறான பிரச்சாரத்தை பரப்ப ஒரு குறிப்பிட்ட குழு செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.’

இந்தப் பிரச்சாரங்களில் எந்த உண்மையும் இல்லை, மேலும் எனது கட்சியும் பொதுமக்களும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சேதப்படுத்தும் எதையும் நான் செய்யவில்லை என்று அறிவிக்கிறேன்.

ஒரு சட்டத்தரணி மற்றும் அரசியல் ஆர்வலர் என்ற முறையில், நான் தொடர்ந்து கருத்துச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு வருகிறேன்.

இருப்பினும், அந்த உரிமை ஒரு மறுக்க முடியாத உரிமை அல்ல, மேலும் அதன் கொடூரமான துஷ்பிரயோகம் மனித நாகரிகம் முழுவதும் அதை வென்றெடுக்க எண்ணற்ற தியாகங்களைச் செய்த அனைத்து பெரிய மனிதர்களுக்கும் அவமானமாகும்.

எனக்கு எதிராக கூறப்பட்ட அவதூறான மற்றும் தவறான அறிக்கை மற்றும் அதை அடிப்படையாகக் கொண்ட பிரச்சாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு செய்யவுள்ளேன்.

மேலும் அடையாளம் காணப்பட்ட தரப்பினருக்கு எதிராக சிவில் வழக்குத் தொடர தயாராகி வருகிறேன்..’ என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post கொழும்பில் சொகுசு வீடு வாங்கினாரா அமைச்சர்? வைரலாகும் பேஸ்புக் பதிவு appeared first on Oruvan.com.