சீமானிடம் விசாரணை Archives - Oruvan.com

சீமானிடம் விசாரணை: நாதகவினர் குவிந்ததால் பொலிஸ் திணறல் – வளசரவாக்கத்தில் நடந்தது என்ன?
நடிகை விஜயலட்​சுமி அளித்த பாலியல் புகாரில், நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானிடம் வளசர​வாக்கம் பொலி​ஸார் நேற்று இரவு விசாரணை நடத்​தினர்.

நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான். திரைப்பட இயக்​குனராக பணியாற்றிய​போது அவருக்​கும், நடிகை விஜயலட்​சுமிக்​கும் பழக்கம் ஏற்பட்​டது.

இந்நிலை​யில், தன்னை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக் கூறி உடல் ரீதி​யாக​வும், மன ரீதி​யாக​வும் ஏமாற்றி​விட்​டதாக சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி சென்னை​யில் உள்ள வளசர​வாக்கம் காவல் நிலை​யத்​தில் 2011இல் புகார் அளித்திருந்​தார். இதையடுத்து, சீமான் மீது பாலியல் துன்​புறுத்தல் உட்பட பல்வேறு பிரிவு​களின் கீழ் வழக்கு பதியப்​பட்​டது.

இதை ரத்து செய்​யக்​கோரி சீமான் சென்னை உயர்​நீ​தி​ மன்​றத்​தில் மனுதாக்கல் செய்​தார். வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதி​மன்​றம், 12 வாரங்​களுக்​குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்​டும் என பொலிஸாருக்கு உத்தர​விட்​டது. இதையடுத்து, சீமான் மீதான வழக்கு விசா​ரணையை பொலிஸார் துரிதப்​படுத்​தினர்.

முதல் கட்டமாக கடந்த 27-ம் திகதி நேரில் ஆஜராக வேண்​டும் என கடந்த 24-ம் திகதி சம்மன் (அழைப்​பாணை) அனுப்​பினர். ஆனால், அன்றைய தினம் நேரில் ஆஜராக முடி​யாது, 4 வாரகாலம் அவகாசம் வேண்​டும் என வழக்​கறிஞர் மூலம் மனு அளித்​தார் சீமான். இதையடுத்து, 28-ம் திகதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக வேண்​டும் என 2-வது முறையாக பொலி​ஸார் சம்மன் வழங்​கினர். குறிப்பாக இந்த சம்மன் நீலாங்​கரை​யில் உள்ள சீமான் வீட்டு நுழைவா​யில் கதவில் ஒட்டப்​பட்​டது.

அதை சீமான் உதவி​யாளர் கிழித்​தார். இதனால், வீடு​பு​குந்து நீலாங்கரை பொலி​ஸார் அவரை கைது செய்ய முயன்​றனர். அப்போது, பாது​காவலரான ஓய்வு பெற்ற இராணுவ வீரருக்​கும் பொலி​ஸாருக்​கும் இடையே தள்ளு​முள்ளு ஏற்பட்​டது. இதையடுத்து, சீமான் பாது​காவலர், காவலாளி இருவரை​யும் நீலாங்கரை பொலி​ஸார் கைது செய்து இரவோடு, இரவாக சிறை​யில் அடைத்​தனர்.

முன்னதாக, பெங்​களூரு சென்று நடிகை விஜயலட்​சுமி​யிடம் விசாரணை நடத்தி வழக்கு தொடர்பான தகவல்களை ஆவ ணங்​களாக சேகரித்து வளசர​வாக்கம் பொலிஸார் சென்னை திரும்​பினர். இந்நிலை​யில், நேற்று காலை ளசர​வாக்கம் காவல் நிலை​யத்​தில் சீமான் ஆஜராவார் என கூறப்​பட்​டது. ஆனால், அவர் இரவு 8 மணியள​வில் ஆஜராவார் என நாம் தமிழர் கட்சி நிர்​வாகிகள் தெரி​வித்​தனர்.

இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி​யினர், அக்கட்​சி​யின் மகளிர் அணியினர் என நூற்றுக்​கணக்​கானோர் வளசர​வாக்கம் காவல் நிலையம் முன்பு மாலை முதல் திரண்​டனர். இதையறிந்த போலீ​ஸார் முன்ன​தாகவே, வளசர​வாக்கம் காவல் நிலை​யத்தை சுற்றி இருந்த கடைகளை மூட அறிவுறுத்​தினர். அதன்​படி, கடைகளும் அடைக்​கப்​பட்​டது.

மேலும், காவல் நிலை​யத்தை சுற்றி போக்கு​வரத்​தி​லும் மாற்​றங்கள் செய்​யப்​பட்​டது. அதோடு மட்டும் அல்லாமல் வளசர​வாக்கம் காவல் நிலையம் பகுதிக்​குச் செல்​லும் 3 நுழைவா​யில் பகுதி​களி​லும் இரும்பு தடுப்பு​களால் மூடப்​பட்​டது. அந்த வழியாக யாரும் செல்ல அனும​திக்​கப்​பட​வில்லை. மேலும், வெளிப்​பகுதி நபர்கள் அங்கிருந்து செல்​லும்படி அறிவுறுத்​தப்​பட்​டது. நாம் தமிழர் கட்சி தொண்​டர்​களை​யும் அங்கிருந்து கலைந்து செல்​லும்படி போலீ​ஸார் அறிவுறுத்​தினர்.

ஆனால், போலீ​ஸாருடன் அவர்கள் வாக்கு​வாதத்​தில் ஈடுபட்​டதோடு போலீ​ஸாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்​டத்​தில் ஈடுபட்​டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்​டது. இதுஒரு​புறம் இருக்க வளசர​வாக்கம் காவல் நிலை​யத்தை சுற்றி​யுள்ள பகுதி​களில் நடக்​கும் நிகழ்வுகள் அனைத்​தை​யும் போலீ​ஸார் வீடியோவாக படம் பிடித்​தனர். இவற்றை சிசிடிவி கேமரா மூலம் உயர் அதிகாரிகள் இருந்த இடத்​தில் இருந்​தவாறு கண்காணித்​தனர்.

இதுஒரு​புறம் இருக்க தர்மபுரியி​லிருந்து சென்னை திரும்பிய சீமான் வடபழனி​யில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார். அங்கு அவர் வழக்​கறிஞர்​களுடன் ஆலோசனை நடத்​தினார். பின்னர், இரவு 8 மணியள​வில் அங்கிருந்து புறப்​பட்டு காவல் நிலையம் நோக்கி காரில் சென்​றார். ஏவிஎம் ஸ்டுடியோ அருகில் சீமான் கார் சென்று கொண்டிருந்த​ போது அவரை தொடர்​பு​கொண்ட போலீ​ஸார் இரவு 9.15 மணியள​வில் வாருங்கள் என தெரி​வித்​தனர். இதையடுத்து ஏவிஎம் ஸ்டுடியோ அருகிலேயே காத்​திருந்​தார். பின்னர், 9.15 மணியள​வில் புறப்​பட்டு நெரிசல் காரணமாக 10 மணியள​வில் காவல் நிலையம் சென்​றடைந்​தார்.

சீமானின் வழக்​கறிஞர் குழு​வுடன் அவரது மனைவி கயல்​விழி​யும் வருவதாக முதலில் செய்திகள் வெளி​யானது. ஆனால் கயல்​விழி வரவில்லை. சீமான் வருகையை முன்னிட்டு 300-க்​கும் மேற்பட்ட போலீசார் குவிக்​கப்​பட்​டனர். தீயணைப்பு வாக​னம், 108 ஆம்​புலன்ஸ் த​யார்​நிலை​யில் வைக்​கப்​பட்​டிருந்​தது. தொண்​டர்​கள் அத்​து​மீறினால் கைது செய்து அழைத்து செல்ல பேருந்​துகளை​யும் தயாராக வைத்​திருந்​தனர். ஏராள​மானோர் ஒரே நேரத்​தில் கு​விந்​த​தால் வளசர​வாக்​கம் பகு​தி​யில் கடும் போக்கு​வரத்​து நெரிசல்​ ஏற்​பட்​டது.

100 கேள்விகள் அடங்கிய பட்டியல்: சீமானிடம் கேட்பதற்காக சுமார் 100 கேள்விகள் அடங்கிய பட்டியலை போலீஸார் தயார் செய்து வைத்திருந்தனர். அதிலிருந்து ஒவ்வொரு கேள்வியாக கேட்கப்பட்டது. குறிப்பாக, விஜயலட்சுமிக்கும் உங்களுக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது, அவரை நீங்கள் மாலை மாற்றி திருமணம் செய்தது உண்மையா, கருக்கலைப்பு செய்தது உண்மையா, புகாரை திரும்பப் பெற அழுத்தம் கொடுத்தீர்களா, பண உதவி செய்தீர்களா என்பன உட்பட பல்வேறு கேள்விகளை போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு சீமான் அளித்த பதில்களை வாக்குமூலமாக போலீஸார் பதிவு செய்து கொண்டனர். மேலும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.

வீரப்பன் மகள் வித்யா ராணி கண்ணீர்: சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்துக்குள் சீமான் சென்றபோது, உடன் வந்திருந்த தொண்டர்கள் தடுப்புகளைத் தாண்டி காவல் நிலையத்துக்குள் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், சீமானுடன் வேறு யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதற்கிடையில், சீமானுடன் வந்திருந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணி, காவல் நிலையத்துக்குள் செல்ல முயன்றார். அவரைத் தடுத்து நிறுத்திய பெண் போலீஸாருடன் வித்யா ராணி கண்ணீர் வடித்தபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, வித்யா ராணி செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாம் தமிழர் கட்சியை அழிக்கும் வகையில் செயல்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களால் கட்சியினரின் உழைப்பு பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் நடக்கின்றன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல், சீமானை பழிவாங்கும் நோக்கில் இதுபோன்று செயல்படுகின்றனர்” என்றார்.

விசாரணைக்குப் பின் சீமான் சொன்னது என்ன? – “போலீஸ் விசாரணையில் சென்றமுறை கேட்ட அதே பழைய கேள்விகளையே இந்த முறையும் கேட்டனர். புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை. விசாரணைக்கு தாமதமாக வர, காவல் துறையினரே காரணம். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். விசாரணைக்கு மீண்டும் தேவைப்பட்டால் ஆஜராக தயார். போலீஸ் விசாரணையில் என்னை நல்ல முறையில் நடத்தினர்.

இந்த வழக்கை விசாரித்து முடிக்க மூன்று மாதம் கால அவகாசம் உள்ளது. மூன்றே நாளில் இதை விரைந்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? எனக்கு சம்மன் கிடைத்தபோது நான் பயணத்தில் இருப்பதாக தெரிவித்தேன். மீண்டும் கொடுத்த சம்மனை அடுத்து போலீஸ் விசாரணைக்கு ஆஜரானேன். போலீஸ் தரப்புக்கு இந்த வழக்கில் அழுத்தம் தரப்படுகிறது. ஆளும் திமுக அரசு இந்த வழக்கை நீட்டித்துக் கொண்டு செல்கிறது.

என் வீட்டின் கதவில் ஒட்டப்பட்ட சம்மனை அகற்றியதில் எந்த தவறும் இல்லை. எங்கள் வீட்டில் இருந்த இருவரை கைது செய்ததும், அவர்களை தாக்கியதும்தான் தவறு. சம்மனை ஒட்டியது வளசரவாக்கம் காவல் நிலைய அதிகாரிகள். அப்படி இருக்கும்போது நீலாங்கரை காவல் நிலைய அதிகாரிகள் ஏன் எங்கள் வீட்டில் இருந்தவர்களை கைது செய்ய வேண்டும்?

கருணாநிதி என்னை கைது செய்து தலைவர் ஆக்கினார். இப்போது இவர்கள் என்னை கைது செய்து முதல்வர் ஆக்க உள்ளனர். கடந்த தேர்தலில் தனித்து நின்று அடையாளம் பெற்றோம். எங்களுக்கு 36 லட்சம் வாக்குகள் விழுந்தன. வாக்குக்கு பணம் கொடுக்காமல் இதை பெற்றுள்ளோம். என் மீதுள்ள நற்பெயரை சிதைக்கும் வகையில் அரசு இதை செய்துள்ளது.

புகார் அளித்த நடிகை கடந்த 15 ஆண்டுகளாக என்னை அவமானப்படுத்தி வருகிறார். விரும்பி வந்து அவர் உறவு வைத்துக் கொண்டார். எனக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. குழந்தைகள், குடும்பம் ஆகிவிட்டது. என் மீதான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டதா?

அரசியல் களத்தில் நான் ஒரு பக்கமும், விஜய் ஒரு பக்கமும் நிற்கிறார். என்றைக்கும் அவர் எனது அன்புத் தம்பி தான். மாண்புமிகு முதல்வர் அப்பா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்றார்.

The post சீமானிடம் விசாரணை: நாதகவினர் குவிந்ததால் பொலிஸ் திணறல் – வளசரவாக்கத்தில் நடந்தது என்ன? appeared first on Oruvan.com.