சீனா Archives - Oruvan.com

‘பைத்தியக்காரன் கோட்பாடும்’ மீண்டும் ஒரு சுயெஸ் கால்வாய் வரலாறும்
மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் வல்லரசுகள்?

‘பைத்தியக்காரன் கோட்பாடும்’ மீண்டும் ஒரு சுயெஸ் கால்வாய் வரலாறும்

தடுமாறும் அமெரிக்கா – சீறும் சீனா! ஹோர்முஸ் போர்க்களத்தின் முழுமையான அலசல்

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் கைகோர்த்துத் தொடுத்த போரின் விளைவாக, இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு இக்கட்டான நிலையில் நிற்கிறார். ‘கௌரவத்தைக்’ காப்பாற்றிக்கொண்டு எவ்வாறு வெளியேறுவது என்று தெரியாமல் அவர் தடுமாறிக்கொண்டிருப்பதாகவே சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வியட்நாம், ஈராக், மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்கா சந்தித்த வரலாற்றுத் தோல்விகளின் வரிசையில், ஈரானும் ஒரு தீராத பிரச்சினையாக மாறிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

*நிக்ஸனின் ‘பைத்தியக்காரன் கோட்பாடு’ (Madman Theory):*

முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் 1968-இல் கையாண்ட அதே ‘பைத்தியக்காரன் கோட்பாட்டை’ இன்று ட்ரம்ப் கையில் எடுத்துள்ளார். “நான் எதையும் செய்யத் துணிந்துவிட்டேன், அணுவாயுதப் பொத்தான் என் கைக்கு அருகில்தான் இருக்கிறது” என எதிராளியைப் பயமுறுத்திப் பணிய வைப்பதே இந்தத் தந்திரம்.

ஈரானின் நாகரிகத்தை ஒரே இரவிலேயே அழிப்பேன், என ட்ரம்ப் விடுத்த மிரட்டல்கள் இதன் ஒரு பகுதியே. எனினும், அன்று நிக்ஸன் எதிர்கொண்ட அதே கதியையே இன்று ட்ரம்ப்பும் சந்திக்க நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

*பாகிஸ்தானின் தூதுவமும் தற்காலிகப் போர்நிறுத்தமும்*

ஈரான் அரசு தற்போது பிளவுபட்டுள்ள நிலையில், ஒரு புதிய திருப்பமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரானின் மீதான நேரடி இராணுவத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இருப்பினும், ஈரானியத் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை தொடரும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

*சீனாவின் நுழைவும் நேரடி மோதல் அச்சமும்”

ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் இந்த முற்றுகை, இப்போது மற்றொரு உலக வல்லரசான சீனாவை உள்ளே இழுத்துள்ளது. ஈரானியக் கச்சா எண்ணெயின் முக்கிய இறக்குமதியாளரான சீனா, தனது எண்ணெய்க் கப்பல்களைப் பாதுகாக்க 48ஆவது பாதுகாப்புப் படைப்பிரிவை (Task Force 48) அரபிக்கடலில் நிலைநிறுத்தியுள்ளது.

டாங்ஷான் (122) மற்றும் தாகிங் (576) போன்ற சீனாவின் நவீன ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் இந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன.

ஈரானிய எண்ணெயைச் சுமந்து வரும் சீனக் கப்பல்களை அமெரிக்கா சோதனையிட முயன்றால், அது இரு வல்லரசுகளுக்கும் இடையே ஒரு நேரடிப் போராக வெடிக்கக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் எச்சரிக்கின்றன.

*வரலாறு திரும்புகிறதா? – சுயெஸ் கால்வாய் பாடம்*

இன்றைய ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி, 1956-ஆம் ஆண்டு நிகழ்ந்த சுயெஸ் கால்வாய் நெருக்கடியை நினைவூட்டுகிறது. அன்று எகிப்தின் மீது படையெடுத்த பிரிட்டன், இறுதியில் சர்வதேச அழுத்தங்களால் பின்வாங்க நேரிட்டதுடன், அதன் பிரதமர் அந்தொனி ஈடன் பதவி விலகவும் அது வழிவகுத்தது. அதேபோன்றதொரு இராஜதந்திரத் தோல்வியை நோக்கி அமெரிக்கா தள்ளப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

*துப்பாக்கி விசையிலேயே விரல்!*

*இது ஈரானின் எச்சரிக்கை*

அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை ஒரு நேரடிப் பகைமைச் செயலாகவே ஈரான் கருதுகிறது. “நாங்கள் எப்போதும் துப்பாக்கி விசையிலேயே கை வைத்துள்ளோம்; தாக்குதல் மீண்டும் தொடங்கினால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இலக்குகள் மீது உடனடிப் பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கிறோம்” என ஈரானின் ஊடகப் பேச்சாளர் இப்ராஹிம் ஸோல்பகாரி கடுமை நிறைந்த தொனியில் தெரிவித்துள்ளார்.

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மூடிவைத்திருக்கும் ஈரான், முற்றுகை நீங்கும் வரை அதைத் திறக்கப்போவதில்லை, என்பதில் உறுதியாக உள்ளது.

அமெரிக்காவின் இராணுவ வலிமை ஒருபுறம் இருந்தாலும், சீனாவின் தலையீடு மற்றும் ஈரானின் தரைப்படை வலு ஆகியவற்றால் ட்ரம்ப்பின் இராஜதந்திரம் பெரும் சவாலைச் சந்தித்துள்ளது.

இந்த “யுத்தச் சதுரங்கத்தில்” அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை உலகம் அச்சத்துடன் கவனித்துக்கொண்டிருக்கிறது.

– த.ரஸ்மிலா

The post ‘பைத்தியக்காரன் கோட்பாடும்’ மீண்டும் ஒரு சுயெஸ் கால்வாய் வரலாறும் appeared first on Oruvan.com.

போர் நிறுத்த முயற்சியில் களமிறங்கியது சீனா
ஈரானில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து ஐந்து அம்சத் திட்டத்தை முன்மொழிந்துள்ளன.

உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய, போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது அவசியம் என சீனா கருதுகிறது.

கடந்த காலங்களில் மத்திய கிழக்கில் சமாதான தூதுவராக செயல்பட்ட அனுபவத்தைக் கொண்டு, பெய்ஜிங் தற்போது இந்த அமைதி முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கு மாற்றாகத் தன்னை ஒரு நடுநிலையான அமைதித் தரகராக உலக அரங்கில் நிலைநிறுத்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறார்.

மத்திய கிழக்கு போர் குறித்து நீண்டகாலமாக மௌனம் காத்த சீனா, தற்போது அதிகரித்து வரும் எரிபொருள் விலை மற்றும் தொழில்முறை பாதிப்புகளைக் குறைக்க இந்த ராஜதந்திர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

The post போர் நிறுத்த முயற்சியில் களமிறங்கியது சீனா appeared first on Oruvan.com.

இலங்கை வந்த சீன வெளிவிவகார அமைச்சர்
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்ளிட்ட குழுவினர் இன்று (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

தென்னாப்பிரிக்காவின் டர்பனில் இருந்து சீனா நோக்கிச் சென்ற 17 பேர் கொண்ட சீனக் குழுவினர், இன்று (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இன்று பிற்பகல் வரை நாட்டில் தங்கியிருக்கும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்ளிட்ட குழுவினர், மீளவும் தாயகம் நோக்கி திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதர் குய் செங்ஹாங், தூதரகத்தின் உயர் அதிகாரிகள் குழுவினர் சீன உயர் மட்ட குழுவினரை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post இலங்கை வந்த சீன வெளிவிவகார அமைச்சர் appeared first on Oruvan.com.

அமெரிக்கா தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் தனது உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, கூடுதல் வரி விதிப்பையும் அமுல்படுத்தினார். இந்தியாவுக்கு, 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், சீனாவுக்கு, 155 சதவீத வரி விதிக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.

அந்த முடிவை தற்காலிகமாக ஒத்தி வைத்திருந்தார். தற்போது இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”நான் சீனாவுடன் நட்புறவுடனேயே இருக்க விரும்புகிறேன். வரி விதிப்பில் சீனா எங்களிடம் கடுமையாக நடந்து கொண்டது.

உலக நாடுகளை தன் பிடியில் வைத்திருக்க விரும்பும் சீனாவை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எனவே, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல், 155 சதவீத வரி விதிக்கப்படும்” என ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக போர் உக்கிரமடைந்துள்ளது.

அமெரிக்க-சீனா வரிவிதிப்புப் போர் குறித்து கொல்கத்தாவில் சீனத் தூதர் வெய் விடம் கேட்டபோது, அமெரிக்க-சீன வரிவிதிப்புப் போர் பிரச்சினையில், சீனாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. நாங்கள் எந்த மோதலையும் விரும்பவில்லை.

ஆனால் கடுமையான சூழலுக்கு தள்ளப்பட்டால், நாங்கள் நிச்சயமாக பதிலளிப்போம். நாங்கள் போராடுவோம், ஆனால் எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன. பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறோம். அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்து பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், தனது உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை சீனா எடுக்கும். இது தான் எங்கள் அணுகுமுறை என்று கூறினார்.

The post அமெரிக்கா தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை appeared first on Oruvan.com.

இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவு – சீன, சிங்கப்பூர் ஜனாதிபதிகள் வாழ்த்து பரிமாற்றம்
இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஆகியோர் வாழ்த்துக்களை பரிமாற்றிக்கொண்டுள்ளனர்.

சீனாவும் சிங்கப்பூரும் நட்புறவு மிக்க அண்டை நாடுகள் மற்றும் முக்கியமான ஒத்துழைப்பு பங்காளி என்பதைக் குறிப்பிட்ட சீன ஜனாதிபதி, இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பைக் கடைப்பிடித்து வருவதாகக் கூறினார்.

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு பலனளிக்கும் வகையில் இருதரப்பு உறவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இரு தரப்பினரும் அந்தந்த நவீனமயமாக்கல் செயல்முறைகளில் கைகோர்த்து முன்னேறி, இரு நாட்டு மக்களுக்கும் உறுதியான நன்மைகளைத் தருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் பரஸ்பர நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்தவும், உயர் மட்ட ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும், மக்களிடையேயான பரிமாற்றங்களை வலுப்படுத்தவும், பலதரப்பு வர்த்தக அமைப்பையும் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளையும் கூட்டாகப் பாதுகாக்கவும் சீனா தயாராக உள்ளது.

இதனால் சீனாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான அனைத்து வகையான உயர்தர கூட்டாண்மையை ஊக்குவிக்கவும், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி, செழிப்புக்கு இன்னும் அதிக பங்களிப்பை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, 2023 ஆம் ஆண்டில், சிங்கப்பூர்-சீனா உறவுகள் முழுமையான உயர்தர கூட்டாண்மையாக உயர்த்தப்பட்டதாகவும், இரு அரசாங்கங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், தொடர்ந்து புதிய அம்சங்களை ஒருங்கிணைத்து, தொலைநோக்கை வெளிப்படுத்துவதாகவும் சிங்கப்பூர் ஜனாதிபதி சண்முகரத்தினம் தெரிவித்துள்ளார்.

காலத்தின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இரு தரப்பினரும் புதிய பகுதிகளில் ஒத்துழைப்பை தீவிரமாக விரிவுபடுத்தியுள்ளனர், அதே நேரத்தில் இரு நாட்டு மக்களும் கலாச்சார உறவுகளை சீராக வலுப்படுத்தியுள்ளனர்.

இரு நாடுகளும் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து பணியாற்றும் என்றும், இருதரப்பு உறவை புதிய உயரத்திற்கு கொண்டுச் செல்லும் என்றும் ஜனாதிபதி சண்முகரத்தினம் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இதனிடையே, சீனப் பிரதமர் லி கியாங் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகியோரும் குறித்த நாளில் தமது வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவு – சீன, சிங்கப்பூர் ஜனாதிபதிகள் வாழ்த்து பரிமாற்றம் appeared first on Oruvan.com.

இந்தியாவும், சீனாவும் நண்பர்கள் – மோடியிடம் ஷி ஜின்பிங் சொன்ன செய்தி
இந்தியாவும் சீனாவும் நண்பர்களாக இருப்பது அவசியம் என்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

வரி விதிப்பின் மூலம் உலக நாடுகளிடையே நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ள நிலையில், அண்டை நாடாகவும், நண்பர்களாகவும் இருப்பது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சீனா சென்றிருந்தார். இதன்போது அவருக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தியான்ஜின் நகரில் உச்சி மாநாடு நேற்று நடைபெற்றிருந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். முன்னதாக, மாநாட்டிற்கு வந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஷி ஜின்பிங் கைக்குலுக்கி வரவேற்றார்.

உலக அளவில் ஏற்பட்டுவரும் நெருக்கடி மற்றும் மாற்றங்களுக்கு மத்தியில், இந்தியா – சீனா இடையிலான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து ஷி ஜின்பிங் மோடியுடன் பேசினார்.

”மாற்றத்தை நோக்கி உலக நாடுகள் சென்றுகொண்டிருக்கின்றன. சீனாவும் இந்தியாவும் மிகப்பெரிய அளவில் நாகரீகமடைந்த நாடுகள். உலகளாவிய தெற்கின் ஒரு பகுதியாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளாகவும் இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.

மேலும், ”சிறந்த அண்டை நாடுகளாகவும் நல்ல நண்பர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். டிராகனும், யானையும் ஒன்றாக இணைய வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

அத்துடன், கடந்த ஆண்டு ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்ற வெற்றிகரமான மாநாட்டில் பங்கேற்றது குறித்து நினைவு கூர்ந்தார். மேலும், இந்தியா – சீனா இடையிலான ராஜதந்திர உறவின் 75வது ஆண்டின் நிறைவையும் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான உறவை நீண்ட கால கண்ணோட்டத்தில் முன்னெடுத்துச்செல்லும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஷி ஜின்பிங் குறிப்பிட்டார்.

The post இந்தியாவும், சீனாவும் நண்பர்கள் – மோடியிடம் ஷி ஜின்பிங் சொன்ன செய்தி appeared first on Oruvan.com.

இலங்கை வந்த சீன நாட்டவர்கள் – உடனடியாக நடு கடத்தப்பட்டனர்
சைபர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்காக இலங்கைக்குள் நுழைய முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஐந்து சீனப் பிரஜைகள் இன்று (13) கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து காலை 10:30 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-405 மூலம் இந்த நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களின் வருகையின் நோக்கம் குறித்த சந்தேகங்கள் காரணமாக, குடியேற்ற அனுமதிக்காக தலைமை குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரியிடம் அவர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.

விசாரணையில், கொழும்பு துறைமுக நகரத்தை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்வதாகக் கூறி, இலங்கையில் தங்கி வேலை செய்வதற்குத் தேவையான குடியிருப்பு விசாக்களைப் பெற்றதாகக் குழு தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

இருப்பினும், அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரியிடம் விசாரிக்கப்பட்டபோது, வேலைகளின் தன்மை அல்லது அவர்களின் வருகையின் நோக்கத்தை அவரால் தெளிவாக விளக்க முடியவில்லை.

மேலும் விசாரித்ததில், தனிநபர்கள் வழங்கிய வேலை அழைப்புக் கடிதங்களில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் முன்பு கம்போடியா மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள சந்தேகத்திற்கிடமான நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டது, இரண்டு இடங்களும் சைபர் குற்ற நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவை.

கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், குடிவரவு மற்றும் குடியேற்றத் துறை ஐந்து சீன நாட்டினரையும் நாடு கடத்துவதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிடம் ஒப்படைக்க முடிவு செய்தது.

The post இலங்கை வந்த சீன நாட்டவர்கள் – உடனடியாக நடு கடத்தப்பட்டனர் appeared first on Oruvan.com.

உச்சமடையும் வர்த்தக போர் : அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தியது சீனா
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி சீனா அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2ஆம் திகதி ட்ரம்ப் அறிவித்தார்.

அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது.

10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5ஆம் திகதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9-ம் திகதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன.

இந்நிலையில், ஏப்ரல் 10ஆம் திகதி முதல் அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்தது. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கான சீனாவின் பதிலடியாக இது அமைந்துள்ளது என சீன வர்த்த அமைச்சு அறிவித்தது. இதை கடுமையாக கண்டித்த அமெரிக்கா, 24 மணி நேரத்தில் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று சீனாவுக்கு கெடு விதித்தது.

அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தலை சீனா நிராகரித்தது. இதையடுத்து, சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்தது. மேலும், சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும் என்றும், பிற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் உடனடியாக நடைபெறும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவின் இந்த வரி உயர்வைக் கண்டித்து சீனா, அமெரிக்கப் பொருட்களுக்கு 84% இறக்குமதி வரியை விதித்தது. சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 125% ஆக உயர்த்தியது. மேலும், வரியை 125% ல் இருந்து 145% ஆகவும் உயர்த்தி ட்ரம்ப் அறிவித்தார்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த சீனா, அமெரிக்காவுக்குப் போட்டியாக அந்நாட்டு பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி உள்ளது.

“சீனா மீது அமெரிக்கா விதித்த அசாதாரணமான வரி உயர்வு, சர்வதேச வர்த்தக விதிகள், அடிப்படை பொருளாதார சட்டங்கள் மற்றும் பொது அறிவை கடுமையாக மீறுவதாக உள்ளது. ட்ரம்ப்பின் வரிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட உலகளாவிய பொருளாதார கொந்தளிப்புக்கு அமெரிக்கா முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

தற்போதைய உலகப் பொருளாதாரம், உலக சந்தைகள் மற்றும் பலதரப்பு வர்த்தக அமைப்புகள் கடுமையான அதிர்ச்சிகளையும் கடுமையான கொந்தளிப்பையும் சந்திக்க அமெரிக்காவே காரணம்” என்று சீன வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

இதனிடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங், ஒருதலைப்பட்ச கொடுமைப்படுத்துதலை எதிர்ப்பதில் பெய்ஜிங்குடன் ஐரோப்பிய ஒன்றியம் கைகோர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பெய்ஜிங்கில் பேசிய அவர், “சீனாவும் ஐரோப்பாவும் தங்கள் சர்வதேச பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் ஒருதலைபட்சமான கொடுமைப்படுத்துதல் நடைமுறைகளை கூட்டாக எதிர்க்க வேண்டும். இது சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், சர்வதேச நியாயத்தையும் நீதியையும் பாதுகாக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

The post உச்சமடையும் வர்த்தக போர் : அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தியது சீனா appeared first on Oruvan.com.

உலகளாவிய துயரத்தின் தொடக்கமா?
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் ஒரு புதிய உலகளாவிய கவலையை எழுப்பியுள்ளது.

சீனா மீது 50 வீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவும் அமைதியாக இருக்கப் போவதில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளது.

அமெரிக்காவின் அச்சுறுத்தலை ‘தவறுக்கு மேல் தவறு’ என்று சீனா வர்ணித்துள்ளது. ஒரு வர்த்தகப் போர் தொடங்கினால், தனது வளர்ச்சி மற்றும் இறையாண்மையை முழு பலத்துடன் பாதுகாப்பேன் என்று சீனா கூறியுள்ளது.

மேலும், பெய்ஜிங் எந்த விதமான அழுத்தத்திற்கும் அடிபணியாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்தப் பொருளாதாரப் பதற்றத்தின் தாக்கம் உலகப் பங்குச் சந்தையில் தெளிவாகத் தெரிந்தது. வர்த்தகப் போர் பற்றிய செய்திகளால், முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பைச் சந்திக்க நேரிட்டது. சந்தையில் திடீர் சரிவு காணப்பட்டது.

உலகளாவிய ஃபயர்பவர் குறியீட்டில் 0.0744 மதிப்பெண்களுடன் அமெரிக்கா உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை அனைத்தும் மிகவும் முன்னேறியதாகக் கருதப்படுகின்றன. தவிர  அணு ஆயுதங்களையும் கொண்டுள்ளது.

அமெரிக்காவிடம் 13,000க்கும் மேற்பட்ட விமானங்கள், 1,790 போர் விமானங்கள் மற்றும் 5,000 ஹெலிகாப்டர்கள் உள்ளன.

14 லட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களையும், லட்சக்கணக்கான கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களையும் கொண்டுள்ளது. தொழில்நுட்பத்தில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது.

மறுபுறம், சீனாவின் இராணுவமும் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உலகளாவிய சக்தி குறியீட்டில் சீனா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது, அதன் மதிப்பெண் 0.0788 ஆகும். சீன இராணுவத்தில் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான வீரர்கள் உள்ளனர்.

சீனாவிடம் 3,000க்கும் மேற்பட்ட விமானங்கள், 1,212 போர் விமானங்கள் மற்றும் 281 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உள்ளன.

அதன் கடற்படை மற்றும் விமானப்படைகளும் வேகமாக நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் சீனா தனது ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது.

இரு நாடுகளும் இப்போது வர்த்தகம் அல்லது பொருளாதாரத்தில் மட்டுமல்ல, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்திலும் ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றன.

இந்தக் காரணத்தினால், அவர்களின் மோதல் முழு உலகிற்கும் கவலை அளிக்கும் விடயமாக மாறியுள்ளது. இந்தப் போர் இந்த இரண்டு  நாடுகளோடு மட்டும் நின்றுவிடாது.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடிப் போர் ஏற்பட்டால், அது இரு நாடுகளின் துயரம் மட்டுமல்ல, உலகளாவிய துயரத்தின் தொடக்கமாக இருக்கும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான போர் ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

நிலைமையை முறையாகக் கையாளவில்லை என்றால், வர்த்தகப் போரால் தொடங்கும் மோதல் ஒரு பெரிய பேரழிவாக மாறும். இது உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

The post உலகளாவிய துயரத்தின் தொடக்கமா? appeared first on Oruvan.com.

24 மணி நேர கெடு முடிந்ததால் சீனா மீது 104% வரியை விதித்தது அமெரிக்கா
அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெற சீனாவுக்கு விதித்த 24 மணி நேர கெடு முடிந்த நிலையில், சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சீனா தனது 34% வரி அதிகரிப்பை திரும்பப் பெறவில்லை என்றால், ஏப்ரல் 9ம் திகதி (இன்று) முதல் சீனா மீது 50% கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும். கூடுதலாக, சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும். பிற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் உடனடியாக நடைபெறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் 24 மணி நேர கெடு முடிந்தும் அமெரிக்கா மீதான 34 சதவீத வரிவிதிப்பை சீனா திரும்பபெறவில்லை. இதனையடுத்து சீனா மீது 104 சதவீத வரி விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த வரிவிதிப்பு இன்று புதன்கிழமை முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2ஆம் திகதி ட்ரம்ப் அறிவித்தார்.

அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம், இலங்கை 44 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5ஆம் திகதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9ஆம் திகதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன.ஏப்ரல் 10ஆம் திகதி முதல் அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்தது. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கான சீனாவின் பதிலடியாக இது அமைந்துள்ளது என சீன வர்த்த அமைச்சகம் அறிவித்தது.

The post 24 மணி நேர கெடு முடிந்ததால் சீனா மீது 104% வரியை விதித்தது அமெரிக்கா appeared first on Oruvan.com.