சி.வி.கே.சிவஞானம் Archives - Oruvan.com

ஜனாதிபதி – தமிழரசுக் கட்சியினருக்கிடையில் வியாழனன்று சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நாளைமறுதினம் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்குக் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேரடிப் பேச்சு நடைபெறவுள்ளது.

தம்முடன் பேச்சுக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்த கோரிக்கைக் கடிதத்தின் அடிப்படையில் இந்தச் சந்திப்புக்கு ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்திப்புக்கான தினத்தையும், நேரத்தையும் ஜனாதிபதி செயலகம் இன்று தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனைத் தொடர்புகொண்டு அறிவித்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர், பொதுச்செயலாளரோடு கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளைமறுதினம் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் பங்குபற்றவுள்ளனர்.

இனப் பிரச்சினைக்குத் தீர்வு, மாகாண சபைத் தேர்தல், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் திருகோணமலை கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் பெளத்த வணக்கஸ்தலம் மற்றும் அங்கு அடாத்தாக நிறுவப்பட்ட புத்தர் சிலை ஆகியவை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தமிழரசுக் கட்சியினர் இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்துவார்கள் என்று தெரிகின்றது.

The post ஜனாதிபதி – தமிழரசுக் கட்சியினருக்கிடையில் வியாழனன்று சந்திப்பு appeared first on Oruvan.com.

நாளை வவுனியாவில் கூடுகின்றது தமிழரசு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை புதன்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது.

கட்சித் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், மாகாண சபைத் தேர்தல், அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்குரிய நகர்வுகள் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

அதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும், தேசிய மக்கள் சக்தி அரசுக்கும் இடையில் விரைவில் சந்திப்பு இடம்பெறவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

The post நாளை வவுனியாவில் கூடுகின்றது தமிழரசு appeared first on Oruvan.com.

ஒற்றையாட்சியை ஒருபோதும் ஏற்கோம் – சி.வி.கே.சிவஞானம்
“இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்தக் காலத்திலும் ஒற்றையாட்சியை ஏற்றது கிடையாது. ஒற்றையாட்சியை ஏற்றவர்கள் நாங்கள் அல்லர். தமிழரசுக் கட்சிக்கும் ஒற்றையாட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” ஏக்கிய ராஜ்ஜிய, ஒற்றையாட்சி என்பவற்றை நாங்கள் ஏற்கப் போவதில்லை என்பதை ஏற்கனவே அறிவித்துவிட்டோம். அப்படியிருக்கத் திரும்பத் திரும்ப இவைகளைப் பற்றிப் பேசுவதில் எந்த அர்த்தமுமே கிடையாது.

புதிய அரசமைப்பைக் கொண்டு வருவது தொடர்பாக இந்த அரசு உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை. ஆக அரசு உத்தியோகபூர்வமாக எதனையும் சொல்லுகின்ற போது இதைப் பற்றி பேசலாம். ஆனாலும் ஒற்றையாட்சியையும் ஏக்கிய ராஜ்ஜியவையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

இதற்கு மேலேயும் எமக்கு எதிராகப் பிரசாரம் செய்வது ஓர் அரசியல் தந்திரோபாயமே தவிர அது யதார்த்தம் அல்ல.” எனவும் சி.வி.கே. சிவஞானம் சுட்டிக்காட்டினார்.

” எங்களுடைய கட்சியின் கொள்கையும் தெளிவான நிலைப்பாடும் ஒற்றையாட்சியல்ல. அப்படியிருக்க எவ்வாறு நாங்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டதாகப் பிரச்சாரம் செய்ய முடியும்.?

ஏக்கிய ராஜ்ஜிய என்றால் அது ஒற்றையாட்சி அல்ல. அது ஒருமித்தது என்றுதான் வருகின்றது. எனினும், ஏக்கிய ராஜ்ஜிய, ஒருமித்தது என்ற இந்த விடயங்களில் தெளிவு இல்லை. ஆனாலும், அதை நாங்கள் ஏற்றுக்கொண்டதாகவும் இல்லை. எனினும், அதனடிப்படையில் சில விடயங்களைப் பரிசீலிக்கலாம் என இப்போதைய ஆட்சியாளர்கள் சொல்லியிருந்தனரே தவிர ஏக்கிய ராஜ்ஜியவைக் கொண்டு வருவதாக அவர்கள் சொன்னதும் கிடையாது.

ஆகையினால் இப்போது எங்களுக்கு எதிராக முன்வைக்கின்ற பிரச்சாரங்களை நாங்கள் மறுதலிக்கின்றோம்.

உண்மையில் அப்படியொரு புதிய அரசமைப்பு வருகின்ற போது நிச்சயமாக எல்லாக் கட்சிகளோடும் நாங்கள் கூட்டாக இணைந்து கூட்டாக ஒரு நிலைப்பாட்டை எடுப்போம் என்பதை உறுதியாகச் சொல்ல விரும்புகின்றேன்.

புதிய அரசமைப்பை இந்த அரசு முன்னெடுக்கின்ற போது நாங்கள் தனித்துக் கருத்துக் கூற இருந்தாலும் கூட அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளோடும் சேர்ந்து ஒருமித்த கருத்தை முன்வைப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவோம்.

அத்தகைய எண்ணம், சிந்தனை எங்களுக்கு உண்டு. அதற்மைய நடவடிக்கைகளை எடுப்போம். இது சம்பந்தமாக கட்சி ரீதியிலும் மத்திய செயற்குழுவிலும் பேசுவோம்.” – என சி.வி.கே. சிவஞானம் மேலும் குறிப்பிட்டார்.

The post ஒற்றையாட்சியை ஒருபோதும் ஏற்கோம் – சி.வி.கே.சிவஞானம் appeared first on Oruvan.com.

திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்யாதீர் – சி.வி.கே.சிவஞானம்
தியாக தீபம் திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் எனக் கட்சிகளிடமும் அமைப்புக்களிடமும் கோரிக்கை முன்வைத்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொருத்தமான அரசியல் கலப்பற்ற நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே சி.வி.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்தார்.

‘ அண்மைக்காலமாக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் தியாக தீபம் திலீபனுக்கு உதவியாகவும் அவருக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த ராஜன் உள்ளிட்ட மூத்த போராளிகள் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் அரசியல் கலப்பற்ற ஒரு கட்டமைப்பை உருவாக்குமாறு கேட்டுகொண்டனர்.

1988 ஆம் ஆண்டு என்னுடைய செலவிலேயே தியாக தீபம் திலீபனுக்கான தூபி “தியாக தீப தூபி” என்ற பெயரில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அந்தத் தூபி 7 வருடங்களுக்கு பின்னர் 1995ஆம் ஆண்டு உடைக்கப்பட்டது.

அதன் காரணமாக நான் சுடப்பட்டு, வேலை இழந்து இந்திய அமைதிப்படை பாதுகாப்பு, கைது எனத் தடுக்கப்பட்டு இந்தியாவுக்குத் தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது.” எனவும் சிவஞானம் சுட்டிக்காட்டினார்.

தற்போது தீபங்களுக்கு முன்பாக தலைகுனிந்து நிற்பவர்கள் தம்மைத் தியாகிகளாக நினைக்கின்றனர். இதில் யார், யார் இராணுவப் புலனாய்வுடன் தொடர்பு கொண்டவர்கள் என்பது எனக்குத் தெரியும்.

திலீபனுடன் தொடர்பைக் கொண்டவன், தூபியைத் திரும்ப நிறுவியவன் என்ற அடிப்படையில் எனக்கு அதைப் பற்றி தெரியும்.

2002 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் போது தூபி உடைக்கப்பட்டு 2003.08.25 ஆம் திகதி மீளத் திறந்து வைக்கப்பட்டதுடன் அந்தத் தூபி யுத்தம் முடிந்த பிறகு 25.03.2010 அன்று உடைக்கப்பட்டது.

தற்போது அந்த உடைக்கப்பட்ட தூபியின் பூர்வீகத் அடித்தளத்துக்கே அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வடக்கு மாகாண சபை இருந்த காலத்தில் நான் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குத் தூபி தொடர்பில் கடிதம் எழுதினேன். அது பின்னர் சாத்தியப்படவில்லை.

யுத்தம் முடிந்த பிறகு முதன்முறையாக 2016ஆம் ஆண்டு தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தைத் துப்பரவாக்கி நினைவேந்தலைச் செய்யுமாறு ஜனநாயகப் போராளிகள் கட்சியை நான் வலியுறுத்தினேன். அதன்படி அது நடந்தது. 2017ஆம் ஆண்டில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ{ம் இணைந்து கொண்டனர்.

2018 இல் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் நினைவிடத்தில் கொட்டில் போட்டு ஆதிக்கம் செலுத்தியபோது மாவை சேனாதிராஜாவை அழைத்துக்கொண்டு நான் சென்றபோது நாங்கள் ஏளனமாக நடத்தப்பட்டடோம்.

தற்போது உள்ளவர்கள் வரலாற்றை திரிபுபடுத்தக்கூடாது. திலீபன் எல்லோருக்கும் பொதுவானவன். அவன் கௌரவிக்கப்பட வேண்டியவன். மதிப்பளிக்கப்பட வேண்டியவன். போட்டி, பொறாமையால் நினைவேந்தலைக் கொச்சைப்படுத்த கூடாது. ” – எனவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

The post திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்யாதீர் – சி.வி.கே.சிவஞானம் appeared first on Oruvan.com.

தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை
“தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர்.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உணர்ந்து கொள்ளவேண்டும்” என தமிழரசுக் கட்சியின் பிரதித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர், உப தவிசாளர் நியமன சர்ச்சை தொடர்பில் இன்றைய தினம் (19.05.2025) அவர் விளக்கமளித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர்.

கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அதிகாரம் இருக்கின்றது. அதன்படி கட்சியில் வறிதாகும் பதவி நிலைகளுக்கு மத்திய செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும்.

அதன்படியே இன்றைய பதவி நிலை நியமனங்கள் செய்யப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதை சிறிதரன் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

இதனிடையே உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அமைப்பு தொடர்பில் பல கட்சிகளுடன் பேசியிருக்கின்றோம்.

அதற்கு தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் ஓரணியில் நின்று தேசியக் கட்சிக்கு இடங்கொடுக்காத வகையில் ஆட்சி அதிகாரத்தை தமிழ் தரப்பினர் கையகப்படுத்தும் வகையில் அமைவதற்கு பங்களிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுகின்றேன்.

நான் ஆட்சி செய்வது தொடர்பில் தமிழ் தரப்பிலுள்ள கட்சிகளுடன் பேசியுள்ளேன்.

அதன்படி இன்று எமது தேசியப் பரப்பில் இருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் குறிப்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஏனைய தரப்பினரது ஆதரவு கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

ஏனையோர் கூறுவது போன்று எமது கட்சி எந்தவொரு ஒற்றுமை இணக்கபாட்டையும் குழப்பியது கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழரசு கட்சியின் பொது செயலாளர் என்பதை இதுவரை ஏற்கவில்லை என தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை appeared first on Oruvan.com.

தமிழரசை அழிக்க சிலர் சதித்திட்டம் – சி.வி.கே.சிவஞானம்
“இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராகப் பல்வேறு சதிவலைகள் பின்னப்படுகின்றன. அதிலும் தமிழரசுக் கட்சியை எப்படியாவது சிதைத்து அதனை உடைத்துக் கட்சியைப் பிளவுபடுத்தி விட வேண்டும் என்ற நோக்குடன் சிலர் செயற்படுகின்றனர். அதையெல்லாம் தாண்டி நாம் முன்னேறுவோம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போது புதிய தமிழரசுக் கட்சி உருவாக்கம் குறித்து பேசப்படுகின்றது. உண்மையில் அப்படியாக கட்சிக்குள் இருப்பவர்கள் யாரும் கருதவில்லை.

அப்படியான எண்ணங்கள் கூட அவர்களிடத்தில் இல்லை. ஏனெனில் கட்சியில் பலருடனும் இது தெடர்பில் பேசியிருந்தபோது அவர்கள் அனைவரும் இதனை மறுதலித்துள்ளனர்.

குறிப்பாக தமிழ் மக்களின் நீண்டகால பாரம்பரியக் கட்சியாக இருக்கின்ற இந்த தமிழரசுக் கட்சியை எப்படியாவது உடைத்துவிட வேண்டும் என்று விசமத்தனமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில் கடந்த 75 வருட கால வரலாற்றில் சோரம் போகாத – ஊழலில் ஈடுபடாத – தமிழ் மக்களின் பாரம்பரியக் கட்சியாக இந்தக் கட்சியே திகழ்ந்து வருகின்றது.

இத்தகைய கட்சியை உடைக்கப் பலரும் பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்திருந்தாலும் இது பலனளிக்காத நிலைமையே ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில் ஜனநாயகத் தமிழரசு என்றும், புதிய தமிழரசு என்றும் புதிய புதிய பெயர்களைச் சொல்லிக்கொள்கின்றனர். அவ்வாறாகத் தமிழரசை உடைப்பவர்களுக்கு தமிழரசு என்ற சொல்லும் தேவைப்படுவது ஆச்சரியமானது.

ஆக மொத்தத்தில் தமிழரசை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. ஆனாலும், தெற்கத்தேயே சிங்கள நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் உடைக்கும் முயற்சியை தொடர்ந்தும் செய்தாலும் இது பலனளிக்காது என்பதையும் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

மேலும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவராக நானும் பதில் பொதுச்செயலாளராக சுமந்திரனும் பதவிக்கு வருவதற்குப் புதிதாக ஒன்றும் செய்யவில்லலை. யாப்பில் குளறுபடி செய்து இந்தப் பதவிகளுக்கு நாம் வரவில்லை.

எமது கட்சியின் யாப்புக்கமையத்தான் இப்போது அந்தப் பதவிகளை எடுத்திருக்கின்றோம்.

இவ்வாறான நிலைமைகள் இருக்கத்தக்கதாக மக்கள் மத்தியில் பிழையான தகவல்களைப் பரப்பி விசமத்தனமான பிரச்சாரங்களை சிலர் மேற்கொள்கின்றனர். அதுவும் இப்போது தேர்தல் காலம் என்பதால் இன்னும் இன்னும் அதிகளவில் போலிப் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்.

எனவே, தமிழரசைப் பிளவுபடுத்தும் நோக்கில் முன்வைக்கப்படும் பொய்ப் பிரச்சாரங்களை சரியான முறையில் எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறாக தமிழரசை இலக்கு வைத்து அதை உடைக்க முயற்சிகள் எடுத்தாலும் அதையெல்லாம் தாண்டி நாம் முன்னேறுவோம்.

மாற்றான சிந்தனையில் பொறுப்பான அணுகுமுறையைப் பின்பற்றி அநேகமாக எல்லா இடங்களிலும் சபைகளைக் கைப்பற்றுவோம். ஆனாலும், ஆட்சியமைக்க தேவைப்படும் இடங்களில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் பேசுவோம்.” – என்றார்.

The post தமிழரசை அழிக்க சிலர் சதித்திட்டம் – சி.வி.கே.சிவஞானம் appeared first on Oruvan.com.

தமிழரசின் மீளெழுச்சிக்கு ஒற்றுமை மிகவும் அவசியம் – கட்சியில் இணையுமாறு இளையோருக்கு சி.வி.கே. அழைப்பு
“இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படுவதன் ஊடாகவே அடுத்து வரும் தேர்தல்களில் தமிழரசுக் கட்சி மீளெழுச்சி பெறும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ். கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜா பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்குக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக இருந்த என்னைப் பதில் தலைவராக எஞ்சிய காலத்துக்குக் கடமையாற்றுமாறு தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவினர் கூடி தெரிவு செய்திருக்கிறார்கள்.

கட்சியின் அடுத்த மாநாடு வரையில் இந்தப் பணி தொடரும். அதற்கு இடைப்பட்ட காலத்தில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை ஆகிய இரண்டு தேர்தல்கள் இடம்பெற இருப்பதால் கட்சியில் தொய்வில்லாத வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டி இருக்கின்றன.

அதற்காகக் கட்சியின் செயற்பாடுகளை முழுவீச்சில் செயற்படுத்த வேண்டிய கடப்பாடுகள் எனக்கு இருக்கின்றன. கடந்த வருடங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்புமனுக்கள் கோரப்பட்டு தேர்தல் நடைபெறாத நிலையில் அந்த வேட்புமனுக்கள் இரத்தாகும் என்றால் புதிய வேட்பாளர்களைத் தெரிவு செய்ய வேண்டிய நிலை இருக்கின்றது.

எங்களுடைய கட்சியைப் பொறுத்தவரையில் ஒரு கருத்து தவறாகவோ, சரியாகவோ இருக்கின்றது. அதாவது ஏற்கனவே கட்சியில் இருப்பவர்களுக்குத்தான் கட்சி வாய்ப்பளிக்கும் என்பதால் புதியவர்கள், இளையவர்கள் கட்சியில் இணைந்து அங்கத்துவமாகச் சேர்ந்து உள்ளூராட்சி சபைகளிலே அரசியல் ரீதியாகப் பணியாற்றுவதற்குப்  பின்னிற்கின்றார்கள் என்ற நிலை இருக்கின்றது.

ஆகவே, உண்மையாகச் சொன்னால் தேர்தல் முறையிலே இருக்கக்  கூடியவாறு இளையவர்கள், மகளிர்கள் எனப் போதியவர்கள் எங்கள் கட்சியில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், சில இடங்களில் அப்படியானவர்கள் இருந்தாலும் அனைத்து இடங்களிலும் பொருத்தமானவர்கள் இல்லாத நிலைமை உள்ளது.

ஆகவே, புதிய இளையவர்கள், மகளிர்கள் அரசியல் பயணத்துக்கு முன்வர வேண்டுமென நான் அழைப்பு விடுக்கிறேன். மக்களுக்குச் சேவையாற்ற எமது கட்சியுடன் இணைந்து பயணிக்க முன்வர வேண்டும் எனக் கோருகின்றேன்.

அவர்கள் வசிக்கின்ற பகுதிகளிலுள்ள கட்சியின் மூலக்கிளை அல்லது தொகுதிக் கிளையின் ஊடாக விண்ணப்பித்து அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்குள்ளே சேர்ந்து கொண்டால் கட்சி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து பயணிக்கும்.

வடக்கு, கிழக்கிலே கட்டமைப்பைக் கொண்டதும், அனைத்து மாவட்டங்களிலும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கொண்டதும் எங்களுடைய கட்சிதான். ஆனாலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தொய்வு அல்லது நாங்கள் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த பின்னடைவில் இருந்து அடுத்து வரும் தேர்தல்களில் மீளெழுச்சி பெற்று நாங்கள் எங்களை நிலைநாட்டிக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு கட்சி மீளெழ வேண்டுமானால் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.” – என்றார்.

The post தமிழரசின் மீளெழுச்சிக்கு ஒற்றுமை மிகவும் அவசியம் – கட்சியில் இணையுமாறு இளையோருக்கு சி.வி.கே. அழைப்பு appeared first on Oruvan.com.

இந்தியாவின் உதவி எப்போதும் தேவை – வடக்கு ஆளுநர் வேதநாயகன்
இந்தியாவின் ஒத்துழைப்பும், உதவியும் எப்போதும் எங்களுக்குத் தேவை என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத் தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது, மகாகவி சுப்பிரமணியம் பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு ஆளுநர் உட்பட அதிதிகள் மலர்மாலை அணிவித்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், எங்கள் சேவைகள் மெருகூட்டப்படுவதற்குப் பயிற்சிகள் முக்கியம் என்று குறிப்பிட்டார்.

தாம் பதவிக்கு வந்த காலத்தில் இவ்வாறான பயிற்சிகளுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும், தற்போது வழங்கப்படும் இந்தப் பயிற்சிகளை உத்தியோகத்தர்கள் உரியமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

மனித வளத்தை மேம்படுத்தாவிட்டால் மக்களுக்கான சேவைகளைச்  சிறப்பாக வழங்க முடியாது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

ஐரெக் திட்டத்தின் கீழ் இந்தியாவிலுள்ள தரமான கல்வி நிலையங்களிலேயே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்றும், அந்தப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக சிறந்த சேவைகளை எமது மக்களுக்கு வழங்கக்கூடியதாகவும் இருக்கும் என்றும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.

“இந்தியா எமக்குப் பல வழிகளிலும் உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றது. அது தொடர வேண்டும். குறிப்பாக வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயம் முக்கியமானது. விவசாயத்துறை சார்ந்த பயிற்சிகளை வழங்குவதற்கு முன்வரவேண்டும்.” – என்றும் ஆளுநர் தனது உரையில் கோரிக்கை முன்வைத்தார்.

வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு இந்தியத் துணைத்தூதரகத்தின் சார்பில் சாதகமான பதில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிறி.சற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post இந்தியாவின் உதவி எப்போதும் தேவை – வடக்கு ஆளுநர் வேதநாயகன் appeared first on Oruvan.com.