சிவஞானம் சிறீதரன் Archives - Oruvan.com

சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிதியான விசாரணை அவசியம்
யாழ். அல்லைப்பிட்டியில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிதியான விசாரணை அவசியம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

யாழ். அல்லைப்பிட்டியில்  அண்மையில் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் சிறுவர் ஒருவர் பொலிஸாரைால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து இதுவரையில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

பொலிஸாரால் சுட்டுக்கொள்ளப்பட்ட இந்த சிறுவனின் குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, இந்த விடயத்தில் நீதியான விசாரணைகள் இடம்பெற்ற உரிய தீர்வை குறித்த சிறுவனின் குடும்பத்துக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் சிவஞானம் சிறீதரன் கூறியுள்ளார்.

The post சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிதியான விசாரணை அவசியம் appeared first on Oruvan.com.

செம்மணியில் மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம் காண ஒத்துழையுங்கள்
செம்மணி சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகளில் இதுவரை மீட்கப்பட்டுள்ள தடயப்பொருட்கள் பொதுமக்களால் அடையாளப்படுத்தப்படுமாக இருந்தால், அவற்றை அடிப்படையாகக்கொண்டு உண்மைகளைக் கண்டறிவதற்கான விசாரணைகளைக் கோர முடியும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் விடுக்கப்பட்டுள்ள கட்டளையை மேற்கொள் காட்டி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

செம்மணியில் மீட்கப்பட்ட என்புத்தொகுதிகளின் பின்னணியிலுள்ள இனப்படுகொலைச் சம்பவங்களை எண்பிப்பதற்கு, அங்கு நடைபெற்று வரும் அகழ்வுப் பணிகளில் மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் உரியவர்களின் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட வேண்டும்.

ஆகவே, தடயப்பொருட்களை இனங்காட்ட வேண்டியதன் அவசியம் உணர்ந்து, தங்களின் உறவுகளும் செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எதிர்வரும் 2025.08.05 ஆம் திகதி மாலை 1.30 மணி முதல் 5.00 மணிவரை யாழ்ப்பாணம் சித்துப்பாத்தி இந்துமயானத்தருகில் காட்சிப்படுத்தப்படும் தடயப்பொருட்களை அடையாளம் காட்ட வருகைதந்து, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைக்கு வலுச்சேர்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.

The post செம்மணியில் மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம் காண ஒத்துழையுங்கள் appeared first on Oruvan.com.

ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது – சிவஞானம் சிறீதரன்
எளிமையும், நேர்மையும், அறமும் சார்ந்த தூய அரசியற் செல்நெறியில், நெகிழ்வுகளினூடே கட்டிறுக்கத்தைக் கடைப்பிடித்த தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்த சம்பந்தன் ஐயாவின் மறைவென்பது, ஈழத்தமிழினத்தின் இரு தலைமுறை அரசியல் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவும், அவரது அரசியல் தலைமையை ஏற்றிருந்த எங்களுக்கு இனியொருபோதும் நிரப்பவே முடியாத அரசியல் வழிகாட்டியின் இழப்பாகவுமே நிகழ்ந்திருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவுகுறித்த அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரது உரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை பாராளுமன்றத்தின் மேனாள் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான அமரர்.இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் காலமாகி ஒருவருடம் நிரம்பியுள்ள சூழலிலும், அவரது மறைவினால் தமிழ்த்தேசிய அரசியற் தளத்தில் ஏற்பட்ட இடைவெளியை உணர்ந்த ஒருவனாக, இந்தச் சபையில் அவரின் மறைவுக்கான ஆழ்ந்த துக்கத்தையும் மரியாதையுடனான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ் மக்களின் நீண்டகால இன விடுதலைப் பயணத்தில், அறம், அரசியல் நுண்ணறிவு, அனுபவம் என்பவற்றின் முழுமையான ஆளுமை வடிவமாகத் திகழ்ந்த சம்பந்தன் ஐயா அவர்கள், 1933 பெப்ரவரி 5ஆம் திகதி தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் பிறந்து, தமது கல்வியை திருகோணமலையிலுள்ள புனித வளனார் தமிழ் பாடசாலையில் ஆரம்பித்து, யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி, குருநாகல் புனித ஆன்ஸ் கல்லூரி, மொறட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் பயின்று, கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டக் கற்கையைப் பூர்த்திசெய்து, தனது தொழில்முறை வாழ்க்கையை சட்டவாளராக ஆரம்பித்த போதும், 23 வயது நிரம்பிய 1956 ஆம் ஆண்டிலேயே தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக இணைந்து, தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப் பொருளாளர், உப தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியையும் அலங்கரித்ததோடன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும், 2015 முதல் 2018 வரையான காலத்தில் இலங்கை பாராளுமன்றத்தின் 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து, தமிழின விடுதலைப் போரியல் காலகட்டத்திலும், தமிழர்கள் அரசியல் வெறுமைக்குள் தள்ளப்பட்ட 2010 முதல் 2024 வரையான கடந்த 14 ஆண்டுகளிலும் சம்பந்தர் என்கின்ற அரசியல் பேராளுமை ஆற்றிய செயல்களின் கனதி மிகப் பெறுமதியானது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினராக இணைந்து முழுமையாக இருபத்தொரு ஆண்டுகளின் பின்னர், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் திருகோணமலைத் தொகுதியின் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டதன் மூலம், தனது நேரடி அரசியற் பிரதிநிதித்துவத்தை ஐயா ஆரம்பித்திருந்தார்.

இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், தனிநாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983இன் இதே ஜுலை மாதத்தில், மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மூன்று மாதங்கள் தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் புறக்கணித்ததால் பதவியிழந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவராக, சம்பந்தன் அவர்களும் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை 1983 செப்டம்பர் 7 இல் இழந்தார்.

அதன்பிற்பாடு, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர்.அருணாசலம் தங்கத்துரை அவர்களது மறைவின் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தின் அடிப்படையில், 1997 இல் மீளவும் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட சம்பந்தன் அவர்கள், 2001.10.20ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக பதவியேற்ற அதே காலப்பகுதியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்றிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக 2004, 2010, 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அத்தனை பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட அவரை திருகோணமலை மாவட்ட மக்கள் தமது பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தனர்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் தமிழினத்தின் அரசியற்தலைவராக அவரது பிரதிநிதித்துவம் மிகப்பெரியது. இலங்கையின் முன்னாள் அரசுத் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக 1984இல் நடைபெற்ற முதலாவது வட்டமேசை மாநாட்டிலும், 1985இல் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தையிலும் தமிழர் பிரதிநிதியாக கலந்து கொண்டமை, ஈழத்தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வு குறித்து இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருடன் பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டமை, பாரதத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது தமிழர் தரப்பு பிரதிநிதிகளில் ஒருவராக பங்கேற்றமை, இந்திய மற்றும் சர்வதேச இராஜதந்திரிகள் பலருடன் சந்திப்புகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டமை, 13 ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் தொடர்பிலும், மாகாண சபைகளுக்கான அதிகாரங்களின் பலவீனங்கள் குறித்தும் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களை வரைவதில் முக்கிய பங்காற்றியமை உள்ளிட்ட விடயங்கள் அவரது அரசியல் வாழ்வின் மிக முக்கிய செயற்பாடுகள் எனலாம்.

இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ என்ற தீர்வுத் திட்ட வரைவினை வடிவமைப்பதில் அமரர் நீலன் திருச்செல்வம் அவர்களுடன் சம்பந்தன் ஐயாவின் பங்கும் இருந்திருக்கிறது.

இவற்றுக்கு மேலாக 2010 – 2015வரையான காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இலங்கையின் அரச தரப்புகளோடு நடைபெற்ற 14 பேச்சுவார்த்தைகளையும், மைத்திரிபால – ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலமான 2015 – 2019வரையான காலத்தில் நடைபெற்ற அனைத்துப் பேச்சு வார்த்தைகளையும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவோடு திரு.சம்பந்தன் அவர்களே தலைமை தாங்கி நடத்தியிருக்கிறார்.

விடுதலைப் போராட்ட மௌனிப்பின் பின்னர் திக்குத் தெரியாதிருந்த ஈழத்தமிழர்களின் அரசியல் ஆபத்பாந்தவனாக காலத்தால் அடையாளப்படுத்தப்பட்ட சம்பந்தன் அவர்களின் தலைமைத்துவ முதிர்ச்சிதான், இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டுப் பயணத்திற்கு அடித்தளமிட்டிருந்தது.

அரசியல் வெறுமை சூழ்ந்த கடந்த 14 ஆண்டுகளை இராஜதந்திர ரீதியாக சரிவரக் கையாண்ட அரசியற் தலைவராகவும், அவரைப் பின்பற்றும் எங்களின் அரசியற் பயணத்திற்கான வழிவரைபடத்தை உருவாக்கித் தந்த ஒருவராகவும், சம்பந்தன் அவர்கள் சாணக்கியம் மிக்க அரசியற் தலைவராக தனது பயணத்தில் வெற்றிகண்டிருந்தார் என்பதே உண்மை.

சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளால் மதிக்கப்பட்ட, ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்தும் தமிழினப் படுகொலைக்கான நீதி விசாரணை குறித்தும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாக அணுகத்தக்க அரசியற் தலைவராகவும் சம்பந்தன் அவர்களே அடையாளம் பெற்றிருந்தார். அது அவரது அரசியல் அனுபவத்திற்கும், தலைமைத்துவ ஆளுமைக்கும், இனம்சார் அரசியலில் அவர் ஆற்றிய வகிபங்குக்கும் கிடைத்த அடையாளமே.

எளிமையும், நேர்மையும், அறமும் சார்ந்த தூய அரசியற் செல்நெறியில், நெகிழ்வுகளினூடே கட்டிறுக்கத்தைக் கடைப்பிடித்த தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்த சம்பந்தன் ஐயாவின் மறைவென்பது, ஈழத்தமிழினத்தின் இரு தலைமுறை அரசியல் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவும், அவரது அரசியல் தலைமையை ஏற்றிருந்த எங்களுக்கு இனியொருபோதும் நிரப்பவே முடியாத அரசியல் வழிகாட்டியின் இழப்பாகவுமே நிகழ்ந்திருக்கிறது.

இருந்தபோதும் அவரது தடங்களைப் பின்பற்றும் ஒருவனாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இருப்பை உறுதிசெய்யவும், ஈழத்தமிழர்களது அரசியல் உரித்துக்கான தமிழ்த் தேசியப் பயணத்தில் எனக்கிருக்கும் தார்மீகப் பங்கை உறுதிசெய்யவும், இதயசுத்தியோடு பணியாற்றுவேன் என்ற உறுதியோடு ஐயாவின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்து, அவரது குடும்பத்தினருக்கான அனுதாபங்களையும் பகிர்ந்து நிறைவுசெய்கிறேன்” என்றார்.

The post ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது – சிவஞானம் சிறீதரன் appeared first on Oruvan.com.

மாவையைப் படுகொலை செய்ய முயன்றவரே டக்ளஸ்: சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இயங்குதளத்தையும் மக்கள் அபிமானத்தையும் சிதையாமல் காத்த மாவை.சோ.சேனாதிராஜாவைப் படுகொலை செய்ய முயன்ற ஒட்டுக்குழுத் தலைவரே டக்ளஸ் தேவானந்தா.”

– இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் மறைவையொட்டி கொண்டுவரப்பட்ட அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஊர்காவற்றுறை மக்களைச் சந்திப்பதற்காகச் சென்ற மாவை.சோ.சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் கிராம அலுவலர் சிவராசா உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது, தமிழினப் படுகொலைகளைப் புரிந்த இலங்கை அரசின் பங்காளியான டக்ளஸ் தேவானந்தாவும், அவரது ஆயுதக்குழுவும் 2001.11.28 ஆம் திகதி நாரந்தனை – தம்பாட்டிப்பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொண்டதுடன், ஏரம்பு பேரம்பலம், யோகசிங்கம் கமல்ஸ்ரோங் ஆகிய இருவர் அந்த இடத்தில் படுகொலை செய்யப்பட்டதுடன் 28 பேர் படுகாயமடைந்ததையும், மாவை.சோ.சேனாதிராஜா கொட்டன் பொல்லுககளாலும், துப்பாக்கிகளாலும், வாள்களாலும் சுட்டும், வெட்டியும், அடித்தும் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு நினைவிழக்குமளவு காயமுற்றிருந்த கறைபடிந்த சம்பவத்தையும் மீள நினைவூட்டி, அவரது நினைவுகளைப் பதிவு செய்கின்றேன்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரத்தில் பிறந்து, யாழ்.வீமன்காமம் வித்தியாலயத்திலும், யாழ்.நடேஸ்வராக் கல்லூரியிலும் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவனாக இளங்கலைமாணி பட்டப்படிப்பையும் மேற்கொண்ட மாவை.சோ.சேனாதிராஜா, ஈழத்தமிழினத்தின் மீதான அடக்குமுறைகளின் எதிர்க்குரல்களுள் ஒருவராக பதின்மங்களிலேயே தன்னையும் இணைத்துக் கொண்டவர்.

ஈழத்தமிழர்களின் தன்னாட்சிக் கோரிக்கை என்ற அரசியல் கருத்தியலின் அடிப்படையில் உருவாக்கம் பெற்ற இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் தனது 19வது வயதிலேயே இணைந்துகொண்ட மாவை அண்ணரின் அரசியல் பிரவேசத்துக்கான காலவெளி அப்போதுதான் மெல்லக் கருக்கொள்ளத் தொடங்கியது.

இலங்கைத்தீவின் இன முரண்பாடுகளை உச்சம் பெறச் செய்த தனிச்சிங்களச் சட்டம் 1956 இல் அறிமுகம் செய்யப்பட்டு கிடப்பிலிருந்த நிலையில், 1961 ஆம் ஆண்டு அதனை வடக்கு, கிழக்கிலும் நடைமுறைப்படுத்த முனைந்தமைக்கு எதிராக, 1961 ஜனவரி 21 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 7 ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய, 1961 பெப்ரவரி 20 இல் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் மாவை சேனாதிராஜாவின் போராட்ட வாழ்வு ஆரம்பித்தது எனலாம்.

பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினராக, ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராகக் காலப்பெறுமதி மிக்க அரசியல் பணியாற்றிய இவர், 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, மகசின், வெலிக்கடை உள்ளிட்ட எட்டு சிறைச்சாலைகளில் ஏழு ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டார்.

1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், தமிழரசின் மூத்த தலைவரும் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மறைவின் பின்னர், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி, ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலாக நாடாளுமன்றத்தின் உள்ளும், வெளியும் ஒலிக்கத் தொடங்கினார்.

ஈழ விடுதலைப் போராட்ட எழுச்சியின் போதும், அதன் வீழ்ச்சியின் பின்னான தமிழ்த் தேசிய அரசியல் தளத்திலும் மாவை சேனாதிராஜாவின் பணிகளின் கனதி மிகப்பெரியது.

ஒடுக்குமுறைக்கும், இன அழிப்புக்கும் உள்ளாக்கப்பட்ட ஓர் இனத்தின் அரசியல் குரலாக இருந்து, பன்னாட்டு அரசியல் ஒழுங்கிலும், ஜெனிவா அரங்கிலும் தன்னாட்சி உரிமை கோரும் ஈழத்தமிழரின் அரசியல் பயணத்துக்கு அங்கீகாரம் தேடும் வரலாற்றுப் பணியையே அவர் தன் வாழ்வாக்கிக் கொண்டவர்.

மென்வலுப் போக்கில் நம்பிக்கை கொண்ட செயற்பாட்டு அரசியல்வாதியாக இருந்து, இலங்கைத் தமிழரசுக் கட்சி என்ற தமிழ்த் தேசிய அரசியல் பேரியக்கத்தின் ஒரு தசாப்பத கால தலைவராக, கட்சியின் இயங்குதளத்தையும் மக்கள் அபிமானத்தையும் சிதையாமல் காத்த அவர்தான், இன்று தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் இருக்கும் என் போன்ற பலருக்கும் அரசியல் வழிகாட்டி.

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு அரசியல் தளம்பல் மிகுந்திருந்த 2014 செப் டெம்பரில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டது முதல், தன் அந்திமத்தின் போதான இறுதிக் கணம் வரை எமது கட்சியின் தலைவராக, தெளிவார்ந்த அரசியல் செயற்பாடுகளே அவரது தெரிவுகளாயிருந்தன.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடக்கம் இன்றைய நாள் வரையும் தமிழ் மக்கள் அவாவி நிற்கும் தீர்க்கம்மிகு அரசியல் தீர்வை, எமக்குக் கிடைத்த ஜனநாயக சந்தர்ப்பங்களில் எல்லாம் எமது இனம் ஒருமித்து வெளிப்படுத்தியே வந்திருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் பிற்பாடு, பன்னாட்டு சமூகத்துடன் இணைந்து தமிழ் மக்களுக்கு அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளை நிறைவு செய்யக் கூடிய அர்த்தமுள்ள அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தில் உலகத்தின் எதிர்பார்ப்பை அங்கீகரித்து, இலங்கை அரசின் போருக்குப் பிந்திய நிலைப்பாட்டாலும், சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையினாலும் பின்னடைவுகளை எதிர்கொள்ள நேரிட்ட போதும் அமரர். மாவை.சோ.சேனாதிராஜா எல்லா வகை சமாதான முன் முயற்சிகளுக்காகவும் மிகக் கடுமையாக உழைத்திருந்தார்.

போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டிருந்த தமிழரசு என்ற அரசியல் ஆலமரம், கிளிநொச்சி மண்ணிலும் விழுதெறிந்து வளர்ந்ததில் மாவை அண்ணனின் பங்கே விரவியிருக்கிறது. தமிழ்த் தேசியத்தின் இருப்பையும் இனத்துவ உரித்தையும் அவாவி நிற்கும் ஓர் அரசியல் கட்சியின் பயணம் தடம் மாறாததாக இருக்க வேண்டுமெனில், அது முழுக்க முழுக்க மக்கள் மயப்பட்டதாக, மக்களின் மன உணர்வுகளுக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டும் என்பதை தனது அரசியல் அனுபவத்தால் உற்றுணர்ந்த மாவை அண்ணன், ஈழத்தமிழ் சமூகத்தின் இருபெரும் சக்திகளாகிய இளைஞர்களையும், மகளிரையும் சமதளத்தில் இணைத்துப் பயணிக்கும் எல்லா வகைப் பிரயத்தனங்களிலும் ஈடுபட்டிருந்தார். அத்தகைய முதிர்ச்சி மிக்க அவரது செற்பாடுகளின் பயன் விளைவினால்தான், தமிழ்த் தேசியம் அதன் கொள்கை இறுக்கமும், கொதிநிலையும் தாழாது அடுத்த சந்ததியிடத்தே இன்று கையளிக்கப்பட்டிருக்கின்றது.

ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்காகவும், நீடித்த செழுமைமிகு இருப்புக்காகவும், தொலைநோக்கான வழிகாட்டலை வழங்குகின்ற பொறுப்பை ஏற்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், மக்களையும் கொள்கைப் பற்றுறுதியோடு தீர்க்கமான வழிமுறைகளில் முன்னேற்றிச் சென்ற ஒரு பெருந்தலைவராகவே அவரது மறைவின் பின்னும் மாவை அண்ணருக்கான அடையாளம் மக்கள் மனங்களில் நிலைபெற்றிருக்கிறது.

நாங்கள் ஒரு சுதந்திர அரசியல் இயக்கமாக – மக்கள் திரட்சி நிறைந்த தேசமாக எம்மை உருவாக்கிக் கொள்ளாதவரை, பலவீனமான அரசியல் கோரிக்கையாளர்களாகவே இருக்க வேண்டி ஏற்படும் என்பதை உணர்ந்தவராக, தமிழரசுக் கட்சியை மக்கள் பேரியக்கமாக வழிநடத்திச் செல்ல வேண்டும் என்ற நேர்த்திமிகு சிந்தனையில் பின்வாங்காத பெருந்தலைவராக இருந்த, எனது அரசியல் வழிகாட்டியும், எமது கட்சியின் மறைந்த பெருந்தலைவருமாகிய அண்ணன் மாவை.சோ.சேனாதிராஜாவின் தடங்களை இறுகப்பற்றியபடி, சரிந்துபோயிருக்கக் கூடிய தமிழரசின் செயலூக்கத்தினை மீள நிலைநிறுத்துவதற்காக தமிழ்த்தேசிய ஆர்வலர்களோடும், தொண்டர்களோடும் இணைந்து ஒழுகி எமது அரசியல் இயக்கத்தை நிலைநிறுத்துவதன் வழி, ஈழத்தமிழினத்தின் விடுதலை நோக்கிய பயணத்தை இதயசுத்தியோடு முன்கொண்டுசெல்ல உழைப்பதுவே அன்னாருக்கான உயரிய அஞ்சலி என்பதை உணர்ந்த ஒருவனாக, அத்தகையதோர் மன உறுதியோடு அவரது மறைவுக்கான எனது அஞ்சலிகளையும், அனுதாபங்களையும் பகிர்ந்து கொள்கின்றேன்.” – என்றார்.

The post மாவையைப் படுகொலை செய்ய முயன்றவரே டக்ளஸ்: சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு appeared first on Oruvan.com.

கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி – காலப் பெறுமதி மிக்க செயல்
கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப் பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மேற்குறித்த விடயம் அடங்கிய கடிதம் ஒன்றையும் சிறீதரன் கனேடியத் தூதுவரிடம் இன்றையதினம் (21) சமர்ப்பித்துள்ளார்.

குறித்த நினைவுத் தூபி அமைப்புக்கு நன்றி தெரிவித்து கனேடியப் பிரதமர் மார்க் ஹானிக்கும், பிரம்டன் நகர மேஜர் பற்றிக் பிரவுண்க்கும் கடந்த 19ஆம் திகதி மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்களின் பிரதியே இன்றையதினம் கனேடியத் தூதுவரிடம் சிறீதரனால் நேரில் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத்தீவின் அளவிற் சிறிய தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படும் தமிழ்த்தேசிய இனம் மீது, இலங்கை அரசால் வலிந்து மேற்கொள்ளப்பட்ட மனிதப் பேரவலத்தை ‘இனப்படுகொலை’ என்று ஏற்றுக்கொண்ட முதலாவது நாடான கனடாவின் பிரம்டன் நகரில், தமிழினப் படுகொலை நினைவுத்தூபி நிறுவப்பட்டு, வலி சுமந்த மாதமான மே மாதத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளமை, பாதிக்கப்பட்ட எமது மக்களின் மனக்காயங்களுக்கு மருந்தாய் அமைந்துள்ளதை நன்றியோடு பதிவு செய்கிறேன்.

ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட போரின் அத்துமீறல்கள் குறித்தும், போர் முடிவுற்றதன் பின்னரான கடந்த 15 ஆண்டுகளில் எமது மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் மீதும், கூட்டுப் பண்பாடுகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகள் தொடர்பிலும் கரிசனையோடிருக்கும் கனேடிய அரசினால், ஈழத் தமிழினம் சார்ந்து சமகாலத்தில் முன்னகர்த்தப்படும் காத்திரமான செயல்களும், அறிவிப்புகளும் சர்வதேச அரங்கிலும், தமிழ் மக்கள் மனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உணரமுடிகிறது.

தங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு பரிகார நீதியைக் கோரி நிற்கிற எங்கள் இனம், கடந்த 15 ஆண்டுகளாக ஏமாற்றங்களை மட்டுமே எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. இலங்கைத் தீவில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டது.

இனப்படுகொலை தான் என்பதை ஏற்றுக்கொள்ளத் தலைப்படாத உலக அரங்கில் இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே’ என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதோடு, இறுதிப்போரின் போது கொல்லப்பட்டோருக்காகவும், மனித உரிமை மீறல்களைச் சந்தித்தோருக்காகவும் தொடர்ந்து நீதிகேட்கும் கனடா, தனது நாட்டின் முதன்மை நகரான பிரம்டனில் ஈழத்தமிழர்களின் அரசியல் தாகத்தை சொல்லும் தமிழீழக் குறியீட்டுடன் கூடிய நினைவுத்தூபியை நிறுவியமையும், தமிழ் இனப் படுகொலையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கனடாவிலிருந்து தாராளமாக வெளியேறலாம் என்ற பிரம்டன் நகர மேயரின் அறிவிப்பும் ஈழத்தமிழர்களுக்கான நீதியின் முகமாக கனடாவை அடையாளப்படுத்தியிருக்கிறது.

ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் நேரடிக் குற்றவாளிகளான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மற்றும் இராணுவப் பின்புலம் கொண்டவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தமை, தமிழினப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு, நினைவுத்தூபி அமைப்பு, உயிர் அச்சுறுத்தல்களால் புலம்பெயரும் ஈழ அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கல் என ஈழத்தமிழர்கள் சார்ந்து தங்களால் முன்னெடுக்கப்படும் அத்தனை செயல்களும், எமது இனத்தின் அரசியல் விடுதலையில் கனடா நாட்டின் பங்களிப்பு கனதிமிக்கதாக இருக்கும் என்ற பரிபூரண நம்பிக்கையை எமக்கும் எமது மக்களுக்கும் வழங்கியிருக்கிறது.

அந்த நம்பிக்கைக்கான சாட்சியமாக, இனப்படுகொலைக்கான நீதியைப் பெறுவதிலும், எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகளிலும் தங்களது இராஜதந்திர வழிகாட்டுதல்கள் மற்றும் மூலோபாயங்கள் எமக்கு துணைசெய்யும் என்ற நம்பிக்கையின் செய்தியாக, மீளவும் ஈழத்தமிழர்கள் சார்பிலான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளது.

The post கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி – காலப் பெறுமதி மிக்க செயல் appeared first on Oruvan.com.

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் ஆரம்பம்
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமாகியுள்ளது.

களுவாஞ்சிகுடியில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இந்த மத்தியகுழு கூட்டம் நடைபெற்றுவருகின்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றுவருகின்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது உயிரிழந்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பதில் தலைவர் தலைமையில் கூட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் ஆரம்பம் appeared first on Oruvan.com.

மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பெண் படுகொலை செய்யப்பட்டாரா?
கிளிநொச்சி, திருவையாறு பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயாரான 32 வயது பெண் ஒருவர் கொழும்பு மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்தபோது மரணித்துள்ள சம்பவம் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளதுடன், பொலிஸ் நிலையத்தில் எவ்வாறு குறித்த பெண் தற்கொலை செய்துக்கொள்வார் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார்.

இந்த விடயம் படுகொலையா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதால் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

ஆளும் தரப்பில் இதற்கு பதில் அளித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இன்றைய தினத்துக்குள் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.

The post மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பெண் படுகொலை செய்யப்பட்டாரா? appeared first on Oruvan.com.

அநுர அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சிறிதரன் எம்.பி – விமான நிலையத்தில் பழிவாங்கப்பட்டாரா?
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெற்றிருந்த நிகழ்வு ஒன்றில் பங்கு கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக செல்ல சென்றபோது, விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும், விசாரணைகளின் பின்னர் பயணத்திற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இராஜதந்திர கடவுசீட்டினை வைத்திருக்கும் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவரை இவ்வாறு நடத்தியதை ஏற்று கொள்ள முடியாது என சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

சிவஞானம் சிறிதரன் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக இருப்பதுடன் அவர் இலங்கை நாடாளுமன்றில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்குகின்றார்.

இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக அநுர அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து உரையாற்றியும் இருந்தார்.

இந்நிலையிலேயே அவர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் பயனிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே இச்சம்பவம் ஒரு பழிவாங்கும் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எமக்கு தோன்றுகிறது.

எனவே இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அநுர அரசாங்கத்திற்கு உண்டு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post அநுர அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சிறிதரன் எம்.பி – விமான நிலையத்தில் பழிவாங்கப்பட்டாரா? appeared first on Oruvan.com.

தெற்கில் தமிழர்கள் குடியேறிகள் அல்லர் – அவர்கள் பூர்வீகக் குடிகள் என்று நாடாளுமன்றில் சிறீதரன் முழக்கம்
“தேசிய மக்கள் சக்தி முதலில் தமது தரப்பினருக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர். அதேபோல் கொழும்பு, கறுவாத்தோட்டம், கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர். பிற்பட்ட காலத்தில்  நீர்கொழும்பு பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்களாக மாற்றம் பெற்றார்கள். இதுதான் உண்மை.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை  பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கான நலன்புரித் திட்டங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும். தகுதிவாய்ந்த  தரப்பினருக்கு நலன்புரிக் கொடுப்பனவுகள் கிடைக்கப்பதில்லை. கிளிநொச்சி மாவட்டம் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் இவ்வாறான நிலையே காணப்படுகின்றது. இதனால்  நலன்புரிக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவர்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்<wbr />.

நலன்புரிக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதியற்றவர்களாக உள்ள செல்வந்தர்களுக்குக் கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறுகின்றன. ஆகவே, நலன்புரித் திட்டம்  மறுபரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு நிவாரணக் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.

பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்துக்காக மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மலையக மக்களின் வாழ்க்கை  என்றும் பாதிக்கப்பட்டதாகக் காணப்படுகின்றது. உலக வரைபடத்தில் இன்றும் லயன் அறைகளில் வாழும் மக்கள்  சமூகமாகவே எம் மலையகச் சகோதரர்கள் உள்ளார்கள்.

100 -200 மீற்றர் லயன் அறை தொகுதியில் தார் பூசிய தகரக் கூரைகளினால் அமைக்கப்பட்ட அறைகளில்தான் இன்றும் எம் மலையக மக்கள் உரிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிள் வாழ்கின்றார்கள். சர்வதேசத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு இந்த மக்களுக்குத் தரமான சொந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தால் இந்த அரசு வரலாற்றில்  இடம்பிடிக்கும். இந்த மக்களுக்காக எடுக்கும் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் கடந்த  காலங்களில் முறையாக கிடைக்கப் பெறவில்லை. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  8 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு 1 முதல் 3 இலட்சம் ரூபா வரையில் மீள்குடியேற்ற  தொகை வழங்கப்பட்டது. இருப்பினும் ஒருசிலருக்கு இந்த நிதி கிடைக்கப்பெறவில்லை.

கிளிநொச்சி மாவட்டத்தில் 38 ஆயிரம் தமிழர்கள் மீள்குடியமர்த்தப்பட்ட நிலையில் அவர்களில் 11 ஆயிரத்து 790 பேருக்கு மீள்குடியேற்ற தொகை வழங்கப்பட்டது. மிகுதி 26 ஆயிரத்து 209 பேருக்கு இன்றும் அந்தத் தொகை வழங்கப்படவில்லை. மட்டக்களப்பு,  வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய  மாவட்டங்களில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்<wbr />கு இன்றுவரை இந்த   இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.

மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் இந்தத் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு  விண்ணப்பப் படிவங்களை நிரப்பியே அதிகளவில் நிதியைச் செலவு செய்துள்ளார்கள். ஆகவே, இந்த அரசு இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக இந்த நிதியைப்  பெற்றுக்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளமை கவனத்துக்குரியது. இந்த அரசுக்குப் பெரும்பான்மைப்  பலம் உள்ளது. அனைத்து இன மக்களும் இந்த அரசில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே, அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசு விசேட கவனம் செலுத்த வேண்டும். தீர்வுத் திட்டத்தில் அரசு சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள். ஏனெனில்  சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள்.

அரசு சிறந்த முறையில் செயற்பட்டாலும் ஒருசில துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்கச் சென்ற பெண் மிகக் கொடூரமான முறையில் பொலிஸாரினால்  தாக்கப்பட்டுள்ளார். இந்த நாட்டில் என்ன நடக்கின்றது? இந்த விடயம் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் தமக்குக் காணிகள் வேண்டும் என்று பாணந்துறை, கொழும்பு பகுதிகளில் வாழும் சிங்களவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்று  பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இலன்டனில் உள்ள ஒருவர் தன்னைத் தேசிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளர் என்று குறிப்பிட்டுக் கொண்டு புத்தளம், நீர்கொழும்பு, சிலாபம், கொழும்பு, வத்தளை, வெள்ளவத்தை மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் அந்தப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி முதலில் இந்த நபருக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர். அதேபோல் கொழும்பு, கறுவாத்தோட்டம், கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக்  குடிகளாகவே வாழ்ந்தனர். பிற்பட்ட காலத்தில்  நீர்கொழும்புப் பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்களாக மாற்றம் பெற்றார்கள். இதுதான் உண்மை.

1970, 1983 மற்றும் 1985 ஆகிய காலப்பகுதிகளில் அநுராதபுரம் பகுதியில் வாழ்ந்த 22 ஆயிரம் தமிழர்கள் ஒரே இரவில் சொந்த  இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அதேபோல்  1983 ஆம் ஆண்டு  மலையகத்தில் இருந்து 2 ஆயிரம் எம் சகோதரர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் இன்று சொந்த இடங்கள் ஏதும் இல்லாமல் பல்வேறு இடங்களில் வாழ்கின்றார்கள். அவர்களையும் மீள்குடியேற்றம் செய்யுங்கள்.” – என்றார்.

The post தெற்கில் தமிழர்கள் குடியேறிகள் அல்லர் – அவர்கள் பூர்வீகக் குடிகள் என்று நாடாளுமன்றில் சிறீதரன் முழக்கம்  appeared first on Oruvan.com.

சர்வதேச போர்க்குற்ற விசாரணை கோருகின்ற தீர்மானமே வேண்டும் – அமெரிக்க தூதுவரிடம் சிறீதரன் வலியுறுத்து
இலங்கைத் தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்குச் சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரும் வகையில் இலங்கைக்கு எதிரான ஜெனிவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா அழுத்தம் வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரிடம் வலியுறுத்தினார்.

சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றபோதே, மேற்குறித்த விடயத்தைச் சிறீதரன் எம்.பி. வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பின்போது, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல், புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் தமிழர்களுக்கான சமஷ்டித் தீர்வுக்கான சாத்தியமின்மைகள் எழும்போது அது சார்ந்த அரசியல் நகர்வுகளின் தேவைப்பாடு மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அமெரிக்கத் தூதுவருடனான இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post சர்வதேச போர்க்குற்ற விசாரணை கோருகின்ற தீர்மானமே வேண்டும் – அமெரிக்க தூதுவரிடம் சிறீதரன் வலியுறுத்து appeared first on Oruvan.com.