சிறீதரன் Archives - Oruvan.com

வெடுக்குநாறிமலை தொடர்பில் சிலர் வண்டுமுருகன் போல் பேசுகின்றனர் – சிறீதரன்
வெடுக்குநாறிமலை தொடர்பில் சிலர் வண்டுமுருகன் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வெடுக்குநாறிமலையை இந்த அரசாங்கம் சுவீகரிக்கப் போகின்றாரார்களா இல்லையா என்பது தொடர்பில் வெளிப்படையாக கூறவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

“வவுனியா – நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் பௌத்தர்களுக்கு உரியது என புத்தசாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்திருந்தார். எனினும் இதனை அமைச்சர் சந்திரசேகர் மறுத்திருந்தார். இது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?” என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“சிலர் வண்டுமுருகன் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்கள் போல் பதில் பேச முடியாது. ஒரு விடயம் தொடர்பிலே பேசும்போது தெளிவான கருத்துக்களைக் கூற வேண்டும். வெடுக்குநாறிமலையை சுவீகரிக்கப் போவதாக இந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் புத்தசாசன அமைச்சர் தமிழ் மக்களை நோக்கி இனவாத கருத்தை முன்வைத்திருக்கிறார்.

அதனை அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மற்றொரு அமைச்சரான சந்திரசேகர் மறுக்கின்றார். வெடுக்குநாறிமலையை இந்த அரசாங்கம் சுவீகரிக்கப் போகின்றதா இல்லையா என்பது தொடர்பில் வெளிப்படையாக கூறவேண்டும். குருந்தூர் மலையிலும் நீதிமன்ற கட்டளையை மீறி சட்டவிரோதமாக விகாரை கட்டப்பட்டது.

எனவே அமைச்சர்கள் கூறுபவை எல்லாம் இந்த நாட்டில் நடைபெறுகின்றனவா என்பதை அவர்கள் வெளிப்படையாகக் கூற வேண்டும். மக்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். அரசியல் செய்வதற்காக ஏமாற்றுக் கருத்துக்களை கூறக்கூடாது. அவர்களுக்கு மக்கள் விரைவிலே உரிய பதிலை வழங்குவார்கள்” – என்றார்.

The post வெடுக்குநாறிமலை தொடர்பில் சிலர் வண்டுமுருகன் போல் பேசுகின்றனர் – சிறீதரன் appeared first on Oruvan.com.

சிறீதரனுக்கு எதிராக நாடாளுமன்றில் முறைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பான கடிதத்தை சாமர சம்பத் சபாநாயகரிடம் முன்வைத்துள்ளார்.

அது தொடர்பாக அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் விசாரணைகளை தடுக்கும் முயற்சியில் தனிப்பட்ட லாபம் கருதி சிறீதரன் செயற்பட்டுள்ளதாக சாமர தெரிவித்துள்ளார்.

சிறீதரனுக்கு எதிராக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நியமிப்பது அரசியலமைப்புச் சபையின் பொறுப்பாகும்.

இந்த நிலையில், அது குறித்த நியமனங்களின் போது, தனக்கு எதிராக உள்ள முறைப்பாட்டை அரசியலமைப்பு சபைக்கு தெரிவிக்காமல் அதற்கான வாக்கை சிறீதரன் பயன்படுத்தியுள்ளதாக சாமர சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, நாடாமன்ற உறுப்பினர் சிறீதரன் தனிப்பட்ட நலன் கருதி செயற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, சிறீதரன் அரசியலமைப்புச் சபைக்குள் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதன் மூலம் நாடாளுமன்ற சிறப்புரிமை மற்றும் நடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி எதிர்க்கட்சி சார்பாக சாமர ஒரு முறையான முறைப்பாட்டை பதிவு செய்வதாக கூறியுள்ளார்.

The post சிறீதரனுக்கு எதிராக நாடாளுமன்றில் முறைப்பாடு appeared first on Oruvan.com.

யாழ். மந்திரிமனையை பார்வையிட்ட சிறீதரன்
யாழ்ப்பாண இராச்சியத்தின் அடையாளமாக உள்ள மந்திரிமனையை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் பார்வையிட்டார்.

தமிழ் இராச்சிய வரலாற்றில் மிகப் பிந்திய அடையாளமாக உள்ள மந்திரிமனை அழிந்து போனால் தமிழர் வரலாறும் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக வருகை தந்த அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

ஜமுனா ஏரி மந்திரிமனை சங்கிலியன் முகப்பு என்பன யாழ்ப்பாண மண்ணின் தமிழர் வரலாற்றின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் எனவும் அவற்றை தொடர்ந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினருடன் யாழ். கிளிநொச்சி மாவட்டங்களின் தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பந்துல ஜீவ, புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன், நல்லூர் யாழ்ப்பாண வலயத்தின் உத்தியோகத்தர் மணிமாறன், கனியவள அளவையியலாளர் அமர்நாத்,

யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post யாழ். மந்திரிமனையை பார்வையிட்ட சிறீதரன் appeared first on Oruvan.com.

சிறீதரன் மீதான கெடுபிடி: சி.வி.கே. கடும் கண்டனம் – அநுர அரசுக்கும் பகிரங்க எச்சரிக்கை
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை அவமானப்படுத்தும் வகையில் அநுர அரசு செயற்படுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“இந்தியாவில் இடம்பெறும் மாநாடு ஒன்றில் பங்குகொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இந்தியா புறப்படச் சென்றபோது அங்கே விமான நிலைய அதிகாரிகளால் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் பயணத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இராஜதந்திரக் கடவுசீட்டை வைத்திருக்கும் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு நடத்தபட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது.

சிவஞானம் சிறீதரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருப்பதுடன் அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய  கட்சியாக உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்குகின்றார்.

இந்த நாட்டில் இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக அநுர அரசைக் கடுமையாக விமர்சித்து உரையாற்றியும் இருந்தார்.

இந்நிலையிலேயே இவர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு  விசாரணைகளின் பின்னர் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே, இந்தச் சம்பவம் ஒரு பழிவாங்கும் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எமக்குத் தோன்றுகின்றது.

இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அநுர அரசுக்கு உள்ளது.

ஆகவே, எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை அவமானப்படுத்தும் வகையில் அநுர அரசு செயற்படுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். தமிழர் விவகாரங்களில் கடந்த கால அரசுகளைக் போன்று இந்த அரசும் செயற்படுவதை அனுமதிக்க முடியாது.” – என்றார்.

The post சிறீதரன் மீதான கெடுபிடி: சி.வி.கே. கடும் கண்டனம் – அநுர அரசுக்கும் பகிரங்க எச்சரிக்கை   appeared first on Oruvan.com.

ஜீவனை வென்ற சிறீதரன்!
அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு எதிர்க்கட்சித் தரப்பின் பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்காக பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜீவன் தொண்டமானை 11 இற்கு 10 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருக்கின்றார்.

எதிர்க்கட்சித் தரப்பில் காஸ் சிலிண்ட.ர் சார்பில் தெரிவான தேசியப் பட்டியல் எம்.பி. ஒருவரும், ரோஹித அபேகுணவர்தன எம்.பியும் இந்தத் தேர்வில் பங்குபற்றாத நிலையில் சிறீதரன் வெற்றி பெற்றிருக்கின்றார்.

இதேசமயம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற விவகாரக் குழுவுக்குப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்புக்கும் தம்மைத் தெரிவு செய்ய சிறீதரன் விருப்பம் தெரிவித்த போதிலும், அந்தப் பொறுப்பைச் சாணக்கியனுக்கு வழங்குவதென தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்திருப்பதாக அறியவந்தது.

The post ஜீவனை வென்ற சிறீதரன்! appeared first on Oruvan.com.