சாகர காரியவசம் Archives - Oruvan.com

போரை முடித்ததால்தான் ஜனாதிபதியால் யாழில் சுதந்திரமாக நடக்க முடிகிறது : மொட்டு கட்சி
“யாழில் தமிழ் மக்களை தூண்டிவிடும் விதத்திலேயே ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ சிங்கள மக்கள் விகாரைக்கு வருவது வழிபடுவதற்கு அல்ல – வைராக்கியத்தை விதைக்கவே” என்ற கருத்துமூலம் சிங்கள மக்கள் யாழ்ப்பாணம் வந்தால் கவனித்துக் கொள்ளுங்கள் என்ற அர்த்தத்தையே ஜனாதிபதி வழங்குவதற்கு முற்பட்டுள்ளார்.

சிங்கள மக்களை தூண்டுவதற்கு அல்ல, தமிழ் மக்களை தூண்டுவதற்காகவே தவறான கருத்தை விதைத்துள்ளார்.

ஓமந்தைக்கு அப்பால் செல்வதற்குரிய சுதந்திரம் மக்களுக்கு முன்பு இருக்கவில்லை. ஆனால் 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்ததால்தான் இன்று ஜனாதிபதியால் சுதந்திரமாக நடமாட முடிகின்றது.” – எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

The post போரை முடித்ததால்தான் ஜனாதிபதியால் யாழில் சுதந்திரமாக நடக்க முடிகிறது : மொட்டு கட்சி appeared first on Oruvan.com.

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை நாமல் எதிர்க்கவில்லை: மொட்டு கட்சி அறிவிப்பு
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை தமது கட்சி எதிர்க்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று அறிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டதை நாமல் ராஜபக்சவோ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியோ எதிர்க்கவில்லை. சிறுதேயிலை தோட்டங்களில் தொழில் செய்பவர்கள், காமன்ட்களில் வேலை செய்பவர்கள் உட்பட இந்நாட்டில் குறைந்த வருமானம் பெறுபவர்கள் உள்ளனர்.

இவர்களுக்கும் சம்பள உயர்வு அவசியம் என்றே வலியுறுத்துகின்றோம்.

வாக்குக்காக ஒரு குழுவை தெரிவு செய்யாமல் குறைந்த வருமானம் பெறும் அனைவருக்கும் சம்பள உயர்வு அவசியம் என்பதே எமது நிலைப்பாடாகும். அது தொடர்பான யோசனையை முன்வைக்கப்பட்டுள்ளது.” எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

The post தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை நாமல் எதிர்க்கவில்லை: மொட்டு கட்சி அறிவிப்பு appeared first on Oruvan.com.

பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன – சாகர காரியவசம்
‘மக்கள் விடுதலை முன்னணி கட்சி காரியாலயத்தில் நிகழ்ச்சி நிரலை பொலிஸ்மா அதிபர் செயற்படுத்துகின்றார். முழு பாதுகாப்பு கட்டமைப்பும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,”பூகோள காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொண்டது. நாட்டுக்கு சேவையாற்றிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் திருடர்கள், மோசடியாளர்கள் என்று சித்தரிக்கப்பட்டார்கள்.

தேசிய மக்கள் சக்தி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகள் வழங்கியது. பொதுத்தேர்தலில் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலத்தை வழங்கிய மக்கள் தமது தவறான அரசியல் தீர்மானத்தை உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் விளங்கிக்கொண்டார்கள்.

பொதுத் தேர்தலில் 61 சதவீத வாக்குகளைப் பெற்ற அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 23 இலட்ச வாக்குகளை இழந்து 43 சதவீத வாக்குகளை பெற்றது. போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டதை நாட்டு மக்கள் விளங்கிக்கொண்டார்கள்.

நாட்டுமக்களினதும், அரசியல்வாதிகளினதும் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணி கட்சி காரியாலயத்தில் நிகழ்ச்சி நிரலை பொலிஸ்மா அதிபர் செயற்படுத்துகின்றார். முழு பாதுகாப்பு கட்டமைப்பும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதை பொலிஸ்மா அதிபர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதுவும் நிலையற்றது. ஆட்சி மாற்றம் ஏற்படலாம். சட்டவிரோதமான முறையில் செயற்பட்டால் அதற்கு சட்டத்தின் ஊடாக பதிலளிக்க நேரிடும்” என்றார்.

The post பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன – சாகர காரியவசம் appeared first on Oruvan.com.

புலிகள் கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொலை செய்யவில்லை
“போர்க் காலத்தில் புலிகள் கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொலை செய்யவில்லை. போர்க் காலத்தை விடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, “வெலிகம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது படு பயங்கரமாகும். தமக்கு பாதுகாப்பு வேண்டும் என்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தவிசாளர் லசந்த விக்கிரமசேகர கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அது வழங்கப்படாத சூழ்நிலையிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நாட்டில் 30 வருட காலம் போர் நிலவியது. இந்தக் காலப் பகுதியில் புலிகள்கூட இவ்வாறு அச்சமின்றி அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொல்லவில்லை. ஆனால், ஜே.வி.பி. ஆட்சியின் கீழ் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாகும்.

நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டு செல்வதற்காக பாதாளக் குழு என்ற போர்வையில் தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மக்கள் நாய், பூனைகள்போல சுட்டுக்கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது. பாதாளக் குழுக்களை ஒடுக்குகின்றோம் என்ற போர்வையில் அக்குழுக்கள் பலப்படுத்தப்படுகின்றனவா என்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்றார்.

The post புலிகள் கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொலை செய்யவில்லை appeared first on Oruvan.com.

நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை – மகிந்த தரப்பு குற்றச்சாட்டு
ஜனாதிபதி அநுர குமார் திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொது செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதள உலகக் குழுவின் இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

அவர்களை கைது செய்ய சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த பிடியாணை உத்தரவு தற்போதைய அரசாங்கத்தால் பிறப்பிக்கப்படவில்லை.

எங்களிடம் உள்ள தகவல்களின் படி இந்த சிவப்பு பிடியாணை உத்தரவு கடந்த அரசாங்கத்தில் பிறப்பிக்கப்பட்டது.

இலங்கை வரலாற்றில் மிக மோசமான சம்பவமாக, சிவப்பு லேபிள்களுடன் கூடிய 323 கொள்கலன்கள் எந்த ஆய்வும் இல்லாமல் விடுவிக்கப்பட்டதாகும்.

கோவில் தொற்று காலப்பகுதியில் சுங்கத்திணைக்களத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடியின் போது கூட ஆய்வு செய்யப்பட்டாமல் எந்தவொரு கொள்கலன்ளும் விடுவிக்கப்படவில்லை.

இப்போது சுங்கத்தில் ஒரு போலியான நெருக்கடி உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நெருக்கடியுடன் சிவப்பு லேபிள்கள் கொண்ட 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

323 உடன் கூடுதலாக, சிவப்பு லேபிள்களுடன் இதேபோன்ற ஏராளமான கொள்கலன்கள் அந்தக் காலகட்டத்தில் விடுவிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

இந்த கொள்கலன்கள் இலங்கைக்குள் கொண்டு வர முடியாத ஆயுதங்கள் கொண்ட கொள்கலன்கள் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

மேலும், இந்த கொள்கலன்களில் போதைப்பொருள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் இருந்ததாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளனர். இது தொடர்பாக நாங்கள் முறைப்பாடு செய்துள்ளோம்.

ஆனால் இன்றுவரை, இந்த முறைப்பாடுகளுக்கு எந்த பதிலும் இல்லை. இந்த விடயத்தில் பொலிஸ்மா அதிபர் நியாயமான முறையில் விசாரணை செய்து பதில் வழங்குவார் என நம்புகின்றோம்.

இதேவேளை, சமீபத்திய நாட்களில், ஒரு நாளைக்கு நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடுகள் ஒவ்வொன்றையும் பாதாள உலகத்திற்குள் போதைப்பொருள் கும்பல்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளாக அரசாங்கம் விளக்குவதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை – மகிந்த தரப்பு குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

ரணில், சஜித்துடன் கூட்டணி இல்லை
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒருபோதும் கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

” ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒருமித்த கொள்கைகளைக்கொண்ட கட்சிகளாகும். இவற்றில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முற்றிலும் மாறுபட்ட கட்சியாகும்.

மேற்படி கட்சிகளினதும், எமது கட்சியினதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.

எனவே, எந்த சூழ்நிலையிலும் எமது கட்சி, மேற்படி இரு கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காது. எமது கட்சியின் பயணம் மக்கள் விரும்பும் வகையில் தனிவழியில் தொடரும் .

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் கொள்கைகளை ஏற்கும் தரப்பினர் மாத்திரமே எம்முடன் இணைய முடியும்.

கடந்த காலங்களில் எம்முடன் கூட்டணி வைத்திருந்தவர்கள் கூட்டணி உறவை தொடர்வதில் எவ்வித தடையும் இல்லை.” – என சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.

The post ரணில், சஜித்துடன் கூட்டணி இல்லை appeared first on Oruvan.com.

போர் காலத்தில் புலிகளே மக்களை கொன்றனர்: படையினர் அவ்வாறு செய்யவில்லை
” போர்காலத்தில் புலிகளே பெருமளவிலான தமிழ் மக்களை கொலை செய்தனர். இராணுவத்தினர் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவில்லை.” என்று மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது செம்மணி விவகாரம் மற்றும் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

‘போர் காலத்தில் நீலம் திருச்செல்வம், அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதிகளவான தமிழர்களை புலிகளே கொலை செய்தனர். எமது இராணுவம் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

கொழும்பில் கொலைசெய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களுள் பெரும்பாலானவர்களை புலிகளே கொன்றனர். துரையப்பாவை கொன்றதும் புலிகள்தான்.

யாழில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கையை அனுமதிக்காத – சமாதானத்தை கோரிய மக்களை கொன்றதும் அவர்கள்தான்.

அரசியல் இலாபத்துக்காக அதை (செம்மணியை) பயன்படுத்தக்கூடும்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாடாளுமன்றம் வந்தார். இராணுவத்தக்கு எதிராக கூட்டமைப்பினர் மற்றும் அர்ச்சுனா குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நாமல் அதனை மறுத்தார். ஆளுங்கட்சியினர் வாய் திறக்கவில்லை. இது தவறாகும்.” – என்றும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

The post போர் காலத்தில் புலிகளே மக்களை கொன்றனர்: படையினர் அவ்வாறு செய்யவில்லை appeared first on Oruvan.com.

சிஐடி பணிப்பாளராக ஷானி: மொட்டு கட்சி போர்க்கொடி
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்ற ஷானி அபேசேகர, குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை பாரதூரமான விடயமாகும்.

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

‘ஜே.வி.பி. அலுவலகத்தில் ஊடக சந்திப்பை நடத்தி, அக்கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்ற ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது பாரதூரமான விடயமாகும். இதற்கு முன்னர் எந்தவொரு அரசாங்கமும் இப்படி செயற்பட்டதில்லை.

தமக்கு தேவையான விதத்தில் சட்டத்தை செயற்படுத்தவும், அரசியல் எதிராளிகளை பழிவாங்கும் – ஒடுக்கும் நோக்கிலுமே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியாக இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.” – என சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.

The post சிஐடி பணிப்பாளராக ஷானி: மொட்டு கட்சி போர்க்கொடி appeared first on Oruvan.com.

பிரதமர் பதவியில் மாற்றம் வருமா ? அரசு உடன் தெளிவுபடுத்த வேண்டும்
பிரதமர் பதவியில் மாற்றம் வருமா அல்லது இல்லையா என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் கூறியவை வருமாறு,

” பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவையில் மாற்றம் வரவுள்ளது என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிவருகின்றன. இப்படியான தகவல்கள் இலங்கைபோன்ற நாடுகளுக்கு பாதக விளைவுகளையே ஏற்படுத்தும்.

ஏனெனில் அரசியல் ஸ்தீரதமற்ற தன்மை நிலவும் நாடொன்றுக்கு முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள், உள்நாட்டு முதலீட்டாளர்களும் புதிய முதலீடுகளை செய்ய முன்வரமாட்டார்கள்.

எனவே, பிரதமர் பதவியில் மாற்றம் வருமா, வராதா என்பதையும், அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா அல்லது இல்லையா என்பதையும் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இது விடயத்தில் தாமதம் நிலவக்கூடாது. அறிவிப்பை வெளியிட்டால்தான் அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்படும்.” – என்றார்.

The post பிரதமர் பதவியில் மாற்றம் வருமா ? அரசு உடன் தெளிவுபடுத்த வேண்டும் appeared first on Oruvan.com.

கொழும்பில் என்.பி.பி. ஆட்சியமைக்க இடமளியோம் – சாகர காரியவசம்
“ கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கவில்லை. எனவே, அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கப்படமாட்டாது. ஏனெனில் அது மக்கள் ஆணைக்கு முரணான செயலாக அமையும்.

எதிரணிகள் வசமே பெரும்பான்மை பலம் உள்ளது. ஆகவே, அரசாங்கத்துக்கு எதிரான சக்திக்கு ஆதரவு வழங்குவதில் எமக்கு பிரச்சினை இருக்காது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளின் கொள்கைகள் வெவ்வேறானவை. எனினும், நாட்டின் நலன்கருதி பொது விடயங்களின்போது ஒத்துழைப்புடன் செயற்படக்கூடும்.” – எனவும் மொட்டு கட்சி செயலாளர் கூறினார்.

The post கொழும்பில் என்.பி.பி. ஆட்சியமைக்க இடமளியோம் – சாகர காரியவசம் appeared first on Oruvan.com.