சர்வதேச நாணய நிதியம் Archives - Oruvan.com

பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
அரசியல் பதற்றங்களும் உலகளாவிய பொருளாதார அலைச்சல்களும் தொடர்ந்தாலும், பிரித்தானிய பவுண்ட் நாணயத்தின் மதிப்பு தற்போதைக்கு நிலைத்த தன்மையைக் காட்டி வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அண்மைய பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையில், வெளிப்புற அழுத்தங்கள் அதிகரித்திருந்தாலும், பிரித்தானிய நாணய சந்தையில் பவுண்ட் மதிப்பு குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இல்லாமல் நிலைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கான முக்கிய காரணங்களாக, பிரித்தானிய நிதி அமைப்பின் வலிமை, மத்திய வங்கியின் கட்டுப்படுத்தப்பட்ட பணவியல் கொள்கை, மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர்ந்த நம்பிக்கை ஆகியவை குறிப்பிடப்படப்பட்டுள்ளன.

எனினும், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், உலக எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்படும் தளம்பல்கள் ஆகியவை எதிர்காலத்தில் பவுண்ட் மதிப்பை பாதிக்கக்கூடிய அபாய காரணிகளாக இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு என்பன தொடர்ந்து கவலைக்குரியதாக உள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

The post பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு appeared first on Oruvan.com.

இலங்கையின் கோரிக்கைக்கு ஐ.எம்.எப் முன்னுரிமை
‘திட்வா’ புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர நிதியிடல் வசதியின் கீழ் இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.

இந்த அவசர நிதியிடல் வசதியின் கீழான உதவிகள், இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதியிடல் வசதியின் கீழ் வழங்கப்படும் கடன் வசதிக்கு மேலதிகமாக வழங்கப்படும் நிதியிடல் வசதியாகும் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், விரிவாக்கப்பட்ட நிதியிடல் வசதியின் கீழ் நாட்டிற்கு கிடைக்கவுள்ள ஐந்தாவது மீளாய்வை நிறைவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக, 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘திட்வா’ புயலால் ஏற்பட்ட அழிவிலிருந்து நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக, இலங்கையினால் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் உடனடி நிதி உதவிக்கான அவசர கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், அது தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் எவன் பப்பஜோர்ஜியோ கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post இலங்கையின் கோரிக்கைக்கு ஐ.எம்.எப் முன்னுரிமை appeared first on Oruvan.com.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை 3.1% ஆக மாற்றியது சர்வதேச நாணய நிதியம்
இலங்கையின் பொருளாதாரம் 2026ஆம் ஆண்டளவில் 3.1% என்ற அதன் இயல்பான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் துணை பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லிங் அறிக்கையொன்றில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு இலங்கை சந்தித்த கடுமையான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து மிக வேகமாக இலங்கை மீண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய நீடிக்கப்பட்ட நிதி வசதி மற்றும் நாட்டின் சில மறுசீரமைப்பு காரணமாக, கடந்த ஆண்டு பொருளாதாரம் 5% வரையிலும், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 4.8% வரையிலும் வேகமாக வளர்ச்சி அடைந்தது. இது ஒரு நல்ல மீட்சியாக பார்க்கப்படுகிறது.

எனினும், தற்போது அந்த வேகமான மீட்சி முடிவடைந்து, நாட்டின் பொருளாதாரம் இனி ஆண்டுக்குச் சராசரியாக 3.1% என்ற அளவில் சாதாரண வேகத்தில் வளர்ச்சியடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் செய்து மேற்கொண்ட ஆய்வில் அரசாங்கம் செய்துள்ள பொருளாதார மறுசீரமைப்பு திருப்திகரமாக இருப்பதாகக் கூறி, அடுத்த கட்ட நிதியுதவிக்கான ஒப்புதலை அளித்துள்ளனர்.

குறிப்பாக, மின்சாரத்தை விற்பனை செய்யும் நிறுவனங்கள் நஷ்டம் அடையாமல் இருக்க, மின்சாரத்தின் விலையைச் செலவுக்கு ஏற்றவாறு நிர்ணயிப்பது போன்ற மறுசீரமைபபு சரியாகப் பின்பற்றப்படுகின்றன என்றும் சர்வதேச நாணய நிதியம் பாராட்டியது.

எதுஎவ்வாறாயினும், பொருளாதாரத்தை முழுமையாகச் சரிசெய்ய, இலங்கை அரசாங்கம் இந்தப் புதிய திட்டங்களை விடாமல் தொடர்ந்து செயற்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், 2028ஆம் ஆண்டுக்கான வருவாய் குறித்த திட்டங்களை இப்போதே விவாதிக்க சர்வதேச நாணய நிதியம் விரும்பவில்லை என்றும் மறுசீரமைப்புகள் தொடர்ந்து வெற்றிகரமாக நடந்தால், நீண்ட கால கவலைகள் தாமாகவே சரியாகும் என நம்புவதாக தோமஸ் ஹெல்ப்லிங் குறிப்பிட்டுள்ளார்.

The post இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை 3.1% ஆக மாற்றியது சர்வதேச நாணய நிதியம் appeared first on Oruvan.com.

சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பான ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பர் 2025 இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கோசெக் தெரிவித்தார்.

நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று அவர் இதனைக் கூறினார்.

இலங்கையின் பொருளாதார நிலைமை நேர்மறையாக இருந்தாலும், உலகளாவிய சந்தை மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் நாட்டின் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஜூலி கோசெக் வலியுறுத்தினார்.

ஐந்தாவது மதிப்பாய்வின் போது இந்தக் காரணிகள் மதிப்பீடு செய்யப்படவுள்ளதாகவும், இது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய சந்தை, பொருளாதார மற்றும் கொள்கை நிச்சயமற்ற தன்மைகளின் தாக்கம் உட்பட நாட்டின் பொருளாதாரம் குறித்த முழுமையான மதிப்பீடு இந்த மதிப்பாய்வின் போது மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2025 ஜூலை 1 ஆம் திகதி, IMF இன் நிர்வாகக் குழு நான்காவது மதிப்பாய்வை நிறைவு செய்து, இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியது. இதன்மூலம், விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி உதவி 1.74 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்தது.

இதற்கிடையில், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் பணவீக்கம் குறைவு, மேம்படுத்தப்பட்ட வருவாய் வசூல் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு ஆகியவை ஊக்கமளிக்கும் முடிவுகளை வழங்கியுள்ளதாக ஜூலி கோசெக் கூறினார்.

2024 ஆம் ஆண்டில் நாடு நெருக்கடிக்குப் பிந்தைய 5% பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு IMF கவனம் செலுத்துகிறது. 2022 இல் 8.2% ஆக இருந்த இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வீதம், 2024 இல் 13.5% ஆக உயர்ந்துள்ளது. இது வலுவான நிதி செயல்திறனைப் பிரதிபலிப்பதுடன், கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்ததன் மூலம் IMF திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் வலுவாக உள்ளதாக ஜூலி கோசெக் மேலும் தெரிவித்தார்.

The post சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில் appeared first on Oruvan.com.

நான்காம் கட்ட கடன் – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கையின் 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது.

மூன்றாவது மதிப்பாய்வின் மூலம் 336 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி வசதி நான்காவது தவணையாக இலங்கைக்கு கிடைத்துள்ளது.

இதன் மூலம், சர்வதேச நாணய நிதியம் இன்றுவரை இலங்கைக்கு வழங்கிய மொத்த நிதி உதவி 1.34 பில்லியனை எட்டியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் இலங்கையின் செயல்திறன் வலுப்பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

சமூக செலவினங்களுக்கான குறியீட்டு இலக்கைத் தவிர, 2024 டிசம்பர் இறுதிக்கான ஏனைய அனைத்து அளவு இலக்குகளும் எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

2025 ஜனவரி இறுதிக்குள், பெரும்பாலான கட்டமைப்பு அளவுகோல்கள் சிறிது தாமதத்துடன் பூர்த்தி செய்யப்பட்டன அல்லது செயல்படுத்தப்பட்டதாகவும் அண்மையில் முடிவடைந்த கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், கடன் நிலைத்தன்மையை நோக்கிய பயணத்தின் வெற்றிகரமான விளைவாகும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

The post நான்காம் கட்ட கடன் – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி appeared first on Oruvan.com.