சரத் வீரசேகர Archives - Oruvan.com

அரசுக்கு அழுத்தம் வழங்கவே நுகேகொடையில் போராட்டம்
எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியானது ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள எதிரணியின் பேரணி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நவம்பர் 21 ஆம் திகதி பேரணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும். இது ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

ஏனெனில் அடுத்த தேர்தலின்போது நாட்டு மக்கள் நிச்சயம் இந்த ஆட்சியைக் கவிழ்ப்பார்கள்.

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதே பேரணியின் பிரதான நோக்கம்.

போதை ஒழிப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது. எனினும், போதை ஒழிப்பு என்ற போர்வையில் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதியை மறந்து செயற்படுவது ஏற்புடையது அல்ல.” – என்றார்.

The post அரசுக்கு அழுத்தம் வழங்கவே நுகேகொடையில் போராட்டம் appeared first on Oruvan.com.

வடக்கை நாம் இழந்துவிட்டோமா? சரத் வீரசேகர கேள்வி
“பிரிவினைவாதக் கட்சியான தமிழரசுக் கட்சிக்கு அடிபணிந்து வடக்கில் காணி மீள் நிர்ணயம் நிறுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டிலும் செய்யப்படும் ஒரு விடயத்தில் வடக்கில் ஏன் செய்ய முடியாது? வடக்கை நாம் இழந்துவிட்டோமா?”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வினா தொடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“காணி அமைச்சால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு வலியுறுத்தியதாகவும், இதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமாக அரசாங்கம் நிறுத்தியுள்ளதாகவும், இதனை வரவேற்பதாகவும் தமிழரசுக் கட்சி கூறியுள்ளது.

வெள்ளையர்கள் ஆட்சிகாலத்தில் அழைக்கப்பட்ட அநீதியை சீர்செய்யும் நோக்கிலேயே குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வடக்கில் மட்டும் அல்ல தெற்கிலுள்ள காணிகள் தொடர்பிலும் நிர்ணயம் இடம்பெற்றுள்ளது. ஏனெனில் தமக்குரிய காணி என்பதற்குரிய சான்று இருந்தால் உரித்து வழங்கப்படும். இல்லையேல் அரசாங்க காணியென அடையாளப்படுத்தப்படும்.

முழு நாட்டிலும் செய்யப்படும் ஒரு விடயத்தை வடக்கில் செய்யக்கூடாதென கூறுவதன் மூலம் “ இது எமது இடம், மத்திய அரசுக்கு அதில் உரித்து இல்லை” என்பதை அவர்கள் வலியுறுத்துகின்றனர். இது விடயத்தில் அரசாங்கமும் மௌனம் காத்தால், நாடு சமஷ்டியாக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கமும் ஏற்கின்றது என்றாகிவிடும்.”- என்றார்.

The post வடக்கை நாம் இழந்துவிட்டோமா? சரத் வீரசேகர கேள்வி appeared first on Oruvan.com.

வடக்கில் விகாரையொன்றில் புண்ணிய நிகழ்வை செய்ய முடியதா?
தமிழ் இனவாத வன்முறை கும்பலின் போராட்டத்தையடுத்து திஸ்ஸ விகாரையிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கு உத்தரவிட்டது யார்? வடக்கு பிரிவினைவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதா?

– இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” காங்கேசன்துறையில் வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புண்ணிய நிகழ்வொன்று  நடைபெற்றது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விகாரை திறக்கும் நிகழ்வே அதுவாகும். 29 தேரர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இராணுவத்தினர்  கடந்த 22ஆம் திகதி முதலே இந்த புண்ணிய காரியத்தில் ஈடுபட்டனர். பாரம்பரிய நாட்டியக் கலைஞர்கள் வருகை தந்திருந்தனர்.

இப்படி ஏற்பாடுகள் எல்லாம் இடம்பெற்றிருக்கையில் , நிகழ்வை நிறுத்துமாறு வலியுறுத்தி காலை 7 மணியளவில் தமிழ் இனவாத வன்முறை கும்பலொன்று போராட்டத்தில் ஈடுபட்டது.

இதனையடுத்து இராணுவத்தினரை விகாரையில் இருந்து செல்லுமாறு மேல் மட்டத்திலிருந்து பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இராணுவத்தினர் வெளியேறினர். பெரஹெர மாத்திரமே இடம்பெற்றது. தேரர்களுக்கு பகுலுணவும் வழங்கமுடியாமல்போனது.

இந்த உத்தரவை வழங்கியது யார்? ஜனாதிபதியா, பிரதி பாதுகாப்பு அமைச்சரா, பாதுகாப்பு செயலாளரா, இராணுவத் தளபதியா? அல்லது பிரபாகரனின் அவதாரமா என கேட்கின்றோம்.

பௌத்த நாட்டில் வடக்கில் விகாரையொன்றில் புண்ணிய நிகழ்வொன்றை நடத்துவதற்கு வன்முறை கும்பல் இடமளிக்க மறுக்கின்றதெனில் நாட்டில் தேசிய பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது? இந்த குழுவுக்கு பயந்து நிகழ்வை நிறுத்தியது கோழைத்தனமாகும்.” – என்றார்.

The post வடக்கில் விகாரையொன்றில் புண்ணிய நிகழ்வை செய்ய முடியதா? appeared first on Oruvan.com.