சரத் பொன்சேகா Archives - Oruvan.com

அரசின் ஊழல் ஒழிப்பு செயல்பாட்டுக்கு பொன்சேகா பாராட்டு
ஊழல் வலையமைப்புக்கு முழுமையாக முடிவு கட்டுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பதை நாம் ஏற்றாக வேண்டும்.

அதேபோல ஊழல் வலையமைப்பை முற்றாக இல்லாதொழிப்பதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால் அதற்குரிய முயற்சி எடுக்கப்படுவதை மதிக்கின்றோம்: வரவேற்கின்றோம்.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

அதேவேளை கடந்தகால அரசாங்கங்கள் பயணித்ததைவிட தற்போதைய அரசாங்கத்தின் பயணம் சிறப்பாக உள்ளது.

ரணில் விக்கிரமசிங்கதான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார். அவரை சிறையில் அடைத்தபோது கவலை அடைந்தேன். எனினும், இதன்மூலம் அரசாங்கம் சிறந்த முன்னுதாரணத்தை வழங்கியது. நாட்டில் அனைவருக்கும் ஒரே கரண்டியில்தான் பகிரப்படுகின்றது என்பதே இதன்மூலம் வழங்கப்பட்ட செய்தியாகும். இதனை நாம் மதிக்க வேண்டும்.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

The post அரசின் ஊழல் ஒழிப்பு செயல்பாட்டுக்கு பொன்சேகா பாராட்டு appeared first on Oruvan.com.

பிரபாகரனுக்கு என்றும் என் மரியாதை உண்டு
“போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது எனக்குத் தனிமரியாதை உண்டு.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பிரபாகரன் எமது எதிரணியாக இருந்தாலும், தப்பியோடாமல் இறுதி வரை சமரிட்டார். அதற்குரிய கௌரவத்தை அவருக்கு நான் வழங்கி வருகின்றேன்.

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை பிரபாகரன் போரிட்டார்.

எனவே, இந்த விடயத்துக்காக முன்னாள் இராணுவத் தளபதி என்ற அடிப்படையில் பிரபாகரன் மீது எனக்கு எப்போதும் தனியான மரியாதை உள்ளது.” – என்றார்.

The post பிரபாகரனுக்கு என்றும் என் மரியாதை உண்டு appeared first on Oruvan.com.

விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த மகிந்த தரப்பு – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்
விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னிடம் கூறியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

தொடந்தும்பேசிய அவர்,

2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆகும் போது சீனாவில் இருந்து துப்பாக்கி ரவைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. அப்போது கோட்டபாய ராஜபக்ச நேரில் என்னை அழைத்துப் பேசினார்.

“பொன்சேகா நாம் கடனுக்கு அல்லவா சீனாவிடம் இருந்து பெற்றுக்கொண்டு வருகின்றோம். சீனாவில் இருந்து அனுப்பப்படாவிட்டால் எனக்கு எதனையும் செய்ய முடியாது என்றார்.

நான் அப்படியே பசில் ராஜபக்சவின் அலுவலகத்திற்குச் சென்றேன். இதன்போது பசில் ராஜபக்ச தொலைபேசியூடாக பி.பி.ஜயசுந்தரவிடம் கூறினார். 100 மில்லியன் டொலர்களை வழங்குமாறு கூறினார்.

அந்த சந்தரப்பத்தில் பசிலுடன் ஒரு மணி நேரம் கதைத்துக்கொண்டிருந்தேன். 2005ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த கதையை அவர் என்னிடம் கூறினார்.

“நாம் இவ்வாறானதொரு வேலையை செய்தோம். தமிழ் மக்கள் வாக்களிப்பதை நிறுத்துவதாக விடுதலைப் புலிகள் வாக்குறுதி அளித்தனர்.

கடற்புலிகளின் பயன்பாட்டிற்காக முன்பதிவு செய்த டோரா படகுகள் மலோசியாவில் உள்ளன. அதற்கு பணம் வழங்க வேண்டும். அதற்காக இரண்டு மில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றது என்றனர்.

அதில் எந்நதப் பிரச்சினையும் இல்லையென நாம் அதனை ஏற்றுக்கொண்டோம். அயல் நாடுகளில் இருந்து தேர்தல் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக இரண்டு மில்லியன் டொலர் எமக்கு கிடைத்தது.

கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு கிளிநொச்சியில் பிரபாகரனிடம் வழங்கியதாக” பசில் ராஜபக்ச என்னிடம் கூறினார். அவ்வாறு பணம் வழங்கும் போது மலையக அரசியல்வாதிகள் இருந்ததாகவும் பசில் கூறினார்.

அந்த டோரா படகுகளை பயன்படுத்தியே விடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் கடற்படையின் 10 டோரா படகுகளை மூழ்கடித்தனர். அதில் 150 கடற்படையினர் உயிரிழந்தனர்.

மகிந்த ராஜபக்ச தன் மகனை கடற்படையில் இணைத்தார். ஆனால் மகன் கடலுக்கு செல்லவில்லை, கொழும்பில் இருந்துகொண்டு ரக்பி விளையாடினார். கார் பந்தயத்தில் கார் ஓட்டினார்.

2009ஆம் ஆண்டு நாங்கள் யுத்த களத்தில் இருந்தோம். ஜனவரி 27ஆம் திகதி கோட்டபாய என்னிடம் அன்பாக கதைத்தார்.

“சரத் நீங்கள் இரண்டரை வரும் நன்றாக யுத்தம் செய்தீர்கள் அல்லவா. நீங்கள் களைப்படைந்திருப்பீர்கள் அல்லவா. அதனால் ஜகத் ஜயசூரிய என்ற ஒருவர் உள்ளார் அல்லவா. அவரிடம் பொறுப்பை வழங்கிவிட்டு நீங்கள் சற்று ஓய்வு எடுங்கள்” என கூறினார்.

நான் அவரிடம் பொறுப்பை வழங்க மாட்டேன் என கூறினேன். மறுநாள் ஜனவரி 28ஆம் திகதி மகிந்த என்னை தொடர்புகொண்டார். ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி முதலாம் திகதி தற்காலிக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

நான் இல்லையென்றேன். ஆனாலும் எங்களுக்கு அந்த உத்தரவை மீற முடியாத நிலை காணப்பட்டது. ஆனால் எதிரிகள் ஜனவரி 31ஆம் திகதி நந்திக்கடல் ஊடக வந்து பாரிய தாக்குதலை நடத்தினர்.

மார்ச் நடுப்பகுதியில் முடியவேண்டிய யுத்தம் மே மாதம் நடுப்பகுதி வரை கொண்டுச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கோடிக்கணக்கான ஆயுதங்களை நாம் இழந்தோம்.

இதன் போது ஏற்பட்ட அனைத்து இழப்புகளுக்கும் மகிந்த ராஜபக்ச பொறுப்பு கூற வேண்டும். நான் இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.

மேற்கூறிய சம்பவங்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

யுத்தம் நிறைவடையவிருந்த சந்தரப்பத்தில் யுத்தத்தை நிறுத்த கோட்டபாய தரப்பினர் முயற்சி செய்தனர். முக்கிய தளபதிகளை யுத்த களத்தில் இருந்து மீள அழைத்தனர்.

போர் முடிய வேண்டும் என இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஆசைப்பட்ட நேரத்தில் யாராவது இப்படியொரு வேலைகளில் ஈடுபடுவார்களா?

“2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் ஆருகில் வருகின்றது அல்லவா, அந்த தேர்தலில் வெற்றிபெற பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டும்.

பிரபாகரனை உயிருடன் காப்பாற்றி தமிழ் மக்கள் கோபமடையாதவாறு யுத்தத்தினை நிறுத்தி தமிழ் மக்களை கவர்வதற்கே மகிந்த ராஜபக்ச இவ்வாறு செய்தார் என பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் காணொளி ஒன்று உள்ளது. அதனை விரைவில் வெளியிடுவேன் எனவும் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

The post விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த மகிந்த தரப்பு – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் appeared first on Oruvan.com.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட வேண்டும்
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் சவேந்திர சில்வா போன்றோரை கைது செய்து விசாரணை மேற்கொள்வதனூடாக இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிக்கொணர வேண்டும் என அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தம்பிராசா, தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பில் இன்றைய அரசு கரிசனை செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியிள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

இலங்கை பொலிஸாருடன் பேசத்தெரியாத அர்ச்சுனா எம்.பி தனது தவறுகளை உணர்ந்து தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் தமிழ் மக்களின் உறவுகளான மலையக தமிழரை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளையும் அர்ச்சுனா எம்.பி நிறுத்த வேண்டும்.

நீதி கேட்டு போராடும் தமிழினம் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கைக்கு கொண்டாட்டமாகவே இருக்கும் என்பதையும் அர்ச்சுனா விளங்கிக் கொள்ளவேண்டும்.

அந்தவகையில் முட்டாள் தனமாக அமைச்சர் சந்திரசேகரனை தாக்குவதை அர்ச்சுனா எம்.பி கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

அத்துடன் கடந்தகால விடயங்களை கூறி அர்ச்சுனா எம்.பி மன்னார் விடயத்தில் சாக்குப் போக்கு காட்டி தப்பித்துக் கொள்ள முடியாது. இது எமது மக்களின் இருப்புக்கான போராட்டம்.

இதை முன்னெடுக்கும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மன்னார் சென்று போராடத்தை வலுப்படுத்த வேண்டும்.

மேலும் இறுதி யுத்த காலப் பகுதியில் வெள்ளை கொடியுடன் சரணடைந்த போராளிகள், மக்கள் தொடர்பிலும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இந்த அரசு வெளிக்கொணர வேண்டும்.

மேலும் தமிழக கரூர் விடயத்தில் தமிழக அரசின் மீதே தவறுகள் இருக்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாகியதால்தான் இந்த அனர்த்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விஜய்யின் கட்சி உறுப்பினர்கள் தமது கூட்டத்துக்கு வரும் மக்களின் வரவை அறிந்து கோரிய இடத்தை கொடுக்க தமிழக பொலிஸார் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது எனவே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

மேலும் போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தை அநுர அரசு இருந்தாலும் அதை வலுவாக தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.

கடந்த கால அரசுகள் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் நட்பைப் பேணி வந்த நிலையில் தற்போதைய அரசு அதற்கு மாறாக நடவடிக்கை முன்னெடுக்கின்றது.

இதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்குவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

The post முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட வேண்டும் appeared first on Oruvan.com.

பிரபாகரனை தப்பிக்க வைக்க மகிந்த முயற்சி செய்தார் – சரத் பொன்சேகா
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவசர கால போர் நிறுத்தத்தை அறிவித்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை தப்பிக்க அனுமதித்ததாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பேரவையின் கருத்தைக் கருத்தில் கொள்ளாமல் மகிந்த ராஜபக்ச இந்த போர்நிறுத்தத்தை அறிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், போர்நிறுத்தத்தை அறிவித்தமைக்காக காரணத்தை மகிந்த விளக்க வேண்டும் எனவும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

மினுவங்கொடையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

ராஜபக்சக்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக அடிக்கடி கூறினாலும், போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பதை தெளிவாகக் கூறுமாறு மகிந்த ராஜபக்சவுக்கு சவால் விடுகின்றேன்.

மகிந்த ராஜபக்ச ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி முதலாம் திகதிகளில் போர் நிறுத்தத்தை அறிவித்தார். பாதுகாப்பு பேரவையில் நாங்கள் வேண்டாம் என்று சொன்னோம்.

எனினும், எங்களின் பேச்சை மீறி 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்தார். அந்த போர் நிறுத்தத்தின் போது, ​​விடுதலைப் புலிகள் எங்களை ஒழுங்கமைத்து தாக்கினர்.

எமது இராணுவம் நான்கு முதல் ஐந்து கிலோமீட்டர் பின்வாங்கியது. சுமார் ஐநூறு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அந்த போர் நிறுத்தம் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் தப்பி ஓடக் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் சோல்ஹெய்ம் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இருப்பினும், தப்பி ஓடுவதற்குப் பதிலாக, பிரபாகரன் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாதுகாப்புப் படைகளைத் தாக்கினார்.

ராஜபக்சக்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக அடிக்கடி கூறினாலும், போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பதை மகிந்த தெளிவாகக் கூறு வேண்டும் சவால் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post பிரபாகரனை தப்பிக்க வைக்க மகிந்த முயற்சி செய்தார் – சரத் பொன்சேகா appeared first on Oruvan.com.

வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை
“சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கில்லை. எனவே, வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணி விடுவிப்பின்போது பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது, வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பு சம்பந்தமாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு

‘வடக்கு, கிழக்கில் புலிகளின் மனோநிலையில் வாழும் சிலரும் இருக்கவே செய்கின்றனர்.

புலிகளின் நிகழ்ச்சி நிரல் குறித்து கனவு காணும் தரப்பினரும் உள்ளனர். அனைத்து மக்களும் அல்லர். ஒரு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையானோர் அவ்வாறு இருக்கலாம்.

அதேபோல புலிகளை ஆசிர்வதித்த அரசியல்வாதிகள் உள்ளனர். புலிகளை மீள் எழுச்சி பெற வைப்பதற்கு முற்படும் டயஸ்போரா குழுவொன்றும் உள்ளது.

இப்படியான அச்சுறுத்தல் இருப்பதால், போர் மூண்ட பிறகு முகாம்கள் அமைப்பது பற்றி சிந்திக்காமல், தூர நோக்கு சிந்தனை அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் முகாம்கள் இருக்க வேண்டும். அதற்காக போர் காலத்தில் இருந்ததுபோல் அல்ல. பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையில் நகர்வுகள் இடம்பெறவேண்டும்.

யாழில் உள்ள பாதுகாப்பை பலவீனப்படுத்தினால் அது யாழ். மக்களுக்குதான் சரி இல்லை. ஆவா என்ற பாதாள குழுவொன்று இருந்தது. கேரள கஞ்சாக்கள் வருகின்றன. வீதித்தடைகளை நீக்கினால் தெற்கிலுள்ள பாதாளக்குழுக்கள் வடக்குக்கு சென்று ஒளியக்கூடும். எனவே, பாதுகாப்பு நெறிமுறைகள் அவசியம்.

சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கு இல்லை என்பதை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.” -என்றார் பொன்சேகா.

The post வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை appeared first on Oruvan.com.

புலிகளின் ஆயுதங்கள் நாட்டுக்கு வரவில்லை – சரத் பொன்சேகா
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் அண்மையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் முட்டாளத்தனமான கருத்துக்கள் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் இருந்து அண்மையில் 323 கொள்கலன்கள் எந்தப் பரிசோதனைகளும் இல்லாமல் விடுவிக்கப்பட்டன. அதில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருந்தன’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அண்மையில் தெரிவித்திருந்தார். அர்ச்சுனாவின் கருத்துக்களையே, தவறா னவை என்றும். முட்டாள்த்தனமானவை என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

பொன்சேகா மேலும் தெரிவித்ததாவது:- பைத்தியக்காரர் ஒருவர் வெளியிட்ட கருத்தாகவே அதனை நான் பார்க்கின்றேன் கொள்கலன்களில் என்ன இருந்தது என்பது எமக்குத் தெரியாது. அவை சோதனையின்றி விடுவிக்கப்பட்டதையும் அனுமதிக்க முடியாது. அவற்றில் புலிகளின் ஆயுதங்கள் இருந்தன என்று கனவு காணவும் முடியாது.

எதுவும் அறியாமல் தன்னைவீரனாக காண்பித்துக் கொள்வதற்காக அவ்வப்போது அர்ச்சுனா அறிவிப்புகளை வெளியிடுகின்றார். இப்படியான மனநிலையில் இருக்கும் ஒருவரின் கருத்து தொடர்பில் அவ்வளவு முக்கியத்துவம் வழங்கவேண்டியதில்லை- என்றார்.

The post புலிகளின் ஆயுதங்கள் நாட்டுக்கு வரவில்லை – சரத் பொன்சேகா appeared first on Oruvan.com.

அரசாங்கத்தை விமர்ச்சிக்க வேண்டாம் – சரத் பொன்சேகா கோரிக்கை
உலகில் உள்ள 147 நாடுகளில், உலகின் மகிழ்ச்சியான மக்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை 133வது இடத்திற்குச் சரிந்துள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகிறார்.

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்த எந்தத் தலைவருக்கும் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வை இல்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

நாட்டிற்கு உரம், எண்ணெய், மருந்துகள் மற்றும் நிலக்கரி இறக்குமதி செய்வதை தீர்மானிக்கும் ஊழல் வலையமைப்பினால் நாடு கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் சரத் பொன்சேகா கூறுகிறார்.

இந்த ஊழல் வலையமைப்பின் நிறுவனர்கள் ராஜபக்ச குடும்பத்தினரும் அவர்களின் பணக்கார நண்பர்களும் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

எனவே, இந்த நேரத்தில் சில விமர்சனங்கள் இருந்தாலும், தற்போதைய அரசாங்கத்தை விமர்சிக்கவே கூடாது என்றும், அதன் பலன்கள் பழைய ஊழல் வலையமைப்பிற்கு மட்டுமே செல்லும் என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டுகிறார்.

மீண்டும் தலைதூக்க முயற்சிக்கும் பழைய ஊழல் நிறைந்த அரசியல் குழுக்களை முதலில் துடைத்தெறிவதும், அரசாங்கத்திடம் பலவீனங்கள் இருந்தால் அதை விமர்சிப்பதும்தான் முதலில் செய்ய வேண்டிய விடயம் என்று அவர் மேலும் கூறுகிறார்.

களுத்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post அரசாங்கத்தை விமர்ச்சிக்க வேண்டாம் – சரத் பொன்சேகா கோரிக்கை appeared first on Oruvan.com.

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் ஏற்கத் தயார்
தற்போதைய அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஒரு இணைய வாயிலாக தனியார் சேனலுடனான உரையாடலில், தனக்கு அத்தகைய பொறுப்பு வழங்கப்பட்டால், அதை ஏற்கத் தயங்க மாட்டேன் என்று அவர் கூறினார்.

இருப்பினும், ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான திசைகாட்டி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு அவர் பங்களிக்கவில்லை என்பதால், அத்தகைய பொறுப்பை கேட்க தனக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

The post பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் ஏற்கத் தயார் appeared first on Oruvan.com.

சரத் பொன்சேகா மீதான குண்டுத் தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு
கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரி “துர்கா”வுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் 230 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றது.

இதன்போது, முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் வழக்கு மேலதிக விசாரணைக்காக நாளை (29) வரை ஒத்திவைக்கப்பட்டது.

பிரதிவாதிகளான மோரிஸ் எனப்படும் செல்வராசா கிருபாகரன், சண்முகலிங்கம் சூரிய குமார் மற்றும் தம்பையா பிரகாஷ் எனப்படும் தனுஷ் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு, கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீது தற்கொலை குண்டுதாரி தாக்குதல் நடத்தி அவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தியது மற்றும் அவரது மெய்க்காப்பாளர்கள் மூவரைக் கொல்ல உதவியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

The post சரத் பொன்சேகா மீதான குண்டுத் தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு appeared first on Oruvan.com.