சயீத் கதிப்சாதே Archives - Oruvan.com

ஈரானிய கப்பல்களை அமெரிக்கா தாக்குவது ஏன் என்று இந்தியா கேட்க வேண்டும்
இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பல்களை அமெரிக்கா தாக்குவது ஏன் என்று இந்தியா கேட்க வேண்டுமென்று ஈரான் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற ரெய்சினா மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஈரான் அச்சுறுத்தலாக விளங்குகிறது என்ற ஒரு பொய்யின் அடிப்படையில் அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கின. ‘கிரேட்டர் இஸ்ரேல்’ என்ற போலி பிம்பத்தை கட்டமைக்கவே இந்த போர் நடைபெறுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தைதான். ஹார்முஸ் கால்வாயை ஈரான் முடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வரும் கப்பல்களை நாங்கள் மறிக்கவில்லை. ஈரான் தனது பொறுப்புகளை நன்கு அறியும். அந்த வகையில் ஹார்முஸ் கால்வாயின் நிலைத்தன்மையை செம்மைப்படுத்தும் நங்கூரமாக ஈரான் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி இருக்கும் சூழலில் இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பல்களை தாக்குவது ஏன் என்று அமெரிக்காவிடம் இந்தியா கேட்க வேண்டும். ஏனெனில், அமெரிக்காதான் அச்சுறுத்தலாக விளங்குகிறது” என்று சயீத் கதிப்சாதே கூறியுள்ளார்.

The post ஈரானிய கப்பல்களை அமெரிக்கா தாக்குவது ஏன் என்று இந்தியா கேட்க வேண்டும் appeared first on Oruvan.com.