சம்பள உயர்வு Archives - Oruvan.com

1750 ரூபா சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து தோட்டப்புறங்களில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பால் சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நோர்வூட் எல்படை தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1550 ரூபா அடிப்படை சம்பளமாகவும், வரவுக்கான கொடுப்பனவாக 200 ரூபாவும் வழங்கப்படுவதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, நோர்வூட் எல்படை தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி பூஜைகள் செய்ததுடன், பால் சோறு சமைத்து நன்றியை தெரிவித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த தொழிலாளர்கள், கடந்த காலங்களில் சம்பள உயர்வுக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், ஆனால் இந்த முறை எந்தவித போராட்டமும் இன்றி, மக்களை வீதிக்கு இறக்காமல், ஜனாதிபதி உறுதியளித்தபடி சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதற்காக ஜனாதிபதிக்கும் பெருந்தோட்டத் துறை அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் சிலர் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் தொழிற்சங்கங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்த போதிலும், அது போதியளவில் அமையவில்லை என்றும், வரவுக்கான கொடுப்பனவு முறையாக வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

தற்போதைய ஜனாதிபதி எந்தவித போராட்டமும் இன்றி கூடுதல் சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது எனவும், இதற்காக ஜனாதிபதிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்ததாகவும் கூறினர்.

The post 1750 ரூபா சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து தோட்டப்புறங்களில் மகிழ்ச்சி கொண்டாட்டம் appeared first on Oruvan.com.

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அடுத்த ஆண்டு சம்பள உயர்வு
அடுத்த ஆண்டு ஆசிரியர்கள் உட்பட அரசுத் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்கும் என்று அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு குறித்த முழு விபரங்களும் இணைக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாங்கள் அரசியல் ஆதயத்திற்காக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முயற்சிக்கவில்லை.

மாறாக நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிந்திருப்பதால், அதை அதிகரிக்க நாங்கள் பாடுபடுகிறோம்.

தற்போதுள்ள சம்பளம் போதுமானதாக இல்லை,” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். “கடந்த அரசாங்கத்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக சேதமடைந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஒரு பொறுப்பான நிர்வாகமாக, மக்களை கடினப்படுத்தி 2026 வரை காத்திருக்கச் சொல்ல முடியாது. நாங்கள் அத்தகைய அணுகுமுறையை எடுக்கவில்லை,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அடுத்த ஆண்டுக்குள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அடுத்த ஆண்டு சம்பள உயர்வு appeared first on Oruvan.com.