சம்பத் தூயகொந்தா Archives - Oruvan.com

இலங்கை, அமெரிக்காவுக்கிடையில் பாதுகாப்பு உறவை வலுப்படுத்த ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்குரிய நிகழ்வு இலங்கை பாதுகாப்பு அமைச்சில் நேற்று (14) நடைபெற்றது.

அமெரிக்கா அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் மொன்டானா தேசிய காவல்படையின் பிரதி ஜெனரல் பிரிகேடியர் ஜெனரல் Trenton Gibson ஆகியோர் கையெழுத்திட்டனர். இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா கையெழுத்திட்டார்.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மாநில கூட்டுத் திட்டத்தின் கீழ் மொன்டானா தேசிய காவல்படை, அமெரிக்க கடலோர காவல்படை மாவட்டம் 13 மற்றும் இலங்கை ஆயுதப்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஒருங்கிணைக்கின்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் ஜயசேகர ,

“ குறித்த ஒப்பந்தம் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு கூட்டாண்மையில் ஒரு முக்கியமான மைல்கல்லை குறிக்கிறது.” என்று குறிப்பிட்டார்.

இந்த முயற்சி நமது பரஸ்பர அர்ப்பணிப்பு, பகிரப்பட்ட மூலோபாய நலன்களை பிரதிபலிக்கிறது.

மேலும் இந்த கூட்டாண்மை திறன் மேம்பாடு, கூட்டு பயிற்சி, மனிதாபிமான உதவி, அனர்த்த மீட்பு, சைபர் பாதுகாப்பு, அமைதி காப்பு நடவடிக்கைகள் மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டிற்கான புதிய வழிகளைத் திறக்கிறது.” எனவும் அவர் கூறினார்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்க தேசிய காவல்படையுடன் கூட்டு சேர்ந்த 115 நாடுகளின் உலகளாவிய வலையமைப்பில் இலங்கையம் இணைந்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் முதல் கூட்டு நடவடிக்கைகள் 2026 ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது அனர்த்த மீட்பு, கடல்சார் கள விழிப்புணர்வு மற்றும் தொழில்முறை இராணுவக் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதிகள், விமானப்படை பிரதம அதிகாரி, இலங்கை கடலோர பாதுகாப்பு படை, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் இரசாயன ஆயுதங்களுக்கெதிரான தேசிய ஆணையம் ஆகியவற்றின் பணிப்பாளர்கள் நாயகம், அமெரிக்க தூதரக அதிகாரிகள், மொன்டானா தேசிய காவல் படை பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post இலங்கை, அமெரிக்காவுக்கிடையில் பாதுகாப்பு உறவை வலுப்படுத்த ஒப்பந்தம் கைச்சாத்து appeared first on Oruvan.com.

பாதுகாப்பு செயலாளர் – மாலைத்தீவு பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார்
கொழும்பில் உள்ள மாலைத்தீவு உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ஹசன் அமீர், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) நேற்று (02) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

பாதுகாப்பு செயலாளர் கேர்ணல் அமீரை அன்புடன் வரவேற்று அவருடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மேலும் இதன்போது இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் ஆழமான ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரியும் கலந்து கொண்டார்.

பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதில் இரு நாடுகளின் நீண்டகால நட்பு மற்றும் பகிரப்பட்ட ஆர்வத்தை இச்சந்திப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது

The post பாதுகாப்பு செயலாளர் – மாலைத்தீவு பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் appeared first on Oruvan.com.

இருதரப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்​கை – இந்திய குழுவினர் சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங், இலங்கையின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இச் சந்திப்பு நேற்று (05) இருவேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறாக நடைபெற்றது.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த முக்கியத்துவத்துவம் வாய்ந்த சந்திப்புக்களில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் கலந்து கொண்டார். இதன்போது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவ பரிமாற்றங்கள் மற்றும் கூட்டு பயிற்சி வாய்ப்புகள், திறன் மேம்பாடு, அனர்த்த முகாமைத்துவ ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமான உதவி உள்ளிட்ட பரஸ்பர முக்கியத்துவமிக்க விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பின்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நீண்டகால நட்பை நினைவு கூர்ந்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், கடந்த காலங்களில், இந்தியா அளித்த ஆதரவிற்காக இந்திய மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றிகளை தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய தூதுக்குழுவினர் இலங்கைப் பாதுகாப்புச் செயலாளரைப் பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, இலங்கையுடன் நெருக்கமான மற்றும் நட்புறவைப் பேணுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்தியப் பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார். மேலும் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு பங்களிக்கும் வகையில் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். இரு தரப்பினரும் வழக்கமான உயர் மட்ட ஈடுபாடுகளைத் தொடரவும், குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயவும் இணக்கம் தெரிவித்தனர்.

The post இருதரப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்​கை – இந்திய குழுவினர் சந்திப்பு appeared first on Oruvan.com.

பாதுகாப்பு செயலாளரை சந்தித்த ரஷ்ய தூதுவர்
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.தாகரியன் (Levan S. Dzhagaryan) நேற்று (மார்ச் 25) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.

ரஷ்ய தூதுவரை அன்புடன் வரவேற்ற பாதுகாப்பு செயலாளர் அவருடன் இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துறையாடலில் ஈடுபட்டதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

The post பாதுகாப்பு செயலாளரை சந்தித்த ரஷ்ய தூதுவர் appeared first on Oruvan.com.