சமந்த வித்யாரத்ன Archives - Oruvan.com

எதிரணியால் அரசை அசைக்க முடியாது
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. தற்போதைய எதிர்க்கட்சியால் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நெருக்கடி நிலையில் இருந்த நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். இதற்கிடையில் பேரிடரும் ஏற்பட்டது. எனினும், சவாலை நாம் எதிர்கொண்டோம்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

நாட்டில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது நாட்டுக்கு கிடைக்கப்பெற்ற உதவிகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆனால் எமது ஆட்சியில் அவ்வாறு நடக்கவில்லை. மக்களுக்குரிய உதவித் திட்டங்கள் வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டன.

அதேவேளை, நாட்டுக்கு தேவையானதொரு எதிர்க்கட்சி எமது நாட்டில் இல்லை என்பதும் பேரிடராகும்.

நாட்டுக்காக இணைந்து செயல்படவேண்டிய தருணங்களில்கூட பொறுப்பை மறந்து, எதிரணிகள் அரசியல் நடத்தும் நிலை காணப்படுகின்றது.

பாதாள குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது சில எதிரணி அரசியல் பிரமுகர்களுக்கு நடுக்கம் ஏற்படுகின்றது. ஊழல், மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போதும் அவர்களுக்கு ஆட்டம் ஏற்படுகின்றது.

மிகவும் மோசமான முறையிலேயே பிரதான எதிரணி செயல்பட்டுவருகின்றது. இந்த எதிர்க்கட்சியால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. ஏனெனில் அரசாங்கம் சிறப்பாக செயல்படுகின்றது.”- என்றார்.

The post எதிரணியால் அரசை அசைக்க முடியாது appeared first on Oruvan.com.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை தடுக்க எதிரணி சதி
“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வை தடுப்பதற்குரிய சுழ்ச்சியில் எதிரணி உறுப்பினர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். எது எப்படி இருந்தாலும் ஜனவரி முதல் நிச்சயம் சம்பள உயர்வு வழங்கப்படும். தோட்டத் தொழிலாளர்கள் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.” என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கி போராடாமலேயே இம்முறை சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 350 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என்றே உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும், 400 ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

கம்பனி தரப்பில் இருந்து 200 ரூபாவும், அரசாங்கத்தால் 200 ரூபாவும் வழங்கப்படும். இதற்கமைய நாளொன்றுக்கு தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரத்து 750 ரூபாவை பெறமுடியும்.

இந்நிலையில் எதிரணியிலுள்ள எம்.பிக்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். அரசாங்க பணத்தை எப்படி கம்பனிகளுக்கு வழங்க முடியும் என கேள்வி எழுப்புகின்றனர். இது தவறு. அவ்வாறு கொடுப்பனவு வழங்க முடியாது எனக் கூறிவருகின்றனர். இப்படியொரு கருத்தை உருவாக்கி, தமது சகாக்களை நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கு முற்படக்கூடும்.

தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வு விவகாரத்தில் காலை வாருவதற்குரிய முயற்சி இடம்பெறுகின்றது. சமூகத்தில் வதந்தியை பரப்புவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.

எது எப்படி இருந்தாலும் தோட்டத் தொழிலாளர்கள் அச்சப்பட வேண்டியதில்லை. ஜனவரி மாதம் முதல் நிச்சயம் சம்பள அதிகரிப்பு கிடைக்கப்பெறும்.” என அமைச்சர் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டார்.

The post தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை தடுக்க எதிரணி சதி appeared first on Oruvan.com.

கைவிடப்பட்ட தேயிலை தோட்டங்களில் மீள் உற்பத்தி: கம்பனிகளுக்கு அறிவுறுத்தல்
தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய நடைமுறையின் கீழ் உரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் அறிமுகப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் தலைமையில் நடைபெற்றபோதே இந்தக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

இதில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பும்கலந்துகொண்டார்.

பெருந்தோட்டத் துறையில் உள்ளவர்களுக்கு காலதாமதம் இன்றி உரத்தைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும், இதனை அடிப்படையாகக் கொண்டே புதிய நடைமுறையின் கீழ் உரம் பெற்றுக்கொடுக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் கீழ் விவசாயிகள் தமக்கு விரும்பிய இடத்தில் உரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

தெங்கு உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் அதனை ஊக்குவிப்பது தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இளநீர் உற்பத்தியை அதிகரிப்பதற்காக களுத்துறையில் முன்னோடித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் ஏனைய பகுதிகளில் இதனை விஸ்தரிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்டங்களில் கைவிடப்பட்ட பகுதிகளில் மீள் உற்பத்திகளை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்டக் கம்பனிகளிடம் வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும், அதற்கு அவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் அவ்வாறான இடங்களை பயிர்ச்செய்கைகக்குப் பயன்படுத்துவது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பகுதிக்கான இந்திய வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதில் பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

The post கைவிடப்பட்ட தேயிலை தோட்டங்களில் மீள் உற்பத்தி: கம்பனிகளுக்கு அறிவுறுத்தல் appeared first on Oruvan.com.

பெருந்தோட்ட மக்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம்
பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்காக எதிர்காலத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைப்பை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட சமூகத்தினரின் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, பெருந்தோட்ட மனித மேம்பாட்டு அறக்கட்டளையுடன் கடந்த 24 ஆம் திகதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மலையகப் பகுதிகளில் மண்சரிவு அபாயம் அதிகமாக இருப்பதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் நிலச்சரிவு ஏற்படாத தோட்ட நிலங்களை அடையாளம் கண்டு, அந்த நிலங்களில் அடுக்குமாடி கட்டிடங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

விவசாயத்திற்கும் மட்டுமல்லாமல், வீட்டு வசதி கட்டுமானத்திற்கும் மிகக் குறைந்த நிலம் மட்டுமே உள்ளதால், தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வாக இந்த அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கான முன்பள்ளிகள் முதல் கற்றல் மையங்கள், கூட்டுறவு மற்றும் மத வழிபாட்டு தளங்களுடன் கூடிய அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு திட்டம், தோட்ட வீடுகளில் வசிக்கும் பெருந்தோட்ட மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைய நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன மேலும் தெரிவித்தார்.

The post பெருந்தோட்ட மக்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம் appeared first on Oruvan.com.