சந்தோஷ் ஜா Archives - Oruvan.com

இந்தியா, இலங்கையின் நம்பிக்கைக்குரிய மற்றும் நம்பகமான பங்காளியாகத் தொடர்ந்து செயற்படும் – இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு
பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுகிறதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள இந்தியன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர்,

இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் இலங்கைக்கு விசேட இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இரு நாடுகளுக்கிடையிலான உறவு நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் மக்களிடையிலான உறவுகள் மூலமாக மேலும் வலுப்பெற்றுள்ளது.

மின் சக்தி வலையமைப்பு ஒருங்கிணைப்பு, சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம், திருகோணமலை எரிசக்தி மைய அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரயில் பாதை புனரமைப்பு, துறைமுக அபிவிருத்தி, கப்பல் மற்றும் விமான சேவைகள் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான பௌதீக இணைப்புகள் வலுப்பெற்றுள்ளன. இலங்கையின் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம், யு.பி.ஐ. கொடுப்பனவு முறைமை போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில், இந்திய முதலீடுகள் முக்கிய பங்காற்றியுள்ளன. டித்வா புயலின் போது இந்தியா முதற்கட்டமாக உதவி வழங்கியது.  இந்தியா, இலங்கையின் நம்பிக்கைக்குரிய மற்றும் நம்பகமான பங்காளியாகத் தொடர்ந்து செயற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post இந்தியா, இலங்கையின் நம்பிக்கைக்குரிய மற்றும் நம்பகமான பங்காளியாகத் தொடர்ந்து செயற்படும் – இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு  appeared first on Oruvan.com.

இக்கட்டான நேரத்தில் உதவும் இந்தியாவிற்குத் மகாநாயக்க தேரர்கள் நன்றி
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நேற்று (12) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அதிவணக்கத்திற்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோர், இலங்கை ஏதேனும் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா உடனடியாகச் செயற்பட்டுத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவது குறித்துத் தமது நன்றியைத் தெரிவித்தனர்.

பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சந்தோஷ் ஜா, இலங்கைக்கு உதவி தேவைப்படும் இந்தத் தருணத்தில் இந்தியா மிகுந்த அக்கறையுடன் தலையிட்டுத் தேவையான ஒத்துழைப்பை வழங்கும் என்று குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கைக்குத் தேவையான எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் வி. சரண்யாவும் கலந்துகொண்டார்.

The post இக்கட்டான நேரத்தில் உதவும் இந்தியாவிற்குத் மகாநாயக்க தேரர்கள் நன்றி appeared first on Oruvan.com.

சந்தோஷ் ஜாவை சந்தித்த, தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்
இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தல் மற்றும் இலங்கையின் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

The post சந்தோஷ் ஜாவை சந்தித்த, தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் appeared first on Oruvan.com.

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் நாமல் எம்.பி சந்திப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையே சந்திப்பு ஒன்று நடந்துள்ளது.

இரு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

இந்நிலையில், உயர் ஸ்தானிகரை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“எங்கள் நீண்டகால நட்பையும் இந்தியாவுடனான வலுவான இருதரப்பு உறவுகளையும் பெரிதும் மதிக்கிறது” என்றும் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயமும் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியது, உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய மாளிகையில் நாமல் ராஜபக்சவை வரவேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையில் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் “பரந்த அளவிலான இருதரப்பு கூட்டாண்மை” ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் நாமல் எம்.பி சந்திப்பு appeared first on Oruvan.com.

ரணிலுடன் சந்தோஷ் ஜா சந்திப்பு – புது டில்லிக்கு அறிக்கை அளிக்கவும் தயார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

உலக அரசியல் மற்றும் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்த சந்திப்பின் போது விரிவான கலந்தரையாடல்கள் நடத்தப்பட்டன.

நேபாளத்தில் தற்போதைய அரசியல் ஸ்திரமின்மை குறித்து தனது நிலைப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர் ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான கலந்துரையாடல் குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் புது டில்லிக்கு அறிக்கை அளிக்க உள்ளார் என்றும் அறியப்படுகிறது.

The post ரணிலுடன் சந்தோஷ் ஜா சந்திப்பு – புது டில்லிக்கு அறிக்கை அளிக்கவும் தயார் appeared first on Oruvan.com.

எதிர்கால வளர்ச்சிக்கு இலங்கை – இந்திய கூட்டாண்மை அவசியம் : உயர் ஸ்தானிகர்
இந்தியா-இலங்கை கூட்டாண்மை எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியம் என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த மாநாடொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டாண்மையை என்பது அவசியமானது. இரு நாடுகளும் நாகரீக காலம் முதல் உறவுகளை கொண்டுள்ளன.  எமது இரு நாடுகளின் எதிர்காலம் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது.

இரு நாடுகளின் இணைப்பு, எரிசக்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற துறைகளில் பகிரப்பட்ட இலக்குகளுடன் பயணிப்பது அவசியமாகும்.

இரு நாடுகளும் 21 ஆம் நூற்றாண்டில் வளர்ந்து வரும் வாய்ப்புகளுக்கு ஏற்ப மாற வேண்டும். காலநிலை மாற்றம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற பொதுவான சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

இலங்கையின் சமகால அரசாங்கம் முன்னெடுத்துவரும் சில திட்டங்கள் வரவேற்கத்தக்கது.” என்றும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

The post எதிர்கால வளர்ச்சிக்கு இலங்கை – இந்திய கூட்டாண்மை அவசியம் : உயர் ஸ்தானிகர் appeared first on Oruvan.com.

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

பொருளாதார, சமூக, மற்றும் அரசியல் விவகாரங்கள் பல குறித்து இதன்போது இருவரும் நீண்ட நேரம் கலந்துரையாடியதோடு, அருகிலுள்ள அண்டை நாடு என்ற வகையில் பல தசாப்தங்களாக இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் தனது நன்றியை இதன்போது தெரிவித்தார்.

அவ்வாறே, நமது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொண்டு, வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்குத் தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்குமாறும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

The post எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்  appeared first on Oruvan.com.

தோட்டப்புற பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்புகள் – இந்தியா நிதி உதவி
தேர்ந்தெடுக்கப்பட்ட தோட்டப் பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுவது தொடர்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் 508 மில்லியன் ரூபாய் மானிய உதவியுடன் இலங்கையின் தோட்டப் பகுதிகளில் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுதல்’ குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சகத்தின் செயலாளர் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கு இடையில் இன்று 16ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

இந்தத் திட்டத்தின் ஊடாக நுவரெலியாவில் உள்ள 48 பாடசாலைகளிலும், இலங்கை அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தலா 6 பாடசாலைகளிலும் இவ்வாறு 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுவப்பட உள்ளன.

The post தோட்டப்புற பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்புகள் – இந்தியா நிதி உதவி appeared first on Oruvan.com.