சஜித் Archives - Oruvan.com

கல்வி சீர்திருத்தங்கள் ; அநுர, சஜித் கருத்து மோதல்
மாணவர்களின் இலவசக் கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்காகப் போராடும் எங்கள் மீதே, இந்த அரசாங்கம் பழியைப் போட பார்கிறது என சஜித், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீது குற்றச்சாட்டு

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது தரப்பினர் பொய்களையும் ஏமாற்று வித்தைகளையும் பரப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாகச் சாடியுள்ளார்.

அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் தோல்வியுற்ற கொள்கைகளே 6ஆம் தர கல்வி சீர்திருத்தங்கள் திடீரென நிறுத்தப்படக் காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மாணவர்களின் இலவசக் கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்காகப் போராடும் எங்கள் மீது, அரசாங்கம் இப்போது பழியைப் போட முயல்கிறது.

அனைத்து மக்களையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை அநுரகுமார திசாநாயக்க புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த சீர்திருத்தங்களை எதிர்த்த போதிலும், சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்க்கட்சியினர் தமது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்வதாக விமர்சித்துள்ளார்.

அத்துடன் “இந்த சீர்திருத்தங்களை ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்த ஒரு நபர், இப்போது அது ஏன் நிறுத்தப்பட்டது என்று எங்களிடமே கேள்வி எழுப்புகிறார்” என ஜனாதிபதி, சஜித் பிரேமதாசவை மறைமுகமாகச் சாடியுள்ளார்.

சீர்திருத்தங்கள் நிறுத்தப்பட்டதற்கான பழியை எதிர்க்கட்சி தன் மீது சுமத்துவதை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

இலங்கையில் 6ஆம் தர மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படவிருந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் இடைநிறுத்தப்பட்டமையே இந்த அரசியல் மோதலுக்கு முக்கிய காரணமாகும்.

The post கல்வி சீர்திருத்தங்கள் ; அநுர, சஜித் கருத்து மோதல் appeared first on Oruvan.com.

அரசாங்கத்தின் பொருளாதார அணுகுமுறை குறித்து சஜித் கேள்வி
தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு எடுத்த அணுகுமுறையில் பாரதூரமான பிரச்சினைகள் காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் காலத்தில் கடன் நிலைத்தன்மை இணக்கப்பாடு மற்றும் சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளை திருத்தியமைப்பதற்குத் தற்போதைய ஆளும் தரப்பினர் வாக்குறுதிகள் பலவற்றை வழங்கியிருந்தனர்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். நாட்டின் 22 மில்லியன் மக்களுக்கு உண்மையிலேயே பயனளிக்கும் கொள்கைகளுக்கு எமது ஆதரவைப் பெற்றுத் தருவோம்.

பொருளாதார ரீதியிலான தீர்மானங்களை வெளிப்படையாக கருத்தாட எதிர்க்கட்சிக்குப் பொறுப்பு காணப்படுகின்றது.

இந்த அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் இணப்பாடுகளை உள்ளவாறே தொடர்ந்தும் கடைப்பிடித்து வருவதனால் சாதாரண குடிமக்கள் மீது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள பொருளாதார பிரவேசத்தை “Voodoo Economics” என அழைக்கலாம்.

பிரசித்தமான கோஷங்கள் மற்றும் பேரினப் பொருளாதார குறிகாட்டிகளை மட்டுமே நம்பியிருப்பதால், அடிமட்ட மக்கள் அனுபவிக்கும் உண்மையான சிரமங்களைப் புரிந்துகொள்ள அது தவறிவிட்டது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அவ்வாறே, அதிகரித்து வரும் சமத்துவமின்மையை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகள், வளங்கள் மற்றும் செல்வத்தின் நியாயமற்ற மற்றும் சமமற்ற விநியோகத்திற்கு வழிவகுக்கின்றது என்றும் தெரிவித்தார்.

பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புபட்டு, அவர்களின் பொருளாதார தீர்மானங்கள் மீது ஏற்படுத்தும் மனிதாபிமான தாக்கத்தை அறிந்து கொள்ளுமாறு கொள்கை வகுப்பாளர்களிடம் தான் கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

The post அரசாங்கத்தின் பொருளாதார அணுகுமுறை குறித்து சஜித் கேள்வி appeared first on Oruvan.com.

ரணில், சஜித் இணைவுக்காக பலி கடா ஆகுவதற்குகூட நான் தயார்
“ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். இரு தரப்பு இணைவுக்கு நான் தடையாக இருக்கின்றேன் என எவரேனும் கருதினால் பதவி விலகிவிட்டு ஓரமாககூட இருப்பதற்கு நான் தயார். ரணில், சஜித் இணைவுக்காக பலி கடா ஆகுவதற்குகூட நான் தயார்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ இன்று தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

The post ரணில், சஜித் இணைவுக்காக பலி கடா ஆகுவதற்குகூட நான் தயார் appeared first on Oruvan.com.

நிர்மலா சீத்தாராமனை சந்தித்த சஜித்
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை இன்று புது டில்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பவற்றை ஆழப்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இங்கு, இந்திய நிதியமைச்சர் இலங்கையின் இயற்கை அருட்கொடைகள் மற்றும் மனித திறைமைகள் தொடர்பில் பாராட்டி தனது பேச்சை ஆரம்பித்த அவர், இந்தியாவின் மாறிவரும் பொருளாதாரத்துடன் நெருக்கமாக ஈடுபடுவதன் மூலம் இந்த பலங்களைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தும் தொடர்பில் பிரஸ்தாபித்தார்.

அவ்வாறே, இந்தியா போன்ற பெரிய சந்தையை வாய்ப்புகளை அணுகுவதன் மூலம் இலங்கையின் தொழிற்துறையை வேகமாக முன்னேற்றம் காணச் செய்ய முடியும் என்று குறிப்பிட்ட அவர், வலுவான உள்நாட்டு தொழிற்துறைகள் மூலம் இலங்கையின் பொருளாதார இறையாண்மையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2022 இல் ஏற்பட்ட நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய 4 பில்லியன் அமெரிக்க டொலர் ஒத்துழைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றிகளை இதன்போது தெரிவித்துக் கொண்டதோடு, ஒரு தனி நாடாக இலங்கைக்கு வழங்கிய மிகப்பெரிய நிதி மானியம் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழிற்துறை கொள்கை மற்றும் டிஜிட்டல் ஆளுகை தொடர்பில் இந்தியாவின் சாதனைகளை பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர், ஒப்பீட்டு ரீதியாக நிலைத்தன்மை காணப்பட்ட போதிலும், இலங்கை இன்னும் வெளிநாட்டு கையிருப்புக்களை மீண்டும் கட்டியெழுப்புதல், ஏற்றுமதிகளை பன்முகப்படுத்தல் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

வெளிப்படையான மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான ஒத்துழைப்பின் அவசியப்பாடு தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு இணங்கிக் கொண்டனர். கூட்டு முயற்சியாண்மைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கு இந்தியா-இலங்கை தொழிநுட்பம் சார் கைத்தொழில் வலயத்தை உருவாக்கும் யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது முன்வைத்தார்.

நவீன வர்த்தக யதார்த்தங்களுக்கு ஏற்றவாறு இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்வதற்கும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.

இந்தியாவின் மாதிரியைப் பின்பற்றி புத்தாக்கம், அரச-தனியார் கூட்டு முயற்சியாண்மைகள், ஆராய்ச்சி மற்றும் வணிகத் துறைகளுடன் பொருளாதாரக் கொள்கைகளை இணைப்பதன் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

பரஸ்பர மரியாதை மற்றும் நீண்டகால கூட்டாண்மையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்தியாவுடனான நெருக்கமான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்திக் கொள்ள தமது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்போடுள்ளதாகவும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

The post நிர்மலா சீத்தாராமனை சந்தித்த சஜித் appeared first on Oruvan.com.

கொழும்பு வருமாறு இந்திய தொழில்துறை கூட்டமைப்பினருக்கு சஜித் அழைப்பு
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , புது டில்லியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பினரை சந்தித்து முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

1895 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்தியத் தொழிற்துறை கூட்டமைப்பானது இந்தியாவின் முன்னணி வர்த்தக சங்கமாகும்.

இலங்கையில் தனியார் துறையால் இயக்கப்படும், புதுமைகளை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி மாதிரியை மேம்படுத்துவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம் என்றும், இலங்கையின் மறுசீரமைப்புக்குப் பிந்தைய மீட்சியில் பெரும் பங்கை ஆற்றுவதற்கு இந்திய தொழில்துறைக்கு அழைப்பு விடுக்கிறோம் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

விவசாய பதப்படுத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வழங்கல் சேவைகள், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு கூடிய வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணவும், இலங்கை ஏற்றுமதி சபைக்கும் , இந்திய தொழிற்துறை வலையமைப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இலங்கை – இந்திய தொழில்துறை கூட்டமைப் வர்த்தக மன்றம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது யோசனை முன்வைத்தார்.

வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு வணிக முயற்சி பிரதிநிதிகள் குழவினரை கொழும்புக்கு விஜயம் செய்யுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.

The post கொழும்பு வருமாறு இந்திய தொழில்துறை கூட்டமைப்பினருக்கு சஜித் அழைப்பு appeared first on Oruvan.com.

ரணில், சஜித் ஓரணியில் திரண்டால் முதல்வர் வேட்பாளராக களமிறங்க தயார்
ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரே சின்னத்தின்கீழ் போட்டியிட முன்வந்தால் மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தீர்மானம் எடுக்கவில்லை. எனினும், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒரே மேடைக்கு வந்து, ஒரே சின்னத்தின்கீழ் போட்டியிட்டால், தேர்தலில் களமிறங்குமாறு கட்சி கோரிக்கை விடுத்தால் , எனக்கு வாக்களித்த மக்கள் கேட்டுக்கொண்டால் தேர்தலில் போட்டியிட நான் தயார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு, முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு நான் தயார். கட்சி கோரிக்கை விடுக்காவிட்டால் போட்டியிட மாட்டேன். அதேபோல இரு தரப்பும் இணையாவிட்டாலும் களமிறங்கமாட்டேன்.” எனவும் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

The post ரணில், சஜித் ஓரணியில் திரண்டால் முதல்வர் வேட்பாளராக களமிறங்க தயார் appeared first on Oruvan.com.

முத்து நகர் விவசாய காணிகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பு – களத்துக்குச் சென்ற சஜித்
உங்களது பிரதேசத்திற்கு வருகை தந்து இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை தொடர்பில் மேலும் பல விடயங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பிரேதசத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்து என்னைச் சந்தித்தனர். பின்னர் இம்ரான் மஹ்ரூப் உள்ளிட்ட தரப்பினர் குறித்த பிரச்சினை தொடர்பான விடயங்களை முன்வைத்தனர்.

திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தகரவேட்டவொன், மத்தியவெளி, முத்து நகர் ஆகிய மூன்று கிராமங்களிலும் 350 குடும்பங்களைச் சேரந்த, 1000 பேருக்குமேற்பட்டோர், 1972 ஆம் ஆண்டு முதல் 53 வருடங்களாக, 800 ஏக்கர் காணியில் நெல், சோளம், வெண்டைக்காய், தர்பூசணி மற்றும் பேரிச்சை போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர்.

2023 ஆண்டு முதல் பயிர்செய்கையில் ஈடுபட்டு வருவோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய 2025 பெப்ரவரி மாதத்திலிருந்து 800 ஏக்கரில் 53 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வது தடை செய்யப்பட்டதுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

1972 ஆம் ஆண்டு முதல், பல்வேறு சந்தர்ப்பங்களில், இந்தப் பகுதி மக்கள் பல மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களைச் சந்தித்து இந்தக் காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குமாறு கோரியிருந்த போதிலும், அதனை வழங்காது நிராகரித்துள்ளனர்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக பயிரிடப்பட்டு வரும் இந்த பயிர் செய்கை நிலம், துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணி என உரிமை கோரி, 200 ஏக்கர் காணியை, சூரிய மின் சக்தி (புதுப்பிக்கத்தக்க மின் சக்தி) உற்பத்தி நிலையங்களை நிறுவ பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதனால் 53 வருடங்களாக பயிர் செய்து வந்த விவசாயிகள் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். சூரிய சக்தியை ஊக்குவிப்பதற்கு நான் எதிரானவன் அல்ல, ஆனால் 800 ஏக்கர் விவசாய காணியில் 200 ஏக்கர் காணியை அபகரித்து, சூரிய சக்தி திட்டங்களுக்கு வழங்க எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பை தெரிவிக்கிறேன்.

சூரிய மின்சக்தி திட்டங்களை முன்னெடுப்பதற்குப் போதுமான நிலப் பரப்பு இருக்கத்தக்க, இந்த 350 குடும்பங்களை இலக்கு வைத்து, அவர்களினது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த காணிகளை அழித்து, சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ஒதுக்குவது கடுமையான அநீதியான செயலாகும். அவ்வாறே காணிக்கான உரிமை மற்றும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்கு காணப்படும் உரிமைகளை இது திருடும் செயலாகவும் அமைந்து காணப்படுகின்றது எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டம் முத்து நகர் கிராம விவசாயிகளின் காணிப் பிரச்சினையை ஆராயும் நோக்கில் அப்பிரதேசத்திற்கு இன்று (16) மேற்கொண்ட விஜயத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர்  இவ்வாறு தெரிவித்தார்.

இந்த காணிக்கான உரிமை விவசாயிகளுக்கே காணப்படுகின்றது. இந்த சூரிய மின் சக்தி திட்டத்திற்கு இடத்தை ஒதுக்கி, விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது மோசமான விடயமாகும். இந்த விவசாயிகள் பல்வேறு அரசாங்கங்களில் இருந்து உர மானியங்கள், விவசாய கடன்கள் போன்றவற்றையும் பெற்றுள்ளனர்.

இந்த காணிகளை வழங்கிய முந்தைய அரசாங்க தரப்பினரோடு சேர்ந்து, தற்போதைய ஆளும் தரப்பைச் சேர்ந்தோரும் நிலத்தை கொள்ளையடித்துள்ளனர். கடந்த தேர்தல் காலத்தில், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவசாய காணிகளை பாதுகாத்து தருவதாக தெரிவித்திருக்கின்றனர்.

இப்பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் தற்போதைய ஆளும் தரப்பினர் பங்கேற்று, ஆராய்ந்து ஆசிர்வதித்துள்ளனர். இவ்வாறு விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலங்களை, முந்தைய அரசாங்கம் போலவே தற்போதைய அரசாங்கமும் காணி அபகரிப்புக்கு இடமளித்துள்ளன. பாடசாலை, கோயில், பள்ளிவாசல் போன்றவை கூட இங்கு அமைந்து காணப்படுகின்றன. முத்து நகர் குளமும் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஏனைய குளங்களையும் கிட்டிய காலத்தில் தரைமட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

🟩 செல்வ வளத்தையும் அரச அதிகாரத்தையும் பயன்படுத்தி நிலத்தைச் சூறையாடி வருகின்றனர்.

இவ்வாறு தமது செல்வத்தையும் அரச அதிகாரத்தையும் பயன்படுத்தி காணிகளை இவ்வாறு கொள்ளையடிக்க இடமளிக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி எமது அரசாங்கத்தின் கீழ் இந்த காணிகளை மீட்டித்தருவோம். பயிரிடப்படாத தரிசு காணிகளில் சூரிய ஆற்றல் திட்டத்தை முன்னெடுக்க முடியும். பயிரிடப்பட்ட காணிகளை இத்தகைய நோக்கத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது. விவசாய காணிகளை அபகரித்து சூரிய ஆற்றல் சக்தி திட்டத்தை முன்னெடுக்கக் கூடாது. குறைந்தபட்சம் நீர்ப்பாசன வசதிகளுடன் கூடிய மாற்று காணிகளை இவர்களுக்கு அரசாங்கம் வழங்கியிருக்க வேண்டும். அரசாங்கத்திடம் இதற்கான இயலுமை காணப்பட்டிருந்தபோதிலும், இதனை அரசாங்கம் செய்யவில்லை. வழக்குகளைப் பதிவு செய்து, பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்தி விவசாயிகளை மிரட்டி வருகின்றனர். எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

350 குடும்பம் தானே. 1000 பேர் தானே, இது சிறிய தொகையினர் தானே என்று சிலர் கருதலாம். எமக்கு எத்தனை குடும்பம் என்ற அளவு முக்கியமில்லை. இந்நாட்டில் எப்பகுதியிலேனும் எங்கேனும் வாழும் மக்களுக்கு ஏதேனும் அநீதி நடந்தால் முற்போக்கு எதிர்க்கட்சியாக நாம் அங்கு நிற்போம். நாம் உங்களோடு நிற்போம். எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை வேலைத்திட்டத்தின் கீழே நான் இன்று இங்கு வந்துள்ளேன். 2020 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த வேலைத்திட்டத்தின் ஓர் கட்டமாகவே உங்கள் மத்தியில் வந்து, உங்களிடமிருந்தே தகவல்களைப் பெற்று குறித்த பிரச்சினைக்காக வேண்டி முன்நிற்கிறோம். நாம் இவ்வாறு மக்கள் மத்தியில் வந்து பிரச்சினைகளை கேட்டறிவதற்கு பலர் ஏழனம் செய்தனர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் திருகோணமலை மாவட்ட மக்கள் எமக்கு மகத்தான வெற்றியை ஈட்டித் தந்தனர். அதனை நாம் ஒருபோதும் மறந்துவிட மாட்டோம். நிச்சயமாக உங்களது காணிப் பிரச்சினைக்கு நாம் அன்றும் முன்நின்றோம். அன்றும் போராடினோம். இன்றும் போராடி வருகிறோம். நாளையும் போராடுவோம்.

இந்த விடயம் குறித்து ஊடகங்களிலும், பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறேன். இந்த காணி விடயம் தொடர்பில் சுதந்திரமான ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்டு, இந்த உரிமையை நாம் நிச்சயமாகப் பெற்றுத் தருவோம்.

இப்பிரதேசத்தை சேர்ந்த ஆளும் தரப்பு எம்பிக்கள் உங்கள் மத்தியில் வந்து என்ன கூறினர். முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என கூறினரல்லவா? ஆனால் பழைய பாதையிலயே பயணிக்கின்றனர். 2023 ஆம் ஆண்டு இந்த காணிகளை அபரிக்கும் கொள்கையிலயே இவர்களும் பயணிக்கின்றனர். இரட்டை நாக்குக் பேச்சுக்களைப் பேச வேண்டாம் என அரசாங்கத்திடம் கூறுகிறோம். இரட்டை நாக்கு செயல்பாட்டில் ஈடுபட வேண்டாம் என கூறுகிறோம். இப்பிரதேச மக்களினது காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிடுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்.

மக்கள் தக்க பாடம் புகட்ட காத்திருக்கின்றனர்.

மாகாண சபைத் தேர்தலை நடத்தப் போவதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. மாகாண சபை தேர்தலை நடத்துமாறு நாமும் கூறுகிறோம். மாகாண சபை தேர்தலை நடத்துங்கள், இப்பிரதேச மக்கள் மாத்திரமல்ல விசேடமாக முழு நாட்டு மக்களும் அரசாங்கத்துக்கு நல்ல பாடம் புகட்டுவர். அரசாங்கத்திற்கு பதிலொன்றை வழங்க திருகோணமலை மாவட்ட மக்கள் மாத்திரமல்லாது முழு நாட்டுமக்களுமே காத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே அவசரமாக மாகாண சபை தேர்தலொன்றை நடத்துங்கள். மாகாண சபை தேர்தலொன்று நடப்பதற்கு நாமும் விருப்பம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

The post முத்து நகர் விவசாய காணிகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பு – களத்துக்குச் சென்ற சஜித் appeared first on Oruvan.com.

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்தை சந்தித்தார் சஜித்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டினுக்கும் (Samantha Joy Mostyn) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்றுமுன்தினம் (07) இந்த விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில், அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, அவுஸ்திரேலியவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கத் தேவையான ஆதரவைப் பெற்றுத் தருமாறும் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் நாட்டின் ஏற்றுமதி சார்ந்த பொருட்களுக்கு அவுஸ்திரேலியாவில் அதிக சந்தை வாய்ப்புகளைப் பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது கோரியதாக அவரது ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்தை சந்தித்தார் சஜித் appeared first on Oruvan.com.

இம்தியாஸ் பாக்கீர் மாக்கரின் இராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த சஜித்
தமது கட்சியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கரின் பதவி துறப்பு கடிதத்தை கட்சி ஏற்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘இம்தியாஸ் பாக்கீர் மக்கார் சிரேஷ்ட தலைவர், அவர் பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார்.

காரணம் குறிப்பிடப்படவில்லை. அவரைபோல சிரேஷ்ட தலைவர் ஒருவர் எமது கட்சியில் இருக்க வேண்டும். எனவே, இராஜினாமா கடிதம் ஏற்கப்படவில்லை.

எமது கட்சிக்குள் பிரச்சினை இல்லை, எனவே, கட்சி பிளவு படாது. பதவி விலகல் கடிதம் ஏற்கப்படவில்லை என்பதால் அவரே தற்போதைய தவிசாளர், அவருடன் நான் பேச்சு நடத்தவுள்ளேன்.” – என்றார்.

The post இம்தியாஸ் பாக்கீர் மாக்கரின் இராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த சஜித் appeared first on Oruvan.com.

சஜித் இணங்காவிடின் யானை சின்னத்தில் ஐ.தே.க களமிறங்கும்
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இடையில், இணக்கப்பாடுகள் ஏற்படாவிடின் யானைச் சினத்தில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடுமென கட்சியின் தவிசாளரும் முன்னாள் எம்.பியுமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

தற்போது நடத்தப்படும் பேச்சுக்கள் வெற்றியளித்தால் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பொதுவான சின்னத்தில் போட்டியிடும் சாத்தியம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இன்று (15) சனிக்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வஜிர தெரிவித்தார்.ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் (12) கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முடிந்தளவு முயற்சித்தார்.

இணக்கப்பாடு எட்டப்பட்டு யானைச் சின்னத்தில் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதே எமது இலக்காகும்.

அடுத்த தெரிவு ஏதேனுமொரு உள்ளுராட்சி மன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியாகவோ, ஐக்கிய மக்கள் சக்தியாகவோ அன்றி சுயாதீன சின்னமொன்றில் போட்டியிடுவதாகும்.

ஒரேயொரு ஆசனத்தை மாத்திரம் ஐ.தே.க. பாராளுமன்றத்தில் பெற்றுக் கொண்ட போது, நாம் அழிந்து விட்டதாக சிலர் எண்ணினர்.

ஆனால் அந்த ஒரு ஆசனமே இலங்கையின் 8ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்தது. எனவே தற்போது ஒரு ஆசனம் கூட இல்லையென நாம் சோர்வடைந்து விடக் கூடாது.ஒரு ஆசனம் கூட இல்லாமலும் ஜனாதிபதியாகலாம். ஐ.தே.க.பலம் மிக்கது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. மேற்குறிப்பிட்ட மூன்று யோசனைகளுக்கும் இணக்கம் தெரிவிக்கப்படாவிட்டால் இறுதியாக யானை சின்னத்தில் நாம் களமிறங்குவோம்.

The post சஜித் இணங்காவிடின் யானை சின்னத்தில் ஐ.தே.க களமிறங்கும் appeared first on Oruvan.com.