சஜித் பிரேமதாச Archives - Oruvan.com

கல்வி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – சஜித் பிரேமதாச தலைமையில் கையெழுத்து
கல்வி அமைச்சராகவும் செயல்படும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று கையொப்பம் இட்டார்.

எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னரே அவர் கையொப்பம் இட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் மாணவர்களின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

ஏனைய எதிரணி உறுப்பினர்களிடம் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளது.

The post கல்வி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – சஜித் பிரேமதாச தலைமையில் கையெழுத்து appeared first on Oruvan.com.

2026 இல் கல்வி மறுசீரிமைப்பு சாத்தியமில்லை
புதிய கல்வி சீர்திருத்தத்தை (Education reform) ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) தெரிவித்தார்.

எனவே, மேற்படி திட்டம் குறித்து மீளாய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்தார்.

ஹெம்மாத்தகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாச, இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“மக்களினதும், பாடசாலை மாணவர்களினதும் மனநிலைகள் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களினது மனித மற்றும் அடிப்படை உரிமைகளை மீறக் கூடாது.

பாடசாலைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் முறையான திட்டமொன்று இல்லாததால் மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர்.

அரசாங்கத்தின் திட்டத்தின் பிரகாரம் ஜனவரி மாதம் முதல் புதிய சீர்திருத்தங்களை அமுல்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றது. எனவே, இது குறித்து மீள்பரிசீலனை செய்து தீர்மானம் எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) இணக்கப்பாட்டை திருத்தியமைப்பதற்குரிய பேச்சு முன்னெடுக்கப்பட வேண்டும்.” – என்றார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச.

The post 2026 இல் கல்வி மறுசீரிமைப்பு சாத்தியமில்லை appeared first on Oruvan.com.

பேரிடரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க ஐ.நா. உதவ வேண்டும்: சஜித் கோரிக்கை
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்காக தம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் ஐ.நா. வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சிற்கும் (Mark Andre Franche) இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (17) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், சமகால இலங்கையின் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

அனர்த்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் நாட்டில் எழுந்துள்ள பன்முக பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ்சிடம் எடுத்துரைத்தார்.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் பெற்றுத் தர முடியுமான கூடிய ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.

The post பேரிடரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க ஐ.நா. உதவ வேண்டும்: சஜித் கோரிக்கை appeared first on Oruvan.com.

பாம்புகளிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள் – சஜித் வலியுறுத்தல்
நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இன்று (20) வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகரின் அறைக்குள் பாம்பு நுழைந்ததாகத் தாம் கேள்விப்பட்டதாகவும், எனவே சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அத்துடன் நாடாளுமன்றம் ஒரு சுற்றுச்சூழல் உணர்திறன் வலயத்தில் (environmentally sensitive zone) அமைந்துள்ளதாலேயே பாம்புகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

The post பாம்புகளிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள் – சஜித் வலியுறுத்தல் appeared first on Oruvan.com.

மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாசவே குடியுரிமை பெற்றுகொடுத்தார்
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. குறித்த அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தின்போது இதற்குரிய உரிய பதில் வழங்கப்படும்.

பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் உங்களிடம் (தேசிய மக்கள் சக்தி) இருந்து எங்களுக்கு உபதேசம் அவசியமில்லை.

மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு ரணசிங்க பிரேமதாசவே நடவடிக்கை எடுத்தார் என்பதை மறக்க வேண்டாம்.”

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

The post மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாசவே குடியுரிமை பெற்றுகொடுத்தார் appeared first on Oruvan.com.

அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது
“தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் அதனோடினைந்த கலாச்சார மரபுரிமைகளையும் புறக்கணித்து செயற்படுகிறது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (12) நிலையியற் கட்டளை 27/ 2 இல் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,”அரசியலமைப்பின் 2 ஆம் அத்தியாயம், இலங்கை குடியரசில் பௌத்த மதத்திற்கு முதன்மை ஸ்தானத்தை வழங்குவதோடு, ஏனைய சகல மதங்களுக்கும் அதற்குரிய உரிமைகளை பாதுகாக்கும் அதேவேளையில், பௌத்தத்தை பாதுகாத்து போஷிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாக அமைந்து காணப்பட வேண்டும் என்றும் அது கூறுகிநின்றது.

புத்த சாசனத்தையும் அதனது நிலைத்தன்மைக்காகச் செயற்படும் மகா சங்கத்தினரை பாதுகாப்பதும், அதன் நீண்ட கால இருப்பும், சங்க மரபின் நடைமுறைகள் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாத்தலும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக அமைந்து காணப்பட வேண்டும். என்றாலும், தற்போதைய அரசாங்கம் அந்த கலாச்சார பாரம்பரியத்தை புறக்கணிப்பதாகத் தெரிகின்றது.

1979 ஆம் ஆண்டின் 64 ஆம் இலக்க பிரிவேனா கல்விச் சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதும், இதன் மூலம், பாரம்பரிய பிரிவேனா கல்விக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பதன் காரணமாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளன

2025 ஆம் ஆண்டில் புத்தசாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு மற்றும் அதன் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றம், 2026 ஆம் ஆண்டில் இந்த அமைச்சின் கீழ் பௌத்த மதத்தின் முன்னேற்றத்திற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் போலவே அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை என்பவற்றை முன்வைக்க வேண்டும்” என்றார்.

The post அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது appeared first on Oruvan.com.

வரவு செலவுத் திட்டம் சலுகைகள் அற்ற IMF ஆல் எழுதப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும்
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது, மக்களுக்கு சலுகைகள் இல்லாத, சர்வதேச நாணய நிதியத்தின் வெறும் வரவு செலவுத் திட்டமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட உரை முடிந்த பின்னர், பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாக அமையவில்லை.

நாட்டு மக்கள் இன்று பல துயரமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். வறுமை அதிகரித்து காணப்படுகிறது. வேலையின்மையும் அதிகரித்துள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% இற்கு மேலாகப் பங்களிக்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகள் வீழ்ச்சி கண்டு, அவர்களது வாழ்க்கை சீர்குலைந்து போயுள்ளது. இவர்களைப் பாதுகாக்க இந்த அரசாங்கத்தால் முடியவில்லை.

விவசாயிகள், மீனவர்கள், சுயதொழில் புரிவோர், வேலையில்லாப் பட்டதாரிகள் என அனைவரும் தங்கள் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வுகளும் இல்லாமல் தவிக்கின்றனர்.

இந்த வரவு செலவுத் திட்டமானது ஏமாற்று, பொய்கள் மற்றும் தமது இருப்பை முன்னோக்கி கொண்டு செல்லும் வரவு செலவுத் திட்டமாக அமைந்து காணப்படுகின்றது.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சட்டக் கட்டமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்குவேன் என்று ஜனாதிபதி கூறினாலும், அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இந்நேரத்தில், இது தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என்று சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த அரசாங்கம் போதைப்பொருள் கடத்தல் குறித்து ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு வந்தது. ஆனால் இன்று திசைகாட்டி அரசாங்கத்தைச் சேர்ந்தோர் இந்த போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய பிற்பாடு, இவற்றை ஊடகங்களில் காண்பிப்பதைத் தவிர்த்து, அதனை மறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த அரசாங்கம் இரட்டை நாக்கு கொண்ட அரசாங்கமாக காணப்படுகின்றது. இது மக்களுக்கு நிவாரணம் வழங்காத, IMF எழுதிய வரவு செலவுத் திட்டத்தின் வடிவத்தை எடுத்த வரவு செலவுத் திட்டமாகும். வறுமை ஒழிப்புத் திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடங்கவில்லை.

முன்மொழியப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டக் கருத்திட்டங்களுக்கு மிகக் குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டுள்ளன.

2025 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளைப் பார்க்கும்போது, ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு ஒதுக்கீடுகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை முன்வைக்கப்பட வேண்டும். அது இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.

இவ்வாறு முன்னேற்ற மீளாய்வுகளை சமர்ப்பிக்காத நிதியமைச்சரான ஜனாதிபதி இன்று பொய்களை அடிக்கி வைத்தார். இந்த ஆளும் தரப்பினர் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அரசாங்கத்திற்கு இன்னும் மனச்சாட்சி வரவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

The post வரவு செலவுத் திட்டம் சலுகைகள் அற்ற IMF ஆல் எழுதப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும் appeared first on Oruvan.com.

சஜித் பிரேமதாச உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரை
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , புது டில்லியில் உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் (Indian Council of World Affairs-ICWA) சிறப்புரை நிகழ்த்தினார்.

இதில், உலகளாவிய இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பரிணாமம் கண்டு வரும் வகிபாகத்தை பாராட்டி “beacon of strategic autonomy and South–South cooperation.” என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு விபரித்தார்.

இதன் பிரகாரம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமான நாகரிக மற்றும் ஜனநாயக உறவுகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டுமொறு முறை உறுதிப்படுத்தியதோடு, இந்தியப் பெருங்கடலை அமைதி மற்றும் ஒத்துழைப்புக்கான வலயமாக பாதுகாப்பதற்கான கூட்டுப் பொறுப்பையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் பூகோளப் பொருளாதாரத்தின் எழுச்சி மற்றும் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் எதிர்பார்க்கப்படும் கட்டமைப்பு மாற்றத்தை எட்டிக் கொள்ள முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாகரிக மற்றும் தொழில்நுட்ப சக்தியாக இந்தியா உருவெடுப்பதை எடுத்துக்காட்டி, அதன் டிஜிட்டல் ஜனநாயகம், தயாரிப்புகள் மற்றும் நம்பகமான உலகளாவிய கூட்டாண்மைகளை போஷிப்பதில் கண்டு வரும் வெற்றிகள் தொடர்பிலும் அவர் பாராட்டினார்.

குறிப்பாக மின்சார வாகனங்கள் மற்றும் விநியோக சேவைத் துறைகளில் இந்தியாவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சிகளுடன் இணைவதற்கான இலங்கையின் விருப்பத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு சுட்டிக்காட்டினார்.

நியாயமான மற்றும் சமநிலையானதொரு உலகளாவிய ஒழுங்கை வடிவமைக்க ஐக்கிய நாடுகள பாதுகாப்புப் பேரவையில் நிரந்தர உறுப்பினர் இடத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியாவிற்கு காணப்படும் இயலுமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

The post சஜித் பிரேமதாச உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரை appeared first on Oruvan.com.

இந்திய சபாநாயகரை சந்தித்தார் சஜித்
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

நிறுவன தொழில்முறையை மேம்படுத்துதல், சட்டவாக்கத் துறையோடு தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் நாடாளுமன்றத்தில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவித்தல் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினர்.

கட்டமைப்பு சார் பரிமாற்றங்கள், கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் திறன் மேம்பாடு போன்ற முன்முயற்சிகள் மூலம் இலங்கை நாடாளுமன்றத்துக்கும், இந்திய மக்களவைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இருவரும் இணக்கம் தெரிவித்தனர்.

ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை மற்றும் நாடாளுமன்ற ஒருமைப்பாட்டினது மதிப்புகளுக்காக இரு நாடுகளிலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட அர்ப்பணிப்புகளை இச்சந்திப்புச் சுட்டிக்காட்டின.

The post இந்திய சபாநாயகரை சந்தித்தார் சஜித் appeared first on Oruvan.com.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் – சஜித்
‘சமூகத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் கோலோச்சி, பாதாள உலகக் குழுக்களும், கொலையாளிகளும் சமூகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இவற்றை தடுக்க முடியாத அரசாங்கமே இன்று ஆட்சியில் இருக்கிறது. அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகளே இதற்கு பிரதான காரணமாகும்’ என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மாவனெல்லை நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,’வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலையை தொடர்ந்து, கேகாலை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து, மக்களுக்கு சேவை செய்வதற்கான சூழல் சமூகத்தில் இல்லை என்று குறிப்பிடுகின்றனர். இன்று, சமூகத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் கோலோச்சி, பாதாள உலகக் குழுக்களும், கொலையாளிகளும் சமூகத்தைக் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இவற்றை தடுக்க முடியாத அரசாங்கமே இன்று ஆட்சியில் இருக்கிறது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் வீர வசனங்கள் பேசினாலும், ஊடகப் பிரச்சாரங்களை முன்னெடுத்தாலும் மக்கள் அவநம்பிக்கையுடனேயே வீடுகளிலிருந்து வெளியேறுகின்றனர். மாலையானால் தம்மால் உயிருடன் வீடு திரும்ப முடியுமா என்ற அச்சநிலை மக்கள் மத்தியில் காணப்படுகிறது. திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள் இந்த அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றன.

வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியமையே வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொல்லப்பட்டமை, அப்பிரதேச சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் இருவர் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களின் பின்னணியாகும்.

இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து பொலிஸார் எந்த தகவலையும் வழங்கவில்லை. மாறாக அவர் தாமாகவே அதனை வெளிக் கொணர்ந்தார்.

வெலிகம மற்றும் மத்துகம சம்பவங்களில் உள்ள பொதுவான காரணி யாதெனில் இந்த இரு சபைகளிலும் ஜே.வி.பி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்தமையாகும். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும். சட்டத்தின் ஆட்சி, நீதியை வழங்கும் செயல்முறை மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்தவே மக்கள் அதிகாரத்தை வழங்கியுள்ளனர். ஆனால் அரசாங்கமோ பாதாள உலகக் குழுக்களுக்கு அதிகாரத்தை வழங்கியிருக்கிறது.

அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகளே இதற்கு பிரதான காரணமாகும். உள்ளூராட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொது மக்கள் சேவைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். இது குறித்து சபாநாயகருக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் எழுத்துபூர்வமாக அறிவித்துள்ள போதிலும், இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை’ என்றார்.

The post மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் – சஜித் appeared first on Oruvan.com.