கொழும்பு மாநகர சபை Archives - Oruvan.com

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் பதிவாகி இருந்தன.

கொழும்பு மாநகர சபையின் கன்னி வரவு செலவுத் திட்டம் கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அது தோல்வியடைந்திருந்தது.

அன்றைய தினம் முதல் தடவையாக நடைபெற்ற வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 60 வாக்குகளும், ஆதரவாக 57 வாக்குகளும் மட்டுமே கிடைத்திருந்தன.

இவ்வாறான பின்னணியில், இன்றைய தினம் மீண்டும் ஒருமுறை கொழும்பு மாநகர சபை மேயர் வ்ராய் கெலி பல்தசார் அவர்களால் வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து இடம்பெற்ற இரண்டாவது வாக்கெடுப்பில், கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

The post கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம் appeared first on Oruvan.com.

கொழும்பு மாநகரிலும் என்பிபி ஆட்சி மலரும் – வசந்த சமரசிங்க
கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி நிச்சயம் ஆட்சி அமைக்குமென வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிதிச் சட்டத்தின் கீழான உத்தரவு மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர், கொழும்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டை கைப்பற்ற எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்துள்ளதாகவும் கூறினார்.

எதிர்க்கட்சியின் பக்கம் முன்னர் சாய்ந்திருந்த பல சுயேச்சைக் குழுக்கள் தற்போது தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் இந்த சபையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களை அணிதிரட்ட முயற்சித்தனர். இதன்போது, பல உறுப்பினர்கள் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர விரும்பினால் தேசிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வதை வரவேற்பதாகவும், பாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவுடன் இணைந்த பல உறுப்பினர்கள் தம்முடன் ஏற்கனவே தொடர்பு கொண்டு அவ்வாறு செய்ய ஆர்வமாக உள்ளதாக குறிப்பிட்டதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

கொழும்பு மேயராக வேண்டுமென்ற முயற்சியில் பாராளுமன்றத்திலிருந்து இராஜினாமா செய்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மீண்டும் ஒருமுறை மாநகர சபைக்கு வெளியே இருந்து அதற்கான முயற்சிகளை வழிநடத்த முயன்றார். ஆனால் அதிகாரத்தைப் பெறுவதில் அவர் தோல்வியடைந்துள்ளதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

The post கொழும்பு மாநகரிலும் என்பிபி ஆட்சி மலரும் – வசந்த சமரசிங்க appeared first on Oruvan.com.

கொழும்பு மாநகர சபையை ஆளப் போவது யார்? பிரதி மேயர் பதவி சண் குகவரதனுக்கு வழங்குமாறு அழுத்தம்
அண்மையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி 265 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளை கைப்பற்றியுள்ளது.

எனினும் இதில் 116 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளில் மாத்திரம் தான் தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மை தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், சிறிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மாநகர சபையையின் நிலையும் அவ்வாறே அமைந்துள்ளது. உள்ளூராட்சிமன்றங்களில் மிக முக்கிய சபையாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையை ஆட்சி செய்வதற்காக போதிய பெரும்பான்மைய எந்த கட்சிகளும் பெற்றிக்கவில்லை.

கொழும்பு மாநகசபையில் ஆட்சியமைப்பதற்கு அவசியமான 59 உறுப்பினர்கள் அல்லது அதற்கு அதிகமான உறுப்பினர்களை எந்த அரசியல் கட்சிகளும் தனித்து பெற்றுக்கொள்ளவில்லை.

தேர்தல் முடிவுகளின் படி, தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையில் 48 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன், பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட சுயேட்சைக் குழுக்கள் அனைத்தும் 69 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஆளும் கட்சி சார்பில் தெரிவுசெய்யப்பட்டுள்ள 48 பேரில் 12 பேர் தமிழர்கள் எனவும், ஏனைய கட்சிகள் சார்பிலும் கொழும்பு மாநகர சபைக்கு அதிகளவான தமிழர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறன.

எனினும், கொழும்பில் அதிகாரத்தை கைப்பற்றும் திறனை எதிர்க்கட்சி இழந்துள்ளதாகவும், ஆளும் தேசிய மக்கள் சக்தி கொழும்பில் ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, பல சுயேச்சைக் குழுக்களும் சிறிய கட்சிகளும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவி ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் முதல் முறையாக, கொழும்பு மேயர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேராத ஒரு பெண் வகிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பிரதி மேயர் பதவி தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்ற சண் குகவரதனுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் ஆளும் கட்சிக்கு கொடுக்கப்பட்டு வருவதாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கொழும்பு மாநகர சபையில் நீண்ட காலமாக வழங்கி வரும் திறமையான சேவையைத் தொடர, எதிர்க்கட்சியில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியுடன் இணக்கமாகச் செயல்பட்டு ஆட்சியை நிலைநாட்ட ஐக்கிய தேசியக் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

“மக்களுக்கு பொய் சொல்லாமல் செயல்படும் ஒரு அரசாங்கத்தை வழங்குவதற்காக, எதிர்க்கட்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற நிறுவனங்களில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக, அந்தக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளது.”

கொழும்பு மாநகர சபையில் நீண்ட காலமாக அதிகாரத்தை வகித்து வந்த அதே வேளையில், இதன் மூலம் வழங்கிய திறமையான மற்றும் சிறந்த சேவையைத் தொடர எங்கள் கட்சி பாடுபடுகிறது என்றார்.

The post கொழும்பு மாநகர சபையை ஆளப் போவது யார்? பிரதி மேயர் பதவி சண் குகவரதனுக்கு வழங்குமாறு அழுத்தம் appeared first on Oruvan.com.

கொழும்பை ஆளப்போவது யார்?
பல தசாப்தங்களாக தனது ஆட்சி அதிகாரத்தின்கீழ் இருந்த மிக முக்கிய உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றான கொழும்பு மாநகர சபையை இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி இழந்துள்ளது. குறித்த சபைக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தாலும் ஆட்சி அமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மை பலம் தேசிய மக்கள் சக்திக்கும் கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில் எதிரணிகளை ஒன்றிணைத்து கொழும்பு மாநகரசபையில் ஆட்சி நிலைநாட்டப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் 81 ஆயிரத்து 814 வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு 48 இடங்கள் கிடைத்துள்ளன.

58 ஆயிரத்து 375 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 29 உறுப்பினர்களும், 26 ஆயிரத்து 297 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 13 பேரும் சபைக்கு தெரிவாகியுள்ளனர்.

அத்துடன், கொழும்பு மாநகரசபையில் 9 ஆயிரத்து 341 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 5 இடங்களும், 8 ஆயிரத்து 60 வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் காங்கிரசுக்கு 4 இடங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஏனைய கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களுக்களில் இருந்து 18 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.

117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மையை பெறுவதற்கு 59 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த வகையில் தேசிய மக்கள் சக்திக்கு இன்னும் 11 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது.

மறுபுறத்தில் எதிரணி மற்றும் சுயேச்சைக்குழுக்கள் வசம் 69 இடங்கள் உள்ளன.

இந்நிலையிலேயே கொழும்பு மாநகரசபையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முயற்சித்துவருகின்றது.

The post கொழும்பை ஆளப்போவது யார்? appeared first on Oruvan.com.

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் ஆட்சி – ரஞ்சித் அறிவிப்பு
கொழும்பு மாநகர சபையின் (CMC) மேயரைத் தேர்ந்தெடுக்க ஏனைய எதிர்க்கட்சிகளின் ஆதரவை நாடப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையில் அதிக எண்ணிக்கையிலான இடங்களை வென்ற போதிலும், எதிர்க்கட்சிகளே பெரும்பான்மையைக் கொண்டுள்ளன. அதனால் மேயரைத் தேர்ந்தெடுக்க மற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தி கோரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) கொழும்பு மாநகர சபையில் (CMC) அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்று மொத்தம் 48 இடங்களை வென்றது.

ஐக்கிய மக்கள் சக்தி  (SJB) 58,375 வாக்குகளைப் பெற்று 29 இடங்களைப் பெற்றது. அதே நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 26,297 வாக்குகளைப் பெற்று 13 இடங்களைப் பெற்றது. பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) முறையே 5 மற்றும் 4 இடங்களைப் பெற்றுள்ளன.

இதனால் ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சிக்கு அதிக ஆசனங்கள் உள்ளன. இதனால் கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகாரத்தை நிறுவும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.

இலங்கையின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய உள்ளூராட்சி அதிகாரசபையாக கொழும்பு மாநகர சபை உள்ளது. இலங்கையின் மிகப்பெரிய நகரம் கொழும்பு என்பதுடன்,   நிதி மையமாகவும் உள்ளது. இதனால் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு கொழும்பு மாநகரசைபையின் அதிகாரம் மிகவும் முக்கியமாகும். ஆனால், பெரும்பான்மை எதிர்க்கட்சிகள் வசமிருப்பதால் ஆளுங்கட்சி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

The post கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் ஆட்சி – ரஞ்சித் அறிவிப்பு appeared first on Oruvan.com.

கொழும்பு மாநகர சபைக்கான முடிவுகள் – ஆட்சி அமைப்பதில் அநுரவுக்கு சிக்கல்
கொழும்பு மாவட்டம் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 81,814 வாக்குகள் – 48 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 58,375 வாக்குகள் – 29 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 26,297 வாக்குகள் – 13 உறுப்பினர்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 9,341 வாக்குகள் – 5 உறுப்பினர்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – (SLMC) – 8,630 வாக்குகள் – 4 உறுப்பினர்.

ஆளுங் கட்சியான தேசிய மக்கள் சக்தியைவிட எதிர்க்கட்சிகளுக்கு அதிகமான ஆசனங்கள் இருப்பதாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஆளுங் கட்சியால் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post கொழும்பு மாநகர சபைக்கான முடிவுகள் – ஆட்சி அமைப்பதில் அநுரவுக்கு சிக்கல் appeared first on Oruvan.com.

கொழும்பு மாநகர சபை தேர்தலுக்கான இடைக்காலத் தடை நீக்கம்
கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதைத் தடுத்து, விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(11) உத்தரவிட்டது.

அந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

சட்டமா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

The post கொழும்பு மாநகர சபை தேர்தலுக்கான இடைக்காலத் தடை நீக்கம் appeared first on Oruvan.com.