கொட்டாஞ்சேனை மாணவி Archives - Oruvan.com

கொட்டாஞ்சேனை மாணவியின் தற்கொ லை சம்பவம் : ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை
கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியிலுள்ள ஜன நிவாச வளாகத்தில் வசித்து வந்த 16 வயது பாடசாலை மாணவி அம்ஷி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் ‘பி’ அறிக்கை தமது அமைச்சிற்கு கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை, நிறுவன விதிக்கோவையின் பகுதி II, அத்தியாயம் XLVIII இன் பிரிவு 27:9 இன் படி கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் சில தரப்பினர் தமது பணி பொறுப்புகளை புறக்கணித்திருக்கின்றனரா என்பதை ஆராய்வதற்காக அமைச்சினால் உள்ளக விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

The post கொட்டாஞ்சேனை மாணவியின் தற்கொ லை சம்பவம் : ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை appeared first on Oruvan.com.

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் – இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் வேண்டாமென புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!
கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துக்குக் காரணமாகக் கருதப்படும் ஆசிரியர், புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆசிரியர் தங்களுடைய பாடசாலைக்கு வேண்டாமென்று அப்பாடசாலையின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் இன்று (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் கொட்டாஞ்சேனை பகுதியில் கட்டிடத்தில் இருந்து விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மாணவி கல்வி பயின்ற இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக பெரும் போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

உயிரிழந்த மாணவி சம்பந்தப்பட்ட பாடசாலையிலன் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், அதன் விளைவாக மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த ஆசிரியரையும் கைது செய்யுமாறு போராட்ட காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

என்றாலும், குறித்த ஆசிரியர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன், ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த ஆசிரியர் தமது பாடசாலைக்கு வேண்டாம் என பெற்றோர் மற்றும் மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

The post கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் – இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் வேண்டாமென புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்! appeared first on Oruvan.com.