குமார ஜயக்கொடி Archives - Oruvan.com

குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 10 ஆம் திகதி விவாதம்
பாராளுமன்றம் ஏப்ரல் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 2026.03.19ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

பாராளுமன்றம் கூடும் இத்தினங்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய 2026 ஏப்ரல் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 4.45 மணிவரை விளையாட்டில் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், 2026.03.17ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதலாவது வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்ட உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவுதொகை சட்டமூலத்திற்கு அரசியலமைப்பின் உறுப்புரை 121 இன் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படாவிட்டால் அன்றையதினம் விவாதத்திற்கு எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பி.ப 4.45 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளைத் திருத்தங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படும். அத்துடன், பி.ப 5.30 மணிக்கு இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை விவாதம் இன்றி அனுமதிக்கப்படும்.

ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை அரசாங்க விடுமுறை தினம் என்பதால் அன்று பாராளுமன்றம் கூடாது.

2026 ஏப்ரல் 9ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.00 மணிவரை (357ஆம் அத்தியாயம்) தரைப்படைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, (358ஆம் அத்தியாயமான) கடற்படைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, (359ஆம் அத்தியாயமான) வான்படைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் தீர்மானம் வெளியிடப்பட்டால் குறித்த விடயம் அன்றையதினம் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படும்.

இதன் பின்னர் பி.ப 2.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை 2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2026 ஏப்ரல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

The post குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 10 ஆம் திகதி விவாதம் appeared first on Oruvan.com.

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவே இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும்
2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான மின்னுற்பத்தி மற்றும் மின்விநியோக நடவடிக்கைகளுக்கு 137,016 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே அதற்கமைவாக 11.57 சதவீதத்தால் மின்கட்டணத்தை அதிகரிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை மின்சார சபை முன்வைத்துள்ளது. எனினும் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மின்கட்டணத்தை அதிகரிப்பதால் நடுத்தர மக்களுக்கும், தொழிற்துறையினருக்கும் ஏற்படும் பாதிப்பை மின்சார சபை இதுவரை மதிப்பிடவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2026 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மின்கட்டணத்தை அதிகரிக்கும் யோசனையை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைத்துள்ளது. மின்சார சபையின் சட்டத்துக்கு அமைவாகவே இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒரு மின் அலகுக்கான கட்டணத்தை 25 ரூபா வரை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கை அடைவதற்காகவே மின்சார கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஆகவே மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவே தீர்மானிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

The post மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவே இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும் appeared first on Oruvan.com.