கிளீன் ஸ்ரீலங்கா Archives - Oruvan.com

“கிளீன் ஸ்ரீலங்கா” நகர வனத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொட்டலங்கவில் ஆரம்பம்
“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட நகர வனத் திட்டம் நேற்று (17) காலை தொட்டலங்க, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, தொட்டலங்கவில் உள்ள கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் மரங்களை நட்டு பாதுகாக்கப்பட்ட நகர்ப்புற வனத் தோட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மதிப்புமிக்க இந்த மரக் கன்றுகளைப் பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்பு மாதம்பிட்டிய ஸ்ரீ சங்கபோதி மகா வித்தியாலய மாணவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கெபிடல் மகாராஜா குழுமத்திற்குச் சொந்தமான எஸ்-லோன் லங்கா நிறுவனத்தால் செயற்படுத்தப்படும் ” துரு கெபகரு” திட்டமும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டமும் இணைந்து ஜனாதிபதி அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபை , நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கொழும்பு மாநகர சபை மற்றும் அரச மற்றும் தனியார் துறைகளின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக, கொழும்பு மாநகர சபை மேயர் வ்ராய் கெலி பல்தசார், பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன், கெபிடல் மகாராஜா குழுமத்தின் குழும பணிப்பாளர் பிரதான செயற்பாட்டு அதிகாரி எஸ்.சி. வீரசேகர, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post “கிளீன் ஸ்ரீலங்கா” நகர வனத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொட்டலங்கவில் ஆரம்பம் appeared first on Oruvan.com.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள் ஆரம்பம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில் பலவற்றின் பணிகள் இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

செயற்படுத்தப்படவுள்ள முன்மொழிவுகளை தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்காக அந்த திணைக்களத்தின் மாதிரிக்கு அமைவாக முன்மொழிவுகளை தயாரிப்பது தொடர்பில் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதற்கான ஒரு நாள் செயலமர்வு நேற்று (10) அலரி மாளிகையில் உள்ள லோட்டஸ் கட்டிடத்தில் அமைந்துள்ள கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

நாட்டில் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வை உருவாக்கி சமூகத்தை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் நோக்கில், அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் நாடளாவிய ரீதியாக செயல்படுத்தப்படவுள்ள “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்திற்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர், உரிய வகையில் ஒரு செயல் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பாகவும் அதற்கமைய துரிதமாக ஆரம்பிக்க வேண்டிய திட்டங்களை இம்மாத இறுதிக்குள் ஆரம்பிப்பது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் நோக்கங்கம் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இங்கு தெளிவுபடுத்தினார்.

பொது நிர்வாக , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீட்டுவசதி அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸ், மேற்கு மாகாண சபை மற்றும் ஏனைய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள், கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஜனாதிபதி மேலதிகச் செயலாளர் பொறியாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) ஜி.எம்.ஆர்.டீ. அபொன்சு உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

The post கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள் ஆரம்பம் appeared first on Oruvan.com.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நகரங்களை பசுமையாக்க தீர்மானம் – முதல்கட்டம் கொழும்பில்
நாட்டுக்குள் ஒழுக்க, சமூக மற்றும் சூழலியல் ரீதியான புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, சமூகத்தை மேலும் உயர்வான நிலைக்கு உயர்த்தி வைப்பதை நோக்காக கொண்ட “Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் “முன்னோடி நகர பசுமை வலய” வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

அதன் முதற் கட்டத்தின் கீழ் பேலியகொட மற்றும் ஒருகொடவத்த பகுதிகளில் “முன்னோடி நகர பசுமை வலய” வேலைத்திட்டங்கள் இரண்டை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பசுமை நகர திட்டத்தின் கீழ் நகர திட்டமிடல் வேலைத்திட்டமாக அரச மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவிருக்கும் இந்த வேலைத்திட்டம் இம்மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அரச – தனியார் – மக்கள் கூட்டிணைவு உள்ளிட்ட (Public- Private – People Partnership) 4P எண்ணக்கருவிற்கு அமைவாக அரச துறை, தனியார் துறை மற்றும் பொது மக்களை இணைத்துக்கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நகர அளவில் மக்கள் தொகை அதிகரிப்பதால் ஏற்படும் வாயு மாசு, சூழல் மாசு,நீர் மாசு உள்ளிட்ட பல சுற்றாடல் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதுடன், அதன்படியே நிலைபேறான பசுமை நகரங்கள் தொடர்பில் உலகத்தின் கவனம் திரும்பியுள்ளது.

நகர வன வளத்தை உருவாக்குவதன் ஊடாக சுற்றாடல் பிரச்சினைகள் குறைவது மாத்திரமன்றி சுற்றாடல் அழகாகும் என்பதால் கொங்க்ரீட் வலயங்களுக்கு பதிலாக இயற்கை தன்மையை நுகரக்கூடிய பசுமை வலயத்தில் மக்கள் வாழ்வதற்கு வழிவகுக்கும். அது உடல் – உள ரீதியான ஆரோக்கியமான மக்கள் சமூகத்தை உருவாக்கவும் வழி வகுக்கும்.

நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மாநகர சபை, இலங்கை புகையிரத சேவைகள் திணைக்களம்,கரையோர பாதுகாப்பு மற்றும் கடல் வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பலரும் இந்த திட்டத்துடன் கைகோர்த்துக்கொண்டிருப்பதுடன் கெபிடல் மகாராஜா நிறுவனம் நிதி உதவி வழங்குகிறது.

The post கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நகரங்களை பசுமையாக்க தீர்மானம் – முதல்கட்டம் கொழும்பில் appeared first on Oruvan.com.

அரச சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடு – அரசாங்கம் உண்ணிப்பாக அவதானிக்கும் ; வெளியான அறிவிப்பு
அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் உண்ணிப்பாக கண்காணிக்கப்படும் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.

கொழும்பு, கோட்டையில் இன்று சனிக்கிழமை கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

”விரைவில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துவருகிறது. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மற்றும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தேர்தல் தொடர்பான பணிகள் இடம்பெறும்.

கடந்த பொதுத் தேர்தலையும் காட்டில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். தேசிய மக்கள் சக்தி வென்றால் நாட்டுக்கு ஆபத்து, எதிர்தரப்பினர் மீது தாக்குதல்களை நடத்துவார்கள் என மக்களை எதிர்க்கட்சிகள் அச்சுறுத்தியதால் பொதுத் தேர்தலில் வாக்குகள் குறைந்திருந்தன.

ஆனால், அவர்களது கருத்துகள் பொய்யானவை என தற்போது மக்கள் உணர்ந்துள்ளதால் உள்ளூராட்சித் தேர்தலில் எமக்கான வாக்குகள் மேலும் அதிகரிக்கும்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பில் எதிர்காலத்தில் உண்ணிப்பாக அவதானிக்கப்படும். அரசாங்கத்தின் கொள்கைகளின் பிரகாரம்தான் அவர்கள் எதிர்காலத்தில் செயல்பட முடியும். புதிய அரச சார்ப்பற்ற நிறுவனம் ஒன்றும் இலங்கையில் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றால், அரசாங்கத்தின் வரையறைகளுக்கு உட்பட வேண்டும்.

usaid நிறுவனம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் உள்ளன. அந்த நிறுவனம் பொருளாதார வளர்ச்சி உட்பட பல்வேறு திட்டங்களுக்காக நிதியை வழங்கியுள்ளது. அதேபோன்று அரசியல் மாற்றம் உட்பட பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காகவும் குறித்த நிறுவனம் நிதியை வழங்கியிருக்கலாம். இந்த நிறுவனத்திடமிருந்தது நிதியை பெற்று கடந்த காலத்தில் எவ்வாறு செலவழித்துள்ளனர் என விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.” என்றார்.

The post அரச சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடு – அரசாங்கம் உண்ணிப்பாக அவதானிக்கும் ; வெளியான அறிவிப்பு appeared first on Oruvan.com.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் – நிபந்தனையுடன் ஆதரவளிக்க எதிர்க்கட்சி முடிவு
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ முயற்சிக்கு நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த முயற்சிகள் நல்லது என்றும் இலங்கைக்குத் தேவையானது என்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி, தெரு வியாபாரிகள் அகற்றப்படாவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தி இந்த முயற்சியை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

சட்டவிரோத வியாபாரிகள் அகற்றப்பட வேண்டும் என்றும், வாகனங்களில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பாகங்களும் அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அங்கீகரிக்கப்படாத பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள், குறிப்பாக பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொலிஸார் ஏற்கனவே ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமீபத்தில் ஜனாதிபதி செயலகத்தில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ முயற்சியைத் தொடங்கினார்.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் இந்த முயற்சிக்கு ஏற்கனவே ஆதரவை வழங்கியுள்ளனர்.

இந்த “சரியான” முயற்சியில் பங்கேற்க ஜனாதிபதி தம்மை அழைத்ததாக சங்கக்கார தெரிவித்திருந்தார். இந்த திட்டம் விரிவானது என்றும் அரசாங்கத்தால் மட்டும் செயல்படுத்த முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இது இலங்கைக்கு ஒரு நல்ல தொடக்கம் என்றும், பொதுமக்களின் ஆதரவு இதற்குத் தேவை என்றும் மஹேல ஜயவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் – நிபந்தனையுடன் ஆதரவளிக்க எதிர்க்கட்சி முடிவு appeared first on Oruvan.com.