கிறிஸ்டியானோ ரொனால்டோ Archives - Oruvan.com

ரொனால்டோவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையால் ஒன்றில் போர்த்துகல் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்துகொண்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இடையேயான வெள்ளை மாளிகை சந்திப்பில் ரொனால்டோவும் கலந்து கொண்டுள்ளார்.

சவுதி மற்றும் அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் சவுதி இளவரசருக்கு டிரம்ப் பாரிய விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

2022ஆம் ஆண்டின் இறுதியில் சவுதி கழகமான அல்-நாசரில் வருடத்திற்கு 200 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் இணைந்ததிலிருந்து ரொனால்டோ சவுதி கால்பந்து லீக்கின் அடையாளமாக மாறியுள்ளார்.

இதன் அடிப்படையில் டிரம்ப்பை சந்திக்கும் சவுதி குழுவில் ரொனாட்டோவும் இணைந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்திப்பின் போது, ரொனால்டோவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப், தனது இளைய மகன் பரோன், ரொனால்டோவின் மிகப் “பெரிய ரசிகன்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது 19 வயதான மகன் பரோன், ரொனால்டோவை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

The post ரொனால்டோவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப் appeared first on Oruvan.com.

கால்பந்து உலகின் முதல் பில்லியனரானார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
ஒரு பில்லியன் டொலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற சாதனையை போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.

புளூம்பெர்க் குறியீட்டின்படி, ரொனால்டோவின் நிகரமதிப்பு 1.4 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், கால்பந்து வரலாற்றில் பில்லியனர் ஆன முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சவுதி கழகமான அல்-நஸ்ரில் அவர் வாங்கும் அதிகபட்ச சம்பளம், நைக் போன்ற உலகளாவிய விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் அவரது CR7வணிகம் ஆகியவற்றின் மூலம் ரொனால்டோ இந்த உச்சத்தை எட்டியுள்ளார்.

2002ஆம் ஆண்டு முதல் 2023 வரை ரொனால்டோ 550 மில்லியன் டொலர்களுக்கு மேல் சம்பளம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுளு்ளது.

இந்த காலப்பகுதியில் மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் மற்றும் ஜுவென்டஸ் உள்ளிட்ட சில சிறந்த ஐரோப்பிய கழகங்களுக்காக அவர் விளையாடியிருந்தார்.

2023ஆம் ஆண்டில், ரொனால்டோ சவுதி கழகமான அல்-நாசருக்குச் சென்றதன் மூலம் அவருக்கு ஆண்டுதோறும் சுமார் 200 மில்லியன் டொலர் வரி இல்லாத சம்பளம் மற்றும் போனஸ்கள் கிடைத்தன.

அந்த அணியுடனான ஒப்பந்தம் 2025 ஜூன் மாதம் முடிவடைய இருந்த நிலையில், அணியுடனான ஒப்பந்தத்தை ரொனால்டோ மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதன்மூலம் அவர் 400 மில்லியன் டொலருக்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளது. எவ்வாறாயினும், உலகின் மிகப்பெரிய பணக்காரர் வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் இல்லை.

தாய்லாந்தில் உள்ள ராட்சபுரி எஃப்சிக்காக விங்கராக விளையாடி வரும் ஃபைக் போல்கியா, தற்போது உலகின் மிகப்பெரிய பணக்கார வீரராக உள்ளார்.

அவர், 2014 முதல் புருனே தேசிய அணியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும் அந்த அணியின் தலைவராகவும் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 20 பில்லியன் டொலர்கள் ஆகும்.

புருனே அரச குடும்பத்தைச் சேர்ந்த அவரது சொத்து மதிப்பு அரச பரம்பரையில் இருந்து வருகிறது. இரண்டாது இடத்தில் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார்.

உலகின் மற்றொரு மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும், அர்ஜென்டினாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி, தற்போது 650 மில்லியன் டொலர் நிகர மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

நான்காவது இடத்தை மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஜாம்பவானாகக் கருதப்படும் டேவிட் பெக்காம் உள்ளார். அவரின் நிகர மதிப்பு 450 மில்லியன் டொலர்கள் ஆகும்.

The post கால்பந்து உலகின் முதல் பில்லியனரானார் கிறிஸ்டியானோ ரொனால்டோ appeared first on Oruvan.com.

பின்லாந்தில் -20 டிகிரி செல்சியஸ் நீரில் குளித்த ரொனால்டோ
கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட ரொனால்டோ குடும்பத்துடன் பின்லாந்து சென்றுள்ளார். அங்கு -20 டிகிரி செல்சியஸில் மேலாடையின்றி குளித்த விடியோ வைரலாகி வருகிறது.

ரியல் மாட்ரிட்டின் முன்னாள் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது அல் நசீர் அணிக்காக விளையாடி வருகிறார்.

அண்மையில் 900 கோல்களை கடந்து சாதனை படைத்தார். 39 வயதாகும் ரொனால்டோ தனது இன்ஸ்டா பக்கத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு 10 நிமிட விடியோவை வெளியிட்டுள்ளார்.

ரொனால்டோ இன்ஸ்டாவில் 645 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார். அதில் அனைவருக்கும் மெரி கிறிஸ்துமஸ் என ஸ்பானிஷ் மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த விடியோவில் வெளியே இருக்கும் நீரில் ரொனால்டோ இறங்கி குளித்தார்.

ஜனவரி வரை சௌதி அரேபிய லீக்கில் இருந்து ஓய்வில் இருக்கிறார் ரொனால்டோ.

பின்லாந்தில் எடுத்த குடும்பத்தினருடனான அழகிய தருணங்களை தனது யூடியூப் பக்கத்தில் கூடுதல் நிமிடங்களுடன் விடியோவாக பதிவிட்டுள்ளார்.

விடியோவை பார்வையிட…

https://www.instagram.com/p/DD-KT-OAL_U/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

The post பின்லாந்தில் -20 டிகிரி செல்சியஸ் நீரில் குளித்த ரொனால்டோ appeared first on Oruvan.com.

ரொனால்டோவுடன் இணைந்து விளையாட ஆசை – கிலியன் எம்பாப்பே
உலகின் முன்னனி நட்சத்திர உதைப்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணைந்து விளையாட விரும்புவதாக பிரான்ஸ் தேசிய அணியின் இளம் நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்பே தெரிவித்துள்ளார்.

சமகால் காலபந்து உலகில் புகழ்பெற்ற வீரராக கிலியன் எம்பாப்பே மாறியுள்ளார்.  தற்போது அவர் ரியல் மெட்ரிட் அணியில் இணைந்து விளையாடி வருகின்றார்.

முன்னதாக, பிரான்ஸின்பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் (பிஎஸ்ஜி) கழகத்தில் லியனோஸ் மெஸ்ஸியுடன் இணைந்து, எம்பாப்பே  சில ஆண்டுகள் விளையாடியிருந்தார்.

பின்னர் மெஸ்ஸி அமெரிக்க கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டமையால் பிரான்ஸ் கழகத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

இந்நிலையில் மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடியதை தன்னால் மறக்கவே முடியாது என கூறியிருக்கின்றார் எம்பாப்பே. அதைப்போல உதைப்பந்தாட்ட உலகில் மேலும் ஒரு சிறந்த வீரரான பிரேஸிலின் நெய்மர் உடனும் இணைந்து விளையாடியிருக்கிறார்.

ஆனால் உலகின் பல பில்லியன் ரசிகர்களைக் கொண்ட போர்த்துக்கல் அணியின் தலைவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் மட்டும் எம்பாப்பே இதுவரையில் இணைந்து விளையாடியதே இல்லை.

அவருடன் தான் இணைந்து விளையாட வேண்டும் என்ற தனது ஆசையை சமீபத்தில் எம்பாப்பே வெளிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் ரொனால்டோ தற்போது வுதி அரேபியாவின் அல் நசர் கழகத்தில் ஒப்பந்தமாகி விளையாடி வருவதனால் எம்பாப்பேவின் ஆசை கனவாகவே ஆகலாம் எனலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரொனால்டோவுடன் இணைந்து விளையாட ஆசை – கிலியன் எம்பாப்பே appeared first on Oruvan.com.