கிரிந்த கடற்கரை Archives - Oruvan.com

கிரிந்த கடற்கரை போதைப்பொருள் கடத்தல் சம்பவம் குறித்து தகவல் வழங்கியவரின் தலையை துண்டிக்க மேற்கொள்ளப்பட்ட கொலை சதித்தட்டம் அம்பலம்
கிரிந்த கடற்கரையில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க தகவல் வழங்கிய நபரை கொலை செய்து, அவரது தலையை குறித்த விசாரணையை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வீட்டின் முன்வைக்கும் ஒப்பந்தத்தை பொறுப்பேற்ற வாடகை கொலையாளி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண வடக்குப் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்கவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த கொலை ஒப்பந்தத்தைப் பெற்ற சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி கிரிந்த கடற்கரையில் சுமார் 350 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. இதன்போது 7 சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த போதைப்பொருள் தொகுதி தற்போது டுபாயில் மறைந்திருக்கும் ‘அங்கோடை பிரியந்த’ எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என மேலதிக விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

இந்த நிலையிலேயே போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க தகவல் வழங்கிய நபரை கொலை செய்யும் ஒப்பந்தத்தை பொறுப்பேற்ற வாடகை கொலையாளி ஒருவர் பொலிஸாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பல சதித்திட்டங்களை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிந்தவில் தனது போதைப்பொருள் கையிருப்பு கைப்பற்றதிலிருந்து டுபாயில் இருக்கும் பாதாள உலகத்தலைவர் மிகுந்த கோபத்தில் உள்ளதாகவும், இதை கைப்பற்ற ரோஹன் ஒலுகலவுக்கு தகவல் கொடுத்தது யார் என்பதினை தீவிரமாக கண்டுபிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர், அவரைக் கொலை செய்து அவரது தலையை ஓலுகலவின் வீட்டிற்கு அனுப்பும் ஒப்பந்தத்தை பாதாள உலகக் கும்பல் ஒன்றிடம் ‘அங்கோடை பிரியந்த’ ஒப்படைத்துள்ளார்.

அதன்படி, தற்போது காவலில் உள்ள பாதாள உலகத் தலைவர் உட்பட ஒரு குழு இந்த கொலை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளதான் பிரகாரம் தமக்கு இந்த ஒப்பந்தம் கிடைக்கப்பெற்றதாகவும் கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த கொலை சதித்திட்டத்தை திட்டமிட்ட நபர் அங்கொட லொக்காவின் உதவியாளர்களில் ஒருவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

The post கிரிந்த கடற்கரை போதைப்பொருள் கடத்தல் சம்பவம் குறித்து தகவல் வழங்கியவரின் தலையை துண்டிக்க மேற்கொள்ளப்பட்ட கொலை சதித்தட்டம் அம்பலம் appeared first on Oruvan.com.