கிரிக்கெட் Archives - Oruvan.com

2026 T-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கத்தைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

2026 T -20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையே இன்று 7.00 மணிக்கு(25) நடைபெறவுள்ள முக்கியமான போட்டியை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியை பார்வையிட அதிகளவிலான இரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால்,

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கொழும்பு போக்குவரத்துப் பிரிவினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வின்சென்ட் பெரேரா மாவத்தை (கிராண்ட்பாஸ் வீதி), பிரிட்டோ பாபாபுல்லே பாலம் சந்தி வழியாக பாபாபுல்லே வீதிக்கு செல்ல முடியும்.

பின்னர் பாபாபுல்லே பாலம் அருகில் இருந்து விளையாட்டரங்கம் நோக்கி செல்ல முடியும்.

அத்துடன் செபாஸ்டியன் கால்வாய் வீதி மெல்வத்த பாலம் அருகிலிருந்து விளையாட்டரங்கம் நோக்கி செல்ல முடியும்.

மேலும் 100 அடி வீதி, கோயில் வீதி சந்தி வழியாக விளையாட்டரங்கம் நோக்கி செல்ல முடியும்.

மாலிகாவத்தை ஒழுங்கை, விளையாட்டரங்கத்திற்கு அருகில் உள்ள பக்க வீதி வழியாகவும் செல்ல முடியும்.

சத்தர்ம மாவத்தை கோயில் வீதி (கெத்தராம வீதி) சந்தி வழியாக கோயில் வீதிக்கு செல்லலாம்.

இரசிகர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் உடையில் புலனாய்வு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இதேவேளை பெருமளவான பயணப் பைகள், கண்ணாடிப் போத்தல்கள், ட்ரோன் (Drone) கருவிகள், சிறிய கத்திகள், போதைப்பொருட்கள் மற்றும் மதுபானங்கள் போன்றன விளையாட்டரங்கிற்குள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

போட்டி ஆரம்பமாவதற்கு முன்பிருந்தே சி.சி.டி.வி கண்காணிப்பு, உடல் பரிசோதனை மற்றும் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்பதால், பாதுகாப்புத் தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸார் இரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post 2026  T-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் appeared first on Oruvan.com.

பந்து தாக்கியதில் 17 வயது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு!!!
அவுஸ்திரேலியாவில் பந்து தாக்கியதில் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பென் ஆஸ்டின் என்ற வீரரே இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பென் ஆஸ்டின் மெல்போர்னின் கிழக்குப் பகுதியில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெ கழகத்திற்காக விளையாடி வந்தார்.

இந்நிலையில், கடந்த வந்தார். செவ்வாய்க்கிழமை மாலை, பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தானியங்கி பந்துவீச்சு இயந்திரத்தில் (Automatic Bowling Machine) இருந்து வந்த பந்து, எதிர்பாராதவிதமாக அவரது கழுத்துப் பகுதியில் தாக்கியது.

அவர் தலைகவசம் அணிந்திருந்த போதிலும் இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக சிக்கிக்கொண்டார்.

பந்து தாக்கியதில் நிலைகுலைந்து போன அவருக்கு மைதானத்திலேயே முதலுதவி வழங்கப்பட்டது. பின்னர் மோனாஷ் வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை பென் ஆஸ்டின் உயிரிழந்ததாக ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கழகம் இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பில் ஹியூஸின் மரணத்தை அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

சிட்னியில் நடந்த ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியின் போது, வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்து ஹியூஸின் கழுத்தைத் தாக்கியது. அதனால் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக அவர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கிரிக்கெட்டில் வீரர்களின் பாதுகாப்பு குறித்த பல புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன.

இந்நிலையில், தற்போது பென் ஆஸ்டினின் மரணமும் அதே போன்ற ஒரு பகுதியில் பந்து தாக்கியதால் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பந்து தாக்கியதில் 17 வயது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு!!! appeared first on Oruvan.com.