கிம் ஜாங் உன் Archives - Oruvan.com

சீனா செல்லும் வடகொரியா தலைவர் – காரணம் என்ன?
வடகொரியா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து நட்புறவில் இருந்து வருகின்றன.

இந்நிலையில், சீனா தலைநகரம் பீஜிங்கில் வரும் வாரத்தில் இரண்டாம் உலகப்போர் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் இராணுவ அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக ரஷிய ஜனாதிபதி புதின் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ரஷிய ஜனாதிபதி புதின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார். ஆனால் வடகொரியா தலைவரின் வருகை உடனடியாக உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், வடகொரியா அரசாங்கம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சீனாவின் அழைப்பை ஏற்று இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வார் என உறுதிப்படுத்தப்பட்டது.

அச்சமயத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சீனா செல்லும் வடகொரியா தலைவர் – காரணம் என்ன? appeared first on Oruvan.com.

கிம்மை மீண்டும் சந்திக்க விரும்பும் ட்ரம்ப்
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திப்பேன் என்று நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் முதன் முறையாக வெள்ளை மாளிகைக்கு நேற்று வருகை தந்தார். அப்போது பேசிய ட்ரம்ப், “ ராஜதந்திரத்தை ஆதரிக்கும் முற்போக்கான கொள்கையுடைய தென் கொரிய ஜனாதிபதி லீயைப் போலவே, வட கொரியா உறவில் எனது நிலைப்பாடும் உள்ளது.

எனது முதல் பதவிக்காலத்தில் மூன்று முறை கிம் ஜாங் உன்னை சந்தித்தேன். மீண்டும் ஒரு நாள் நான் அவரைப் பார்ப்பேன். அவரை சந்திப்பதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர் என்னிடம் மிகவும் நன்றாக நடந்துகொண்டார். எனவே அவருடன் இந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நம்புகிறேன்.

நானும், கிம்மும் எங்கள் சந்திப்புகளின் போது மிக அன்பாக பழகினோம். இது பதற்றங்களைக் குறைத்தது, ஆனால் நீடித்த ஒப்பந்தத்தை உருவாக்க தவறிவிட்டது” என்றார்

இதனைத் தொடர்ந்து பேசிய தென் கொரிய ஜனாதிபதி லீ, “ ட்ரம்ப் அமெரிக்காவை அமைதியைக் காக்கும் நாடாக அல்ல, மாறாக அமைதியை உருவாக்கும் நாடாக மாற்றியுள்ளார். ட்ரம்ப், கிம் ஜாங் உன்னுடனான உங்கள் சந்திப்புக்கும், வட கொரியாவில் ட்ரம்ப் டவர் கட்டுவதற்கும், அங்கு நீங்கள் கோல்ஃப் விளையாடுவதற்கும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். கிம்மும் உங்களுக்காக காத்திருப்பார்.

வடகொரியா விரைவில் வருடத்திற்கு 10 முதல் 20 அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய முடியும். அழுத்தம் மற்றும் தடைகள் இருந்தபோதிலும் அவர்களால் அமெரிக்காவை தாக்கக்கூடிய ஏவுகணையைகூட உற்பத்தி செய்ய முடியும். கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் வடகொரியா வைத்திருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது கடினமான உண்மை” என்றார்.

The post கிம்மை மீண்டும் சந்திக்க விரும்பும் ட்ரம்ப் appeared first on Oruvan.com.

எதிரிகளுக்கு எச்சரிக்கை’ – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

எதிரிகளுக்கு எச்சரிக்கை என்ற பெயரில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது.

இந்த ஏவுகணை சோதனையை கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மேற்பார்வையில் நடத்தப்பட்டதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் கொரிய கூட்டுப் படைத் தலைவர்களும் ஏவுகணை சோதனையை உறுதிப்படுத்தினர். ஏவுகணை கண்காணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரியாவின் பாதுகாப்பு சூழலுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை எச்சரிப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கொரியா தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை 1,587 கிலோமீட்டர் பயணம் செய்து 130 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு அதன் இலக்கை அடைந்ததாக கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை குறித்து கிம் ஜாங்-உன் திருப்தி வெளியிட்டுள்ளார்.

போர் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அணு பாதுகாப்பு கூறுகளின் செயல்திறனை மதிப்பிடுவதன் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் வட கொரியா தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் வடகொரியா நடத்தும் நான்காவது ஏவுகணை சோதனை இதுவாகும். டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு நடத்தப்படும் இரண்டாவது சோதனை இதுவாகும்.

கிம் ஜாங்-உன்னுடன் தான் உடன்படுவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். மேலும் கிம் ஜாங் உன் ஒரு புத்திசாலி நபர் என்றும் டிரம்ப் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post எதிரிகளுக்கு எச்சரிக்கை’ – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை appeared first on Oruvan.com.

ரஷ்யாவுக்காகப் போராடிய 100 வட கொரிய வீரர்கள் பலி
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர்களம் கண்டுள்ள சமார் 100க்கும் மேற்பட்ட வடகொரிய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியோங்-க்யூன் இன்று தெரிவித்துள்ளார்.

“டிசம்பரில், வட கொரிய துருப்புக்கள் போரில் ஈடுபட்டதாகவும், இதன் போது குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர்,” என்று தென் கொரியாவின் உளவு நிறுவனம் அளித்த விளக்கத்திற்குப் பின்னர் லீ தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான தனது போர் முயற்சிகளுக்கு உதவ ரஷ்யா சுமார் 10,000 வட கொரிய வீரர்களை நியமித்ததாக மேற்கத்திய ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் உக்ரைன் படைகளின் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா, குர்ஸ்க் பகுதி உட்பட ரஷ்யப் படைகளை வலுப்படுத்த வட கொரிய துருப்புக்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும, “காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,000 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று லீ மேலும் கூறினார்.

இந்நிலையில், ரஷ்யாவில் இழப்புகள் இருந்தபோதிலும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் ஒரு புதிய சிறப்பு நடவடிக்கைப் படைக்கு பயிற்சி அளிக்கத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.

இறந்த வட கொரிய வீரர்களின் முகங்களை ரஷ்யா எரிக்கிறதா?

குர்ஸ்க் பிராந்தியத்தின் முன்னணியில் உள்ள பல கிராமங்களில் ரஷ்யாவிற்காகப் போராடும் வட கொரிய துருப்புகள் குறைந்தது 30 பேர் உயிரிழந்ததாகவும் கடந்த திங்களன்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அளவிலான வட கொரிய இழப்புகளை உக்ரைன் விவரித்தது இதுவே முதல் முறை ஆகும்.

உயிரிழந்த வடகொரிய துருப்புகளின் உடல் குர்ஸ்க் பகுதியில் அடக்கம் செய்வதற்கு முன்பு அவர்களின் அடையாளங்களை மறைக்க ரஷ்ய வீரர்கள், உயிரிழந்தவர்கள் முகங்களை எரிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அண்மையில் தெரிவித்திருந்தார்.

ரஷ்யா, வட கொரிய வீரர்களின் இருப்பை மறைக்க முயற்சிப்பதாகவும், பயிற்சி மற்றும் தயாரிப்புகளின் போது கூட அவர்கள் தங்கள் முகங்களைக் காட்டுவதைத் தடை செய்வதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பென்டகன் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர், வட கொரியப் படைகளிடையே கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் தகவல்கள் அமெரிக்காவிடம் இருப்பதாக உறுதிப்படுத்தினார்.

The post ரஷ்யாவுக்காகப் போராடிய 100 வட கொரிய வீரர்கள் பலி appeared first on Oruvan.com.