கின் போயோங் Archives - Oruvan.com

அநுரவுக்கு சீன ஜனாதிபதி அனுப்பியுள்ள அதிர்ஷ்ட செய்தி – மகிழ்ச்சியில் அரசாங்கம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது சீன பயணத்தில் முன்வைக்கும் ஒரு திட்டத்தை முழுமையாக செய்துக்கொடுக்க சீனா தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் சீன பயணம் தொடர்பிலான திட்டங்களை வகுக்கும் நோக்கில் இலங்கை வந்திருந்த சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் பிரதித் தலைவர் கின் போயோங், சீன ஜனாதிபதியின் இந்த செய்தியை அநுரகுமார திசாநாயக்கவிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 15ஆம் திகதிமுதல் 17ஆம் திகதிவரை இரண்டு நாள் பயணமாக ஜனாதிபதி இந்தியா சென்றிருந்த தருணத்தில் கின் போயோங் இலங்கை வந்திருந்ததுடன், அரசாங்கத்தின் முக்கிய தரப்பினருடன் பேச்சுகளில் ஈடுபட்டிருந்தார்.

கின் தலைமையிலான குழு ஜே.வி.பி தலைமையகத்திற்கும் சென்று கலந்துரையாடல்களின் ஈடுபட்டிருந்தது. இதுகுறித்து ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் இடையில் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார்.

ஜனாதிபதி இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும், கின் தலைமையிலான சீனக் குழுவினர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்தனர். அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் விசேட செய்தியொன்றையும் கின் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஜனாதிபதி தமது சீன பயணத்தின் போது விரும்பும் எந்தவொரு புதிய திட்டத்தையும் முன்வைக்க முடியும் எனவும், அதனை நடைமுறைப்படுத்த சீன அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறியுள்ளார்.

இதுவரை எந்தவொரு ஜனாதிபதியும் பெற்றுக் கொள்ளாத தனித்துவமான இந்த யோசனையை சீனா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் முன்வைத்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக சீன பயணத்தின் போது முன்வைக்கப்படவுள்ள திட்ட முன்மொழிவு தொடர்பில் அரசாங்கத்திற்குள் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், கடவத்தைக்கும் மீரிகமவுக்கும் இடையில் தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ள மத்திய அதிவேக வீதியின் எஞ்சிய பகுதியை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் சீன பயணத்தில் போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பிரிவுக்குப் பொறுப்பான சீன நிறுவனத்துக்கு அரசு பெருமளவு இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதால் அந்தப் பணி முடங்கியுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் சீனாவிடமிருந்து அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளதாகவும் இதன்மூலம் இழப்பீட்டுத் தொகையை முற்றாக இடைநிறுத்த அல்லது இழப்பீட்டுத் தொகையை கணிசமான அளவு குறைத்து கடவத்தை – மீரிகம அதிவேக வீதியின் எஞ்சிய பகுதியை நிர்மாணிப்பதற்கு சீனா இணங்கியுள்ளதாக தெரியவருகிறது.

மேலும், பொருளாதார நெருக்கடி காரணமாக கைவிடப்பட்ட கண்டி வரையிலான மத்திய அதிவேக பாதையின் முழுப் பகுதியையும் நிர்மாணிப்பது குறித்தும் சீனா அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடியுள்ளது. ஜனாதிபதியின் சீன பயணத்தில் மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் தொடர்பில் சாதகமான பதில் சீனாவிடமிருந்து  கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

மேலும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கும் சீனாவின் திட்டம், ஹம்பாந்தோட்டையில் கைத்தொழில் வலயத்தை நிறுவுவதற்கான சீனா முன்மொழிந்துள்ள திட்டம் குறித்தும் இந்தப் பயணத்தில் கலந்துரையாடப்படும் எனவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சீனாவுடன் இலங்கைக்கு ஏற்பட்டுவரும் நெருக்கம் தொடர்பில் இந்தியா தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அநுரவின் சீன பயணம் தொடர்பில் இந்தியா உன்னிப்பாக அவதானித்துள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.

சுப்ரமணியம் நிஷாந்தன்

The post அநுரவுக்கு சீன ஜனாதிபதி அனுப்பியுள்ள அதிர்ஷ்ட செய்தி – மகிழ்ச்சியில் அரசாங்கம் appeared first on Oruvan.com.

இந்திய, சீன உறவில் இலங்கையின் போக்கு – இராஜதந்திர மட்டத்தில் அவதானம்
இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவின் இராஜதந்திர நெருக்கடிக்குள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சிக்கியுள்ளதால் எடுக்கப்படும் சில முடிவுகளை சில மணித்தியாலங்களுக்குள்ளேயே மாற்றியமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணம் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமான போது, ​​சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் பிரதித் தலைவர் கின் போயோங்(Qin Boyong) இலங்கை வந்திருந்தார். அநுர, இந்தியாவில் சந்திப்புகளை நடத்திக்கொண்டிருந்த தருணத்தில் கின் இலங்கை அரசாங்கத்தின்  அமைச்சர்களைச் சந்தித்ததுடன், இந்தியாவில் அநுரவின் நடவடிக்கைகளையும் கண்காணித்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, அநுரவின் சொந்த ஊரான அநுராதபுரம் தம்புத்தேகமவில், சீன நிதியுதவியில் இடம்பெறும் திட்டத்திற்கான வைபவம் ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, ஏனைய நாடுகளுடனான இலங்கை உறவுகளை தொடரும் அதேவேளை, சீனாவுடனான ஜே.வி.பி.யின் உறவு பலமாக பலமாக இருக்கும். ஜே.வி.பி வேறு எந்த நாட்டுடனும் உறவுகளைப் பேணவில்லை எனக் கூறியிருந்தார்.

அரசாங்கம் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா மற்றும் சீனாவுடன் சமமான உறவை பேணும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், கட்சி ரீதியாக ஜே.வி.பி சீனாவுடன் பலமான உறவை கட்டியெழுப்ப விரும்புகிறது.

அநுர இந்தியாவில் இருக்கும் தருணத்தில் அவரது அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சர், அநுரவின் பிறந்த இடத்தில் சீன அதிகாரிகள் முன்னிலையில் இவ்வாறானதொரு அறிவிப்பை விடுத்தமை குறித்து இராஜதந்திரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர். அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார இந்தியாவிலிருந்து திரும்பியதும் கின் போயோங்குடன் சந்திப்பொன்றையும் நடத்தியிருந்தார்.

அநுரவுடனான சந்திப்பில் இலங்கையில் தடைசெய்யப்பட்ட கடல்சார் ஆராய்ச்சியை மீள ஆரம்பிக்க சீனா எதிர்பார்த்துள்ளதாக கின் கருத்து வெளியிட்டிருந்தார். இந்தச் சந்திப்பை தொடர்ந்து இடம்பெற்றிருந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச்சந்திப்பில், ஆய்வு கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்தார்.

நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவிப்புக்கு பின்னர்  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டிருந்தார். இதன்போது இந்த விவகாரம் பேசப்பட்டிருக்கலாம் என இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிந்ததுடன், இந்தச் சந்திப்பின் பின்னர் இந்தியப் பயணம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகச்சந்திப்பில், சர்வதேச ஆராய்ச்சி கப்பல்களின் வருகைக்கான தடைகளை நீக்க எவ்வித தீர்மானமும் அரசாங்கம் எடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் இந்தியாவை போன்று அமெரிக்காவின் அழுத்தமும் இருக்கலாம் என்றும் இலங்கை அரசாங்கம் கூறும் சில விடயங்களை மீள மாற்றிக்கொள்வது குறித்து இராஜதந்திரிகள் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

குறிப்பதாக இந்தியப் பயணம் மற்றும் இருநாட்டு கூட்டறிக்கையில் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு வருகின்றமை இராஜதந்திர ரீதியில் அரசாங்கம் வழங்கும் உறுதிமொழிகளுக்கு எதிரானதாக இருப்பதாகவும் இதுகுறித்து இராஜதந்திரிகள் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

சுப்ரமணியம் நிஷாந்தன்

The post இந்திய, சீன உறவில் இலங்கையின் போக்கு – இராஜதந்திர மட்டத்தில் அவதானம் appeared first on Oruvan.com.