காஸா Archives - Oruvan.com

காஸாவுக்கு உதவிப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல்
காஸாவுக்கு மனிதநேய உதவிப் பொருள்களையும் ஆர்வலர்களையும் ஏற்றிச் சென்ற கப்பல் மீது நேற்று வெள்ளிக்கிழமை (மே 2) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அந்தக் கப்பல் மால்டாவுக்கு அருகே அனைத்துலகக் கடற்பரப்பில் இருந்தபோது ஆளில்லா வானூர்திகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அனைத்துலக அரசு சாரா அமைப்பான ‘த ஃப்ரீடம் ஃப்லோட்டில்லா கோயலிஷன்’ கூறியது.

ஒரு கப்பல் தீப்பற்றி எரிவதைக் காட்டும் காணொளியை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் தாக்குதலுக்கு யார் காரணமாக இருக்கக்கூடும் என்ற தகவலை அது வெளியிடவில்லை.

தாக்குதலில் யாரும் காயமடைந்ததாக உடனடித் தகவல் இல்லை.

“கப்பலின் மின்னுற்பத்திக் கருவியைக் குறிவைத்து ஆளில்லா வானூர்திகள் தாக்குதல் நடத்தின. அந்தக் கப்பல் இப்போது மூழ்கிவிடக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதில் அனைத்துலக மனித உரிமை ஆர்வலர்கள் 30 பேர் பயணம் செய்கின்றனர்,” என்று அமைப்பு அதன் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.

மால்டாவுக்குக் கிழக்கே 17 கடல்மைல் (nautical mile) தொலைவில் இருந்தபோது அந்தக் கப்பல் உதவி கோரி அழைப்பு விடுத்ததாகவும் அதையடுத்து மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் உதவிக் கப்பலை அனுப்பியதாகவும் அமைப்பு கூறியது.

‘த ஃப்ரீடம் ஃப்லோட்டில்லா கோயலிஷன்’ அமைப்பு காஸாவில் இஸ்‌ரேல் நடத்தும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகிறது.

The post காஸாவுக்கு உதவிப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல் appeared first on Oruvan.com.

அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து இஸ்ரேல் படுகொலை – காசாவில் பலி எண்ணிக்கை 244 ஆக உயர்வு
அமெரிக்காவுடன் கலந்தாலோசித்த பின்னர், ஹமாஸுடனான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாததை அடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஃபாக்ஸ் நியூஸிடம் இதனை தெரிவித்துள்ளார்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து டிரம்ப் நிர்வாகம் மற்றும் வெள்ளை மாளிகையுடன் ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

ஜனாதிபதி டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளபடி, ஹமாஸ், ஹவுத்திகள், ஈரான் இஸ்ரேலை மட்டுமல்ல, அமெரிக்காவையும் மிரட்ட முயற்சித்துள்ளதாகவும் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும் எனவும் லீவிட் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் அல்லது காசா நரகமாக மாறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்பு கூறியிருந்தார்.

ஜனவரி 19 அன்று இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதிலிருந்து, இன்று காலை, இஸ்ரேல் காசா மீது அதன் மிகவும் தீவிரமான தொடர் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.

ஜபாலியா, காசா நகரம், நுசைரத், டெய்ர் அல்-பலா மற்றும் கான் யூனிஸ் உள்ளிட்ட காசா பகுதியில் வடக்கிலிருந்து தெற்கு வரை பல்வேறு பகுதிகளை குறிவைத்து தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 244 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரமழான் மாதத்தில் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் பல பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.

இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காசா மக்களுக்கு எதிரான சியோனிச அழிப்புப் போரை மீண்டும் தொடங்குவதை எதிர்க்குமாறு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் மக்களையும், உலகின் சுதந்திர மக்களையும் ஹமாஸ் கேட்டுக் கொண்டது.

மீண்டும் போருக்குத் திரும்பும் நெதன்யாகுவின் முடிவு, போர்க் கைதிகளைப் பலியிட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் முடிவாகும். பேச்சுவார்த்தை மூலம் அடைய முடியாததை, எதிரி போர் மற்றும் அழிவு மூலம் அடைய முடியாது என்றும் ஹமாஸ் கூறியது.

The post அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து இஸ்ரேல் படுகொலை – காசாவில் பலி எண்ணிக்கை 244 ஆக உயர்வு appeared first on Oruvan.com.

பாலஸ்தீனர்களுக்கு தனி நாட்டுக்கான உரிமை உள்ளது : சிங்கப்பூர் ஆதரவு – ஐ.நா டிரம்புக்கு கண்டனம்
பாலஸ்தீனர்களுக்குச் சொந்த நாடு பெறும் உரிமை உள்ளதாக சிங்கப்பூர் தனது நீண்டநாள் கொள்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பாலஸ்தீனர்கள் தங்களுக்கு என சொந்த நாடு ஒன்றைப் பெறும் உரிமை உள்ளதாக கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்ததை கருத்தும் சுட்டப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நீண்ட நாட்களாக தொடரும் போருக்கு ஒட்டுமொத்தமான, நியாயமான, நிலைத்திருக்க கூடியதாக ஒரு தீர்வு ஏற்பட வேண்டும். அதற்கு பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகள் உருவாவதுதான் ஒரே தீர்வு எனவும் குறித்த அறிக்கையில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பாலஸ்தீன அமைப்பின் நிர்வாக, மறுசீரமைப்புத் திறனை மேம்படுத்த சிங்கப்பூர் தனது தொழில்நுட்ப உதவித் திட்டத்தின்கீழ் அந்த அமைப்புடன் செயல்படும் எனவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களை மற்ற நாடுகளில் மறுகுடியமர்த்தி, அந்தப் பகுதியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து அதை பிரான்சில் உள்ள ரிவியேரா போன்ற கடற்கரை சொகுசுத் தளமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.

டிரம்பின் இந்தக் கூற்று உலகத் தலைவர்களிடம் இருந்து கண்டனக் குரல்களை வரவழைத்தது. இது குறித்துப் பேசிய ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், இனப் பேரழிவைத் தவிர்க்குமாறும் பிரச்சினைத் தீர்ப்பதாக எண்ணி நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டாம் என்றும் டிரம்பை கேட்டுக்கொண்டார்.

“இரு நாட்டு கொள்கையை நாம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்,” என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.

The post பாலஸ்தீனர்களுக்கு தனி நாட்டுக்கான உரிமை உள்ளது : சிங்கப்பூர் ஆதரவு – ஐ.நா டிரம்புக்கு கண்டனம் appeared first on Oruvan.com.

காஸாவிலிருந்து பாலஸ்தீனா்கள் வெளியேற்றம் : டிரம்ப்பின் கருத்துக்கு வலுக்கும் எதிா்ப்பு
காஸாவிலிருந்து பாலஸ்தீனா்களை எகிப்து, கத்தாா், ஜோா்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி, அந்தப் பகுதியை ‘சுத்தப்படுத்த’ வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்கு உலகம் முழுவதும் எதிா்ப்பு வலுவடைந்துவருகிறது.

இஸ்ரேலும், பாலஸ்தீனமும் ஒன்றையொன்று அங்கீகரித்துக் கொண்டு தனித் தனி சுதந்திர நாடுகளாக செயல்படுவதே பாலஸ்தீன பிரச்சினைக்கு ஒரே தீா்வு என்ற இந்தியா உள்ளிட்ட உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளின் நிலைப்பாட்டுக்கு எதிராக டிரம்ப்பின் இந்தக் கருத்து உள்ளதால் அது கடும் விமா்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

கத்தாா்: இது குறித்து செய்தியாளா்களிடம் கத்தாா் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மஜீத் அல்-அன்சாரி கூறியதாவது,

பாலஸ்தீனா்களுக்கு அவா்களின் முழு உரிமைகளும் கிடைக்கச் செய்வதன் அவசியத்தை கத்தாா் தொடா்ந்து வலியுறுத்திவருகிறது. அந்தப் பிராந்திய பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இரு தேசத் தீா்வை மட்டுமே நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றாா் அவா்.

பிரான்ஸ்: பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் இது குறித்து செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘காஸா பகுதியிலிருந்து பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது ஏற்புடையது இல்லை. அது, சா்வதேச சட்டங்களை மிகக் கடுமையாக மீறும் செயல். இருதேசக் கொள்கைத் தீா்வை எட்டுவதற்கு அது மிகப் பெரிய தடைக் கல்லாக இருக்கும்’ என்றாா்.

ஈரான்: ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பக்காயீ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘காஸாவை சுத்தப்படுத்த வேண்டும் என்று டிரம்ப் பரிந்துரைத்துள்ளது, அமெரிக்காவின் சக்திவாய்ந்த ஆயுதங்கள், தளவாடங்கள், உளவுத் தகவல்கள், அரசியல், நிதி உதவியுடன் பாலஸ்தீனத்தில் காலனியாதிக்கத்தை நிறுவ நீண்ட காலமாக செயல்படுத்தப்பட்டுவரும் திட்டத்தின் ஓா் அங்கமாகும்.

காஸாவில் ஆக்கிரமிப்புவாதிகளால் கடந்த 15 மாதங்களாக நடத்தப்பட்ட இனப் படுகொலைகளால் அந்தப் பகுதியிலிருந்து பாலஸ்தீனா்களை துடைத்தெறிந்துவிட முடியாது. அது அவா்களின் சொந்த மண். அதைத் தக்கவைத்துக்கொள்ள மிகப் பெரிய தியாகத்தை பாலஸ்தீனா்கள் செய்துவருகின்றனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜொ்மனி: காஸாவிலிருந்து பாலஸ்தீனா்கள் வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற டிரம்ப்பின் பரிந்துரையை ஜொ்மனியும் நிராகரித்துள்ளது. இது குறித்து ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாலஸ்தீனா்கள் காஸாவிலிருந்து வெளியேற்றப்படக்கூடாது என்ற ஐரோப்பிய யூனியன், அரபுக் கூட்டமைப்பு மற்றும் ஐ.நா. அமைப்பின் கருத்துகளையே நாங்களும் பிரதிபலிக்கிறோம். காஸா பகுதியை இஸ்ரேல் நிரந்தரமாக ஆக்கிரமிப்பதை எதிா்க்கிறோம்’ என்றாா்.

காஸாவிலிருந்து தங்களை வெளியேற்றி அந்தப் பகுதியை ‘சுத்தப்படுத்த’ வேண்டும் என்று டிரம்ப் கூறியதை ஹமாஸ் அமைப்பும் பாலஸ்தீன அரசும் மிகக் கடுமையாக கண்டித்துள்ளன. இந்த விவகாரத்தில் டிரம்ப்புக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் உலக நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில் நன்றி தெரிவித்துள்ளது.

டிரம்ப்பின் இந்தக் கருத்தால் அவரின் குடியரசுக் கட்சி எம்.பி.க்களே அதிா்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, டிரம்ப் கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 15 மாத போருக்குப் பிறகு காஸா பகுதி இடிபாடுகளால் நிறைந்திருப்பதாகவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் உள்பட அனைத்தையும் ‘சுத்தம்’ செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டாா்.

அதற்காக, எகிப்து உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனா்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவா் கூறினாா்.

இலட்சக்கணக்கான பாலஸ்தீன அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ள ஜோா்தானுக்கு நன்றி கூறிய டிரம்ப், இது போதாது எனவும் இன்னும் அதிக அகதிகளை அந்த நாடு ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

பாலஸ்தீனா்கள் காஸாவிலிருந்து பிற நாடுகளில் குடியமா்த்தப்படுவது தற்காலிக ஏற்பாடாவும் இருக்கலாம், அல்லது மிக நீண்ட கால ஏற்பாடாகவும் இருக்கலாம் என்று கூறி, டிரம்ப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாா்.

The post காஸாவிலிருந்து பாலஸ்தீனா்கள் வெளியேற்றம் : டிரம்ப்பின் கருத்துக்கு வலுக்கும் எதிா்ப்பு appeared first on Oruvan.com.

போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் காஸாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்
காஸா நகரத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில மணிநேரங்களில், இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 65 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிக்குழுவிற்கு மத்தியிலான போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் பரிமாற்றம் ஆகிய ஒப்பந்தங்கள், கத்தார் நாட்டின் தலைமையில் நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) முதல் காஸா மீதான இஸ்ரேலின் போர் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஹமாஸிடம் இருந்து பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனர்களை முதற்கட்டமாக விடுவிப்பதில் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு உடன்பாடில்லை எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், ஜன.19 திகதிக்குள் இஸ்ரேல் காஸா பகுதியின் மீது நடத்திவரும் தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிந்த காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் மற்றும் உலகளவிலுள்ள அவர்களது ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று (ஜன.15) இரவு அந்த கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு பாலஸ்தீனர்கள் அவர்களது வீடுகளுக்கும் முகாம்களுக்கும் திரும்பியபோது இஸ்ரேல் காஸாவின் மீதான அதன் தாக்குதலை மீண்டும் தொடர்ந்தது.

வடக்கு காஸா பகுதி, ஷெயிக் ரட்வான் குடியிருப்புப் பகுதி, மத்திய காஸா ஆகிய இடங்களில் இஸ்ரேல் நடத்திய தரைவழி, வான்வழி மற்றும் டிரோன் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 65 பேரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அங்கு பணிபுரியும் மருத்துவப் பணியாளர்கள் இந்த தாக்குதல்களில் மொத்தம் 82 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், இந்த தொடர் தாக்குதல்களில் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதினால், பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த ஜன.1 திகதியன்று எடுக்கப்பட்ட கணக்குகளின் படி இஸ்ரேல் சிறைகளில் குறைந்தபட்சம் 10,221 பாலஸ்தீனர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இதில் இஸ்ரேல் ராணுவத்தினால் போர் காலத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் காஸாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் appeared first on Oruvan.com.

காசா காவல்துறைத் தலைவர் இஸ்ரேலின் தாக்குதலில் பலி
காசா காவல்துறை இயக்குநர் ஜெனரல் மஹ்மூத் சலா இஸ்ரேலால் கொல்லப்பட்டார். தெற்கு காசாவில் இஸ்ரேலால் ‘பாதுகாப்பான பகுதி’ என அறிவிக்கப்பட்ட அல்-மவாசி அகதிகள் கூடாரங்கள் மீது போர் விமானம் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

நேற்று இரவு நடந்த தாக்குதலில் மஹ்மூத் சலா உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பொலிஸ் மா அதிபரின் உதவியாளர் ஹுஸாம் முஸ்தபா ஷவானும் கொல்லப்பட்டதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதே நேரத்தில், ஜபாலியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் புதன்கிழமை நடந்த தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வடக்கு காசா கடுமையான முற்றுகைக்கு உட்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வடக்கு காசாவில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு தடுப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கனமழை மற்றும் பலத்த காற்று காசாவில் உள்ள முகாம்களைத் தாக்கியுள்ளதுடன் பொது மக்களின் வாழ்க்கையை மேலும் கடினமாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

காசாவின், தக்ஷினா கான் யூனுஸ், டீர் உல் பலாஹ் ஆகிய இடங்களில் மழை காரணமாக நீர் மட்டம் உயர்ந்ததால் 1,500 க்கும் மேற்பட்ட குடிசைகள் பொது மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாகியுள்ளதாக சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

The post காசா காவல்துறைத் தலைவர் இஸ்ரேலின் தாக்குதலில் பலி appeared first on Oruvan.com.