கானாவில் ஹெலிகொப்டர் விபத்து Archives - Oruvan.com

கானாவில் ஹெலிகொப்டர் விபத்து – இரண்டு அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி
மேற்கு ஆபிரிக்க நாடான கானாவில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் இருவர் உள்பட 8 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து, நேற்று (6) காலை 9.12 மணியளவில் (உள்ளூர் நேரப்படி), அந்நாட்டின் அஷாந்தி மாகாணத்தில் உள்ள ஒபுவாசி நகரத்துக்கு, இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று புறப்பட்டுள்ளது.

இந்த ஹெலிகொப்டரில் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் 2 பேர் உள்பட 8 பேர் பயணித்ததாகக் கூறப்படும் நிலையில், புறப்பட்ட சில நிமிடங்களில், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள வனப்பகுதியில், அந்த ஹெலிகொப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், கானாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் எட்வார்டு ஒமானே பொவாமா, சுற்றுச்சூழல் அமைச்சர் அல்ஹாஜி முர்தாலா முஹம்மது உள்பட அந்த ஹெலிகொப்டரில் பயணித்த 8 பேரும் பலியானதாக, அந்நாட்டு அரசின் செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

The post கானாவில் ஹெலிகொப்டர் விபத்து – இரண்டு அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி appeared first on Oruvan.com.