காங்கேசன்துறை - நாகை கப்பல் போக்குவரத்து Archives - Oruvan.com

காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை: நவம்பர் மாதம் இடைநிறுத்தப்படுகிறது
தமிழ் நாடு நாகப்பட்டினம் மற்றும் யாழ். காங்கேசன்துறைக்கிடையேயான பயணிகள் கப்பல் சேவை நவம்பர் மாதம் இடை நிறுத்தப்படும் என அந்த கப்பல் சேவையை நடத்திவரும் சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழக்கம் போல் சிவகங்கை கப்பல் சேவை நடைபெறும் என்றும் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்..

சுபம் கப்பல் நிறுவனம் நாகை துறைமுகம் மற்றும் காங்கேசன்துறைக்கிடையே சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையை மேற்கொண்டு வருகிறது.

இந்தக் கப்பலில் கடந்த ஓராண்டில் 20,000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். நாளுக்கு நாள் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புதிய கப்பல் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக புதிய கப்பல் சீனாவில் இருந்து கொண்டுவரப்படவுள்ளது.அந்தக் கப்பல் நவம்பர் மாதம் இறுதிக்குள் நாகை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்குப் பருவமழை சில நாள்களில் தொடங்கவுள்ளதால், பருவநிலை மாற்றம் ஏற்படும். இதனால், கடல் சீற்றம் மற்றும் சூரைக்காற்று காரணமாக கப்பல் சேவையை மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது.இதனால் நவம்பர் மாதம் முழுவதும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படும்.

நவம்பர் மாதத்தை தவிர்த்து, டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழக்கம் போல் சிவகங்கை கப்பல் சேவை நடைபெறும் என்றும் சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் சுந்தர்ராஜன் மேலும் தெரிவித்தார்.

The post காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை: நவம்பர் மாதம் இடைநிறுத்தப்படுகிறது appeared first on Oruvan.com.

காங்கேசன்துறை – நாகை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்
நாகை – இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை நேற்று (18) மீண்டும் ஆரம்பமானதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கடந்த 2023 ஒக்டோபா் முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. சுபம் என்ற தனியாா் நிறுவனம் மூலம் ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் சனிக்கிழமைகளை தவிர ஏனைய நாள்களில் இயக்கப்பட்டு வருகிறது.

பருவநிலை மாற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், கடல் சீற்றம் மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து ஜூன் 13ஆம் திகதி முதல் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை திரும்பப் பெற்றது. இதையடுத்து, காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை நேற்று (18) காலை வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, சிவகங்கை கப்பல் 95 பயணிகளுடன் புறப்பட்டு காங்கேசன்துறைக்கு சென்றடைந்து. பின்னா், இலங்கையிலிருந்து 108 பயணிகளுடன் பிற்பகல் புறப்பட்ட கப்பல் மாலையில் நாகை துறைமுகத்துக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காங்கேசன்துறை – நாகை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம் appeared first on Oruvan.com.