கர்நாடகா Archives - Oruvan.com

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா 2026-27 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது பேசியவர், கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

மொபைல் போன் மற்றும் சமூக ஊடகங்களுக்கு சிறுவர்கள் அடிமையாவதைத் தடுக்கவும், அவர்களின் மனநலத்தை பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக பெங்களூருவில் நடந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில் இந்தத் தடையை எப்படி அமுல்படுத்துவது என்பது குறித்து நிபுணர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

“புத்தகத்தை ஏந்து, மொபைலை கைவிடு” என்ற பெயரில் மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பிரசாரத்தை கர்நாடக அரசு முன்னெடுத்துள்ளது.

முன்னதாக சிறார்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை appeared first on Oruvan.com.

கர்நாடகாவில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் உடல் கருகி பலி
கர்நாடக மாநிலத்தில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்தில், பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூருவிலிருந்து கோகர்ணா நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து , சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 48-ல் சென்று கொண்டிருந்தது.

இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில், எதிர் திசையில் வந்த கொள்கலன் லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீடித் தடுப்பைத் தாண்டி வந்து பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.

லொறி மோதிய வேகத்தில் பேருந்தின் எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறியதால், பேருந்து உடனடியாகத் தீப்பற்றியது. பேருந்து முழுவதும் தீ மளமளவெனப் பரவியதால், ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பயணிகளால் உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் பலர் தீயில் சிக்கி உடல் கருகினர்.

இந்த விபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளன.

தீக்காயமடைந்த மற்றும் படுகாயமடைந்த சுமார் 12-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு, சித்ரதுர்கா மற்றும் துமகூரு மாவட்ட வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பொலிஸார், நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். லொறி ஓட்டுநரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சித்ரதுர்கா பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலையில் நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் கர்நாடகா மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

The post கர்நாடகாவில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் உடல் கருகி பலி appeared first on Oruvan.com.