கரூர் Archives - Oruvan.com

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்திக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் நேற்று இடம்பெற்ற பொது மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கரூரில் பாதுகாப்பு கொடுக்க தவறியதால் 41 பேர் உயிர் இழந்துள்ளனர். மக்களை சந்திக்க தாமதமாக வந்ததே விஜய் செய்த மிகப் பெரிய தவறு. விஜய் கடமை உணர்வை தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கரூர் சம்பவத்தில் இரு பக்கமும் தவறுகள் உள்ளன. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசும் தவறி விட்டது. தொண்டர்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய விஜய்யும் தவறு செய்து விட்டார். இதில் மாற்று கருத்து இல்லை.

விஜயகாந்த்தை அண்ணன் என்று கூறும் விஜய், அண்ணன் என்ன செய்தார் என்பதை பார்த்து செயல்பட வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் பிரசார கூட்டம் நடந்த இடத்தில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் தொண்டர்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டும்.

தலைவர் என்பவர் எப்போதும் வாகனத்தில் உள்ளேயே அமர்ந்து இருக்க கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும். நிதியுதவியையும் நேரில் கொடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் மேலும் தெரிவித்துள்ளார்.

The post கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை appeared first on Oruvan.com.

கரூர் சம்பவம் – முதல்முறையாக மௌனம் கலைந்தார் விஜய்
தனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவத்திற்கு பின்னர் முதல் முறையாக பேசியுள்ள விஜய் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் திகதி தமிழக் வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு வருகை தந்தார்.

அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவர்களில் 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பிலர் தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது.

பரப்புரைக் கூட்டம் நடைபெற்ற இடம், கரூர் அரச வைத்தியசாலை, உயிரிழந்தவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தியுள்ளார்.

அதேநேரத்தில், சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றில் தமிழக் வெற்றிக் கழகம் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

விஜய் பிரசாரம் செய்ய தடை விதிக்குமாறு கோரியும் ஒரு தரப்பு நீதிமன்றை நாடியுள்ளது. இந்நிலையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“என் வாழ்க்கையில் இப்படி ஒரு வலி மிகுந்த நேரத்தை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. மனது முழுக்க வலி.. கரூரில் தவெக எந்த தவறும் செய்யவில்லை.

தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். என்னை பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். வீட்டில் அல்லது அலுவலகத்தில்தான் இருப்பேன். .

இனி மக்கள் பாதுகாப்பே முக்கியம். இனி பாதுகாப்பான இடங்களையே கேட்போம். எனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும்.

என்னுடைய வலிகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், மற்ற கட்சி தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.5 மாவட்டங்களில் பிரசாரம் செய்தேன். கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது?

பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை. சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி.

விரைவில் அனைத்து உண்மையும் வெளிவரும். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பேன்.” என மேலும் தெரிவித்துள்ளார்.

The post கரூர் சம்பவம் – முதல்முறையாக மௌனம் கலைந்தார் விஜய் appeared first on Oruvan.com.

கரூர் சம்பவம் – பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு
தமிழகத்தின் கரூர் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் குறித்த சம்பவத்தில் 82 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று தமிழகத்தில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மாநிலம் தழுவிய கடையடைப்பில், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்பதால் குற்றப் புலனாய்வு விசாரணை வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அங்கீகாரத்தையே ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த இரண்டு மனுக்களின் மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

கரூரில் நேற்று முன்தினம் நடிகர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கரூர் அரச வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என தமிழக வெற்றிக் கழகம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது குறித்து வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே, கரூர் கூட்டத்தின்போது நிபந்தனைகளை பின்பற்றவில்லை என்றும் இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணமாக தவெக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியும் மதுரை உயர் நீதிமன்றில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனஃ

கரூர் துயர சம்பவத்துக்கு காரணமான நடிகர் விஜய் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையும் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கரூர் சம்பவம் – பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு appeared first on Oruvan.com.

கரூர் சம்பவம் – விஜய் கைது செய்யபடுவாரா?
தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கைது செய்யப்படலாம் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து ஆண்டு தமிழகத்தின் சட்டசபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களையும், மக்கள் சந்திப்புகளையும் முன்னெடுத்துள்ளன.

குறிப்பாக ஆளும் கட்சியான தி.மு.க, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க மற்றும் பெறும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் விஜய்யின் த.வெ.க ஆகிய கட்சிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் மக்கள் சந்திப்பு நடத்தியிருந்தார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

இந்நிலையில், அதிக மக்கள் தொகை காரணமாக பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கில் 50க்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 10 சிறுவர்கள் உள்ளிட்ட 39 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இதற்கு முன்னர் மத நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட நெரிசலில் தான் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகளவில் நடந்து இருக்கிறது. ஆனால் ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இவ்வளவு பேர் பலியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஏற்கனவே ஆந்திராவில் கடந்த 2022ஆம் ஆண்டு நெல்லூர் கண்டுகூரில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி எட்டுப் பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கரூரில் நடந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் விஜய் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கட்சி தலைவரே பொறுப்பு என உயர் நீதிமன்றம் ஷகூறியிருந்தது.

இந்தநிலையில் தான் கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 39 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனால் விஜய் உள்பட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, விஜய் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post கரூர் சம்பவம் – விஜய் கைது செய்யபடுவாரா? appeared first on Oruvan.com.