கட்டுநாயக்க விமான நிலையம் Archives - Oruvan.com

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தன்னியக்க கடவுச்சீட்டு சோதனை அமைப்பு திறப்பு
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) முதலாவது தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு E-Gate முறைமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், விமான நிலையத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு முறைமையை வலுப்படுத்துவதையும், டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி நடைபெற்றது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய ஆகியோர் இணைந்து இந்த புதிய முறைமையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

இந்தத் திட்டம் ஜப்பானிய அரசாங்கத்தின் 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (IOM) இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வில் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமடா (Akio Isomata) மற்றும் IOM அமைப்பின் இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் கிரிஸ்டின் பார்கோ (Kristin Parco) உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அமைச்சர் உரையாற்றுகையில், இந்த நவீனமயமாக்கல் திட்டமானது இலங்கையை சர்வதேச தரத்திற்கு இணையாக கொண்டு செல்வதற்கும், பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான பயணச் சேவைகளை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள ஒரு முக்கிய நடவடிக்கை எனக் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் நிலையான அபிவிருத்திக்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்தும் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என ஜப்பானிய தூதுவர் இதன்போது உறுதியளித்தார்.

இந்த E-Gate முறைமையானது தெற்காசிய பிராந்தியத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு வசதிகளை நவீனப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

The post கட்டுநாயக்க விமான நிலையத்தில் தன்னியக்க கடவுச்சீட்டு சோதனை அமைப்பு திறப்பு appeared first on Oruvan.com.

போலியான கடவுச்சீட்டுடன் இலங்கைக்குள் நுழைய முயன்றவர் நாடுகடத்தப்பட்டார்
போலியான பிரேசிலிய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டைச் சேர்ந்த ஒருவரை இன்று (23) குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 35 வயதான செனகல் நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.

சந்தேகநபர் இன்று காலை 05.45 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-218 மூலம் கட்டாரின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

இதனையடுத்து, அவர் விமான நிலைய குடிவரவு கவுண்டருக்குச் சென்று தனது பிரேசிலிய கடவுச்சீட்் வழங்கினார்.

அங்கு பணிபுரியும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரி கடவுச்சீட்டு குறித்து சந்தேகம் அடைந்து, அனைத்து ஆவணங்களுடன் அவரை எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் பரிந்துரைத்தார்.

அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளில் பிரேசிலிய கடவுச்சீட்டு போலியானது என்பது தெரியவந்தது.

பின்னர், அவர் கொண்டு வந்த பொருட்களை ஆய்வு செய்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவரது உண்மையான செனகல் கடவுச்சீட்டையும், நேபாளத்தின் காத்மாண்டுவுக்கான விமான டிக்கெட்டையும் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, செனகல் நாட்டைச் சேர்ந்தவரை, அவர் வந்த கத்தாரின் தோஹாவிற்கு நாடு கடத்துவதற்காக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post போலியான கடவுச்சீட்டுடன் இலங்கைக்குள் நுழைய முயன்றவர் நாடுகடத்தப்பட்டார் appeared first on Oruvan.com.

சொகுசு பஸ்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் பாதுகாப்புப் பிரிவின் வேண்டுகோளுக்கு அமைய சொகுசு பஸ்கள் கட்டுநாயக்க விமான நிலைத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

187 வழித்தடத்தில் இயங்கும் கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பஸ்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்குள் பிரவேசிப்பதற்கு விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

விமானப் பயணிகளின் வசதிக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிறுவனம் அறிவித்துள்ளது. என்றாலும், விமான நிலையத்தில் தரித்து நின்று பஸ்கள் சேவையை இயக்க முடியாது எனவும் குறித்த நிறுவனம் கூறியுள்ளது.

The post சொகுசு பஸ்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி appeared first on Oruvan.com.

விமான நிலையத்தில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்
சர்வதேச விமான நிலைய அமைப்புகளுக்கு ஏற்ப கட்டுநாயக்க விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என சிவில் விமான சேவைகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்துடன், விமான நிலைய ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு விரைவில் தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்கும் நோக்கில் விமான நிலைய வளாகத்தில் கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தற்போது நிலவும் பிரதான பிரச்சினையாக விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க இயலாமையே என அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் பல்வேறு முன்மொழிவுகள் அமுல்படுத்தப்பட்ட போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படும் போது சட்ட விரோதமான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் காரணமாக 2023ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட வேண்டிய பிரதான திட்டங்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் ஜனக ருவன் கொடித்துவக்குவும் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post விமான நிலையத்தில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் appeared first on Oruvan.com.