கடவுச்சீட்டு Archives - Oruvan.com

உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு பின்னடைவு
ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் சமீபத்திய தரவரிசையில், இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்து உலக அளவில் 98வது இடத்தைப் பிடித்துள்ளன.

தற்போதைய இலங்கை கடவுச்சீட்டை கொண்டு உலகில் 41 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்ல பயணம் செய்ய முடியும்

கடந்த செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட குறியீட்டில் இலங்கை கடவுசீட்டு 97வது இடத்தில் இருந்தது.

2024 ஆம் ஆண்டில் 96வது இடத்தில் இருந்த இலங்கை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐந்து இடங்கள் முன்னேறி 91வது இடத்தைப் பிடித்ததன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருந்தது.

எவ்வாறாயினும், உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற அங்கிகாரம் சிங்கப்பூருக்கு கடவுச்சீட்டிற்கு கிடைத்துள்ள, அந்நாட்டு கடவுச்சீட்டை கொண்டு 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

தென் கொரியா (190) இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் ஜப்பான் (190) மூன்றாவது இடத்தில் உள்ளது.

அண்டை நாடான இந்தியாவும் ஐந்து இடங்கள் சரிந்து 85வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடவுச்சீட்டை கொண்டு 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

தெற்காசிய நாடுகளான வங்கதேசம் 100வது இடத்திலும், பாகிஸ்தான் 103வது இடத்திலும் உள்ளன.

ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது, அதன் குடிமக்கள் விசா இல்லாமல் 24 நாடுகளுக்கு மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு பின்னடைவு appeared first on Oruvan.com.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இணையவழி கடவுச்சீட்டு – அமைச்சரவை முடிவுகள்
– நீண்டதூர சேவைக்காக 5 புகையிரத எஞ்சின்கள் கொள்வனவு

– குருதிச்சோகை நோயாளிகளுக்கு 400,000 தடுப்பூசி குப்பிகள்

– இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகளுக்கு வரி விதிப்பு

வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதுப்பணி குழுக்கள்/அலுவலகங்கள் மூலம் இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்களை விண்ணப்பிப்பதற்கான கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 8 தீர்மானங்களுக்குஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதுப்பணிக்குழுக்கள்/அலுவலகங்கள் மூலம் நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டுக்களை விண்ணப்பிப்பதற்கான முறைமையை துரிதப்படுத்துவதற்காக குறித்த செயற்பாடுகளை நிகழ்நிலையாக மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு பெறுதல் தொடர்பான முன்மொழிவு புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்புக்கு (IOM) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 20 தூதுப்பணிக்குழுக்கள்/அலுவலகங்கள் உள்ளடங்கும் வகையில் உயிர்க்குறிகள் சேரிப்பு நிலையம் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்களை வழங்குதல், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் நிகழ்நிலையில் தொடர்பு கொள்வதற்கான வசதிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைவதற்கு உரிய முறைமைகள்/மென்பொருட்களின் அபிவிருத்தி மற்றும் தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்குவதற்கான கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு தேவையான நிதியுதவியை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.

குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம்,வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் டிஜிட்டல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி துரிதமாகவும், இலகுவாகவும் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கமைய, அடையாளங் கண்டுள்ள 20 இலங்கைக்கான வெளிநாட்டு தூதுப்பணிக்குழுக்கள்/அலுவலகங்கள் மூலம் நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச் சீட்டுக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கருத்திட்டத்தை இவ்வாண்டு தொடக்கம் அமுல்படுத்துவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. இலங்கையின் தேசிய இணையவழிப் பாதுகாப்பு மூலோபாயம்: 2025 – 2029

2018 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இலங்கையின் முதலாவது தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு மூலோபாயம் 2019 ஆண்டு தொடக்கம் 2023 ஆண்டு வரை அமுல்படுத்தப்பட்டது. இலங்கை கணணி அவசர பதிலளிப்புக் குழுவினால் (Sri lanka CERT) முதலாவது இணையவழிப் பாதுகாப்பு மூலோபாயத்தின் அடிப்படை மற்றும் உலக வங்கியின் உதவியுடன் இணையவழி பாதுகாப்பு தொடர்பான “இலங்கையின் தேசிய இணையவழிப் பாதுகாப்பு மூலோபாயம் 2025 – 2029” தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான சிவில் துறைகள் மட்டுமே உள்ளடக்கப்படும் வகையில் சட்ட ரீதியான மற்றும் ஒழுங்குபடுத்தல் சட்டகத்தை மேம்படுத்துதல், அறிவை அதிகரித்தல், இணையவழிப் பாதுகாப்பு தயார்நிலையை மேம்படுத்துதல்,பதில்வினையாற்றல் திறனை அதிகரித்தல் மற்றும் ஒத்துழைப்புக்களை அதிகரித்தல் ஆகிய தொனிப்பொருட்களை அடிப்படையாக கொண்டு மேற்குறித்த மூலோபாய வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, “இலங்கையின் தேசிய இணையவழிப் பாதுகாப்பு மூலோபாயம் 2025 – 2029” அமுல்படுத்துவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

3. இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு 05 புகையிரத எஞ்சின்களுக்கான பெறுகை

போக்குவரத்து நெரிசல்மிகுந்த பிரதேசங்களில் பயணிகள் புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்குப் பொருத்தமான புகையிரத எஞ்சின்கள் தற்போது இலங்கைப் புகையிரத திணைக்களத்திடம் இல்லை. அதனால், நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படும் புகையிரத எஞ்சின்களில் பெருமளவானவை 20 ஆண்டுகளுக்கும் அதிக காலம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையால், அடிக்கடி திடீர் இயந்திர செயலிழப்புகள் மற்றும் இயக்கங்கள் தடைப்படுகின்றன. அதனால் நாளாந்தம் தமது தேவைகளுக்கு புகையிரதங்களைப் பயன்படுத்தும் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது இயக்குகின்ற புகையிரத சேவைகளை மேற்கொண்டு செல்வதற்காக குறைந்தபட்சம் 96 புகையிரத இயந்திரங்கள் தேவைப்படுவதுடன், தற்போது சில புகையிர எஞ்சின்ககள் பற்றாக்குறையாக உள்ளன. அதற்கமைய, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதேசங்கள் மற்றும் நீண்டதூர சேவைகளில் ஈடுபடுத்துவதற்காக 5 புகையிரத எஞ்சின்களின் பெறுகைக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. டேஸ்பெரிஒக்சமின் மெய்லட்பீபி 500 மில்லிகிராம் தடுப்பூசி மருந்துக் குப்பிகள் 400,000 இனை விநியோகிப்பதற்கான பெறுகை

குருதிச்சோகையால் பாதிக்கப்படும் நோயாளிகளின் அல்லது தலசீமியா நோயாளிகளின் உடலிலுள்ள மேலதிக இரும்புச் சேர்க்கையை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் டேஸ்பெரிஒக்சமின் மெய்லட் தடுப்பூசி பீபி 500மில்லிகிராம் 400,000 ஊசி மருந்துக் குப்பிகள் கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமனு கோரல் முறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது. அதற்காக இரண்டு விலைமனுதாரர்களால் விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரையின் அடிப்படையில் கணிசமாகப் பதிலளித்துள்ள ஒரோயொரு விலைமனுதாரரான இலங்கையின் M/s ABC Pharma Services (Pvt) Ltd நிறுவனத்துக்கு குறித்த பெறுகையை வழங்குவதற்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீhரம் வழங்கியது.

5. உள்ளூராட்சி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மலக் கழிவுநீர் மற்றும் மலக்கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை மேம்படுத்துவற்காக சுத்திகரிப்பு கட்டமைப்புகளை நிறுவுதல்

போதுமானளவு மலக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்மையால் நாட்டில் மலக் கழிவுநீர் மற்றும் மலக்கழிவு முகாமைத்துவம் செய்யும் சேவை சங்கிலியை முழுமைப்படுத்துவதில் தடைகள் காணப்படுகின்றது. அதனால் சில சந்தர்ப்பங்களில் ஒன்றுசேர்க்கின்ற மலக்கழிவுகள் முறையற்ற விதத்தில் திறந்த சுற்றாடலில் வெளியகற்றப்படுகின்றன. கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையின் கீழ் மலக் கழிவுநீர் மற்றும் மலக்கழிவு முகாமைத்துவத்துக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய, கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியிலிருந்து ரூ. 200 மில்லியன் தொகையை பாவித்து தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் இயந்திரப் பொறிமுறை மலக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிப்பதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீhரம் வழங்கியுள்ளது.

6. இரண்டாம்நிலை பராமரிப்பு வைத்தியசாலைகளின் இயலளவை மேம்படுத்தும் திட்டம்

நாடளாவிய ரீதியில் இரண்டாம்நிலை பராமரிப்பு வைத்தியசாலைகளில் தரப்பண்பு மற்றும் இயலளவை அதிகரிக்கும் நிகழ்ச்சித்திட்டத்துக்காக பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட வரவுசெலவுத் திட்ட உதவியாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. உத்தேச திட்டத்தின் கீழ் இரண்டாம்நிலை சுகாதார சேவை வைத்தியசாலைகளின் சேவை இயலளவு மற்றும் தரப்பண்பை மேம்படுத்துதல், மருந்து விநியோகச் சங்கிலி, சுகாதாரப் பெறுகை மற்றும் நிதியிடல் முறைமையின் வெளிப்படைத்தன்மை மற்றும் வினைத்திறனைப் பலப்படுத்துதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டமைந்துள்ளன. பெறுபேறு கிடைக்கும் கடன் வழங்கும் முறைமை ஊடாக வழங்கப்படும் மேற்குறித்த நிதியைப் பயன்படுத்தி, குறித்த கருத்திட்டத்தை 2025 தொடக்கம் 2030 வரை அமுல்படுத்துவதற்கு சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. 1954 ஆம் ஆண்டின் 19 இலக்க கடை, அலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் ஒழுங்குவிதிகளைத் திருத்தம் செய்தல் – விடய இலக்கம் 31)

1954 ஆம் ஆண்டின் 19 இலக்க கடை, அலுவலக ஊழியர்களின் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் மூலம் கடை அலுவலக ஊழியர்களின் சேவை வசதிகள், சேவைக்காலம், மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் விடுமுறை தொடர்பான ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சட்டத்துக்கமைய தொழில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு ஏற்புடைய ஒழுங்குவிதிகளை வெளியிடுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அமுலிலுள்ள ஒழுங்குவிதிகளின் கீழ் 18 வயது பூர்த்தியடைந்த ஒரு பெண் ஊழியர் தங்குமிட ஹோட்டலில் வரவேற்பு அலுவலரின், பெண்கள் அங்கி அறை ஊழியரின், பெண்களின் ஆடை அறை ஊழியரிகளின் அல்லது பெண்களின் மலசலகூட ஊழியரின் கருமங்களில் பிற்பகல் 6.00 மணிக்கு பின்னர் மற்றும் முற்பகல் 6.00 மணிக்கு முன்னர் சேவையில் ஈடுபடுத்தப்படலாம். இருந்த போதிலும் வதிவிட ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பணியில் ஈடுபட்டுள்ள உணவு மற்றும் பானங்களை வழங்கும் பெண் ஊழியர்கள் இரவு 10.00 மணிவரை மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்படலாம் என்பதனால், குறித்த நடவடிக்கை செயற்பாடுகளை பேணும் போது பல்வேறு சிக்கல் நிலை தோன்றலாம் என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, தங்குமிட ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பணியில் ஈடுபட்டுள்ள உணவு மற்றும் பானங்களை வழங்கும் கருமங்களில் ஈடுபடும் 18 வயதுக்கு கூடுதலான பெண் ஊழியர்கள் பிற்பகல் 6.00 மணிக்குப் பின்னரும், முற்பகல் 6.00 மணிக்கு முன்னரும் பணியில் ஈடுபடக்கூடிய வகையில் 1954 ஆம் ஆண்டின் 19 இலக்க கடைஅலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 3 ஆவது ஒழுங்குவிதியை திருத்தம் செய்வதற்காக தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. தேச எல்லைகள் ஊடாக நாடுகளுக்கு இடையில் இடம்பெறும் இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகள் (Cross – Boroder E-Commerce) மீதான வரிவிதிப்பு

இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகளின் வேகமான வளர்ச்சியுடன் நாடுகளுக்கிடையில் இடம்பெறும் இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகள் ஊடாக இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளின் அளவும் கருத்தில் கொள்ளும் வகையில் அதிகரித்துள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது. உதவும் முறைமைப்படுத்தல் சுழமைவை உருவாக்குவதன் மூலம் சிறப்பான பொருளாதார நன்மைகள் கிடைக்கும் இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகளிலிருந்து வரி வருமானத்தை சேகரித்தலை முறைமைப்படுத்துதல் அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலத்திரனியல் வர்த்தக மேடை ஊடாக மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பில் பின்பற்றப்படும் சுங்க ஒப்புதலளித்தல் நடவடிக்கை முறைகளில் சில குறைபாடுகள் இனங்காணப்பட்டு, அண்மைக் காலத்தில் இலங்கை சுங்கம் தனது சுங்க ஒப்புதலளித்தல் நடவடிக்கை முறைகளைத் திருத்தம் செய்துள்ளது. குறித்த திருத்தங்களை அமுல்படுத்துவதன் மூலம் தோன்றியுள்ள தாமதமடைதல், அதிகரித்த கொடுக்கல் வாங்கல் கிரயம், பொது மக்கள் நம்பிக்கை அற்றுப்போதல், விலைகள் தொடர்பான வெளிப்படைத் தன்மை மற்றும் எதிர்வுகூறும் இயலுமை குறைவடைதல் போன்ற நிலமைகள் இலத்திரனியல் வர்த்தக மேடைகளை பாவிப்பவர்களின் அதிருப்திக்கு ஏதுவாகியுள்ளது.

குறிப்பாக இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகளில் தங்கியுள்ள தனிநபர்களான நுகர்வோர் மற்றும் சிறிய அளவிலான இறக்குமதியாளர்கள் பாதிப்புக்களுக்கு உட்பட்டுள்ளனர். குறித்த நிலைமையை கருத்திலெடுத்து, இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகளுக்கு தற்காலிக தொழிற்பாட்டு சலுகையொன்றை வழங்கல் மற்றும் குறித்த விடயம் தொடர்பில் நீண்டகால முறைமைப்படுத்தல் பணிச்சட்டகத்தை செய்வதற்காக தொடர்புடைய நிறுவனங்களின் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

The post வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இணையவழி கடவுச்சீட்டு – அமைச்சரவை முடிவுகள் appeared first on Oruvan.com.

கடவுச்சீட்டு வழங்கும் 24 மணிநேர சேவை நாளையுடன் நிறைவு
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடாக 24 மணி நேரமும் முன்னெடுக்கப்பட்டிருந்த ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை நாளையுடன் (30) நிறைவடையவுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டு விநியோகிக்கும் ஒருநாள் சேவை 24 மணி நேரமும் முன்னெடுக்கும் செயற்பாடு கடந்த 2025.02.18ஆம் திகதி முதல் இடம்பெற்றிருந்த நிலையில், நாளையுடன் (30) நிறைவுக்கு வரவுள்ளது.

அதற்கமைய, 2025 ஜூன் 2 திங்கட்கிழமை முதல் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் ஒரே நாளில் கடவுச்சீட்டு வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

அன்றைய தினம் ஒருநாள் சேவையின் கீழ் முன்கூட்டியே திகதியை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களும், அவசர அல்லது முன்னுரிமை தேவைகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களும் மேற்கண்ட காலகட்டத்தில் ஒருநாள் சேவையின் கீழ் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

தலைமை அலுவலகத்தில் சாதாரண சேவைகளின் கீழ் விண்ணப்பங்களும் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

பிராந்திய அலுவலகங்களில் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சாதாரண மற்றும் ஒருநாள் சேவைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கடவுச்சீட்டு வழங்கும் 24 மணிநேர சேவை நாளையுடன் நிறைவு appeared first on Oruvan.com.

யாழ்ப்பாணத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் – இம்மாதம் ஆரம்பம்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இம்மாதத்திலேயே நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற (01) அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு விடயஞ்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வவுனியா பிராந்திய அலுவலகத்திற்குப் பயணம் செய்வதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளது.

வடமாகாண மக்கள் அதிகளவில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளமையால், அவர்களுக்கான துரித சேவைகளை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிப்பது பொருத்தமானதென, 2025.01.31 அன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post யாழ்ப்பாணத்தில்  குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் – இம்மாதம் ஆரம்பம் appeared first on Oruvan.com.

சக்திவாய்ந்த விமானப் பயண கடவுச்சீட்டு ; இலங்கைக்கு எத்தனையாவது இடம்?
ஒவ்வொரு நாடுகளுக்கும் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய இடங்களைக் கருத்தில் கொண்டு “தி ஹென்லி” தரவரிசைப் பட்டியலில் இலங்கை 91ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, உலகின் மிகவும் சக்திவாய்ந்த விமானப் பயண கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கிறது.

99 இடங்களைக் கொண்ட இந்தப் பட்டியலில், ஈரானும் சூடானும் இலங்கையுடன் சமமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 42 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

இந்தப் பட்டியலில் ஜப்பான் மற்றும் தென்கொரியா இரண்டாவது இடத்திலும், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், பயண விசா தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

2024 இல் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் இலங்கை 96ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

அதன்படி, இந்த வருடம் இலங்கை 5 இடங்கள் முன்னேறியுள்ளது.

ஒவ்வொரு நாடும் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய இடங்களைக் கருத்தில் கொண்டு, பயண அனுமதிகளின் வலிமையை தரவரிசைப்படுத்தும் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஹென்லி & பார்ட்னர்ஸ் ஒன்றாகும்.

The post சக்திவாய்ந்த விமானப் பயண கடவுச்சீட்டு ; இலங்கைக்கு எத்தனையாவது இடம்? appeared first on Oruvan.com.

கடவுச்சீட்டுக்களை ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை
எஞ்சியுள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, அந்தச் செயல்முறையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் கூறினார்.

கடவுச்சீட்டுக்களை பெறுவதில் பொதுமக்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் முதன்மை நோக்கத்துடன் 24 மணி நேரமும் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்தார்.

உரிய அச்சு இயந்திரங்களைப் பெற்ற பிறகு யாழ்ப்பாணத்திலும் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டு வழங்குவது இரட்டிப்பாக்கப்படும் என்றும் குழுவின் தலைவர் மேலும் கூறினார்.

The post கடவுச்சீட்டுக்களை ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை appeared first on Oruvan.com.

கடவுச்சீட்டை பெறும் முறை – வெளியானது முக்கிய அறிவிப்பு
கடவுச்சீட்டு வழங்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் 24 மணிநேர சேவையானது ஒரு நாள் சேவைக்காக மட்டுமே செயற்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 6.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஒருநாள் சேவைக்காக பதிவு செய்து கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும்.

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்த முடிவின்படி, 2025 பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் 24 மணிநேரமும் சேவைகளை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வழங்க ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

The post கடவுச்சீட்டை பெறும் முறை – வெளியானது முக்கிய அறிவிப்பு appeared first on Oruvan.com.

கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு
மேஜர் பதவிக்குக் கீழே உள்ள அனைத்து இலங்கை இராணுவ வீரர்களும் தங்கள் கடவுச்சீட்டுகளை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் வருண கமகே கூறுகையில், இந்த முடிவு நிர்வாக நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும், வெளிநாட்டு பயிற்சி மற்றும் அலுவலக விடயங்களுக்கான கடவுச்சீட்டுகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல இராணுவ வீரர்கள் வீட்டிலிருந்து வெளியே இருப்பதால், அலுவலக நோக்கங்களுக்காக கடவுச்சீட்டுகளைப் பெறுவதில் தாமதங்கள் ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எந்த நேரத்திலும் கடவுச்சீட்டுகளை படைப்பிரிவுகளிலிருந்து மீட்டெடுக்கலாம் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவச் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தினார்.

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எந்த நேரத்திலும் கடவுச்சீட்டுகளை படைப்பிரிவுகளிலிருந்து மீட்டெடுக்கலாம் என்று செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு appeared first on Oruvan.com.

மீண்டும் கடவுச்சீட்டு நெருக்கடி ஏற்படும் சாத்தியம்
கடவுச்சீட்டு வழங்குவதில் உள்ள நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் தற்போது கிடைக்கக்கூடிய கடவுச்சீட்டுபிரதிகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை மட்டுமே போதுமானதாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

எனவே, இந்தப் பிரச்சினை ஒரு சமூகப் பிரச்சினையாக மாறுவதற்கு முன்பு, அதைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்க ஒரு சிறப்புக் குழுவை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, நிலைமையை ஆய்வு செய்து அதைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்க அமைச்சரவை ஒரு குழுவை நியமிக்க முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் வகையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் விலைமனு கோரல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கொன்று தற்போது நடந்து வருகிறது. எனவே வழக்கைப் பாதிக்காமல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

The post மீண்டும் கடவுச்சீட்டு நெருக்கடி ஏற்படும் சாத்தியம் appeared first on Oruvan.com.