கஜேந்திரகுமார் Archives - Oruvan.com

கஜேந்திரகுமார் தலைமையிலான குழு சீமானுடன் சந்திப்பு
தமிழகம் சென்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை சந்தித்து கலந்துரையாடினர்.

தமிழர் தேசம், தமிழர் இறைமை அங்கீகரிக்கப்பட்ட தீர்வை வலியுறுத்தி தமிழகத்தின் பிரதிநிதிகளை சந்திக்க தமிழ்த் தேசிய பேரவையினர் தமிழகம் சென்றுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேற்று சந்தித்திருந்த நிலையிலேயே இன்று இந்த குழுவினர் சீமானை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல்கொடுத்துவரும் சீமானை இக்குழுவினர் பாராட்டியதுடன், எதிர்காலத்திலும் தமக்கு குரல்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

The post கஜேந்திரகுமார் தலைமையிலான குழு சீமானுடன் சந்திப்பு appeared first on Oruvan.com.

போதைப்பொருள், சிறு கத்தியுடன் கைதான இளைஞன் – படையினர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் சிறிய ரக கத்தியுடன் கைதான இளைஞனை 24 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க யாழ் . நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது.

நல்லூர், அரசடி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஐஸ் மற்றும் சிறிய ரக கத்தியுடன் யாழ்ப்பாண பொலிஸார் நேற்றுமுன்தினம் (22) புதன்கிழமை இரவு கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினரின் மகன் எனவும், குறித்த இளைஞன் தன்னை கைதில் இருந்து விடுவிக்க சுமார் ரூ. 20 இலட்ச ரூபாவை பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாகவும் பொலிஸ் தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

ஒருவர் ஐஸுடனும், மற்றையவர் ஐஸ் மற்றும் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் நேற்றையதினம் (23) நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, வாள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஐஸுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நாளை (25) வரை பொலிஸ் தடுப்புகாவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

23 மற்றும் 25 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை கைது செய்ய முற்பட்டபோது பொலிஸ் புலனாய்வாளர் சுதர்சனுக்கு 20 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்குவதற்கு சந்தேகநபர்கள் முயன்றுள்ளனர். இருப்பினும் குறித்த பொலிஸ் புலனாய்வாளர் அந்த இலஞ்சத்தை வாங்காமல் கடமையை நேர்த்தியாக செய்ததனால் அவரை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வட மாகாணத்தில் போதைப்பொருள் விநியோகிப்பவர்களுக்கு பாதுகாப்புப் படையினரின் ஆதரவு கிடைப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று (23) நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

போதைப்பொருள் கடத்தல் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டாலும், அதற்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே அவரது கட்சியைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினரின் மகனான சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post போதைப்பொருள், சிறு கத்தியுடன் கைதான இளைஞன் – படையினர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

உடன்பாட்டிலிருந்து விலகுகிறது சங்கு – என்கிறார் கஜேந்திரகுமார்
“ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளைப் பெற்று விட்டு, செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் இப்போது 13 ஆம் திருத்தம் சம்பந்தமாக கூட்டங்கள் வைப்பது தாங்களாக ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.”

இவ்வாறு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது கூறினார்.

இந்த விடயம் தொடர்பிலும், மாகாண சபைத் தேர்தலைத் தமிழ்க் கட்சிகள் அணுகும் முறைமை சம்பந்தமாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி நடத்தி வரும் கூட்டங்கள் தொடர்பிலும் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“கூட்டத்தை நடத்தியது தமிழ்க் கட்சிகள் அல்ல. அது, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியே நடத்தியது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிகள் கூடி மாகாண சபையை வைக்க வேண்டும் என்பது தொடர்பிலும், அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தொடர்பிலும் கதைத்துள்ளனர்.

நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் மிகத் தெளிவாக ஒற்றையாட்சி முறைமைக்குள் தமிழ் அரசியல் நடத்த அறவே இடமில்லை என்பதனை எழுத்து மூலமாக தெளிவாக வலியுத்தி வந்துள்ளோம். அது மட்டுமன்றி, 13 ஆம் திருத்தம் இறுதித் தீர்வும் அல்ல, ஏக்கிய இராச்சிய யோசனை நிராகரிக்கப்பட வேண்டும் என்ற இரண்டும் ஒப்பந்தத்தில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு இணங்கி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் அனைவரும் ஒப்பமிட்டனர். அதற்குப் பிறகு உள்ளூராட்சி சபையில் எங்களோடு இணைந்து, நாங்கள் விட்டுக் கொடுப்புகளைச் செய்து அவர்களுக்குப் பதவிகளைக் கொடுத்த பின்பு, நன்மைகளை பெற்ற பிறகு, எம்மோடு ஒப்பந்தம் செய்திருக்காது விட்டால் அவர்கள் எந்தவொரு சபையிலும் பதவிகளை எடுத்திருக்க முடியாது. தவிசாளர் பதவிகளையும் பெற்றிருக்க முடியாது, அப்படிப் பதவிகளைபெற எமது உதவிகளைப் பெற்று விட்டு, இப்போது செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் அவர்கள் இந்த நேரத்தில் 13 ஆம் திருத்தம் சம்பந்தமாக கூட்டங்கள் வைப்பது தாங்களாக ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுடன் ஒரு மாதத்துக்கு முன்பதாக நான் வெளிநாடுகளுக்குப் பயணிப்பதற்கு முன்னர் அதாவது, 13 ஆம் திருத்தம் தொடர்பில் அவர்கள் திருகோணமலையில் நடத்திய சந்திப்புக்கு முன்பே தெளிவாக இந்த விடயத்தை 13 ஆம் திருத்த விடயத்தில் ஈடுபட்டால் ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகவே நாம் பார்ப்போம் என்பதை நாம் அவர்களிடம் சொல்லியிருந்தோம்.

13 ஆம் திருத்தத்தைப் பற்றி தொடர்ந்தும் கதைத்துக் கொண்டிருப்பது என்பது அந்த ஏக்கிய இராச்சிய அரசமைப்பை எதிர்க்க வேண்டிய பொதுமக்களை செயற்படுத்தாமல் திசை திருப்பி ஏக்கிய இராச்சிய அரசமைப்பை தமிழ் மக்களுடைய அனுமதியுடன் ஆதரவோடு நிறைவேற்றுவதற்கு துணை போகின்ற செயலாகவே பார்க்கின்றோம்.

ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியின் பங்காளிகள் மாகாண சபை தேர்தலை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கதைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஒற்றையாட்சி அமைப்புக்குள்ளே தமிழ் அரசியலை நகர்த்த முடியாது என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினருடனான எமது எழுத்து மூலமான ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

13 ஆம் திருத்தம் இறுதித் தீர்வல்ல. ஏக்கிய இராச்சிய யோசனை ஒரு தீர்வல்ல. இரண்டும் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை எழுத்து மூலமாகப் பதிவு செய்திருந்தோம்.

அதற்குப் பிறகு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் அனைவரும் உள்ளூராட்சி சபைகளில் இணைந்து விட்டுக் கொடுப்புகளை செய்து பதவிகளை – சபைகளைக் கொடுத்த பிறகு 13 ஆம் திருத்தம் தொடர்பிலும் மாகாண சபை தொடர்பிலும் பேசுகின்றனர்.

அரசு புதிய அரசமைப்பை எல்லாம் கொண்டு வரப் போவது கிடையாது. இருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்தி, எங்களுடைய செயற்பாடுகளை நாம்தான் முன்னெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதையும் இல்லாது செய்யும் அரசாகவே இது இருக்கின்றது. ஆகவே அந்த ஒப்பந்தத்தை மீறுகின்ற நோக்கத்தோடு இதனைச் செய்யவில்லை என ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியினர் எமக்குத் தெரிவித்தனர்.

அப்போது நான் சொன்னேன். அரசு தெளிவாக பிரதமர், ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் என முக்கியமான தரப்புகள் உத்தியோகபூர்வ வாக்குறுதிகளை வழங்கி இருக்கின்ற இடத்தில் நாங்கள் இவ்வாறு செயற்பட முடியாது என்றேன்.

இந்த 13 தொடர்பான கூட்டங்களை நடத்துவதன் சூத்திரதாரி சுரேஷ் பிரேமச்சந்திரனே. சுவிட்சலாந்தில் நடந்த சந்திப்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் பிரதிநிதியாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்துகொண்ட வேளையில், புதிய அரசமைப்பைக் கொண்டு வரப்போவதாக அப்போது தெளிவாக வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

அரசிடம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு மேலதிகமாக இருக்கும் போது ஒருதலைப்பட்சமாக எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்தக் கூடிய சூழலில் அரசு இவ்வாறான பதிலைச் சொல்லி இருப்பதன் பின்ணணியில், 13 ஆம் திருத்தத்தைப் பற்றி தொடர்ந்தும் கதைத்துக் கொண்டிருப்பது என்பது அந்த ஏக்கிய இராச்சிய அரசமைப்பை எதிர்க்க வேண்டிய பொதுமக்களை செயற்படுத்தாமல் திசை திருப்பி ஏக்கிய இராச்சிய அரசமைப்பைத் தமிழ் மக்களுடைய அனுமதியுடன் ஆதரவோடு நிறைவேற்றுவதற்குத் துணை போகின்ற செயலாகவே பார்க்கின்றோம்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு நாங்கள் வலியுறுத்துவது தயவு செய்து எமது மக்களுக்கு மோசமான செயலைச் செய்யாதீர்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் தான் உருவாக்கிய ஏக்கிய இராச்சிய வரைவை தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு அவர்களுக்குத் தனித்து அழுத்தங்களைக் கொடுத்து எதிர்க்காமல் பண்ணுவதற்குரிய வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாவது அதை எதிர்த்து செயற்பட வேண்டும்.

சுமந்திரன் போன்ற தரப்புகளுக்கு துணை போகின்ற வகையில் ஏக்கிய இராச்சிய வரைவை நிறைவேற்றுவதற்குச் செயற்படக்கூடாது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனோ – தமிழ்த் தேசியப் பேரவையுடனோ ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி பயணிக்க விருப்பமில்லாவிடின் பகிரங்கமாக வெளியேற முடியும். நாம் தவறாக நினைக்கப் போவதில்லை. கொள்கையில் நாம் உறுதியாக உள்ளோம்.

இதற்குப் பிறகும் 13 பற்றி மக்கள் மத்தியில் கொண்டு போய் கருத்தை விதைக்கின்றது என்பது முழுக்க முழுக்க சுமந்திரன் உருவாக்கிய அரசியல் வரைவைக் கொண்டு ஒற்றையாட்சிக்குள் முடக்குகின்ற நிகழ்ச்சி நிரலுக்குத் துணை போகின்ற உண்மையாக ஒத்துழைக்கின்ற செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

38 வருடங்களாக நடைமுறையில் இல்லாத அரசமைப்பு விவகாரத்தை நடைமுறைப்படுத்தக் கேட்கின்றோம் என்று சொன்னால் எந்தளவு தூரத்துக்கு அது பிரயோசனமற்றது என்பது அந்தக் கோரிக்கையிலே வெளிவருகின்றது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை தமிழ் மக்கள் நிராகரிக்கவில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இருக்கக்கூடிய அம்சத்தை தீர்வாக நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் ஒற்றையாட்சியைத் தாண்டிய ஒரு சமஷ்டி ஆட்சியூடாக மட்டும்தான் நடைமுறைப்படுத்த முடியும். இந்தியா தொடர்ந்தும் 13 ஆம் திருத்தத்தை பற்றி கதைப்பது என்பது அர்த்தமற்ற கருத்தாகத்தான் நாங்கள் கருதுகின்றோம்.” – என்றார்.

The post உடன்பாட்டிலிருந்து விலகுகிறது சங்கு – என்கிறார் கஜேந்திரகுமார்  appeared first on Oruvan.com.

மனித உரிமைகள் பேரவை தேவையற்ற அரங்கு – கட்சி அரசியலுக்கு அப்பால் இணைந்து செயல்பட தயார் ; கஜேந்திரகுமார்
தமிழ் மக்களுக்கான சர்வதேச நீதியை கிடப்பில் வைத்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தேவையற்ற அரங்கு எனவும் அதனை தாண்டி கட்சி அரசியலுக்கு அப்பால் செயற்படுபவர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தந்தை செல்வா கலையரங்கில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள் தமிழ் மக்களுடைய பொறுப்புக் கூறல் விவகாரம் பேசப்பட்டு சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக கிடப்பில் கிடக்கின்றது.

ஐநா மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்களின் பொறுப்பு கூறல் விவகாரம் மேற்கு மற்றும் இந்திய வல்லரசுகளின் ஒரு கருவியாக மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐநா மனித உரிமைகள் பேரவையில் பொறுப்புக் கூறல் என்ற விவகாரம் 2012 ஆம் ஆண்டு அப்போதைய மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது அவரது ஆட்சி அகற்றப்படும் போது பார்ப்போம் என்றார்கள்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்ற போது இது நல்ல ஒரு ஆட்சி இதில் பல விடயங்களை சாதிக்கலாம் எனக்கூறி இரண்டு வருடங்களுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை பெற்றுக் கொடுத்தார்கள். இவ்வாறான விடயங்களை நாங்கள் அம்பலப்படுத்துவதால் எம்மை ஒரு தரப்பு குறை கூறுகிறது அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.2009 மே மாதம் 17ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா இறுதி யுத்த நிலைமை தொடர்பில் மூன்று தூதரங்களுக்கு தெரியப்படுத்துமாறு கூறியதற்கு இணங்க இந்தியா அமெரிக்கா மற்றும் பிரித்தானிய தூதரகங்களுக்கு நான்தான் தகவல்களை தெரிவித்தேன்.

அதனை நீங்கள் அறிய வேண்டுமானால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தகவல் பரிமாற்றத்தை காசியாவிட்ட கசிய விட்ட விக்லீஸ் தகவல்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு,போர் குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்துக்கு ஊடாக நீதி பெறப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

அதனை விடுத்து ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள் தொடர்ந்தும் தமிழ் மக்களுடைய பொறுப்பு கூறல் விவகாரத்தை தக்க வைப்பதற்கு சில தரப்புக்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

சர்வதேச அரசியலை கற்ற ஒரு மாணவன் என்ற வகையில் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன் ஐநா மனித உரிமைகள் பேரவை என்பது தமிழ் மக்களுடைய பொறுப்புக் கூறல் விவகாரத்தை மலினப்படுத்தும் தேவையற்ற அரங்கு.

தமிழ் மக்களுடைய பொறுப்பு கூறல் விவகாரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு எங்களால் ஆன முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில் சில தரப்புக்கள் அதனை கொச்சைப்படுத்தும் வேலை திட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

ஆகவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு கட்சி அரசியலை தாண்டி பயணிக்க விரும்பபவர்களுடன் நாமும் இணைந்து செயல்பட தயார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post மனித உரிமைகள் பேரவை தேவையற்ற அரங்கு – கட்சி அரசியலுக்கு அப்பால் இணைந்து செயல்பட தயார் ; கஜேந்திரகுமார் appeared first on Oruvan.com.

சுவிஸ்லாந்து கருத்தரங்கு – நடந்தது என்ன? சிங்கள, தமிழ் உறுப்பினர்கள் பரஸ்பர உரையாடல்
2015 ஏக்கிய இராஜ்ஜிய என்ற அரசியல் யாப்பை மீள புதுப்பிக்க ஏற்பாடு-

இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை பற்றிய பேச்சுக்கள் தவிர்ப்பு–

அநுராவுக்கு தமிழர்களின் ஆணையா?  மறுத்து நிராகரித்த கஜேந்திரகுமார்…

அ.நிக்ஸன்-

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை வழங்கும் ஆணையை பெற்றுள்ளதாக ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற மூன்று நாள் கருத்தரங்கில்  பெருமையுடன் வலியுறுத்திக் கூறியுள்ளது.

ஆனால் இக் கருத்தை மறுத்துரைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழத் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் பெற்றிருப்பதாகவும், முழுமையான சமஸ்டி ஆட்சி முறைமை ஒன்றையே தமிழர்கள் விரும்புவதாகவும் காரசாரமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தை தமிழர் தரப்பு கையாள வேண்டுமே தவிர, சிங்கள கட்சிகள் அல்ல என்ற கடும் தொனியையும் கஜேந்திரகுமார் வெளிப்படுத்தினார்.

சுவிஸ்லாந்து அரசின் கீழ் இயங்கும் அரசார்பற்ற நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் அரசியல் கருத்தரங்கில், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களும் மற்றும் சுவிஸ்லாந்தில் உள்ள தமிழ் இளையோர் அமைப்பினரும் பங்குபற்றியிருந்தனர்.

சுவிஸ்லாந்தில் நடைமுறையில் உள்ள சமஸ்டிமுறை கொண்ட அரசியல் யாப்பு மற்றும் சுவிஸ்லாந்தில் அரசியல் நிர்வாக அமைப்பியல் முறைமைகள் தொடர்பாக அங்கு ஆராயப்பட்டது. சுவிஸ்லாந்து வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் சுவிஸ்லாந்தின் முக்கிய இராஜதந்திரிகள் இக் கருத்தரங்கில் பங்குகொண்டு விளக்கமளித்தனர்.

சிங்கள  தமிழ் பிரதிநிதிகளின் நியாயமான நீண்ட விளக்கங்களை செவிமடுத்ததாக இக் கட்டுரையாளருக்கு ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழர்கள் சமஸ்டி முறையிலான ஆட்சியை விரும்புவதாகவும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை எவரும் எதிர்க்கவில்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியிருந்தார்.

சுவிஸ்லாந்து அரசியல் நிர்வாக முறைமை பற்றிய விளக்கங்களின் பின்னணியில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே உடனடித் தீர்வு என்று வலியுறுத்திய சுஸே் பிரேமச்சந்திரன், அதற்கு மேலான அதிகார முறைகள் பற்றி அலோசிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தார்.

எவ்வாறாயினும கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழர் தரப்பினரில் அதிகமானோர், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையை விரும்பவில்லை என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தினர். குறிப்பாக சுவிஸ்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினா் இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு முறைக்கு எதிரான விளக்கங்களை முன்வைத்தனர்.

கஜேந்திரகுமார் பொன்னம் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றை விபரமாக எடுத்துக் கூறியதை முழுமையாக ஏற்றுக் கொண்ட சுவிஸ்லாந்தின் இளையோர் அமைப்பினர், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ‘இரு அரசு’ முறையிலான தீர்வு பொருத்தமமானது எனவும் கடந்தகால ஆட்சியாளர்களினாலும் இலங்கை இராணுவத்தினராலும் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறியிருந்தனர்.

ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றுப் பட்டறிவுகள் மூலமாக இரு அரசு தீர்வு தான் பொருத்தமானது என்ற கருத்தில், இளையோர் அமைப்பினர் வலியுறுத்தினர்.

இக் கருத்துக்கு மாற்றுக் கருத்தை வெளிப்படுத்திய தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை தாம் பெற்றுள்ளதாகவும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் ஐந்து உறுப்பினர்களையும் வடக்கு கிழக்கில் மொத்தமாக எட்டு உறுப்பினர்களைப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் பற்றியும் எடுத்துக் கூறினர். புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் பொருத்தமான தீர்வு பரிந்துரைக்கப்படும் எனவும் அவர்கள் தமது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

ஆனால், அநுர அரசாங்கம் முன்வைக்கவுள்ள புதிய அரசியல் தொடர்பாக கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழ்த் தரப்பு உறுப்பினர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை. அந்த புதிய யாப்பு தொடர்பாக சரியான புரிதல் அற்ற தன்மை காணப்படுவதாக கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.

மைத்திரி – ரணில் அரசாங்கத்தின்போது புதிய அரசியல் யாப்புக்காக அனைத்துக் கட்சிகளானாலும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் புதிய அரசியல் யாப்புக்கான வேலைத் திட்டங்களை தொடரவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபயசிங்க அங்கு விளக்கமளித்தார்.

மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் நாடாளுமன்றம், அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டு ஆறு உப குழுக்களாக ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தலைப்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இலங்கையின் இறைமை, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் அடங்கலாக பரிந்துரைகள் முன்மொழியப்பட்டு அவை அறிக்கைகளாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, அந்த விடயங்களை தொடர்ச்சியாக தமது அரசாங்கமும் ஆராய்ந்து, அதனை நாடாளுமன்ற அங்கீகாரத்துடன் மேலும் சில அதிகார முறைகளை உள்ளடக்கி புதிய யாப்பை சமர்ப்பிக்கும் ஏற்பாடுகளை செய்யவுள்ளதாகவும் நிஹால் அபயசிங்க அங்கு விளக்கமளித்திருந்தார்.

ஆனால், இந்த விளக்கம் தொடர்பாக பரிசீலித்த தமிழ்தரப்பினர் குறிப்பாக கஜேந்திரகுமார், தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பங்கள் புதிய யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்தனர்.

அதேநேரம், வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ செயற்பாடுகள் பற்றி கஜேந்திரகுமார் நீண்ட விளக்கமளித்தார். அத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள 13 ஐ முழுமையாக செயற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குரியது. ஆனால் அதற்கு தமிழ்த்தரப்பின் ஒத்துழைப்பு அவசியம் என கோருவது மிகவும் தவறான அரசியல் கற்பிதம் என்ற தொனியை கஜேந்திரகுமார், அழுத்தம் திருத்தமாக முன்வைத்தார்.

அநுர அரசாங்கம் தையிட்டில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை கூட அகற்ற விரும்பவில்லை எனவும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டிய போது, அது முன்னைய அரசாங்கம் செய்த வேலைத் திட்டம் என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தமக்குள் முனுமுனுத்துக் கொண்டதாக கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழ்ப் பிரதிநிதி ஒருவர் இக் கட்டுரையாளரிடம் தெரிவித்தார்.

அதேநேரம் போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை என்ற தமிழர்களின் ஆழமான கருத்துக்குப் பதிலளித்த நிஹால் அபயசிங்க, ஜேவிபி இலங்கைத்தீவில் நடத்திய 1972 – 1987 / 88 ஆம் ஆண்டு கிளர்ச்சிகளின் போது சிங்கள இளைஞர்கள் – யுவதிகள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் பல அவலங்களைத் தாங்கள் சந்தித்தாகவும் விளக்கினார்.

சிங்கள – தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலைகளை எதிர்கொண்ட காரண – காரியங்கள் ஆழமானவை. ஆனால், அவ்வாறு இழைக்கப்பட்ட அநீதிகளை தற்போதைய சூழலில் கைவிட்டு, புதிய அரசியல் பாதையை நோக்கி பயணிக்க கைகோர்க்க வேண்டும் என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கருத்தரங்கில் கேட்டுக் கொண்டனர். ஜேவிபியின் போராட்ட கால அநீதிகளை கூடுதலாக சுட்டிக்காட்டினர்.

அதேவேளை, இக் கட்டுரையாளரிடம் பேசிய ஏற்பாட்டார் ஒருவர் இக் கருத்தரங்கு தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும் என்ற நோக்கில், கருத்தரங்கு தொடர்பான  விடயங்ளை அதிகாரபூர்வமாக அறிக்கையிட வேண்டும் என கேட்டபோது, சுவிஸ்லாந்து இராஜதந்திரிகள் அதனை விரும்பவில்லை என தெரிவித்தார்.

இருந்தாலும், இக் கருத்தரங்கில் பேசப்பட்ட விடயங்களை அதிகாரபூர்வமாக அறிக்கையிடுவது பற்றி சுவிஸ்லாந்து அரசாங்கத்திடம் கோரவுள்ளதாகவும் அந்த ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.

அதேவேளை மூன்று நாட்கள் இடம்பெற்ற கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழரசுக் கட்சியின் செயலாளர் சத்தியலிங்கம் எந்தக் கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. ஆனால், கருத்தரங்கு முடிவடைந்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் விளக்கமளித்தார்.

சுவிஸ்லாந்து சமஸ்டி முறை பற்றி தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு நன்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால், சுவிஸ்லாந்தை விட்டு வெளியேறிச் செல்லும்போது விமான நிலையத்தில் அந்த சமஸ்டி ஆட்சி முறைச் சிந்தனையை கைவிட்டுச் செல்லக் கூடாது எனவும் சத்தியலிங்கம் கிண்டலாகச் சுட்டிக்காட்டினார்.

2009 இற்குப் பின்னர் இலங்கைத்தீவில் ஊழல்மோசடி – அதிகார துஸ்பிரயோகம் மற்றும் பொருளாதார குற்றங்கள் மாத்திரமே உள்ளது என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குறிப்பாக அதன் செயலாளர் நிஹால் அபயசிங்க கருத்தரங்கில் தமது தரப்பு நியாயங்களை அவ்வப்போது வெளியிப்படுத்தியிருந்தார் எனவும், ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய பல விளக்கவுரையில் சிங்கள – தமிழ் முரண்பாட்டுத் தன்மையின் ஆழத்தை அவர்களினால் நிராகரிக்க முடியாத நிலமை இருந்தது எனவும் தமிழ் இளையோர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கட்டுரையாளரிடம் விபரித்தார்.

இக் கருத்தரங்கின் முடிவுரை தெளிவில்லை எனவும் அந்த இளையோர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் முன்மொழியப்பட்ட ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி ஆட்சி என்ற அதாவது ஏக்கிய இராஜ்ஜிய என்ற முறையிலான அரசியல் யாப்பு ஒன்றையே அநுர அரசாங்கமும் முன்வைக்கவுள்ளது என்பதை இக் கருதரங்கு வெளிப்படுத்தியதை அறிய முடிகிறது.

அதேநேரம் இக் கருத்தரங்கில் போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணை தொடர்பாக தமிழர் தரப்பு வலியுறுத்தியிருந்தாலும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி அவசியம் என்பது குறித்து பேசப்படவில்லை எனவும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

The post சுவிஸ்லாந்து கருத்தரங்கு – நடந்தது என்ன? சிங்கள, தமிழ் உறுப்பினர்கள் பரஸ்பர உரையாடல் appeared first on Oruvan.com.

தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மீறும் வகையில் எவரும் செயற்படவே முடியாது : கஜேந்திரகுமார் தெரிவிப்பு
“கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியத்துக்கே மக்கள் ஆணை வழங்கினார்கள். தமிழ்த் தேசியப் பேரவையான நாம், இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளும் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தியே மக்களிடம் ஆணை கேட்டனர். இந்த ஆணையை மீறும் வகையில் எவரும் செயற்பட முடியாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ். தாவடியில் அமைந்துள்ள பொக்ஸ் விடுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சில நாள்களுக்கு முன்பு என்னுடன் தொடர்புகொண்டு பேச விரும்புவதாக அறிவித்தார். அதில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரனும் தானும் பேசவுள்ளதாகக் கேட்டதற்கு அமைய நாங்கள் சந்திப்பதற்கு இணங்கியிருந்தோம். அதற்கமைய இந்தப் பேச்சு இடம்பெற்றது.

நாம் கொள்கை அடிப்படையிலான இணக்கப்பாட்டை இந்தப் பேச்சின்போது வலியுறுத்தினோம். அதில் எந்த இணக்கமும் எட்டப்படவில்லை.

அந்த இணக்கப்பாடின்றி வெறுமனே சபைகளை கைப்பற்றுவதற்காக மட்டும் நாம் இணைய முடியாது.

எனவே, ஒரு தலைப்பட்சமாக நாம் ஒரு முடிவு எடுத்துள்ளோம். முன்னர் கூறியது போன்று முதலிடத்தில் இருக்கும் கட்சி தவிசாளர் பதவியைப்பெறவும், இரண்டாவது இடம்பெற்ற கட்சி உப தவிசாளர் பதவியைப் பெறவும் நாம் ஆதரவளிப்போம்.” – என்றார்.

The post தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மீறும் வகையில் எவரும் செயற்படவே முடியாது : கஜேந்திரகுமார் தெரிவிப்பு appeared first on Oruvan.com.

எம்.ஏ.சுமந்திரன் – கஜேந்திரகுமார் இடையே நாளை பேச்சுவார்த்தை: சிவாஜிலிங்கம் தகவல்
உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது என்று தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

”உள்ளூர் ஆட்சி தேர்தல் முடிந்து மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையிலும், இன்னமும் முழு சபைகளினதும் பெயர் பட்டியல்கள் வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை. அனைத்து உறுப்பினர்களினதும் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் ஜூன் மாதம் 2ஆம் திகதியில் இருந்து 4 ஆண்டுகளுக்கான பதவிக் காலம் ஆரம்பிக்கும்.

இந்த நிலையில், உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை பரந்துபட்ட அளவிலான ஒற்றுமைக்கான பேச்சாகவும், வாய் மூலமான மாத்திரம் இல்லாது எழுத்து மூலமான பேச்சாகவும் அமைய வேண்டும் .” என்றார்.

The post எம்.ஏ.சுமந்திரன் – கஜேந்திரகுமார் இடையே நாளை பேச்சுவார்த்தை: சிவாஜிலிங்கம் தகவல் appeared first on Oruvan.com.

மாயையை தோற்றுவிக்கும் கஜேந்திரகுமார்: ஆளுங்கட்சி விசனம்
” வடக்கு மக்களின் காணி உரிமையை தேசிய மக்கள் சக்தி உறுதிப்படுத்தும். எனவே, சில விடயங்கள் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாயையை தோற்றுவிக்கின்றார்.” -என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., அரசாங்கம்மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘ அரசாங்கமும், இராணுவமும் இணைந்து வடக்கில் இனவாதத்தை பரப்புவதாக கஜேந்திரகுமார் எம்.பி. குற்றஞ்சாட்டினார். இனவாதத்தை தோற்கடித்த அரசாங்கம்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும் என்பதை கூறிக்கொள்கின்றேன்.

அதேபோல வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கை ஒரு குடையின்கீழ் கொண்டுவந்த அரசாங்கமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும். எனவே, இந்நாட்டில் இனவாதத்துக்கு மீண்டும் இடமளிக்கப்படமாட்டாது.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் சில காரணங்கள் தொடர்பில் மாயையை தோற்றுவிக்க முற்படுகின்றனர். கடந்த காலங்களிலும் இப்படி நடந்துள்ளது.

எமது நாட்டில் காணிகளை கையகப்படுத்திய அரசியல்வாதிகள் பற்றியும் எதிர்காலத்தில் நாம் கதைப்போம். காணிகளை கையகப்படுத்தி நண்பர்களுக்கு விற்றவர்கள் உள்ளனர். வடக்கிலும் அப்படி நடந்துள்ளது.

வடக்கு மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்படும். அவர்களுக்குரிய காணியை அவர்கள் சுதந்திரமாக பயன்படுத்த முடியும்.” – என அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் குறிப்பிட்டார்.

The post மாயையை தோற்றுவிக்கும் கஜேந்திரகுமார்: ஆளுங்கட்சி விசனம் appeared first on Oruvan.com.