கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Archives - Oruvan.com

கஜேந்திரகுமார் தலைமையிலான குழு மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவையினர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.

தமிழக முதலமைச்சரின் செயலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசிய பேரவை மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளது.

The post கஜேந்திரகுமார் தலைமையிலான குழு மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு appeared first on Oruvan.com.

அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறது – கஜேந்திரகுமார் கண்டனம்
“மக்களின் காணி மக்களுக்கே என தெரிவிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இலங்கை கடற்படை இல்லையா?” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வலி வடக்கில் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் செயற்பாடு தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் ஜனாதிபதியை விட அதிகாரம் கூடியவர்களாக கடற்படை உள்ளார்களா அல்லது ஜனாதிபதி யாழ் மக்களை ஏமாற்றுவதற்காக வாக்குறுதிகளை அள்ளி வழங்குகிறாரா என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்படும் அதனை எமது அரசாங்கம் செயற்படுத்தும் என வாக்குறுதி வழங்கி இருந்தார்.

அதுமட்டுமல்லாது ஜனாதிபதி வேட்பாளராக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போதும் விடுவிக்கப்படாத பொது மக்களின் காணிகளை தமது அரசாங்கம் பொறுப்பேற்றதும் விடுவிப்போம் என்ற வாக்குறுதியையும் வழங்கி இருந்தார்.

ஆனால் இந்த அரசாங்கம் பொறுப்பேற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் மிகக் குறுகிய ஏக்கர் காணிகளை மட்டும் விடுவித்தமை அவர்களும் கடந்த அரசாங்கங்களை போல வாக்குகளை பெறுவதற்காக தமிழ் மக்களை ஏமாற்றிய நாடகமாகவே பார்க்க முடிகிறது.

யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்றும் தமது பூர்வீக நிலங்களுக்குள் மக்கள் செல்ல முடியாத அவல நிலையில் இருக்கின்றனர்.

அண்மையில் ஜனாதிபதி செயலகம் முன் வலி. வடக்கு மீள்குடியேற்ற அமைப்பினர் மக்களை ஒன்று திரட்டி தமது காணிகளை விடுவிக்குமாறு போராட்டத்தை நடத்திய நிலையிலும் தற்போது கடற்படை தமது தேவைக்காக தனியார் காணியை அபகரிக்கும் செயற்பாட்டில் களமிறங்கியுள்ளது.

இந்த நாட்டின் அதிகாரம் மிக்க முப்படைகளையும் கட்டுப்படுத்தும் தலைவராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இருக்கின்ற நிலையில் அவரின் வாக்குறுதிகளை மீறி கடற்படை காணி பிடிப்பில் ஈடுபடுகிறதா?

இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாது சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டு வருகிறமை அனைவரும் அறிந்த விடயம்.

குறிப்பாக கூறப்போனால் வலி வடக்கு தையிட்டியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் புதிய கட்டுமானங்களை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

ஆகவே தமிழ் மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும். இலங்கை ஆட்சியில் இருக்கும் பெளத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் என்றைக்கும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முன்வராது” என அவர் மேலும் தெரிவித்தார்.

The post அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறது – கஜேந்திரகுமார் கண்டனம் appeared first on Oruvan.com.

அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களை நேரில் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவையினர்
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர் அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை அந்தந்தத் தூதரங்களில் சந்திப்பு நடத்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சிரேஷ்ட சட்டத்தரணி ந.காண்டீபன் ஆகியோர் இந்த சந்திப்புகளில் கலந்துகொண்டனர்.

இதன்போது அவர்கள், தமிழ் மக்களுக்குச் சமஷ்டி அடிப்படையிலான நிரந்தர தீர்வு வேண்டும், வடக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பை அரசு நிறுத்த வேண்டும் எனப் பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மேற்படி குழுவினர் முதலில் அமெரிக்க தூதுவரை சந்தித்துவிட்டு பின்னர் சுவிஸ் நாட்டுத் தூதுவரைச் சந்தித்துத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்தனர்.

The post அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களை நேரில் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவையினர் appeared first on Oruvan.com.

ஒற்றுமையை ஏற்படுத்துவது காலச் சூழலுக்கு தேவையான ஒன்றாகும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணையாகவும் அமையுமென பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்பாணத்தில் இன்று (10) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய பாதையிலிருந்து தமிழ் மக்கள் படிப்படியாக விலகி வருகின்றார்கள் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டு வந்தது.

இவ்வாறான ஒரு காலச் சூழலில் பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்நிறுத்திய ஒரு தேர்தலில் மக்கள் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர்.

இதனூடாக வடக்கு கிழக்கில் தென் இலங்கை இனவாதிகளுக்கு இடம் கொடுக்கப்படாது என்பதை ஆட்சியாளர்களுக்கு தமிழ் மக்களால் உணர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ் தேசிய பரப்பில் அனேக பிரதேசங்களில் தமிழ் தேசியம் வெற்றிபெற்றுள்ள போதும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையில் பின்தங்கிய போக்கே இருக்கின்றது.

அதேபோன்று தமிழ் தேசிய பேரவைக்கும் இலங்கை தமிழ் காங்கிரசுக்கும் மக்கள் கொடுத்துள்ள அல்லது கிடைத்த வெற்றியாகவும் இதை நாம் பார்க்கின்றோம்.

தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவது காலச் சூழலுக்கு தேவையான ஒன்றாகும்.

இதனால் தமிழ் தரப்பு ஆட்சி அமைக்க நாம் தமிழ் அரசு கட்சிக்கும் கொள்கை நிலைப்பாட்டுடன் நின்று ஆரரவை கொடுக்க பின்னிற்கமாட்டோம்.

குறிப்பாக ஆட்சி அதிகாரக் கதிரைக்கான தேசியமாக ஒற்றுமையாக இல்லாது தூய்மையான ஆதரவுக்கான அழைப்பாக இருந்தால் அந்த அழைப்புக்கு தமிழ் தேசிய பேரவை ஆதரவு கொடுக்கும்.

மேலும் ஒற்றுமையை வலுப்படுத்த தமிழ் அரசியல் பரபில் உள்ள பலதரப்பட்டவர்களுடனும் பேசியிருந்தேன். அதற்கான சாதக பெறுபேறும் கிடைத்தது.

அதேநேரம் தமிழரசுக் கட்சியை ஓரங்கட்டும் நிலையும் எம்மிடம் இல்லை. அவர்களுடனும் பேசியே பயணிக்க வேண்டும்.

தவறான பாதையில் மக்கள் வழிநடத்தப் படுவதை உணர்ந்து அதை வெளிப்படுத்தி தேசியத்தின் பாதையில் மக்களை கொண்டுசெல்ல நாம் வழிவகுத்தோம்.

அதன் ஒரு பகுதியாகவே இம்முறை தமிழ் தேசிய பேரவை என்ற கூடின் கீழ் உள்ளூர் அதிகார சபை தேர்தலில் மக்களிடம் சென்றிருந்தோம்.

அதற்கான அங்கீகாரதை மக்கள் தந்துள்ளனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளின் போக்குக்கு மக்கள் ஒரு பாடத்தைகொடுத்தார்கள். அந்த பாடத்தின் ஊடான கிடைத்த படிப்பினைகள் தற்போது தமிழ் தேசிய பாதையை மீளவும் உறுதிபடுத்திக் கொடுத்துள்ளது என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

The post ஒற்றுமையை ஏற்படுத்துவது காலச் சூழலுக்கு தேவையான ஒன்றாகும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் appeared first on Oruvan.com.

தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு : வர்த்தமானியை மீளப்பெறுமாறு கஜேந்திரகுமார் வலியுறுத்து
தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்க தயார் இல்லை என்றால், அம்மக்கள் எதிர்காலத்தில் மீண்டும் போராடுவதற்கு முற்படுவார்கள் என்ற பயத்தாலேயே தமிழர் தாயகத்தில் நில அபகரிப்புக்குரிய முயற்சி இடம்பெறுகின்றது. குடியேற்றத் திட்டத்துக்காகவே காணிகளை அபகறிக்க முற்படுகின்றனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாமடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களை எதிரிகளாகவே பார்க்கும் முப்படைகளின் தமிழர் விரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு இந்த அரசாங்கத்தக்கு முதுகெலும்பிள்ளை எனவும், காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

‘கடந்த மார்ச் 28 ஆம் திகதி அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்களில் மொத்தமாக 5 ஆயிரத்து 941 ஏக்கர் காணிக்குரிய – குறிப்பிட்ட பிரதேசத்துக்குள் இருக்கின்ற தனியார், தங்குளுக்குரிய காணி உறுதிகளை உறுதிப்படுத்தாத பட்சத்தில் தாங்கள் அந்த குறிப்பிட்ட பிரதேசங்களுக்குள் உள்ள காணிகளை அரசாங்க காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் சனத்தொகையை எடுத்துக்கொண்டால் வடக்கு, கிழக்கு தாயக நிலப்பரப்பில் இருக்கின்ற சனத்தொகைக்கு சரிபாதியாக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் வாழ்கின்றனர். உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே அவர்கள் தீவை விட்டு வெளியேறினர். அவர்களுடைய அனைத்து சொத்துகளையும் விட்டுவிட்டே, சில நாடுகளுக்கு சட்டவிரோதமாக நுழைந்து புகலிடம் கோரும் நிலைமை இருந்தது.

இவ்வாறு வெளிநாடுகளில் வாழ்பவர்கள் திரும்ப முடியாத சூழ்நிலையும் காணப்படுகின்றது. வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு தமது காணியை உறுதிப்படுத்த முடியாத சூழ்நிலையும் உள்ளது. இதனை இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டன.

இந்த அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்காமல், அமுல்படுத்திக்கொண்டுள்ளனர். அப்படிபட்ட சூழ்நிலையில் காணி உரிமையாளர்கள் 3 மாதத்துக்குள் இங்கு வந்து காணியை உறுதிப்படுத்த முடியாத சூழ்நிலையே உள்ளது.

அதேபோல இன்று தமிழர் தாயகத்தில் வாழுகின்ற மக்களுக்கும்கூட பல தடவைகள் இடம்பெயறவேண்டிய நிலை உள்ளது. எனவே, 3 மாத கால இடைவெளி என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல. இந்த காணி பிரச்சினையென்பது இனப்பிரச்சினையின் அடிப்படை காரணி எ

ன்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

இயற்கை நீதிக்கு முரணாக மக்களின் காணிகளை சட்டவிரோதமாக பறித்து, அந்த காணிகளை குடியேற்றங்களுக்கு பயன்படுத்தபோகின்றனர் என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன். இதுதான் உண்மை.

இது விளங்காமல் அரசாங்கம் அவசரப்பட்டு – தவறாக செய்யும் விடயம் அல்ல. வடக்க, கிழக்கில் உள்ள முப்படைகள் அங்கு வாழும் தமிழ் மக்களை எதிரிகள் என்ற கண்ணோட்டத்துடனேயே பார்க்கின்றது.

இந்த அரசாங்கம் மட்டும் அல்ல இதற்கு முன்பு இருந்த அரசாங்கங்களும் தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்க தயார் இல்லை என்றால், அந்த மக்கள் எதிர்காலத்தில் மீண்டும் போராடுவதற்கு முயற்சிக்கலாம் என்ற பயத்தாலேயே தமிழர் தாயகத்தில் கரையோரப் பகுதிகளில் உள்ள நிலங்களை அபகரிப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது.

இதற்கு முன் இருந்த அரசாங்கங்கள் இனவாதிகள், தாங்கள்தான் புனிதமானவர்கள் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள்தான் இந்த அநியாயத்தை செய்யப்போகின்றனர். இது வெறுமனே தமிழர்களை குறிவைக்கும் செயல் மட்டும் அல்ல, தமிழ் பேசும் மக்களை குறிவைக்கும் செயலாக மாறும். வடக்கில் நடப்பது நாளை கிழக்குக்கும் வியாபிக்கும்.

இராணுவத்தின் தமிழ் விரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இந்த அரசாங்கத்தக்கு முதுகெலும்பு இல்லை. மனோ நிலைமையை மாற்றுவதற்கு இயலாது. இவர்களும் இராணுவத்தின் இனவாத செயற்பாடுகளுக்கு துணைபோகின்றனர் என்றுதான் பார்க்கலாம்.

வடக்கு, கிழக்கில் பாரிய பின்னடைவை உள்ளுராட்சிசபைத் தேர்தலில் அரசாங்கம் சந்தித்துள்ளது. இதனை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். தமிழ்த் தலைவர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வராமல் இது விடயத்தில் ஒரு தலைப்பட்சமாக செயற்பட முடியாது. அது நல்லிணக்கத்தக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும்.” – என்றார்.

The post தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு : வர்த்தமானியை மீளப்பெறுமாறு கஜேந்திரகுமார் வலியுறுத்து appeared first on Oruvan.com.

ஜனாதிபதியிடம் 20 கோரிக்கைகளை முன்வைத்த கஜேந்திரகுமார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (31) இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 20 கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.

குறித்த கோரிக்கைகள் பின்வருமாறு,

1.யாழ் போதானா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி உடனடியாக அமைக்கப்படல் வேண்டும்.

2.யாழ் போதனா வைத்தியசாலையிலுள்ள நோயாளர் விடுதிகள் அதிகளவான நோயாளர்களால் நிரம்பி வழிகின்றது.  பல விடுதிகளில் கட்டில்கள் பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது நோயாளர்கள் நிலங்களில் படுக்கவேண்டிய நிலையும், இரவு முழுவதும் கதிரைகளில் அமர்ந்தவாறு உறங்கும் நிலையும், ஒரு கட்டிலில் இரண்டு நோயாளர்கள் படுக்க வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. நோயாளிகளைப் பராமரிப்பதற்காக உடனிருப்பவர்கள் பல மணி நேரமாக நின்ற நிலையிலேயே பராமரிப்பு பணிகளில் ஈடுபட வேண்டிய நிலையிலுள்ளனர். இந்த நிலை உடனடியாகச் சீர் செய்யப்படல் வேண்டும்.

3.யாழ் பண்ணையில் அமைந்துள்ள மார்பாக சிகிச்சை (காச நோய்) பிரிவில் அடிப்படை வசிதிகள் மேம்படுத்தப்படல் வேண்டும். மயிலிட்டியில் அமைந்திருந்த காசநோய் பிரிவை அந்த இடத்தில் மீளவும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

மயிலிட்டியில் இயங்கிய காசநோய் வைத்தியசாலை தற்காலிகமாக கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் இயங்குகின்றது. ஆனாலும் அங்கு அந்த அலகிற்கான ஆளணிகள் எதுவும் நியமிக்கப்படவில்லை. உடனடியாக ஆளணி நியமனம் செய்யப்படல் வேண்டும். பண்ணையில் உள்ள மார்பக சிகிச்சை நிலையத்திற்கென நிரந்தரமான எக்ஸ்றே றேடியோ கிறாபர் இல்லை. நிரந்தரமாக நியமிக்கப்படல் வேண்டும். (தற்போது திங்கள் புதன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டும்) இவ்வைத்தியசாலையில் பரிசோதனைக்காக பெறப்படும் சளிமாதிரிகளை பாதுகாப்பாக களஞ்சிய்படுத்துவதற்கான குளிர்சாதனப் பெட்டிகள் பெரும் பற்றாக்குறையாக உள்ளது. பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகள் ஐந்து நாட்களுக்குள் சோதனை செய்யப்படல் வேண்டும். ஆனால் உரிய கருவிகள் இன்மையால் ஒரு வருடத்திற்கும் மேலாக சேமிப்பில் உள்ள நிலை காணப்படுகின்றது. இந்நிலை சீர் செய்யப்படல் வேண்டும்.

4.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெருமளவான இளையோர் போதைப் பொருள் பயன்பட்டிற்கு அடிமையாகியுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை புனர்வாழ்வளித்து மீட்டெடுப்பதற்கான புனர்வாழ்வு நிலையம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைக்கப்படல் வேண்டும்.

5.யாழ் மாவட்டத்தில் கடற்தொழில் படகுகளை பாதுகாப்பதற்கான கல்லணைகள் அமைத்தல்:

பருத்தித்துறை மூர்க்கம், முனை, கொட்டடி கடற்கரை, சுப்பர்மடம், இன்பர்சிட்டி கடற்கரை, சக்கோட்டை கடற்கரை,  திக்கம் கடற்கரை, கொத்தியால் கடற்கரை, றேவடி கடற்கரை, ஆதிகோவிலடி கடற்கரை, தொண்டமனாறு கடற்கரை, பலாலி கடற்கரை, சேந்தான்குளம் கடற்கரை, மாதகல் கடற்கரை ஆகிய இடங்களில் படகுகள் தரித்துநிற்கும் இடங்களில் படகுகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புக் கல்லணைகள் அமைக்கப்படல் வேண்டும்.

படகுகள் நுழையும் பகுதிகளை ஆழமாக்குதல்:

மூர்க்கம் தொடக்கம் மாதகல் வரை படகுகள் தொழிலுக்காக இறக்கப்படும் நுழைவு வான்கள் நீண்டகாலமாக ஆழப்படுத்தப்படாமையினால்  படகுகள் சேதமடைகின்றன. படகுகள் சேதமடைவதனை தடுக்கும் வகையில் குறித்த இடங்கள் உடனடியாக ஆழப்படுத்தப்படல் வேண்டும்.

கொத்தியால் கடற்கரையில் படகுகள் தரிப்பிடத்தில் அகழப்பட்ட மண்ணை அப்புறப்படுத்த நடவடிகை எடுத்தல்:

வல்வெட்டித்துறை கிழக்கு கிராமிய கடற்தொழில் அமைப்பினருக்குச் சொந்தமான படகுகள் தரித்து நிற்கும் பகுதியிலிருந்து அகழப்பட்ட மண் கடற்கரையிலேயே குவிக்கப்பட்டுள்ளது. அந்த மண் மீண்டும் மீண்டும் இறங்குதுறைக்குள் சென்று படகுகள் நிறுத்தும் பகுதியை மூடுவதனால் படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்றுவதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இன்னமும் வழங்கவில்லை. எனவே குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை அண்மையிலுள்ள பொது அமைப்புக்களது பயன்பாட்டிற்காக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படல் வேண்டும்.

6.இந்திய மீனவர்களால் வலைகள் படகுகள் சேதமாக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படல் வேண்டும்.

7.கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட விவசாய அழிவுகளுக்கு நஸ்ட ஈடு வழங்கப்படல் வேண்டும்.

8.யாழ் குடாநாட்டில் சொந்தக் காணிகள் மற்றும் வீடுகள் இல்லாதவர்களுக்கு காணிகள் வழங்கவும் வீடுகள் கட்டிக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். வீட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி போதாமலுள்ளது, அத்தொகை அதிகரிக்கப்படல் வேண்டும்.

9.தையிட்டியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத திஸ்ஸ விகாரை கட்டுமானம் அகற்றப்படல் வேண்டும். தனியார் காணிகள் அனைத்தும் பொது மக்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

10.மயிலிட்டியில் விடுவிக்கப்படாத மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் உட்பட யாழ் குடாநாட்டில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகள் மற்றும் பொதுக் காணிகள் அனைத்தும் விடுவிக்கபடல் வேண்டும். வசாவிளான் சந்தியிலிருந்து  பலாலி சந்தி வரையான வீதி பொது மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படல் வேண்டும்.

11.யாழ் நகர அபிவிருத்திக்கு கடந்த 2017 ஆம் ஆண்டில் உலக வங்கி வழங்கிய நிதி உதவியில் வடிகாலமைப்பில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

12.யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளுராடசி மன்றங்கள் ஒவ்வொன்றுக்கும் தகுதிபெற்ற திட்டமிடலாளர்க்குரிய ஆளணி  உருவாக்கப்பட்டு, நியமனங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

யாழ்ப்பாணம் மாவட்டம் முழுமைக்குமான பிரதான வடிகாலமைப்பு திட்டம்  தயாரிக்கப்படல் வேண்டும்.

13.வீதி விளக்குகள் பொருத்துவது தொடர்பில் மினசார சபைக்கும் – பிரதேச சபைகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் உடனடியாகத் தீர்த்து வைக்கப்படல் வேண்டும்.

14.நெடுந்தீவுக்கான கடல்வழிப் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் படகுச் சேவைகள் கடற்படையினரிடமிருந்து மீளப்பெற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்படல் வேண்டும்.

15.வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இயக்கப்பட்டுவந்த குறிகாட்டுவான் – நைனாதீவுக்கான போக்குவரத்துப் பாதை பழுதடைந்த நிலையில் ஒருவருடமாகத் திருத்தப்படாமல் உள்ளது. அதனை உடனடியாகத் திருத்தப்படல் வேண்டும்.

நைனாதீவு தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இறங்குதுறை பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக அங்கு போக்குவரத்து இடம்பெறுவதில்லை. அந்த இறங்குதுறை திருத்தி அமைக்கப்படல் வேண்டும்.

16.குறிகாட்டுவான் இறங்குதுறை உடனடியாக விஸ்தரிக்கப்படல் வேண்டும்.

குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து புங்குடுதீவு நோக்கிச் செல்லும் வீதி சுமார் 5 கிலோ மீற்றர் குன்றும் குழியுமாக உள்ளது. உடனடியாகத்திருத்தப்படல் வேண்டும்.

17.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நிரந்தர மாகாண கல்விப் பணிப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

18.வடக்கு மாகாணாத்தில் SLEAS அதிகாரிகளுக்கான பற்றாக்குறை 50 வீத்திற்கு மேல் காணப்படுகின்றது.

இவ்வெற்றிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில் பிரமாணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

19.வடக்கு மாகாணத்தில் 3,555 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கபடல் வேண்டும்.

20.வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆளணி வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்படல் வேண்டும். ஆகிய கோரிக்கைகள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.

The post ஜனாதிபதியிடம் 20 கோரிக்கைகளை முன்வைத்த கஜேந்திரகுமார் appeared first on Oruvan.com.

இலங்கை சிங்கள, பௌத்த நாடு – கஜேந்திரகுமார் போன்றோர் துள்ளக்கூடாது
” இலங்கையென்பது சிங்கள, பௌத்த நாடாகும். எனவே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் இங்கு துள்ளக்கூடாது.” என்று எச்சரித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையென்பது சிங்கள தேசமாகும். வடக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என ஒருவர் இருக்கின்றார். அவர் கூக்குரல் (பௌத்த சாசனத்துக்கு எதிராக) எழுப்புகின்றார். எமது நாட்டில் அவ்வாறு செய்ய முடியாது.

பண்டுகாபய மன்னர் முதல் சிங்கள மன்னர்களே இலங்கையை ஆண்டுள்ளனர். எனவே, இது சிங்கள, பௌத்த தேசமாகும். எனினும், பௌத்த தர்மத்துக்கமைய நாம் அனைத்து சமயங்களையும், இனங்களையும் மதிக்கின்றோம்.

அந்தவகையில் எம்முடன் கைகோர்த்து பயணிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் எமது கரங்களை உடைத்துக்கொண்டு செல்ல முற்பட்டால் வாழ்வதற்கு தனியான உலகை தேடிக்கொள்ள நேரிடும். அதற்காகவே மேர்வின் சில்வா போன்றவர்கள் இருக்கின்றார்கள்.

வடக்கு, கிழக்கு, தெற்கு என்றில்லை இது ஒரு நாடு. சிங்கள தேசமாகும். பௌத்த சாசனம் பாதுகாக்கப்படும்வரை, புத்த தர்வமத்துக்கமைய வாழும்வரை இயற்கை இந்நாட்டை பாதுகாக்கும். இதற்கு எதிராக ஆட்சியாளர்கள் செயற்பட்டால் இயற்கை நிச்சயம் தண்டிக்கும்.” – என்றார்.

The post இலங்கை சிங்கள, பௌத்த நாடு – கஜேந்திரகுமார் போன்றோர் துள்ளக்கூடாது appeared first on Oruvan.com.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு – தமிழ்த் கட்சிகள் ஜனவரி 25இல் பேச்சு
புதிய அரசமைப்பு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இணக்கப்பாட்டை மேற்கொள்வதற்கான சந்திப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையில் நடந்த சந்திப்பில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,

“இதுவரை நாங்கள் மூன்று தரப்பும் தனித்தனியாகச் சந்தித்து வந்த கட்டத்தில் இந்தத் தரப்புக்களை ஒன்றாகச் சந்தித்து இணக்கப்பாட்டை எட்ட எண்ணியுள்ளோம். இந்த மூன்று கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு    எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் அந்தந்தக் கட்சிகள் இந்த முயற்சிக்கு யாரைக் கொண்டுவரவேண்டும் என்று விரும்புகின்றனவோ அவர்கள் அந்தத் தரப்புகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்தச் சந்திப்பு ஓர் ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைய வேண்டும். இந்த மூன்று தரப்புகளுக்கும் கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய ஆணையை வழங்கியுள்ள நிலையில் அந்த ஆணையை முழுமையாகப் பிரதிபலிக்கக்கூடிய ஒரு பொது நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு தேவைப்படும் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தும் நோக்கோடுதான் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.” – என்றார்.

The post தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு – தமிழ்த் கட்சிகள் ஜனவரி 25இல் பேச்சு appeared first on Oruvan.com.

தீர்வுத் திட்ட வரைவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களுடன் பேச முடிவு – கஜேந்திரகுமார்
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைவு குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்திருப்பதாகவும், எதிர்வரும் 7 ஆம் திகதி சிவஞானம் சிறீதரன் எம்.பி. மற்றும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ஆகியோருடன் கலந்துரையாடி அந்தச் சந்திப்புக்குரிய திகதியைத் தீர்மானிக்கவிருப்பதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை அடுத்து எதிர்வரும் காலத்தில் அரசால் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படும்போது, குறைந்த பட்சம் அந்த விடயத்தில் மாத்திரமேனும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் எம்.பி., அதனை முன்னிறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி. மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ஆகியோரைக் கடந்த மாதம் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இதன் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கஜேந்திரகுமாரிடம் வினவியபோது, எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், அன்றைய தினம் சிறீதரன்  மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் மீண்டும் கலந்துரையாடவிருப்பதாகத் தெரிவித்தார்.

அதனூடாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அந்தத் தீர்வுத் திட்ட வரைவு குறித்து ஆழமாக ஆராயவும், கலந்துரையாடவும் முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

The post தீர்வுத் திட்ட வரைவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களுடன் பேச முடிவு – கஜேந்திரகுமார் appeared first on Oruvan.com.

தமிழரசு தலைநிமிர வேண்டும் – தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் ; கஜேந்திரகுமார் வலியுறுத்து
“இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்த பாதையைத் தொடர்கின்ற வகையில் கட்சியின் முடிவுகள், பதவிகள் அமையக்கூடாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

“தமிழரசுக் கட்சி பிரதான கட்சியாக உள்ளமையால் அந்தக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது.” – என்றும் அவர் கூறினார்.

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பைச் சரியாகப் புரிந்துகொண்டு, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலரின் ஆதிக்கத்தைக் கட்சி தொடர்ந்தும் அனுமதிப்பதன் ஊடாகத் தொடர்ந்தும் ஒரு மோசமான கொள்கை ரீதியான பாதையில் தமிழ்த் தேசிய அரசியலைத் தள்ளும்.” – என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஒரு பொதுப்புள்ளியில் சந்திப்பதற்குத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்

குழுத் தலைவர் சிறீதரனுடன் ஏற்கனவே பேச்சுகளை ஆரம்பித்துள்ளதாகவும், அதேபோல் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடனும் பேச்சுகளை ஆரம்பித்துள்ளதாகவும் கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவித்தார்.

இந்தப் பேச்சுகளை அடுத்த ஆண்டில் முன்கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழரசுக் கட்சி சரியான மாற்றங்களைச் செய்யுமானால் தமிழினத்துக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் ஒரு சுபீட்சமாக அமையும் என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

The post தமிழரசு தலைநிமிர வேண்டும் – தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் ; கஜேந்திரகுமார் வலியுறுத்து appeared first on Oruvan.com.