கச்சத்தீவு திருவிழா Archives - Oruvan.com

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்போருக்கான முக்கிய அறிவிப்பு
கச்சத்தீவு திருவிழாவுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்

எம்.பிரதீபன் விளக்கமளித்துள்ளார்.

இந்த திருவிழாவானது எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குறித்த திருவிழாவுக்கு செல்லும் யாத்திரிகர்களின் நன்மைக் கருதி 27 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் பி.ப 01.00 மணி வரை அரச மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் கச்சத்தீவுக்கான படகுச் சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து 27 ஆம் திகதி காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 ஆகும்.

இதேவேளை கச்சத்தீவுக்கு குழுவாக / தனியாக படகில் வரும் யாத்திரிகர்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களை தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு படகு மூலம் பயணிப்போர் 2026.02.27 ஆந் திகதி பி.ப 4.00 மணிக்கு முன்னர் கச்சத்தீவை அடையும் வகையில் தங்களது பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் தெரிவித்தார்.

The post கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்போருக்கான முக்கிய அறிவிப்பு appeared first on Oruvan.com.

கச்சத்தீவு வருடாந்திர திருவிழா – ஏற்பாடுகள் தீவிரம்
வரலாற்று சிறப்பு மிக்க கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்திர திருவிழா எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் மிக சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தற்காலிக கப்பல் நிலையத்தினை அமைத்தல், குடிநீருக்கான நீர் அமைப்புகளை அமைத்தல், சுகாதார வசதிகள், தற்காலிக அறைகள் மற்றும் தற்காலிக பாதைகள் நிறுவுவதுடன் மின்சார வசதிகளை நிறுவுதல் ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கச்சத்தீவு வருடாந்திர திருவிழா – ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Oruvan.com.

கச்சத்தீவு திருவிழா – வெளியானது அறிவிப்பு
கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா இந்த ஆண்டு மார்ச் 14 மற்றும் 15 ஆகிய திகதிகள் நடைபெற உள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கச்சத்தீவு தீவில் நடைபெறும் இந்த திருவிழா, நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது.

சுமார் 1.15 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த சிறிய தீவு, இலங்கையிலிருந்து மிகத் தொலைவில் உள்ள தீவாகவும், இலங்கைத் தீவுக்கூட்டத்தில் இந்தியாவிற்கு மிக அருகில் உள்ள தீவாகவும் கருதப்படுகிறது.

கச்சத்தீவு ஆரம்பத்தில் இந்தியாவுக்கு சொந்தமானதாக இருந்த போதிலும் பின்னர் இந்திரா காந்தி அதனை இலங்கைக்கு பரிசாக அளித்தார்.

கச்சத்தீவு இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற பின்னர் இலங்கையின் கடல்பரப்பு சற்று அதிகமானதுடன், மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையும் வலுபெற ஆரம்பித்து.

கச்சத்தீவை இந்தியா மீளப் பெற வேண்டுமென தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் தொடர்ந்து இந்திய மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இதேவேளை, புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழாவில் இந்தியர்களுக்கு பங்கு கொள்ளும் உரிமை இருப்பதும் சுட்டிக்காட்டதக்கது.

The post கச்சத்தீவு திருவிழா – வெளியானது அறிவிப்பு appeared first on Oruvan.com.