கச்சதீவு Archives - Oruvan.com

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான கச்சதீவு வருடாந்த திருவிழா எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

திருவிழா தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது, இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் இறைவிசுவாசிகளின் எண்ணிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், கழிவறை வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, கடல் மற்றும் தரைவழி போக்குவரத்து ஒழுங்குகள், கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும், இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இதேவேளை, கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் இந்திய இறைவிசுவாசிகள் பாதுகாப்பு தரப்பினர் வழங்கும் உரிய நடைமுறைகளை பின்பற்றி நடந்துகொள்வதன் ஊடாக சிரமங்களை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் அச்சமின்றி அனைவரும் தமது வழிபாடுகளை செய்வதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

The post கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி appeared first on Oruvan.com.

‘கச்சதீவு அரசியல்’ – அநுரவின் பயணத்தால் டெல்லியில் நெருக்கடி
கச்சதீவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொண்ட திடீர் பயணம் இந்திய அரசியலில் பேசுபொருளாகியுள்ளதுடன், இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியிலான பிரச்சினைகளுக்கு இந்தப் பயணம் வழிவகுக்குமா என்ற கோணத்தில் விவாதங்களும் எழுந்துள்ளன.

1974ஆம் ஆண்டு இருநாட்டு ஒப்பந்தத்தின் ஊடாக கச்சதீவை அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி இலங்கைக்கு வழங்கியிருந்தார். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இருநாட்டு மீனவர்களும் இந்தப் பகுதியில் இளைப்பாறலாம் என்ற இணக்கப்பாடு இருந்தது. யுத்தம் காரணமாக ஆரம்பத்தில் மீனவர் பிரச்சினை பேசுபொருளாகவில்லை.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தப் பின்னர், இலங்கையின் கடற்பரப்பை முழுமையாக இலங்கை கடற்படை தமது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தது முதல் மீனவர்கள் பிரச்சினையும் தலைத்தூக்க ஆரம்பித்தது. தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாக கைதுகள் தொடர்ந்து இடம்பெறுவதுடன், அவர்களது படகுகளும் பறிக்கப்பட்டு வருகின்றன. பல சந்தர்ப்பங்களில் இலங்கையின் கடற்படையின் தாக்குதல்களுக்கும் தமிழக மீனவர்கள் இறையாகி உள்ளனர்.

கச்சதீவு இந்தியா வசமிருந்தால் பிரச்சினை எழாது

இருநாட்டு அரசுகள் மற்றும் மீனவ சங்கங்களுக்கு இடையில் பல சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றுள்ள போதிலும் இன்னமும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை.

என்றாலும், கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்குமாறு தமிழக கட்சிகள் கடந்த பல தசாப்தங்களாக வலியுறுத்தி வருகின்றன. கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதால் இந்தியாவின் கடல் பரப்பு குறிப்பாக தமிழ்நாட்டின் கடல்பரப்பு குறைவடைந்ததால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைதுசெய்யப்படுவதுடன், பல சந்தர்ப்பங்களில் இலங்கையின் கடற்படையின் தாக்குதல்களுக்கும் பலியாகியுள்ளனர்.

கச்சதீவு இந்தியாவின் வசமிருந்தால் இந்தப் பிரச்சினை எழாது என தமிழக அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் தினம் தினம் இந்த விடயம் பேசுபொருளாகவே உள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் 21ஆம் திகதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், கச்சதீவை மீட்டு தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.

இராஜதந்திர மட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது

இதன் பின்னர் கச்சதீவு விவகாரம் மீண்டும் பூதாகரமான பிரச்சினையாக மாறியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதால் தமிழக கட்சிகள் இந்தப் பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்துள்ளதாக வெளிவிகார அமைச்சர் விஜித ஹேரத்,  விஜயின் கருத்துக்கு பதிலளித்திருந்தார் என்பதுடன், இராஜதந்திர மட்டத்தில் இதுகுறித்து எவ்வித கருத்துகளும் பகிரப்படவில்லை என்பதால் இதனை பொருட்படுத்த தேவையில்லை எனவும் கூறியிருந்தார்.

என்றாலும், நேற்று முன்தினம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தின் ஒருபகுதியாக கச்சதீவுக்கு சென்றமை இராஜதந்திர மட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக இந்திய ஊடகங்களில் இவரது பயணம் குறித்த விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் இராஜதந்திரிகளும், இந்திய அரசியல்வாதிகளும், கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை தமிழக அரசியல் கட்சிகளுக்கும், இராஜதந்திர மட்டத்திலும் தெளிவாக எடுத்துரைக்கவே, அநுரகுமார திசாநாயக்க கச்சதீவுக்கு அவசரமாக பயணம் மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கு இடையில் நெருக்கமான உறவு உள்ள போதிலும், இலங்கை சீன சார்ப்பு பல கொள்கைகளை கொண்டுள்ளது. இந்த விவகாரத்துக்கு இராஜதந்திர மட்டத்தில் இணக்கப்பாடுகள் காணப்படாவிடின் எதிர்காலத்தில் பல்வேறு முறுகல்களுக்கு இது வழிவகுக்கும் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.

அநுரவின் பயணத்தால் டெல்லியில் பல்வேறு நெருக்கடிகள்

அண்மையில் நேபாளம், பங்களாதேஸ் போன்ற நாடுகளுடன் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள முறுகல்கள் போன்றதொரு நிலையை இலங்கையுடனும் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கச்சதீவு விவகாரத்துக்கு உறுதியான தீர்வுகள் காணப்படுவது அவசியம் என்றும் இந்த விவாதங்களில் பேசுபொருளாக இருந்தது.

இதேவேளை, காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும்தான் கச்சதீவு இந்தியாவிடமிருந்து பறிபோக காரணம் என கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இந்திய பிரதமர் மோடி கூறியிருந்தார்.

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியின் பிரச்சாரத்துக்காக மோடி தமிழக வரும் போது இந்த விடயத்தை கட்டாயம் பேச வேண்டி சூழல் எழுந்துள்ளதாக தமிழக அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதுடன், இதற்கான நிரந்தர தீர்வு குறித்தும் அவர் பேச வேண்டும். இல்லாவிட்டால் அது தேர்தலில் எதிர்மறை தாக்குதலை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாகும் எனவும் கூறுகின்றனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கச்சதீவுக்கு பயணம் மேற்கொண்டிருக்காவிடின் இந்த விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது என்றும் அநுரவின் பயணம் டெல்லியில் பல்வேறு நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சு.நிஷாந்தன்

The post ‘கச்சதீவு அரசியல்’ – அநுரவின் பயணத்தால் டெல்லியில் நெருக்கடி appeared first on Oruvan.com.

கச்சத்தீவு விவகாரம் – தமிழக முதலமைச்சரின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
கச்சத்தீவு தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் முன்வைத்த தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் வரவு செலவு கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று அவை கூடியதும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கச்சத்தீவு தொடர்பான தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட முதலமைச்சர்,

தமிழகத்தை சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். முற்றுப்புள்ளி வைக்கப்படாத பேரழிவாக அமைந்திருக்கிறது.

இலங்கையில் அரசியல் நிலைமைகள் மாறினாலும் தமிழகத்தை சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படும் சூழல் மட்டும் மாறவில்லை. கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது? கடல் கடந்து போன தமிழனின் கண்ணீரால் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்.

கடல் நீர் இன்று ஏன் சிவப்பாக இருக்கிறது? தமிழ்நாட்டு மீனவர் சிந்திய இரத்தத்தால் என்று சொல்ல வேண்டிய கவலையான நிலைமையில் தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஒரு மீனவர்கூட கைது செய்யப்படமாட்டார் என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மோடி சொன்னார்கள்.

ஆனாலும், இந்தத் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவரைக்கும் மீனவர்கள் கைது, தாக்குதல் குறித்து 74 கடிதங்களை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், பிரதமர் மோடி அவர்களுக்கும் எழுதியுள்ளேன்.

பிரதமர் அவர்களை நேரில் சந்திக்கும் போதெல்லாம் இதுகுறித்து வலியுறுத்தியுள்ளேன். ஆனாலும் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களைப் போக்கிடவும், கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும்.

இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்.

இலங்கை செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அரசுடன் பேசி தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பேரவை வலியுறுத்துகிறது என தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இந்நிலையில், குறித்த தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

The post கச்சத்தீவு விவகாரம் – தமிழக முதலமைச்சரின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் appeared first on Oruvan.com.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று (14) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.

சிவகங்கை மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை லூர்து ஆனந் ஆண்டகை, யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், நெடுந்தீவு பங்குத் தந்தை உள்ளிட்ட அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இத்திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து பெருமளவு பக்தர்கள் வருகை தந்ததுடன் குறித்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.

திருப்பலி நிகழ்வு இன்று (15) காலை ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.

இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டன.

The post கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது appeared first on Oruvan.com.